பிளாக்கரில் Custom URL வசதி தற்பொழுது அனைவருக்கும்

பிளாக்கரில் சில நாட்களுக்கு முன்னர் Permalink என்ற Custom URL வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் நாம் வெளியிடும் பதிவின் URL எப்படி இருக்க வேண்டுமென்று நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் தேடியந்திரங்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக கண்டறிந்து வாசகர்களுக்கு தெரிவிக்கும். இந்த வசதி முக்கியமாக பிற மொழி பதிவர்களுக்கு (தமிழ் உட்பட) பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வசதியை சோதனை முயற்சியாக Draft பயனாளிகளுக்கு மட்டுமே அளித்து வந்தனர். இன்றிலிருந்து பிளாக்கர் பயனர்க
ள் அனைவருக்கும் Permalink வெளியிடப்பட்டுள்ளது. 

எப்பொழுதும் போல பதிவு எழுத New Post பகுதிக்கு சென்று வலது ஓரத்தில் மவுஸ் கர்சரை நகர்த்தினால் Post Settings பகுதி வரும் அதில் Permalink என்ற புதிய வசதி வந்திருப்பதை காணலாம்.



அந்த Permalink என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Custom URL என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களுக்கு வேண்டிய URL டைப் செய்து கொள்ளுங்கள். 



சரியான URL டைப் செய்தவுடன் கீழே உள்ள Done என்பதை கிளிக் செய்தால் போதும் இனி நீங்கள் தமிழில் தலைப்பை வைத்து பதிவு வெளியிட்டாலும் இந்த URL தான் வரும். 

முக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் தேர்வு செய்யும். பப்ளிஷ் செய்து விட்டால் மறுபடியும் URLஐ மாற்ற முடியாது. மற்றும் இந்த வசதி புதிய பிளாக்கர் தோற்றத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. பழைய தோற்றத்தை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை பெற முடியாது.

Read more »

பதிவுகளை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்ய

பேஸ்புக்கில் க்ரூப் என்ற வசதி உள்ளது அனைவருக்கும் தெரியும். பேஸ்புக் க்ரூப்பில் நம் பதிவுகளை பகிர்ந்தால் அந்த அந்த குழுவில் சேர்ந்துள்ள அனைவருக்கும் சென்றடையும் ஆதலால் உங்கள் பிளாக்கின் வாசகர் வரத்து அதிகரிக்கிறது. பேஸ்புக்கில் ஏராளமான பேஸ்புக் குழுக்களில் நீங்கள் சேர்ந்து இருக்கலாம். அதனால் ஒவ்வொரு முறை போஸ்ட் போட்ட பிறகு ஒவ்வொரு க்ரோப்பாக அனைத்து குழுவிற்கும் சென்று உங்கள் பதிவினை அப்டேட் செய்ய வேண்டும். நான் சுமார் 20 க்ரூப்களில் சேர்ந்து உள்ளதால் 20 குழுவிற்கும் சென்று என்னுடைய போஸ்ட்டை அப்டேட் செய்ய வேண்டும். இனி அந்த பிரச்சினை இல்லை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் க்ரூப்களிலும் சுலபமாக அப்டேட் செய்து விடலாம்.

இதற்க்கு Multiple Post என்ற பேஸ்புக் அப்ளிகேஷன் பயன்படுகிறது. முதலில் Multiple Post இந்த லிங்கில் செல்லவும் அங்கு உள்ள Connect என்ற பட்டனை அழுத்தி இந்த அப்ளிகேஷனுக்கு பெர்மிசன் கொடுக்கவும்.




அடுத்து உங்களுக்கு இன்னொரு பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்க பகிர வேண்டிய பதிவின் URL, இமேஜ், போன்ற விவரங்களை கொடுக்கவும். அடுத்து நீங்கள் பகிர வேண்டிய பேஸ்புக் குரூப்களை தேர்வு செய்து கொள்ளவும். (தமிழ் எழுத்துக்களுக்கு சப்போர்ட் செய்யாததால் தமிழ் க்ரூப்களை தேர்வு செய்வதில் சற்று சிரமம் இருக்கும். ஆனால் இது பழக பழக பழக சரியாவிடும்).


பகிரவேண்டிய குரூப்களை தெரு செய்தவுடன் கீழே உள்ள POST என்ற பட்டனை அழுத்தி உங்கள் பதிவை பகிர்ந்து விடவும். அவ்வளவுதான் நீங்கள் தேர்வு செய்ய அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் உங்களின் பதிவுகள் பகிரப்பட்டு விடும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 
 
Read more »

3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?


 3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.   

முகவரி: http://www.mozilla.org/en-US/firefox/fx/



 பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Click செய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.


 பிறகு  கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவுதான்! நீங்கள் பார்க்கும் தளம் முப்பரிமாணத்தில் தெரியும். அதை க்ளிக் செய்துக் கொண்டு எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். Zoom செய்தும் பார்க்கலாம். இதிலிருந்து வெளிவர Esc பட்டனை அழுத்தினால் போதும்.

இது பற்றி ஒரு சிறிய வீடியோ உருவாக்கியுள்ளேன். அவசியம் பாருங்கள்.


Read more »

உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை

 


சில முக்கியமான பதிவுகளை எழுதி முடித்து விட்டு, நாம் திரட்டிகளில் இணைப்பதற்குள் நம்மவர்கள் அதை சுட்டு, சுட சுட தங்கள் தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? பல சமயம் அவர்கள் நமக்கு இணைப்பு தருவதே இல்லை, அப்படி இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் நம் தளத்துக்கு ஒரு இணைப்பு தர முடிந்தால்? எப்படி செய்வது அதை?




1. முதலில் http://id.tynt.com என்ற இந்தத் தளத்திற்கு செல்லவும். 

2. இதில் publisher Sign Up என்ற பகுதியில் உங்கள் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், தள முகவரி தரவும். 

3. இப்போது அடுத்த பக்கத்தில் Next தரவும். இதில் சில மாற்றங்கள் செய்யும் வசதி உள்ளது, அதை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை, விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம். 

4. இப்போது வரும் Coding ஐ உங்கள் Edit Template பகுதியில் சேர்க்க வேண்டும். 


Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:

• Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

•அதில் </head> என்ற Code-ஐ தேடவும்.

• தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் நிரலை PASTE செய்யவும்.

• SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான். 

5. இப்போது Tynt தளத்தில் Next கொடுத்து அடுத்த பக்கத்தில் Test My Script என்பதை கொடுத்து Verify செய்யவும். இது Success ஆனவுடன் Next தரவும். 

6. இப்போது SEO Report, Keyword Report, Social Share Report போன்றவற்றை நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலம் பேர வேண்டுமா என்று கேட்கும். இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து விடுங்கள். 

இப்போது ஒருவர் உங்கள் பதிவை Copy/Paste செய்யும் போது உங்கள் பதிவின் இணைப்பு அதில் சேர்ந்து விடும். ஒருவர் உங்கள் பதிவை காபி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போதும் இது நிகழும், இதனால் மின்னஞ்சலை படிப்பவர்கள், மற்ற பதிவுகளை படிக்க விரும்பினால், அதில் உள்ள பின் இணைப்பின் வழியே உங்கள் தளத்திற்கு வர முடியும்.

அத்தோடு Keyword Report என்ற வசதி மிகப் பெரிய பலனை தருகிறது. இதன் மூலம் உங்கள் வாசகர் உங்கள் தளத்தில் எதை தேடுகிறார்?, அதை எப்படி அடுத்த தளத்தில் பெறுகிறார்?, அதை உங்கள் தளத்தில் பகிர்ந்தால் உங்கள் வாசகர் உங்கள் தளத்திலேயே இருப்பார் என்று சொல்லுகிறது.


இது எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோ மூலம் காணலாம். 



முக்கியமாக தேடுபொறிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும், Alexa Rank போன்றவை இதன் மூலம் உயரும். 

Read more: http://www.karpom.com/2012/04/follow-copied-posts-of-your-blog.html#ixzz1sGq5scC2
Read more »

Feed Widget பயன்படுத்தி Recent Posts சேர்க்கலாம்


தினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன். 

1.  Blogger--> Dashboard---> Design/Layout---> Add A Gadget

2.இதில்  Feed என்ற தலைப்பிட்ட Gadget ஐ தெரிவு செய்யவும். 

3. இப்போது கீழே உள்ளதை காபி செய்து  பேஸ்ட் செய்யவும்  

http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5
இங்கே baleprabu.blogspot. என்பதற்கு பதில் உங்கள் தள முகவரி தரவும். 


4. இப்போது Continue கொடுத்தவுடன்  Settings பகுதிக்கு வருவீர்கள். அது கீழே உள்ளது   போல இருக்கும். 


5. இதில் உங்கள்  தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக தலைப்பு உங்கள் வலைப்பூ பெயரில் இருக்கும். அதை Recent Posts என்று மாற்றி விடவும். 

6. இப்போது Save கொடுத்து விட்டால் முடிந்தது வேலை.  

இது கீழே உள்ளது போல இருக்கும். 

Read more »

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?


பதிவர்கள் பலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும். சில நேரம் பதிவின் கடைசி வரியில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து இருக்கும். அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று பார்ப்போம். 


ஏற்கனவே ஓட்டுப் பட்டைகள் வைத்து இருப்பவர்கள் முதலில் அதை நீக்க வேண்டும். அது ரொம்ப எளிதுதான். ஒரே ஒரு பிரச்சினை எதையாவது சேர்த்து நீக்கி விடாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே திரட்டிகள் எதுவும் நீங்கள் இணைக்கவில்லை என்றால் நேரடியாக Step 6 க்கு வரவும்.  
ஏற்கனவே உள்ள ஓட்டுப பட்டைகள்

தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை  மட்டும் இதில் வரிசைப்படுத்த இயலும். "தமிழ்மணம் எப்போதும் தனித்தே இருக்கும்".

