Android Rooting செய்வது எப்படி ?

ஆன்ட்ராய்ட் ரூடிங்க் (ANDROID ROOTING) செய்வதால் பல பலன்கள் உண்டு. ஆனால் ஆன்ட்ராய்ட் ரூட் செய்ய முதலில் அனைவருமே பயப் படுவார்கள். ஏனென்றால் தவறாக ரூட் செய்து விட்டால் போனிற்க்கு சேதம் ஏற்படும். அதனால் இது பயம் கலந்த வேலை ஆகும்.

தற்ப்போது எளிதாக ரூட் செய்ய windows ல் புதிதாகவும் மற்றும் இலவசமாகவும் ஒரு TOOL வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Kingo Android Root. இது முற்றிலும் இலவசம். ஆன்ட்ராய்ட் ரூடிங்க் எல்லா MOBILE PHONE களிலும் செய்ய முடியாது.  ஏனென்றால் ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் ஐ அவ்ரவர் தனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து (CUSTOMIZE) செய்து வெளிஇடுகிறார்கள். அதனால் இந்த டூல் இல் எந்த phone களை ரூட் செய்யமுடியும் என்று பின் வரும் LINK ல் பார்க்கவும்.
ஆன்ட்ராய்ட் ROOT செய்ய பின்வரும் படிகளை பின் பற்றுங்கள்.
1, முதலில் Kingo Android Root download செய்து பின்னர் install செய்யுங்கள்.
2, உங்கள் மொபைல்லில் USB DEBUGGING ஐ on செய்யுங்கள்.
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.௦ மற்றும் 4.1 உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர் Developer Options,பின்னர் “USB debugging”  என்ற box ஐ tick செய்யுங்கள்
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.2  உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர் About Phone,  பின்னர் Developer Options,பின்னர் “USB debugging”  என்ற box ஐ tick செய்யுங்கள்
நீங்கள் ஆன்ட்ராய்ட் 4.3  உபயோகப்படுத்தி கொண்டு இருந்தால் முதலில் Settings சென்று பின்னர்  “MORE” தொடுங்கள், பின்னர் SYSTEM MANAGERல் about phone click செய்யுங்கள். பின்னர் build number ஐ பத்து தடவை தொடர்ந்து தொடுங்கள். ஆன்ட்ராய்ட்
இப்பொழுது திரும்பி “MORE”பகுதிக்கு திரும்ப செல்லுங்கள். இப்போது DEVELOPER OPTION புதிதாக வந்து இருக்கும். இதில் “Usb debugging ” tick செய்யுங்கள். ஆன்ட்ராய்ட்

3, இப்பொழுது KINGOAPP  ஐ run செய்யுங்கள். ஆன்ட்ராய்ட் போனை USB cable ல் CONNECT செய்யுங்கள்.
ஆன்ட்ராய்ட்
4, இப்பொழுது ROOT என்ற பட்டனை அழுத்துங்கள். போன் ரூட் ஆக சில நிமிடங்கள் ஆகும். அவ்ளோ தான்.

NOTE :
ஆன்ட்ராய்ட் ரூடிங்க் செய்வது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. இதனால் சேதம் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.
Read more »

Yahoo, Hotmail, Rediff க்கு Official ஆன்டிராய்ட் Apps


மின்னஞ்சல் படிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் அனைத்து தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டோம். அவசர நேரத்தில் உடனடியாக கணினியில் மின்னஞ்சல் படிக்க இயலாது. இதுவே நீங்கள் ஆன்டிராய்ட் போன் வைத்து இருந்தால், வேலை எளிதாகும். 

முக்கியமான ஈமெயில் சர்வீஸ்களுக்கு ஆன்டிராய்டில் Official Application இருக்கிறது. இதனால் நம்பிக்கையாக பயன்படுத்தலாம். அவற்றை பற்றி பார்ப்போம் 

1. Gmail


கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள இந்த App, நிறைய வசதிகளை கொண்டுள்ளது. ஆன்டிராய்ட் போன் வாங்கினாலே இது இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. 





2. Yahoo! Mail


யாஹூ நிறுவனத்தின் வெளியீடு. நன்றாக உள்ளது. 





3. Hotmail 


ஜிமெயில், யாஹூவுக்கு பிறகு அதிகமானவர்கள் ஹாட்மெயிலை தான் பயன்படுத்துகிறார்கள்.






4. Rediff Mail 


முன்பு மிக பிரபலமாக இருந்த இதற்கு, இன்னமும் பயனர்கள் உள்ளனர்.







5. Mail.com


அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துவது இது.






