பேஸ்புக்கிற்கு அடுத்த படியாக ட்விட்டர் மிகப்பெரிய சமூக இணையதளம் ஆகும்.
சமூக தளங்கள் நம் பதிவுகள் பலரை சென்றைய உதவுகிறது. தற்பொழுது சமூக
தளங்களுக்கு இடையேயான போட்டியில் அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு
வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம்
பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதியின் படி
இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில்
வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின்
உதவியுடன் பிளாக்கில் இனி அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி
உள்ளது.
வழிமுறை:
- முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- மேலே Search bar க்கு அருகில் உள்ள சிறிய அம்புகுறியை அழுத்தி Settings என்பதை கிளிக் செய்யவும்.
- Settings பகுதி திறந்த உடன் இடது புறத்தில் உள்ள மெனுவில் Widgets - Create New என்பதை தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் விட்ஜெட் அமைக்க
தேவையான வசதிகள் இருக்கும் அவைகளை பயன்படுத்து உங்களுக்கு பிடித்தமான
மற்றும் உங்கள் பிளாக்கின் டேம்ப்லேட்டிற்கு பொருத்தமாக விட்ஜெட்டை தயார்
செய்து கொள்ளவும்.
- இதில் Domains பகுதியில் விட்ஜெட்டை இணைக்க போகும் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
- பிறகு கீழே உள்ள Create Widgets என்ற பட்டனை அழுத்தினால் ஒரு HTML கோடிங் கிடைக்கும் அதை முழுவதும் காப்பி கொள்ளவும்.
- பிளாக்கரில் Dashboard - Layout - Add a Gadget - HTML/JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save பட்டனை அழுத்தி விட்டால் உங்கள் பிளாக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து த்வீட்களையும் காண முடியும்.
இந்த விட்ஜெட்டில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இந்த விட்ஜெட்டோடு follow
பட்டனும் சேர்ந்து வருவதால் நாம் தனியே Twitter Follow பட்டன் இணைக்க
வேண்டிய அவசியம் இல்லை.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக