ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?



 ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.

இலவசங்கள்  எதுவும் இலவசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா இலவசங்களுக்கும் நாம் மறைமுகமாக ஏதோவொரு விலை கொடுக்கிறோம். இலவச ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களிலும் அப்படித்தான்.

கடந்த அக்டோபர் 2011-வரை கிட்டத்தட்ட 37 சதவீத அப்ளிகேசன்களை ஆன்ட்ராய்ட் மார்க்கெட்டிலிருந்து (Google Play) பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நீக்கியுள்ளது. அதில் 70 சதவீதம் இலவச அப்ளிகேசன்களாகும். நீக்கப்பட்டதில் அதிகமானது மால்வேர் அப்ளிகேசன்களாகும்.

பொதுவாக ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும்போது சில அனுமதிகள் (Permissions) கேட்கும். அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் அவைகளை நிறுவ முடியும்.


ஆன்ட்ராய்டில் மொத்தம் 22 விதமான அனுமதிகள் இருக்கின்றன. அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும் முன் அந்த அனுமதிகளை படிப்பது அவசியமாகும். முக்கியமான சில அனுமதிகள்,

  • Services that cost you money – make phone calls [உங்கள் மொபைலில் இருந்து மற்றவர்களுக்கு கால் செய்வதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
  • Services that cost you money - send SMS or MMS [உங்கள் மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ், எம்.எஸ்.எஸ் ஆகியவைகளை அனுப்புவதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
  • Storage - modify/delete SD card contents [உங்கள் மெமரி கார்டில் சேமித்து வைக்கவும், அதில் உள்ளவற்றை மாற்றம் செய்வதற்கு, நீக்குவதற்குமான அனுமதி.]
 இறைவன் நாடினால் அனைத்து அனுமதிகளைப் பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.

அப்ளிகேசன்களை நிறுவும் முன் அவைகள் கேட்கும் அனுமதி அவசியமானதா? என்பதை பாருங்கள். Photography தொடர்பான அப்ளிகேசன்Storage அனுமதியை கேட்கும். ஆனால் அதுவே Phone Call செய்வதற்கான அனுமதியை கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

சில அப்ளிகேசன்களை நிறுவுவதற்கு எந்த அனுமதியையும் கேட்காது. "This application requires no special permissions to run." என்று சொல்லும். ஆனால் அது போன்ற அப்ளிகேசன்களாலும் மால்வேர்களை நிறுவி நமது தகவல்களை எடுக்க முடியும் என்று தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?


தீங்கு விளைவிக்கும் அப்ளிகேசன்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சிறந்த வழி, அந்த அப்ளிகேசன்/கேம் பற்றி அதை பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை "User Reviews" பகுதியில் படிப்பதாகும். அதை படித்தல் ஓரளவு நாம் தெரிந்துக் கொள்ளலாம். Rating-ஐ மட்டும் பார்க்க வேண்டாம். கருத்துக்களையும் படியுங்கள்.

முடிந்தவரை அப்ளிகேசன்/கேம்களை Google Play-வில் இருந்து மட்டுமே நிறுவுங்கள். தற்போது  போலியான Angry Birds Space கேம் மற்ற தளங்களில் பரவி வருகிறது. இது Trojan Virus-ஐ நிறுவிவிடும்.

கவர்ச்சியான, ஆபாசமான அப்ளிகேசன்/கேம்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவைகள் தான் அதிகம் மால்வேர்களை பரப்புகிறது.

நீங்கள்  பார்க்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் நிறுவ வேண்டாம்.

இறைவன் நாடினால் ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு பற்றி மேலும் பார்ப்போம்.
Read more »

கூகிளை அழிக்கும் Zergs, காப்பாற்ற தயாரா?

Zerg என்பது StarCraft என்னும் ஆன்லைன் விளையாட்டில் வரும் வேற்றுகிரக எதிரி உயிரினமாகும்[பார்க்க: மேலுள்ள படம்]. அது O வடிவில் இருக்கும். தற்போது இரண்டு O-க்கள் கூகிளை அழித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் அவைகளை தடுத்து கூகிளை காப்பற்ற முடியும். நீங்கள் தயாரா?

முதல் பத்தியை படித்ததும் குழப்பமாக உள்ளதா? சரி நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் தேடலில் அவ்வப்போது சுவாரசியமான சில விளையாட்டுக்களை "Easter Eggs" என்ற பெயரில் அறிமுகப்படுத்தும். தற்போது Zerg Rush என்னும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.



கூகுள் தளத்தில் Zerg Rush என்று தேடி கொஞ்ச நேரம் காத்திருங்கள். இரண்டு நிறங்களில் O-க்கள் விழுந்துக் கொண்டே இருக்கும். அவைகள் தான் Zergs. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தேடல் முடிவுகளை அழிக்கும். அதை நீங்கள் தடுக்க வேண்டும். அதன் மேல கிளிக் செய்துக் கொண்டிருந்தால் அழிந்துவிடும். இது உங்கள் வேகத்திற்கான சவாலாகும். விளையாடி முடித்தப்பின் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை கூகிள்+ தளத்தில் பகிரலாம் (ஃபயர்ஃபாக்ஸில் பகிர முடியவில்லை. க்ரோமில் தான் பகிர முடிகிறது). கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



விளையாடி முடித்ததும் எல்லா O-க்களும் ஒன்று சேர்ந்து GG என்ற வடிவில் நிற்கும். அதற்கு "Good Game" என்று அர்த்தம்.


உங்களுக்கு  இந்த விளையாட்டு பிடித்திருக்கிறதா?எத்தனை மதிப்பெண்கள் நீங்கள் பெற்றீர்கள்?
Read more »

3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?


 3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.   

முகவரி: http://www.mozilla.org/en-US/firefox/fx/



 பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Click செய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.


 பிறகு  கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவுதான்! நீங்கள் பார்க்கும் தளம் முப்பரிமாணத்தில் தெரியும். அதை க்ளிக் செய்துக் கொண்டு எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். Zoom செய்தும் பார்க்கலாம். இதிலிருந்து வெளிவர Esc பட்டனை அழுத்தினால் போதும்.

இது பற்றி ஒரு சிறிய வீடியோ உருவாக்கியுள்ளேன். அவசியம் பாருங்கள்.


Read more »

உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை

 


சில முக்கியமான பதிவுகளை எழுதி முடித்து விட்டு, நாம் திரட்டிகளில் இணைப்பதற்குள் நம்மவர்கள் அதை சுட்டு, சுட சுட தங்கள் தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? பல சமயம் அவர்கள் நமக்கு இணைப்பு தருவதே இல்லை, அப்படி இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் நம் தளத்துக்கு ஒரு இணைப்பு தர முடிந்தால்? எப்படி செய்வது அதை?




1. முதலில் http://id.tynt.com என்ற இந்தத் தளத்திற்கு செல்லவும். 

2. இதில் publisher Sign Up என்ற பகுதியில் உங்கள் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், தள முகவரி தரவும். 

3. இப்போது அடுத்த பக்கத்தில் Next தரவும். இதில் சில மாற்றங்கள் செய்யும் வசதி உள்ளது, அதை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை, விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம். 

4. இப்போது வரும் Coding ஐ உங்கள் Edit Template பகுதியில் சேர்க்க வேண்டும். 


Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:

• Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

•அதில் </head> என்ற Code-ஐ தேடவும்.

• தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் நிரலை PASTE செய்யவும்.

• SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான். 

5. இப்போது Tynt தளத்தில் Next கொடுத்து அடுத்த பக்கத்தில் Test My Script என்பதை கொடுத்து Verify செய்யவும். இது Success ஆனவுடன் Next தரவும். 

6. இப்போது SEO Report, Keyword Report, Social Share Report போன்றவற்றை நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலம் பேர வேண்டுமா என்று கேட்கும். இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து விடுங்கள். 

இப்போது ஒருவர் உங்கள் பதிவை Copy/Paste செய்யும் போது உங்கள் பதிவின் இணைப்பு அதில் சேர்ந்து விடும். ஒருவர் உங்கள் பதிவை காபி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போதும் இது நிகழும், இதனால் மின்னஞ்சலை படிப்பவர்கள், மற்ற பதிவுகளை படிக்க விரும்பினால், அதில் உள்ள பின் இணைப்பின் வழியே உங்கள் தளத்திற்கு வர முடியும்.

