QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:

  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

Advanced SystemCare v6.1 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

ஒவ்வொரு கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்களின் பட்டியல் போட்டால் iobit நிறுவனத்தின் Advanced SystemCare மென்பொருளுக்கு அதில் முக்கிய இடமுண்டு. கணினிகளில் உள்ள தேவையில்லாத பைல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளதால் இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினிக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

இப்பொழுது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர். இந்த புதிய வெர்சனில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் கொடுத்துள்ளனர்.




மேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும்.

இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். ஆகவே இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே தேவையானவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

Read more »

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு



குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / 
படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது 
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.

download link
Read more »

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் மென்பொருள் டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் மிகச்சிறந்த மீடியா பிளேயர் மென்பொருளாகும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க கூடிய மென்பொருளை உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கின்றனர். கணினி வெர்சனில் பிரபலமான இந்த மென்பொருள் தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்த ஏதுவாக புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில் உள்ளது.



ஆடியோ வீடியோ உட்பட அனைத்து வகை மீடியா பைல்களையும் சப்போர்ட் செய்ய கூடியது. ஆன்ட்ராய்ட் 2.1 இருந்து இதற்க்கு மேல் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. சப்போர்ட் செய்யும் மொபைல்களை கண்டறிய கீழே உள்ள பட்டியலை பாருங்கள். 


7.1 MB அளவுடைய இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகபடுத்தி கொள்ளலாம். பீட்டா நிலையில் உள்ள இந்த மென்பொருளை மேலும் பல மாற்றங்களை செய்து விரைவில் stable வெர்சன் வெளியிட இருக்கிறது. 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - VLC for Android
Read more »

இரகசிய தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

 


உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது கொப்பி செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தெரிவு செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், கொப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தெரிவு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
தரவிறக்க சுட்டி
Read more »

சட்டரீதியான வொன்டர்ஷேர் பிடிஎப் எடிட்டர் மென்பொருள் இலவசமாக

நண்பர்களே ஒரு முழுமையான பிடிஎப் எடிட்டர் வாங்குவதென்றால் இந்திய மதிப்ப்பில் குறைந்தபட்சம் 2000கும் மேல் செலவாகும்.  இப்படி இருக்கையில் யாரும் காசு கொடுத்து வாங்காமால் பைரேட் என்ற திருட்டு மென்பொருட்கள் உபயோகிக்கின்றனர்.  இந்த மாதிரி திருட்டு பொருட்கள் தரவிறக்குபவர்களுக்கு தங்கள் கணினியில் தேவையில்லாத நச்சு தீங்கு நிரல்களும் நிறுவப்படும் என்பது தெரிவதில்லை. 

இதற்கு பதில் சில ஒபன் சோர்ஸ் மென்பொருட்கள் உள்ளன.  அதை தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.  அப்படி இல்லையென்றால்  இலவசமாக சில நேரம் சில நாட்களுக்கு மட்டும் கொடுப்பார்கள்.  அதை உபயோகப்படுத்துங்கள்.   அது போல தான் நான் அறிமுகபடுத்த மென்பொருளும் கூட.  பிடிஎப் எடிட்டர் தேவையில்லை என்று சொல்பர்வர்கள் குறைவு.  அவர்களுக்காகவே இந்த மென்பதிவு

Wondershare என்ற நிறுவனத்தின் புதிய மென்பொருள் தயாரிப்பு ஆகும் இது.  இவர்கள் இதுவரை வீடியோ மென்பொருட்கள் தயாரித்து வெளியிட்டிருந்தனர்.  பிறகு மேக் கணினிக்கான பிடிஎப் எடிட்டர் தயாரித்து வெளியிட்டனர். இப்பொழுது விண்டோஸுக்கான பிடிஎப் கன்வெர்ட்டர் தயாரித்து பீட்டா அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பீட்டா மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். ஆனால் நூறு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்.  இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.  அத்துடன் ஆக்டிவேசன் கோடு எதுவும் தேவையில்லை.



WonderShare PDF Editor Beta மென்பொருள் குறித்த தகவல்கள் மற்றும் போட்டி விதிமுறைகள் குறித்த  சுட்டி

இவர்களின் தளத்தில் பீட்ட வெர்சன் குறித்த உங்கள் அனுபவங்களை அல்லது உங்கள் கருத்துக்களை மூன்று முறை அல்லது அதற்கு மேல் Feedback கொடுத்தால்  நீங்கள் இந்த Wondershare PDF Editor வெளிவரும்போது உங்களுக்கான பிடிஎப் எடிட்டரினை பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது.   சுட்டி  இங்கு சென்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Wondershare PDF Editor மென்பொருள் தரவிறக்க  சுட்டி

இந்த வாய்ப்பு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை கலந்து கொள்ளும் வாசகர்களுக்கு மட்டும்.

அது மட்டுமல்லாமல்  பேஸ்புக்கில் வழியாக இவர்களின் பதிவை பகிர்ந்தால் 30$ மதிப்புள்ள PDF To Powerpoint மென்பொருள் வெல்ல வாய்ப்புள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வாரம் ஒரு முறை PDF Converter Pro 79.95$ மதிப்புள்ள PDF Converter Pro.

சரி இந்த மென்பொருள் மூலம் என்ன செய்ய முடியும்.

எந்த ஒரு வகை பிடிஎப் கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

எந்த ஒரு பிடிஎப் கோப்பினையும் வேர்ட் அல்லது .TXT கோப்பாக சேமிக்க முடியும்.

1000 பக்கம் உள்ள பிடிஎப் கோப்பினை பிரிக்க அல்லது சேர்க்க முடியும்.
Read more »

MS Wordக்கு பதிலாக மாற்று மென்பொருள் DevVicky Word 2010


MS Word அனைவரும் பயன்படுத்தும் ஒன்று.இதற்கு மாற்றாக MS Word வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் DevVicky Word 2010.இதன் வசதிகளை பார்ப்போம்.



இந்த மென்பொருளின் சிறப்பம்சம் MS Word போலவே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.மேலும் இதில் அனைத்து doc,docx கோப்புகளையும் திறந்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு doc கோப்பும் தனிதனி windowக்கு பதிலாக Tab வசதியை கொண்டுள்ளது.மேலே படத்தில் பார்க்க.


மேலும் word கோப்புகளை Pdf ஆக மாற்றும் வசதியும் உள்ள.இதன் அளவு 7.13 MB மட்டுமே.மேலும் இதை Windows 7 இல் பயன்படுத்தலாம். ஆனால் MS Word மிக அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இதனை பயன்படுத்த சிரமமாக இருக்கும்.
மற்றபடி doc கோப்புகளை படிக்க மற்றும் சிறிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை Download செய்ய 
Read more »

அதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்


இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizerஎனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம்  IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை  களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

IDM  இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம்Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
முதலில்  IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். 

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Trayஇல் உள்ள  IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe ஐ D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும். 


அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.


மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள். 

Read more »
 
-