இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயற்பாடுக​ளை சேமித்து வைப்பதற்கு

அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படுவதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுமான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஏனைய முன்னணி உலாவிகளுக்கு நிகரான சேவையை வழங்கி வருகின்றது.
இப்படிப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உலாவியின் உதவியோடு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு இணைய நடவடிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கான வசதியை IE Session Saver எனும் மென்பொருள் தருகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இறுதியாக ஓப்பின் செய்த இணையப்பக்கங்களை தனித்தனியாகவும், டேப்களாகவும் ஒரே கிளிக்கில் சேமிக்க முடியும்.
மேலும் சேமிக்கப்படும்போது குறித்த இணையப்பக்கங்களின் url அல்லது இணையப்பக்கத்தின் தலைப்புக்களின் அடிப்படையில் சேமிக்க முடியும்.
பின்னர் கணனியை மீண்டும் இயக்கும்போது அவற்றை restore செய்தால் அனைத்து இணையப் பக்கங்களும் உடனடியாகத் திறக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-