Read more »

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயற்பாடுக​ளை சேமித்து வைப்பதற்கு

அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படுவதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுமான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஏனைய முன்னணி உலாவிகளுக்கு நிகரான சேவையை வழங்கி வருகின்றது.
இப்படிப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உலாவியின் உதவியோடு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு இணைய நடவடிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கான வசதியை IE Session Saver எனும் மென்பொருள் தருகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இறுதியாக ஓப்பின் செய்த இணையப்பக்கங்களை தனித்தனியாகவும், டேப்களாகவும் ஒரே கிளிக்கில் சேமிக்க முடியும்.
மேலும் சேமிக்கப்படும்போது குறித்த இணையப்பக்கங்களின் url அல்லது இணையப்பக்கத்தின் தலைப்புக்களின் அடிப்படையில் சேமிக்க முடியும்.
பின்னர் கணனியை மீண்டும் இயக்கும்போது அவற்றை restore செய்தால் அனைத்து இணையப் பக்கங்களும் உடனடியாகத் திறக்கும்.
Read more »

Kerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு


கணனிகளின் செயற்பாட்டு வேகமானது அவற்றின் வன்பொருட்கள் உட்பட முறைமை மென்பொருளான இயங்குதளத்திலும் தங்கியிருக்கின்றது.
அதாவது ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உருவாக்கப்படும் அநாவசியமான கோப்புக்களால் இப்பிரச்சினை தோற்றம் பெறுகின்றது.
எனினும் தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வாக Kerish Doctor எனும் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளின் செயற்பாட்டை அதிகதிப்பதற்கு உதவியாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் கணனிகளில் காணப்படும் பாவனைக்கு உதவாத தற்காலிக கோப்புக்கள், Registry காணப்படும் உடனடிக் கோளாறுகள், முறையாக uninstall செய்யப்படாத கோப்புக்கள் போன்றன சரிசெய்யப்படுகின்றன.
Read more »

Dropbox கணக்கை ஹாக்கர்களிடமிருந்து பாதுகாக்க 2-Step verification வசதியை ஆக்டிவேட் செய்ய

கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை வழங்கும் Dropbox இணையதளம் தற்பொழுது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க 2 Step verification என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதியை உங்கள் கணக்கில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாப்போம்.



2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும்  Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.

Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
  • முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும். 


  • பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
  • அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். 
  • SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம். 
  • முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும். 


அவ்வளவு தான் உங்களுடைய கணக்கில் 2-step verification வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது.  இனி ஹாக்கர்கள் பயமில்லாமல் உங்கள் கணக்கை உபயோகபடுத்தி கொள்ளலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.

(Thanks)

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

கணனியில் USB Port ஐ முடக்கம் செய்வதற்கு

 http://www.tricksnhacking.com/wp-content/uploads/2010/04/USb-Protected.jpg

தற்போது நாம் அனைவரும் குச்சிபோன்ற  யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை பயன்படுத்தி வருகின்றோம் அதனால் நம்முடைய கணினியில் அறிமுகமல்லாத ஒருவர்  இந்த யூஎஸ்பி வாயில்வழியாக நம்முடைய கணினியில் நச்சு நிரலை பரப்பி கணினியின் இயக்கத்தை முடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன அதனால் நம்மைத்தவிர மற்றவர்கள் யாரும் இந்த யூஎஸ்பி தேக்கும் சாதன வாயிலை அனுகாதவாறு முடக்கம் செய்திடலாம் அதற்கான வழிமுறை பின்வருமாறு
இதற்காக முதலில் start=> run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக
    படம்-1
 பின்னர் தோன்றிடும்  run என்ற (படம்-1) உரையாடல் பெட்டியில் open என்ற உரைப்பெட்டியில்regedit  என உள்ளீடு செய்து ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் Registry Editor என்ற திரையில்  முதலில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
என்பதையும் பின்னர் வலதுபுற பலகத்தில் USBSTORஎன்பதையும் (படம்-2) தேடிகண்டு பிடித்திடுக  அதன்பின்னர்  USBSTORஎன்பதன் வாய்ப்பான start என்பதனுடைய மதிப்பை  அதனுடைய வலதுபுற பலகத்தில்   கண்டுபிடித்து
    படம்-2
 அதனை value data என்பதில் 4 என Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியில் அமைத்து ok  என்ற (படம்-3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுததுவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக
       படம்-3
 இதன்பின்னர் யாரும் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியாது
மீண்டும் முந்தைய நிலைக்கு கொணடுவர  Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியை செயலிற்கு கொண்டு வந்து அதிலுள்ள value data என்பதில் 3 என  மாறுதல் செய்து ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுத்துவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக
இதன்பின்னர் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியும்
Read more »

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று கீழே  பார்ப்போம்.

  • முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொண்டு இந்த தளத்திற்கு செல்லுங்கள். 
  • Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.

  • போட்டோ அப்லோட் ஆகியவுடன் அதற்க்கான கோடிங் தயாராகி விடும் அதை முழுவதுமாக காப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர்  அழுத்தினால் அந்த போட்டோ உங்கள் நண்பருக்கு சென்றடையும் .
  •  
  • Thanks By-: http://www.vandhemadharam.com/
Read more »

நீங்கள் வைத்திருக்கும் PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!!

 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQRuAIrbi4zaDA-hO-MDVbWTvSg7Hrx3uwJ6pRfNJYS7tch4UGe6w


நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம் அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால் அந்த கடைக்காரர் அந்த RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும் அல்லவா.

இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது PENDRIVE வேண்டிய அளவில் கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம் 

PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7): 

1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு Advance System Settings க்கு செல்லவும்.


2.Advance என்னும் Tab ஐ கிளிக் செய்து PerformanceSettings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும் இரண்டாவது (Advance) Tab ஐ கிளிக் செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக் செய்யவும்.
என்னும் பகுதி யில்
3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட் பண்ணவும் "Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.



4.உங்களுடைய
PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MB ஐயும் maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.     

இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு இதில் சிறிய மாறுபாடு உள்ளது.

Read more: http://www.suncnns.com/2012/05/pendrive-ram.html#ixzz1wobIEcYO

Under Creative Commons License: Attribution
Read more »

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts

 


Keyboard Short-cuts என்பவை எப்போதும் நம் வேலையை எளிதாக்க உதவுபவை, நாம் நமது mouse ஐ பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்காமல், மிக விரைவில் ஒரு வேலையை முடித்து விடும். இவற்றில் சில எப்போதும் பயன்படும். அந்த வகையில் கணினியை பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து Basic Keyboard Shortcut-களை இங்கே தருகிறேன். 


இதில் ஒரு விஷயம், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Keyboard Shorcut - கள் உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

Ctrl + C or Ctrl + Insert

ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை நாம் Copy செய்ய பயன்படுகிறது. 

Ctrl + V or Shift + Insert

Select அல்லது Highlight செய்த டெக்ஸ்ட்டை நமக்கு வேண்டிய இடத்தில் paste செய்ய உதவுகிறது. 

Ctrl + Z and Ctrl + Y


இதில் CTRL+ Z undo என்ற இந்த வசதி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கு முந்திய நிலைக்கு செல்ல உதவுகிறது. அதாவது ஒரு கோப்பில் தவறுதலாக ஒரு வார்த்தையை நீங்கள் எடுத்து விட்டால், அதை மீண்டும் கொண்டு வர உடனடியாக இதை நீங்கள் செய்யலாம். அடுத்த CTRL+Y ஆனது Redo வசதியை தருகிறது. இது நீங்கள் தவறுதலாக Undo செய்தவற்றை Redo செய்து விடும். 

Ctrl + F

குறிப்பிட்ட கோப்பு, போல்டர், இணைய உலவியில் உங்களுக்கு தேவையான வார்த்தை போன்று தேட உதவுகிறது. 

Alt + Tab or Alt + Esc

நீங்கள் இயங்கி கொண்டுள்ள ப்ரோக்ராம்களுக்கு வேகமாக செல்ல உதவுகிறது. இதில் Alt+Tab மூலம் குறிப்பிட்ட ஒன்றுக்கு செல்லலாம்.Alt + Esc மூலம் ஒவ்வொன்றுக்கும் வரிசையாக செல்ல முடியும். 

இதில் சில இன்னும் சுவாரசியமான டிப்ஸ் உள்ளன. 

CTRL+ Tab - குறிப்பிட்ட Program-இல உள்ள வெவ்வேறு Tab-களுக்குள் மாறிக் கொள்ளலாம். உதாரணம் Firefox, Chrome. 

Alt+ Tab Forward ஆக ப்ரோக்ராம்களை காட்டினால், Alt+Shift+Tab இதை பின்னால் இருந்து காட்டும். நிறைய வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இது பொருந்தும். 

Windows 7 , Vista பயனர்கள் Alt+Tab வேலையை Windows Key+Tab மூலம் செய்யலாம். இது முழு ஸ்க்ரீனில் திரைகளை காட்டும். இது அழகாக இருக்கும். 

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Ctrl + Back space ஆனது ஒரு முழு வார்த்தையை நீக்க பயன்படுகிறது. 

Ctrl + Left or Right arrow ஆனது ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக நகராமல், வார்த்தையாக நகர்த்த பயன்படும். இதனுடன் சேர்த்து Shift Key ஐ அழுத்தினால் குறிப்பிட்ட வார்த்தையை தெரிவு செய்யலாம். 

Ctrl + S

குறிப்பிட்ட ஒரு கோப்பை சேமிக்க பயன்படுகிறது. 

Ctrl + Home or Ctrl + End

ஒரு கோப்பில் உங்கள் Mouse Cursor - ஐ கோப்பின் cursor இருக்கும் வரியின் ஆரம்பம் மற்றும் முடிவுக்கு செல்ல உதவுகிறது. 

Ctrl + P

பிரிண்ட் செய்யும் வசதிக்கு இது. 

Page Up, Space bar, and Page Down


Page Up மற்றும் Page Down நீங்கள் இருக்கும் பக்கத்தில் மேலே அல்லது கீழே செல்ல பயன்படுகிறது. 

Space Bar இணையத்தில் உலவும் போது ஒரு பக்கத்தில் இருக்கும் போது கீழே செல்ல உதவுகிறது, Shift+Space Bar மேலே செல்ல உதவுகிறது. 

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.
Read more »
 
-