ஷாருக்கான் இடத்தை பிடித்தார் ரஜினி!

 
உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியாகி மெஹா ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும்,முதல் தமிழ் திரைப்படமாகிய எந்திரன் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக சுழன்று சுழன்று கோடிகளை குவித்து வருகிறது.1500 கிராஃபிகல் ஷாட்டுகளும் படத்தின் 40 சதவீதம் கிராஃபிக்ஸாக கலக்கும் முதல் தமிழ் படம்.அமெரிக்காவில் படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது
...பிரிட்டனிலும் எதிர்பாராத வெற்றியை பெற்று இருக்கிறது முதல் மூன்று இடங்களை அங்கும் பிடித்து விடும் என்கிறார்கள்.அமெரிக்காவில் நம்ம ஊர் நடிகர்கள் படம் நுழைவதே கஸ்டம்.அங்கு ஒரு தமிழ் திரைப்படம் முதலிடத்தை பிடிக்கிறது என்றால் சும்மாவா....ஹிந்தியில் வெளியாகி இதுவரை இருந்து வந்த அனைத்து பாலிவுட் ரெக்கார்டுகளையும் தவிடு பொடி ஆக்கி விட்டது எந்திரன்..யூகே.யூஎஸ்,ஆஸ்திரேலியா,கனடா,ஃப்ரான்ஸ்,ஜெர்மனி,ஸ்விச்சர்லாந்து,மலேசியா.சிங்கப்பூர்,இலங்கை,தென் ஆப்ரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும் புதிய வசூல் ரெக்கார்டு செய்து கொண்டிருக்கிறான் எந்திரன்.இந்த வசூல் நிலவரங்களை பார்க்கும் போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இடத்தை ரஜினி நிரப்பி விட்டதாகவே எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
.
எந்திரன் சென்னையில் சில தியேட்டர்களில் அதிகாலை ஒரு மணிக்கே திரையிட்டார்கள். சில தியேட்டர்களில் உடனுக்குடன் காட்சிகள் போடப்பட்டன..ஆந்திராவில் 700 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட முதல் படம் எந்திரன்..முதல் நாளே அங்குள்ள பத்திரிக்கைகள் எந்திரன் சூப்பர் ஹிட் என செய்திகள் வெளியிட்டன.மும்பையில் மட்டும் 130 தியேட்டர்களில் எந்திரன் வெளியாகி ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது..
உலக அளவில் மூன்று நாள் வசூல் மட்டும் 210 கோடி.படத்தின் பட்ஜெட் 160 கோடி!.இனி ஒவ்வொரு நாள் வசூலும் லாபம்
.
,
சன்பிக்சர்ஸை பொறுத்தவரை எந்திரன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது,சேட்டிலைட் உரிமைகள்,இனி வரும் காலங்களில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள் என லாபமோ லாபம்.100 முறை சண்டிவியில் எந்திரன் படத்தை போட்டால் ,ஒரு முறை படத்திற்கு விளம்பர வருவாய் 50 லட்சம் என்றால் 50கோடியாவது வசூலாகும்..இது எதிர்கால லாபம்...இதுபோல அவர்களிடம் இருக்கும் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ,மொழிகளில் அவர்களது சேனல்களில் ஒளிபரப்பினால் ?ஆனால் வட நாட்டிலும் உலக அளவிலும் எந்திரன் வசூல் பாய்ச்சலோடு கணக்கிட்டாலும் இந்த லாபம் சொற்பம் தான் அவர்களுக்கு.!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-