ஆப்பிள் நிறுவனம் - சர்ச்சை!
ப்பிள் நிறுவனம் தனது புதிய MacBook மடிக்கணினியில் அனைத்து USB / HDMI Port களையும் நீக்கி, ஒரே ஒரு USB-C என்ற Port வசதியை மட்டும் கொடுத்து இருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
வழக்கம் போல இதைப் பயன்படுத்துபவர்களை விட மற்றவர்கள் தான் அதிகம் கொந்தளித்துக் கொண்டுள்ளார்கள். 
அது எப்படி ஒரே ஒரு USB Port மட்டும் கொடுக்கலாம்? இது ரொம்பக் குறைவு! இதெல்லாம் போதவே போதாது, ஆப்பிள் நிறுவனம் இதை வைத்துக் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறது என்று விவாதம் செய்து கொண்டுள்ளார்கள்.
பின்வரும் படத்தில் உள்ள Model USB-A & USB-B தான் நம் பெரும்பான்மையான பயன்பாட்டில் உள்ளவை.
USB-type-C
USB-A USB Stick / External Harddisk போன்றவற்றை இணைக்கப் பயன்படுத்துவோம்.
USB-B பெரும்பாலும் கேமராக்கு பயன்படுத்துவோம்.
USB-C தற்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்கனவே சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த பிறகு ஒரே ஒரு Port என்பதால் சர்ச்சைக்குள்ளாகி அனைவருக்கும் அறிமுகமாகியது. 
மேலும் சில USB Models 
USB Models
சர்ச்சையின் துவக்கம் CD Drive
துவக்கத்தில் மடிக்கணினி மிகப் பெரியதாக அதிக எடையுள்ளதாக இருந்தது. பின் நாளடைவில் இதனுடைய அளவு குறைந்து கொண்டே வருவதை அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
ஆப்பிள் நிறுவனம் முதலில் CD Drive (தற்போது DVD Drive) இல்லாத கணினியை அறிமுகப்படுத்திய போது, இதே போல எதிர்ப்பு வந்தது.
அதற்கு ஆப்பிள் நிறுவனம், CD பயன்பாடு குறைந்து வருகிறது, இனி அனைத்துமே இணையம் மூலமே பெற்றுக் (தரவிறக்கம்) கொள்ளலாம். எனவே, CD பயன்பாடு எதிர்காலத்தில் இருக்காது என்று கூறி விட்டது.
இதற்கு அந்தச் சமயத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
பின்னர்ச் சில வருடங்களுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் கூறியது போலவே ஆகி தற்போது CD Drive பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. துவக்கத்தில் இயங்கு தளம் நிறுவ மட்டுமே பயன்பட்டது, தற்போது  இதைப் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள்.
எதோ பேருக்கு இருந்து கொண்டு இருக்கிறது. உங்களுடைய கணினியில் எப்போது கடைசியாக DVD பயன்படுத்தினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்!
தற்போது எடை குறைவாக வரும் மடிக்கணிகள் DVD Drive தவிர்த்து விடுகின்றன. தேவைப்பட்டால் External DVD Drive வாங்கிக்கொள்ளலாம்.
நான் DVD Drive இல்லாத Lenovo மடிக்கணினி வாங்கி 4 வருடங்கள் ஆகிறது. இதனுடன் இலவசமாக External DVD Drive கொடுத்தார்கள் ஆனால், இதைப் பயன்படுத்தியது இரண்டு முறை இருந்தாலே அதிகம்.
தற்போது நான் பணி புரியும் நிறுவனத்தில் மடிக்கணினியுடன் இணைந்து DVD Drive வாங்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டோம்.
Adobe Flash in Mobile
இதன் பின்னர் “Adobe Flash அதிகம் சக்தியை (resource) எடுக்கிறது, பாதுகாப்பு இல்லை, பேட்டரி விரைவில் குறைகிறது. எனவே, ஆப்பிள் நிறுவனம் இதை மொபைலில் பயன்படுத்தாது.
ஆனால், கணினியில் தொடரும். இனி HTML 5 தொழில்நுட்பம் தான் எதிர்காலம்” என்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவித்தார்.
மிகப்பெரிய அறிவிப்பு. இது இணைய உலகில் பெரிய சர்ச்சையானது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் தன் முடிவில் இருந்து மாறவில்லை.
பின்னர் விரைவிலேயே Adobe நிறுவனம் இதை ஏற்றுக்கொண்டு, HTML 5 தான் இனி எதிர்காலம் என்று கூறி விட்டது.
தற்போதும் Flash பயன்படுத்தும் தளங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், பாதுகாப்பில் கேள்விக் குறியாகவே உள்ளது.
USB-C
Apple USBC - Cஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு பொறுப்பிற்கு வந்த “டிம் குக்” காலத்தில் தற்போது “ஒரே ஒரு USB-C” என்ற மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இணையத்தில் கரித்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கணினியில் அனைத்து வகை Port களையும் நீக்கி ஒரே ஒரு USB-C என்ற வசதியை மட்டும் கொடுத்து இருக்கிறது. வேறு வகையில் கூறுவதென்றால் VGA, USB-A, USB-B, HDMI, eSATA போன்ற Port களை நீக்கி விட்டது.
அதாவது எந்தக் கூடுதல் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டி இருந்தாலும் இதற்கான Hub நீங்கள் பெற்றாக வேண்டும். பின் வரும் படம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது.
USB C - HUB converter
அதுவும் Power Cable இணைக்கவும் இதே USB-C Port டையே பயன்படுத்த வேண்டும் என்பது தான் பலரை கோபத்தில் ஆழ்த்தி விட்டது என்று நினைக்கிறேன். 
எந்தச் சாதனத்தை இணைப்பது என்றாலும் இந்த Port ல் தான் இணைக்க முடியும். உதாரணத்திற்கு ஒருவர் ஒரே சமயத்தில் Mouse, Printer, External Keyboard, Projector, USB Stick சாதனம் இணைக்க வேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது.
ஏனென்றால், இதில் ஒரே ஒரு Port தான் இருக்கிறது. இது செயலிழந்தாலோ, சேதமடைந்தாலோ பெரும் சிக்கல்.
ஆப்பிள் நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களும் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்தது. எனவே, இதையும் (HUB) கட்டாயமாக வாங்க வேண்டிய நிலை ஆகிறது. இதனால் கூடுதலாக 19 USD அல்லது 79 USD செலவழிக்க வேண்டியது இருக்கும்.
அதோடு இந்த மடிக்கணியைப் பயன்படுத்துபவர்கள் USB Stick பயன்படுத்த வேண்டும் என்றால் USB-C வசதி உள்ள USB Stick வாங்க வேண்டும்.
இல்லையென்றால் மேலே உள்ள கன்வெர்ட்டர் (USB-C –> USB-A) வாங்க வேண்டும்.
சிறியதாக இருக்கணும் ஆனால், எல்லாமும் வேண்டும்!
நம் மக்கள் மடிக் கணினி சிறியதாக வேண்டும் என்பார்கள் ஆனால், அதில் அனைத்து வசதிகளும் பழைய மடிக்கணி போலவே இருக்கணும் என்பார்கள். இது எப்படிச் சாத்தியம்?
இது எப்படி இருக்கிறது என்றால், வாலி படத்தில் விவேக்கிடம் பாலாஜி ஒரே மாத்திரையில் அனைத்து நோயும் குணமாகனும்!! என்று கேட்பாரே அது போல இருக்கிறது  .
ஆப்பிள் நிறுவனம் என்ன கூறுகிறது என்றால், இனி எதிர்காலம் Wifi தான். எதைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் WIfi இருந்தாலே போதும் கூடுதல் Port தேவையில்லை என்று கூறுகிறது. DVD Drive போல இந்தப் Port களின் பயன்பாடும் குறைந்து விடும் என்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவர்கள் கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை.
ஏன் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சி அடைந்த நாடுகளை வைத்தே இதைச் செயல்படுத்தியிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் WIfi என்பது எங்கும் கிடைக்கும் ஒரு வசதியாகி விட்டது.
எனவே, எந்தச் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் Printer, Projector, Mouse, External keyboard & Power Supply உட்பட Wifi இருந்தாலே போதும்.
இந்தியா போன்ற நாடுகளில் Wifi தற்போது தான் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் முழுமையான பயனைப் பெற வருடங்கள் ஆகும். வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அனைத்திலும் Wifi வசதி இருக்கிறது என்று எதிர்பார்க்க முடியாது.