1.புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும். 

அல்லது

1. பழைய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Design-->Edit HTML--> Download Template இப்போது அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும்.
2. இப்போது உங்கள் வலைப்பூவில் முதலில் எந்தத் திரட்டி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளவும். அடுத்து <data:post.body/> என்பதை தேடவும். (CTRL+F கொடுத்து தேடவும்). 

3.  இதற்கு அடுத்த சில வரிகளில் உங்கள் வோட்டுப் பட்டை ஆரம்பிக்கும். நீங்கள் Read More, அல்லது டிசைன் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேலே உள்ள கோட் இருக்கலாம். எனவே கொஞ்சம் பொறுமையாய் பார்க்கவும். 

{
 ஏற்கனவே திரட்டி உள்ளவர்கள்: 
உங்கள் வலைப்பூவில் எது முதல் திரட்டியோ அதைக் கொடுத்தும் தேடலாம். உதாரணம்: "கற்போம்" தளத்தின் முதல் திரட்டி indli எனவே அதைக் கொடுக்கலாம். அதே போல நீங்களும் தேடலாம். கீழே உள்ளவற்றில் ஒன்றை முயற்சி செய்யலாம். 

indli அல்லது ulavu அல்லது  tamil10 அல்லது udanz 

நீங்கள் எது சுலபம் என்று அதை செய்யுங்கள் }

கீழே திரட்டிகளின் கோட் கொடுத்து உள்ளேன் அதை பார்த்தும் நீக்கலாம்.



4. எந்தத் திரட்டியாக இருந்தாலும் அதன் ஆரம்பம்: <script முடிவு </script>

எனவே திரட்டியின் முகவரி(URL) ஆரம்பிக்கும் வரியில் உள்ள <script என்பதில் ஆரம்பித்து அதன் அடுத்த வரிகளில் அடுத்த திரட்டி ஆரம்பிக்கும் முன் உள்ள</script> என்பது வரை நீக்க வேண்டும். (udanz க்கு மட்டும் முடிவில்'text/javascript'/> என்று இருக்கும்)

5. தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை நீக்கிய பின். Save Template கொடுத்து விடுங்கள். இப்போது உங்கள் வலைப்பூவை ஒரு முறை பாருங்கள் எந்த திரட்டியும் இல்லாமல் பதிவு சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். 

6. இப்போது மறுபடியும் <data:post.body/> என்பதைதேடி கீழே உள்ளதை அதற்கு கீழே பேஸ்ட் செய்து விடவும். 
<table border='1'>
<tr>
<td>
<div style="float:left;margin:10px 10px 10px 0;"><g:plusone size="tall" expr:href="data:post.url"></g:plusone></div>
</td>
<td>
<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
</td>
<td>
<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</td>
<td>
<script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'>
</script>
</td>
<td>
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>
</td>


</tr>
</table>

ஏதேனும் புதிய திரட்டி இணைக்க வேண்டும் என்றால் </tr> என்பதற்கு மேலே
<td>
திரட்டியின் கோடிங்
</td>
என்று கொடுத்தால் போதும்.

இதில் நான் கூகுள் பிளஸ் பட்டன் மற்றும் நான்கு திரட்டிகளை ஐந்து வேறு வேறு நிறங்களில் கொடுத்து உள்ளேன். ஏதேனும் வேண்டாம் என்றால் அதனை நீக்கி குறிப்பிட்ட நிறத்தை விட்டு  விடலாம். இப்போது Save Template கொடுத்து விடுங்கள். 

Google Plus One வரவில்லை என்றால்:

</head> என்பதை Edit HTML என்பதில் தேடவும். 

இதற்கு மேலே கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.

<script src='https://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

இப்போது வந்துவிடும். 

அவ்வளவுதான் இனி உங்கள் வலைப்பதிவின் கீழே அழகாய் ஒரே வரிசையில் ஓட்டுப் பட்டைகள் இருக்கும்.(உதாரணம்: கீழே உள்ள ஓட்டுப பட்டைகளைக் காணலாம்) இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் admin@karpom.com என்பதற்கு மின்னஞ்சல் செய்யவும். 
Read more »

பிரபல 20 சமூக வலைதளங்கள், தங்களின் வலை பதிவுகளை பகிர


     நம் வலைபூக்களில் எழுதும் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் நம் பதிவுகளை வெளியிடுவதால் நம் பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் நம் பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

    இதனால் தங்களின் வலைபூக்கு வரும் வாசர்கர்கள் அதிகரிக்கலாம். இந்த பதிவில் நான் தங்களிடம் 20 பிரபல சமூக வலைதளங்களை பற்றி தான் கூறயிருக்கிறேன். நாம் அறிந்ததுலாம்FACEBOOK, TWITTER மேலும் சென்றால் DIGG, மற்றும் STUMBLEUPON.
                                 பிரபல 20 சமூக வலைதளங்கள்                              
 
 04*DIGG
  
10*MIXX

20*LINK GO GO


   

இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.

Read more »
 
-