அத்தோடு Keyword Report என்ற வசதி மிகப் பெரிய பலனை தருகிறது. இதன் மூலம் உங்கள் வாசகர் உங்கள் தளத்தில் எதை தேடுகிறார்?, அதை எப்படி அடுத்த தளத்தில் பெறுகிறார்?, அதை உங்கள் தளத்தில் பகிர்ந்தால் உங்கள் வாசகர் உங்கள் தளத்திலேயே இருப்பார் என்று சொல்லுகிறது.


இது எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோ மூலம் காணலாம். 



முக்கியமாக தேடுபொறிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும், Alexa Rank போன்றவை இதன் மூலம் உயரும். 

Read more: http://www.karpom.com/2012/04/follow-copied-posts-of-your-blog.html#ixzz1sGq5scC2
Read more »

மெகா சீரியல்களை வெறுக்க ஒரு இணையதளம்.

 
இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியிருக்கிறது சீரியல்ஹேட்டர்ஸ் இணையதளம்.மெகா சீரியல்களை பெண்கள் மட்டும் தான் பார்க்கின்றனரா என்று ஆவேசமாக கேட்ககூடிய பெண்களும் இந்த தளத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சீரியல்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம்.

ஆம் சீரியல்கள் மீதான‌ வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக என்றே இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
நீங்கள் பார்த்து நொந்துபோன சீரியல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மீதான் வெறுப்பை இந்த தளம் மூலம் வெளிப்படுத்தலாம்.
இந்த தளத்தில் நுழைந்ததுமே வரிசையாக மெகா சீரியல்கள் அவர்றுக்கான புகைப்படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே வெறுக்கப்பட்டவை தான்.ஒவ்வொரு புகைப்படத்தை கிளிக் செய்தால் அதனை எத்தனை பேர் வெறுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாமும் வெறுப்பதோடு அப்படியே மற்றவர்கள் அந்த சீரியல் குறித்து தெரிவித்துள்ள‌ கருத்துக்களை படித்துப்பார்க்கலாம்.
குறிப்பிட்ட சீரியலை பார்த்து ரொம்பவும் நொந்து போயிருந்தால் அந்த சீரியலை வெறுப்பதற்காக நீங்களே பரிந்துரைக்கலாம்.சீரியலின் பெயர்,ஒளிபரப்பாகும் சேனல்,அதன் மொழி ஆகிய விவரங்களை தெரிவித்தால் போதும் அந்த சீரியல் வெறுப்பதற்காக அரங்கேறி விடும்.
எல்லாம் சரி முதலில் சீரியலை வெறுப்பவர்கள் அதனை பார்த்ததாக தானே அர்த்தாம் ,பின் ஏன் இந்த ஆவேசம் என்று கேட்கலாம்.இந்த கேள்விக்கான பதிலை இந்த தளமே அதன் அறிமுக பகுதியில் குறிப்பிட்டுள்ளது.வீடுகளில் எதை பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பெரும்பான்மை நம்மிடம் இல்லாததால் பல நேரங்களில் வேறு வழியில்லாமல் மெகா சீரியல்களை பார்க்க வேண்டியிருக்கிறது.
அதற்காக லாஜிக் இல்லாத கதை போக்குகள்,எல்லோரும் இரண்டு முறைகலயாணம் செய்து கொள்வதை,ஒவ்வொரு பெண்ணும் மூன்று மூறைவிவாகரது பெறுவதை இன்னும் பிற அபத்தங்களை பொருத்து கொள்ள தான் வேண்டுமா?குறைந்த பட்சம் அந்த வேதனையையாவது கொட்ட ஓரு இடம் வேண்டாம்.
அந்த இடமாக தான் இந்த தளம் விளங்குகிறது.
சீரியல் வெறுப்பாளர்களுக்கு இந்த தளம் சரியான வடிகால்.ஆனால் ஒரே குறை.இந்தி மற்றும் மராத்தி சீரியல்கலை வெறுக்கும் வசதி தான் தரப்பட்டுள்ளது.இது பெருங்குரை.உடனடியாக அகில இந்திய அளவில் விரிவாக்கம் செய்ய சொல்ல வேண்டும்.இல்லை என்றால் குறைந்த ப‌ட்சம் தமிழ் சேனல்களையாவது சேர்க்க சொல்ல வேண்டும்.
இணையதள‌ம் முகவ‌ரி;http://serialhaters.com/


Read more »

இரகசிய தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

 


உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது கொப்பி செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தெரிவு செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், கொப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தெரிவு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
தரவிறக்க சுட்டி
Read more »

கூகுள் நம்மை ஏமாற்றும்போது? நாம் கூகுளை ஏமாமற்றினால் தவறா?

 


தமிழ் நண்பர்களே, 

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?  நமக்கு பயன் உண்டு ஆனால் அவர்களுக்கு அதிக பயன்? அதிக வருமானம்! 

எப்படி ?????

Google has more than 1 billion unique users per month who use their services without paying for it. 


Last Quarter Google made $3 billion in profits just by displaying ads. That means Google earns on average $1 per month per unique user.



இப்படி இலவச சேவையை நமக்கு வழங்கி அவர்கள் அதிக வருமானத்தினை பெறுகிறார்கள்.  கூகுளே மட்டும் அல்ல Facebook! Bing! Yahoo! போன்ற அனைவரும் இலவச சேவையை தந்து வருமானத்தினை அவர்கள் வைத்து கொள்கிறார்கள்.  நாமளும் சேவை கிடைத்தால் போதும் என்று உள்ளோம். ஆனால் இதற்க்கு மாற்று தீர்வு  வந்து விட்டது.  



தீர்வாக, நமக்கு ஒரு  அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை  போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
 
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
 
இவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ? ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். [அவர்களின் தளத்தின் வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்]


இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.


ஏன் மூன்று நபர்களை நாம் இணைக்க வேண்டும்? 


அதிக வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம்.  

இவர்கள் கூகுளே சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை! இவர்களின் தளத்தினை பயன்படுத்தினால் போதும் நாங்கள் உங்களுக்கும் வரும் வருமானத்தினை  பிரித்து தருகிறோம் என்று  கூறுகிறார்கள்.

இந்த தளத்தில் இதுவரை ( 12.04.2012, 11.00Am ) 5,873,800க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர். ( இதில் நொடிக்கு ஒருவர் இதில் இணைந்து கொண்டு வருகிறார்கள். ) 

6,000,000 வாடிக்கையாளர்கள் இதில் இணைந்தவுடன் இவர்கள் தனது சேவையை தொடங்கவுள்ளனர்.  



கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
   


இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 6,000,000
 வடிக்கையாளர்களை  மட்டுமே அனுமதிக்கிறது. அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். 6,000,000 வடிக்கையாளர்கள் வந்தவுடன்
 பிறகு இதில் யாரும் இனைய முடியாது.




இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.

மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 
 


முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும். ஒருவேளை நீங்கள் இன்னும் Verify செய்யாமல் இருந்தால் இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.

உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.




குறிப்பு :
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.
 நாம் இவர்களுக்கு எந்த பணமும் கட்ட போவதில்லை ஆகையால் இவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் எனும் பயம் வேண்டாம். இவர்கள் சொல்லும் விளக்கமான பதில்களை ஒரு முறை படித்து பாருங்கள் பின் உங்களுக்கு புரியும். (கீழ் உள்ள Link சென்று படிங்கள்.)


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/
 
 ஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இனைந்து கொள்ளவும்.


 கிடைத்து இருக்கும் அருமையான வாய்ப்பினை  நாம் பயன்படுத்தி பயனடைவோம் வாருங்கள்.  





  இவர்களின் Twitter முகவரில் இனைந்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் Updates Informationகளை நம்மால் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர்களின் Twitter முகவரி : http://www.twitter.com/WazzubTweets
 ( இதில் இனைந்து விட்டு தளத்தினை மறந்து பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்,  இந்த தளத்தினை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் நமக்கும் வருமானம் கிடைக்கும் ஆகையால் நாமும் அவர்களுக்கு வாய்பளித்து பயன் பெறுவோம். )
Read more »
 
-