விண்டோஸ் 7லிருந்து பயனர் இடைமுகத்தில் முற்றிலும் வேறுபட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கின்றது.
இவ் இயங்குதளமானது பயனரின் செயற்பாட்டை இலகுவாக்குவதுடன் மிகவும் கவரக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் குறித்த ஒரு அப்பிளிக்கேசனின் சோர்ட் கட்டை டெக்ஸ்டொப்பில் உருவாக்குவதற்கு சற்று வித்தியாசமான செய்முறை ஒன்றும் காணப்படுகின்றது.
பின்வரும் படிமுறைகள் மூலம் குறித்த சோர்ட் கட் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.
1. டெக்ஸ்டொப்பில் right கிளிக் செய்து Shortcut என்பதை தெரிவு செய்து தோன்றும் விண்டோவில் பின்வரும் கோடிங்கை paste செய்யவும்.
%windir%explorer.exe shell:::{4234d49b-0245-4df3-b780-3893943456e1}
2. தொடர்ந்து Next பட்டனை அழுத்தி Metro Apps என பெயரைக் குறிப்பிடவும்.
3. தற்போது சோட் கட்டாக பயன்படுத்தக்கூடிய மெட்ரோ அப்பிளிக்கேசன்களின் ஐகன்கள் தோன்றும், அதில் உங்களுக்குத் தேவையானதை தெரிவு செய்ய double click செய்யவும்.
தற்போது குறித்த அப்பிளிக்கேசனுக்குரிய சோர்ட் கட் டெக்ஸ்டொப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக