உலகில் உயரத்தை தொட்ட ஆப்பிள் சாப்ட்வேரின் புது சிகரம்!!

 


உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வரைக்கும் 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை, இந்தவாரம் கிடுகிடுவென உயர்ந்து 1000 டாலராக எட்டியுள்ளது.


இதனால் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. இதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-