நாம் உண்மையிலேயே அனைத்தையும் பயன்படுத்துகிறோமா!
பதட்டப்படாமல் யோசித்தால், உண்மையில் அனைவரும் ஒரே சமயத்தில் அனைத்து சாதனங்களையும் பயன்படுத்துவது என்பது குறைவு, எப்போதாவது வரலாம்.
உங்களுக்குச் சிறிய மடிக்கணினி தேவையென்றால் சில நடைமுறை சிரமங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இவை தவிர்க்கவே முடியாது.
ஆப்பிள் நிறுவனம் MacBook கணினியில் மட்டுமே இந்த ஒரே ஒரு USB-C வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. MacBook Pro வகை மடிக்கணினியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதில் வழக்கம் போலப் பல வகை Port கள் உள்ளன.
இது முற்றிலும் ஒருவரின் விருப்பம் சார்ந்ததே! யாரும் இதை வாங்கி ஆகணும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதில் நமக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால் புறக்கணித்து விட்டு நம் தேவைக்குத் தகுந்த கணினி வாங்கிக்கொள்ளலாம்.
ஆப்பிள் இல்லைனா இன்னொரு நிறுவனத்தின் மடிக்கணினி அவ்வளோ தான். தேவை இருப்பவர்கள் வாங்கப்போகிறார்கள் மற்றவர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.
இதற்கு ஏன் சண்டை?!
தற்போது சிரமமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவையே அனைவரும் பின்பற்றுவார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அதாவது கூடுதல் Port பயன்பாடு குறைந்து விடும்.
என்னுடைய விண்டோஸ் கணினியில் நான் எப்போதாவது USB Stick / External Hard Disk பயன்படுத்துகிறேன். மற்றபடி தொடர்ச்சியாக எந்தச் சாதனத்தையும் இணைப்பதில்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் முடிவு வரும் காலத்தில் சரி என்றே நிரூபிக்கப்படும்.
ஒரு Port வைத்ததற்குப் பதிலாக இரண்டு Port வைத்து இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது கூட “லாம்” தான்.
ஆப்பிள் இந்தக் கணினியை அறிமுகப்படுத்திய போது வாங்கலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால், ஒரே ஒரு Port என்பதை அறிய வந்த போது, வாங்கும் எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டேன்.
பின்னாளில் இதையே வாங்கலாம் அல்லது வேறு கணினியை வாங்கலாம். அப்போதைய மனநிலையைப் பொறுத்தது.
கொசுறு
இணையத்தில் இரண்டு பெரிய குழுக்கள் உள்ளது. ஆப்பிள் ஆதரவாளர்கள் / எதிர்ப்பாளர்கள். ஆப்பிள் எந்தத் தயாரிப்பை வெளியிட்டாலும் இரண்டு வாரத்திற்கு இணையம் ரத்த பூமியாக இருக்கும். சண்டை சண்டை சண்டை தான்.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் விலை அதிகம் என்பதாலும், பயன்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் இதைக் கிண்டலடித்து அவ்வப்போது MEME வரும். ஆப்பிள் நிறுவனத்தின் விலையைக் கிண்டலடித்தாலும் அதனுடைய தரம் எவராலும் கொடுக்க முடியாது.
எங்கள் அலுவலகத்தில் Corporate Mobile 75% iPhone (நான் உட்பட) தான் ஆனால், பிரச்சனை என்று இது வரை ஒரே ஒரு iPhone தான் கடைசி இரண்டு வருடத்தில் புகார் வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணினி, கணினி, iPhone என்று எதுவுமே முதலில் வாங்கும் போது மட்டுமே அதிக முதலீடு ஆனால், இதன் மறு விற்பனை மதிப்பு (Resale value) அதிகம். எனவே, பழைய சாதனத்தை விற்று புதிய சாதனம் அதிக முதலீடு இல்லாமல் வாங்க முடியும்.
நான் ஆப்பிள் ரசிகனல்ல ஆனால், இதைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் இதன் தரத்தை உணர்ந்தவன். பின்னாளில் Google Nexus முயற்சிக்கலாம் என்ற யோசனை இருக்கிறது.
Read more »

குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flightsஎப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.

முதலில் இந்த தளம் Google Flights சென்று நீங்கள் கிளம்பும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இவைகளை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும். 

இதில் உள்ள விவரங்கள் உங்களுக்கு தேவையான வகையில் மாற்றி கொடுத்து விமானங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப உள்ள விமானங்கள் உங்களுக்கு பட்டியலில் தெரியும்.


முக்கியமான விஷயம் இந்த சேவை தற்பொழுது அமெரிக்கா நகரங்களுக்கு மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வரவேற்ப்பை பொருத்து கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வரலாம். 

Read more »

Using PayPal in Sri Lanka and Alternatives to PayPalWhen it comes to doing online transactions PayPal is one of the most recognized services but unfortunately PayPal Sri Lanka is send only. That means you can create a account , transfer money to your account using a credit card and pay for different services and goods via PayPal. If you are buying stuff online its is always advisable to pay via PayPal because that way you don’t have to give out your credit card numbers etc. Most online merchants facilitate PayPal payments so it always good to have a account with them. Its free to create and you can be more secure online that way. If you are merchant looking to sell online then giving your customers the opportunity to pay by PayPal increases your credibility and ultimately increases your sales. There are many people who shy away from buying online because they have to give out there credit card details. So why wait , Create a PayPal merchant account .
This is all very good if you want to pay online , but what if you want to receive funds via PayPal , since PayPal Sri Lanka is send only you can’t receive money to your account , so its a bit tough for people doing free lance work etc. But fortunately there is a work around for this , check out how to receive money for PayPal send only accounts. I have personally gotten money this way so I know it works. You are limited to a transaction amount of 500$ because its unverified but its more than enough for some freelance payments.
If this is not enough for you then you can consider some alternatives to PayPal. MoneyBookers and AlertPay are two of the growing online payment services around so they might offer what you are looking for. For more alternative options you can check out other solutions to PayPal send only.

Skrill ( Formerly MoneyBookers )

Another service that supports sending money to Sri Lanka and it was recommended by few people so it has one hard to find thing about payment services , happy customers. It’s very easy to connect your bank account and credit cards with Skrill so definitely a good choice for someone who doesn’t want to be hassled with technicalities. So why wait, go ahead and create a Skrill account now >>>
Read more »

Android Rooting செய்வது எப்படி ?

ஆன்ட்ராய்ட் ரூடிங்க் (ANDROID ROOTING) செய்வதால் பல பலன்கள் உண்டு. ஆனால் ஆன்ட்ராய்ட் ரூட் செய்ய முதலில் அனைவருமே பயப் படுவார்கள். ஏனென்றால் தவறாக ரூட் செய்து விட்டால் போனிற்க்கு சேதம் ஏற்படும். அதனால் இது பயம் கலந்த வேலை ஆகும்.

தற்ப்போது எளிதாக ரூட் செய்ய windows ல் புதிதாகவும் மற்றும் இலவசமாகவும் ஒரு TOOL வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Kingo Android Root. இது முற்றிலும் இலவசம். ஆன்ட்ராய்ட் ரூடிங்க் எல்லா MOBILE PHONE களிலும் செய்ய முடியாது.  ஏனென்றால் ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் ஐ அவ்ரவர் தனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து (CUSTOMIZE) செய்து வெளிஇடுகிறார்கள். அதனால் இந்த டூல் இல் எந்த phone களை ரூட் செய்யமுடியும் என்று பின் வரும் LINK ல் பார்க்கவும்.
ஆன்ட்ராய்ட் ROOT செய்ய பின்வரும் படிகளை பின் பற்றுங்கள்.
1, முதலில் Kingo Android Root download செய்து பின்னர் install செய்யுங்கள்.
2, உங்கள் மொபைல்லில் USB DEBUGGING ஐ on செய்யுங்கள்.
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.௦ மற்றும் 4.1 உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர் Developer Options,பின்னர் “USB debugging”  என்ற box ஐ tick செய்யுங்கள்
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.2  உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர் About Phone,  பின்னர் Developer Options,பின்னர் “USB debugging”  என்ற box ஐ tick செய்யுங்கள்
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.3  உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர்  “MORE” தொடுங்கள், பின்னர் SYSTEM MANAGERல் about phone click செய்யுங்கள். பின்னர் build number ஐ பத்து தடவை தொடர்ந்து தொடுங்கள். ஆன்ட்ராய்ட்
இப்பொழுது திரும்பி “MORE”பகுதிக்கு திரும்ப செல்லுங்கள். இப்போது DEVELOPER OPTION புதிதாக வந்து இருக்கும். இதில் “Usb debugging ” tick செய்யுங்கள். ஆன்ட்ராய்ட்

3, இப்பொழுது KINGOAPP  ஐ run செய்யுங்கள். ஆன்ட்ராய்ட் போனை USB cable ல் CONNECT செய்யுங்கள்.
ஆன்ட்ராய்ட்
4, இப்பொழுது ROOT என்ற பட்டனை அழுத்துங்கள். போன் ரூட் ஆக சில நிமிடங்கள் ஆகும். அவ்ளோ தான்.

NOTE :
ஆன்ட்ராய்ட் ரூடிங்க் செய்வது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. இதனால் சேதம் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.
Read more »

கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.

தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
உருவாக்குவது எப்படி:
 • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.
 • பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
 • அடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create  Community என்ற பட்டனை அழுத்தவும். 
 • இப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும். 

 •  அவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
Read more »

ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு

இந்தியாவின்  பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.


இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும்.  மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:
 • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும். 
 • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.  
 • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
 • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். 
 • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம். 
Read more »

ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?

இதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.

ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ chat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய :
 • உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose பட்டனை அழுத்துங்கள். 
 • உங்களுக்கு ஒரு புதிய விண்டோ வரும் அப்படி வரவில்லை எனில் compose பகுதியில் உள்ள new compose experience என்பதை கிளிக் செய்யவும். 

 • அடுத்து கீழே இருப்பதை போல ஒரு கருமை நிற விண்டோ வரும் அதில் உள்ள Got it என்ற பட்டனை அழுத்துங்கள். 

 • Got It பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு புதிய compose pop-up விண்டோ வந்திருக்கும். 

இனி மற்ற மெயில்களை பார்த்து கொண்டே மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம். ஒருவேளை இந்த புதிய compose விண்டோ பிடிக்கவில்லை எனில் மறுபடியும் பழைய compose விண்டோ வர வைக்க கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள அம்பு குறி மீதி கிளிக் செய்து அதில் வரும் Switch back to old Compose என்பதை கிளிக் செய்தால் பழைய ஸ்டைலுக்கு மாறிவிடும்.

Read more »
 
-