புதிய படம் ஒன்றினை வாங்க வந்த விநியோகஸ்தர்கள், படத்தின் விலை கேட்டு மிரண்டு போன சம்பவம் நடந்ததாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.
ஞாபகங்கள் படத்தின் முலம் ஒரு கவிஞனின் துயரமான காதல் கதையில் நடித்து அதை தயாரிக்கவும் செய்தார் பாடலாசிரியர் பா.விஜய். ஆனால் மூன்று கோடி முதலீடு செய்து போட்ட பணத்தில் ஒரு கோடியைக் கூட எடுக்க முடியவில்லை அவரால். ஆனால் அடுத்த படமே ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்று கதைகேட்ட பா.விஜயை வைத்து படமெடுக்க யாரும் தயாரில்லை. இதனால் தமிழக முதல்வர் கலைஞரை சரனடைந்தார் பாடலாசிரியர்.
முதல்வரும் உனக்கு தயாரிப்பாளர்தானே வேண்டும் எதற்கு கவலைப்படுகிறாய் என்று மார்ட்டீன் லட்டரியின் முதலாளி மற்றும் திரைஇசைத் தொலைகாட்சியின் ஒன்றின் முதலாளியுமான மார்டீனிடம் அனுப்பி வைக்க, பிஸ்னஸ் இல்லாத பா.விஜயை வைத்து 21 கோடியை செலவு செய்து இளைஞன் படத்தை எடுத்து இருக்கிறார்களாம்! மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது படத்தின் பின்தயாரிப்பு வேலைகள் வெகுவேகமாக நடந்து வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது படத்தை ஏரியா வாரியாக விற்கும் வேலையை ஆரம்பித்தார்களாம். கலைஞர் டிவிக்கு படத்தின் சாட்டிலைட் உரிமை என்றாகிவிட்ட நிலையில் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று படத்தை வாங்க ஓடோடி வந்த விநியோகஸ்தர்கள் விலையைக்கேட்டு துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தலைதெரிக்க ஒடுகிறார்களாம்.
இப்போது தயாரிப்பாளர் ரெட் ஜியாண்ட் பேனரில் படத்தை வெளியிட்டால்தான் ஒரே விமோசனம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் என்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக