
தொடர்ந்து 6 போட்டிகளில் சரியாக கணித்த ஆக்டோபஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் தான் வெல்லும், என உறுதியாக கூறி, ஸ்பெயின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
ஸ்பெயின் சாம்பியனானதால் ஆக்டோபஸ் ஆரூடம் உலகப்புகழ் பெறத்தொடங்கியது. இதுநாள் வரை, ஜேர்மனியின் ஒபேர்ஹௌசென் மியூசியத்தில் இருந்து வந்த ஆக்டோபஸை, ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வந்தது.
சிறப்பு விருந்தாளியாக இந்த ஆக்டோபஸை வரவேற்பதற்கு ஸ்பெயின் மக்கள் காத்திருக்கின்றனர். கௌரவ சிட்டிசன் கொடுக்கவும் ஸ்பெயின் தயாராக இருக்கிறது. இதேவேளை அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனி தோற்கும் என ஆக்டோபஸ் கணிப்பு கூறி அதன் படியே நடந்ததால், ஜேர்மனியில் விரைவில் நடைபெறவிருக்கும் சர்வதேச உணவுத்திருவிழா கொண்டாட்டத்திற்கு ஆக்டோபஸை பிரதம விருந்தினராக அழைத்து, சமைக்க வேண்டும் என ஜேர்மனியின் காற்பந்து கிளப் ஒன்று திட்டித்தீர்த்திருக்கிறது.
ஒரு ஆக்டோபஸின் ஆயுள் காலம் மூன்று அல்லது நான்கு வருடங்களிற்கு உட்பட்டது. ஆனால் இந்த போல் அக்டோபஸிற்கு இப்போதே இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் ஆரூடம் சொல்லும் வேலையில் இருந்து ஓய்வு கொடுக்க இருப்பதாக இதன் பராமரிப்பாளர்களும் அறிவித்திருக்கின்றனர். ஆக்டோபஸ் நினைத்தால் கூட இந்தப் பிரபலத் தன்மையில் இருந்து விடுபட முடியாது போல் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக