மன்மதன் அம்பு இசை வெளியீடா? பண்டிகையா?

சமீபத்தில் தமிழ்சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு இசை வெளியீடு என்றால் அது எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாதான்.
தற்பொழுது  எந்திரனை தூக்கிச் சாப்பிடும் வகையில்  மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை ஒரு பிரமாண்டப் பண்டிகை போலக் கொண்டாட இருகிறார்கள்.
இந்த இசை வெளியீட்டுக்காக அனைத்து தமிழக மாவட்டங்களிலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐநூறு கமல் ரசிகர்களைச் சுமந்து கொண்டு விர்கோ என்ற பலமாடி சுற்றுலா கப்பல், நவம்பர் 18-ஆம் சிங்கப்பூர் நோக்கி விரைய இருக்கிறது.

நவம்பர் 20-ஆம் தேதி, சிங்கப்பூர் மேக்ஸ் எக்ஸ்போ பெவிலியன் ஹாலில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா, சங்கீதா, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் மேடையில் பாடி ஆட இருக்கிறார்கள். இசை வெளியீட்டு முதல்நாளான நவம்பர் 19-ஆம் தேதி கப்பலில் நடைபெரும் நிகழ்சிகளும் பிரமாண்டமாக இருக்குமாம்.

கப்பலில் பிரேசில் மற்றும் சீனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இசை வெளியீடு உட்பட இந்த மூன்று நாள் நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி மூன்று கோடிக்கு வாங்கியிருக்கிறதாம். ஆச்சர்யம்தான்! உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் கமல் படத்தின் இசை வெளியீடு கலைஞர் டீவிக்குச் செல்லாமல் விஜய் டீவிக்குச் செல்வது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-