Instagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்


Instagram என்பது நமது புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான மொபைல் மென்பொருள் ஆகும். பிரபலமான இந்த மென்பொருளை பேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 500 கோடி 5000 கோடி) கொடுத்து வாங்கியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபோன் (iphone), ஐபேட்(ipad) மற்றும் ஐபோட் டச்(ipod touch) ஆகியவற்றுக்கு  மட்டுமே இருந்த இன்ஸ்டாக்ராம் மென்பொருள் சமீபத்தில் ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த மென்பொருளில் ஐபோனில் மட்டுமே 30 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இதனுடைய ஆன்ட்ராய்ட் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட பன்னிரெண்டு மணிநேரத்திற்குள்  ஒரு மில்லியன் (ஐந்து நாட்களுக்குள் 5 மில்லியன்) கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

Instagram மென்பொருள் திரைப்பிடிப்புகள்:





பேஸ்புக்  வாங்கியதற்கான காரணம் என்ன?
பேஸ்புக் தளத்தில் அதிகமான பயன்பாடுகளில் ஒன்று புகைப்படங்களைப் பகிர்தல். பேஸ்புக் தளத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 250 மில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாக்ராம் மென்பொருள் தமக்கு போட்டியாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே வாங்கியிருக்கலாம்.
இன்ஸ்டாக்ராம் பயனாளர்களில் பலரும் இதனை விரும்பவில்லை. அந்த மென்பொருளை பேஸ்புக் பாழ்படுத்திவிடும் என அஞ்சுகின்றனர். இந்த மென்பொருள் மூலம் என்னென்ன மாற்றங்களை பேஸ்புக் செய்ய போகின்றது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோங்களுக்கான மென்பொருளை பதிவிறக்க: http://itunes.com/apps/instagram/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-