ஸ்பெயினின் சிறப்பு விருந்தாளியாகிறது ஆக்டோபஸ்?

உலக கிண்ண போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்த ஆக்டோபஸை தமது மேட்ரிட் மியூசியத்திற்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 6 போட்டிகளில் சரியாக கணித்த ஆக்டோபஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் தான் வெல்லும், என உறுதியாக கூறி, ஸ்பெயின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
 ஸ்பெயின் சாம்பியனானதால் ஆக்டோபஸ் ஆரூடம் உலகப்புகழ் பெறத்தொடங்கியது. இதுநாள் வரை, ஜேர்மனியின் ஒபேர்ஹௌசென்  மியூசியத்தில் இருந்து வந்த ஆக்டோபஸை, ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வந்தது.
முதலில் மறுத்தாலும், பாரிய நிதியுதவி செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படியும், ஆக்டோபஸுக்கு பதிலாக வேறொரு விலங்கை வழங்க முன்வந்தமையாலும், தாம் இந்த ஆக்டோபஸை ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்ய சம்மதித்திருப்பதாக ஒபேர்ஹௌசென் மியூசியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு விருந்தாளியாக இந்த ஆக்டோபஸை வரவேற்பதற்கு ஸ்பெயின் மக்கள் காத்திருக்கின்றனர். கௌரவ சிட்டிசன் கொடுக்கவும் ஸ்பெயின் தயாராக இருக்கிறது. இதேவேளை அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனி தோற்கும் என ஆக்டோபஸ் கணிப்பு கூறி அதன் படியே நடந்ததால், ஜேர்மனியில் விரைவில் நடைபெறவிருக்கும் சர்வதேச உணவுத்திருவிழா கொண்டாட்டத்திற்கு ஆக்டோபஸை பிரதம விருந்தினராக அழைத்து, சமைக்க வேண்டும் என ஜேர்மனியின் காற்பந்து கிளப் ஒன்று திட்டித்தீர்த்திருக்கிறது.
ஒரு ஆக்டோபஸின் ஆயுள் காலம் மூன்று அல்லது நான்கு வருடங்களிற்கு உட்பட்டது. ஆனால் இந்த போல் அக்டோபஸிற்கு இப்போதே இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் ஆரூடம் சொல்லும் வேலையில் இருந்து ஓய்வு கொடுக்க இருப்பதாக இதன் பராமரிப்பாளர்களும் அறிவித்திருக்கின்றனர். ஆக்டோபஸ் நினைத்தால் கூட இந்தப் பிரபலத் தன்மையில் இருந்து விடுபட முடியாது போல் தெரிகிறது.
 கிளிஜோசியத்தை, இது நாள் வரை வெள்ளைக்காரர்கள் வேடிக்கை நிகழ்வாகவே பார்த்தனர்.  பெரும்பாலும், இந்த மாதிரி விலங்குகளை கொண்டு முன்கூட்டியே கணிக்கப்படும் நிகழ்வுகளை அவர்கள் பொருட்டாகவே மதிப்பதில்லை! ஆனால் ஆக்டோபஸ் ஆரூடம் பழித்ததிலிருந்து அவர்களுக்கும் ஜோதிட நம்பிக்கை கூடியிருக்கிறதாம்!
இதேவேளை பிரேசிலின் சாப்ட்வேர் டெவெலபர் கண்டுபிடித்த புதிய 'U TouchLabs' ஆப்ளிகேஷனை, ஐ போனில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதில் இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தெரிவு செய்ய ஆக்டோபஸ் ஐகனாக பயன்படுகிறது. சினிமா அல்லது தியேட்டர்? பீசா அல்லது சுஷி? மரிசியா அல்லது ஆண்ட்ரியா? கேளுங்கள் ஆக்டோபஸிடம் என தொடர்கிறது இந்த ஆப்ளிகேஷன்!
Read more »

யூ-டியூப் வீடியோக்களுக்காக பத்து மென்பொருட்கள்

 
எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

இந்த வகையில் நாம் அனைவரும் தேடும் தளம் யு–ட்யூப் தளமாகும். இங்கு தேடும் பொருள் குறித்த மற்றும் சார்ந்த வீடியோ காட்சிகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடிப் பெறுவதோடு நாம் நின்றுவிடுவதில்லை. இவற்றை டவுண்லோட் செய்து மீண்டும் மீண்டும் பார்க்க எண்ணுகிறோம். கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நம் ஐ–பாட் மற்றும் மொபைல் போன்களில் கூட இவற்றைப் பதிந்து வைத்துக் காண விரும்புகிறோம். அவற்றிற்கு உதவும் சில புரோகிராம்கள் மற்றும் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1. வீடியோ பார்மட் மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

2. வேகமாக டவுண்லோட் நடைபெற

வீடியோ காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம் கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த

மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader) என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

4. யுட்யூப்பினை எடிட் செய்திட

ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன் தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும் மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ பைல்களையும் இணைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

5. யுட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க

ஆன் லைனில் FLV Player என்ற ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும் பின்னும் செல்லலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

6. பயர்பாக்ஸிற்கான யுட்யூப் பிளேயர்:

யு–பிளேயர் (YouPlayer) என்ற பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்

ஆர்பிட் டவுன்லோடர் (Orbit Downloader) என்ற பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு Get It என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:

மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

9. யுட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற

யு–ட்யூப் தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும் வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும் புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல் கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க் கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும் முடியும் . இதில் ஒரு ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம் என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

10. பாட் மற்றும் போனுக்கு மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். Free Dvd videosoftware என்ற சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை மேற்கொள்கிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள மென்பொருட்களை தரவிறக்கி , உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.
Read more »

உங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.

மக்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து யாரிடம் சண்டை போடுவார்கள் தெரியுமா ? தொலைக்காட்சியின் Remote control தான்.
__________
___________________Gesture Remote
ஒரு iphone னை கொண்டு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை
இயக்கினால் எப்படி ஒரு அனுபவம் இருக்குமோ அந்த அனுபவத்தை தரவல்லது இந்த புதிய கண்டுபிடிப்பு “Gesture Remote” ஆகும்.

இந்த நவீன கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிறுவனம் IDENT Technology AG ஆகும். இதில் keypads இல்லை,Buttons இல்லை ஒன்றுமட்டும்தான் உள்ளது தொடும்சிக்னல் மட்டும்தான்.
Read more »

(படங்கள் இணைப்பு) “Airtel” யாழ்.கிளை நேற்று திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)


“எயர்ரெல்’ நிறுவனம் (இன்று) அதாவது நேற்று தனது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக அதன் பிரதம நிறை வேற்று அதிகாரி திருமதி அமலி நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கான “எயர் ரெல்’ தொலைபேசி வலையமைப்பு சேவை நேற்றுக்காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எயர்ரெல் நிறு வன யாழ்.மாவட்ட அலுவலகத்தை இல.434, ஆஸ்பத்திரி வீதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:
எமது நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங் கையில் தனது சேவையை ஆரம் பித்தது. எனினும் எமது வலைய மைப்பு இன்றுடன் (நேற்று)தனது இலக்கை எட்டியுள்ளது.
இன்றுடன் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் “எயர்ரெல்’ தொலைபேசி வலையமைப்பு விஸ் தரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தி னராக யாழ்.மாவட்ட நீதிபதி அ. பிறேம் சங்கர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக “எயர்ரெல்’ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார, சந்தைப் படுத்தல் முகாமையாளர் விதுர்ரதன், ஹற்றன் நஷனல் வங்கியின் சிரேஷ்ட முகாமை யாளர் ரி.ஜெய ராஜசிங்கம், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையா ளர் எஸ்.பத்ம நாதன், கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஏ.ஆ. குலேந்திரன், மின்சாரசபைப் பொறியியலாளர் எஸ்.ஞானகணே சன் மற்றும் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்  “எயர்ரெல்’ இன் முதலாவது இணைப்பு அட்டையை யாழ்.மாவட்ட நீதிபதி அ.பிறேம் சங்கருக்கு “எயர்ரெல்’ நிறுவன பிர தம நிறைவேற்று அதிகாரி வழங்கி னார்.
Read more »

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!



வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.
ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது இந்தப் படம்.
கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.
படம் வெளியாகி 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.
அமெரிக்காவில் மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. பிரிட்டனில் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. எந்த இந்தியப் படமாக இருந்தாலும் ஒரு காட்சிக்கே அரங்கு நிறையாத ஸ்கான்டினேவியன் நாடுகளான நார்வே மற்றும் ஸ்வீடனில் ஒரு வாரம் ஓடிய ஒரே படம் எந்திரன்தான் என்கிறார்கள்.
வட இந்தியாவில் எந்திரன் / ரோபோ பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட எந்திரன் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது.
தெலுங்கில் முன்னெப்போதும் கண்டிராத வெற்றி ரோபோவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் இதுவரை சாதனை என்று கருதப்பட்ட மகாதீரா வசூலை முதல் வாரத்திலேயே தாண்டிவிட்டது ரோபோ. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான மகேஷ்பாபுவின் கலேஜா கூட சுமாராகத்தான் போகிறது. ஆனால் எந்திரனுக்கு இன்றுவரை கூட்டம் குறையவில்லை ஆந்திராவில்.
தெலுங்கு ரோபோவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் இந்தப் படம் ரூ 170 கோடியைக் குவித்து மிரள வைத்துள்ளது. இதுவரை தமிழ்ப் பட உலகம் கண்டும் கேட்டுமிராத பெரும் சாதனை இது.
இந்தியா உள்பட உலகளவில் இதுவரை ரூ 318 கோடியை எந்திரன் / ரோபோ குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சத்யம் சினிப்ளெக்ஸின் ஜெயேந்திரா பானர்ஜி கூறுகையில், “இந்த சாதனையை இன்னொரு படம் தொட ரொம்ப நாளாகும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை மீண்டும் ரஜினியே கூட இதை முறியடிக்கலாம்” என்றார். சத்யம் சினிப்ளெக்ஸில் 80 சதவீத பார்வையாளர்கள் ரோபோவுக்கு வருவதாகவும், எந்திரனுக்கு இன்றும் 100 சதவீத பார்வையாளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய அளவில் வசூலில் சாதனை புரிந்த படமாக 3 இடியட்ஸை கூறிவந்தனர். ஆனால் அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி, இதுவரை வசூலித்த தொகைக்கும் அதிகமாக மூன்றே வாரத்தில் வசூலித்துள்ளது எந்திரன். இப்போதும் அகமதாபாத், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் ரோபோ ஓடுவது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள்.
அஸ்ஸாமில் வெளியான முதல் தமிழ்ப் படம் எந்திரன் / ரோபோவாகத்தான் இருக்கும் என்கி்றார் பிரபல விநியோகஸ்தர் வினோத் மெஹ்ரா. அதேநேரம், முன்பு ரஜினியின் சிவாஜிக்கு கிடைத்த அளவு வரவேற்பு கொல்கத்தாவில் எந்திரனுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
கேரளத்தில் இன்னும் 120 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை (15 நாளில்) ரூ 6.12 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பவர் 7 ஆர்ட்ஸ் விஜயகுமார். இவர்தான் குசேலனை எடுத்தவர். அந்தப் படத்தில் விட்டதை, எந்திரனில் பிடித்த தெம்பிலிருக்கிறார். இந்தப்படம் ஒட்டுமொத்தமாக தமக்கு ரூ 9 கோடி வரை வசூலித்துத் தரும் என நம்புகிறார் விஜயகுமார். தீபாவளிக்கும் பல திரையரங்குகள் புதிய மலையாளப் படங்களை விட எந்திரனே இருக்கட்டும் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இப்போதும் 40 திரையரங்குகளில் ஓடும் எந்திரன், புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சில திரையரங்குகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விநியோகஸ்தர், “இங்கெல்லாம் மூன்று அல்லது நான்கு அரங்குகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். எனவேதான் பூந்தமல்லி, ஆதம்பாக்கம் போன்ற இடங்களில் ஒரு திரையரங்கில் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். மற்றபடி வார இறுதி நாட்களில் இப்போதும் டிக்கெட் கிடைக்காத நிலைதான் உள்ளது,” என்றார்.
Read more »

டிசம்பரில் காவலன் ரிலீஸ்?


விஜய் நடித்துள்ள காவலன் படம் டிசம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
விஜய் நடித்து கடைசியாக வெளியான படம் சுறா. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கிய படம் காவல்காரன். இப்படத்தின் பெயருக்கு சத்யாமூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்காதல் என்று பெயர் மாற்றினார்கள்.
ஆனால் இந்தத் தலைப்பு விஜய்க்குத் திருப்தி தரவில்லையாம். இதையடுத்து இப்போது காவலன் என படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
காவலன் படம் விஜய்யின் 51வது படமாகும். மலையாளத்து சித்திக் இயக்கியுள்ளார். ஜோடியாக ஆசின் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கும் அதையடுத்து ஐரோப்பாவுக்கும் செல்லவுள்ளனராம். இதை முடித்து விட்டால் படம் முடிந்து விடுமாம்.
இதையடுத்து டிசம்பரில், படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
இதேபோல மறுபக்கம் வேலாயுதம் படமும் வேகமாக வளர்ந்து வருகிறதாம்.
Read more »
 
-