கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை வழங்கும் Dropbox இணையதளம் தற்பொழுது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க 2 Step verification என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதியை உங்கள் கணக்கில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாப்போம்.
2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும் Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.
Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.
(Thanks)
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

- முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
- SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம்.
- முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் உங்களுடைய கணக்கில் 2-step verification வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது. இனி ஹாக்கர்கள் பயமில்லாமல் உங்கள் கணக்கை உபயோகபடுத்தி கொள்ளலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.
(Thanks)
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக