தற்போது நாம் அனைவரும் குச்சிபோன்ற யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை பயன்படுத்தி வருகின்றோம் அதனால் நம்முடைய கணினியில் அறிமுகமல்லாத ஒருவர் இந்த யூஎஸ்பி வாயில்வழியாக நம்முடைய கணினியில் நச்சு நிரலை பரப்பி கணினியின் இயக்கத்தை முடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன அதனால் நம்மைத்தவிர மற்றவர்கள் யாரும் இந்த யூஎஸ்பி தேக்கும் சாதன வாயிலை அனுகாதவாறு முடக்கம் செய்திடலாம் அதற்கான வழிமுறை பின்வருமாறு
இதற்காக முதலில் start=> run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக
பின்னர் தோன்றிடும் run என்ற (படம்-1) உரையாடல் பெட்டியில் open என்ற உரைப்பெட்டியில்regedit என உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் Registry Editor என்ற திரையில் முதலில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
என்பதையும் பின்னர் வலதுபுற பலகத்தில் USBSTORஎன்பதையும் (படம்-2) தேடிகண்டு பிடித்திடுக அதன்பின்னர் USBSTORஎன்பதன் வாய்ப்பான start என்பதனுடைய மதிப்பை அதனுடைய வலதுபுற பலகத்தில் கண்டுபிடித்து
அதனை value data என்பதில் 4 என Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியில் அமைத்து ok என்ற (படம்-3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுததுவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக
இதன்பின்னர் யாரும் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியாது
மீண்டும் முந்தைய நிலைக்கு கொணடுவர Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியை செயலிற்கு கொண்டு வந்து அதிலுள்ள value data என்பதில் 3 என மாறுதல் செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுத்துவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக
இதன்பின்னர் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக