ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ஜெனிலியா!


கடந்த ஞாயிறு அன்று மும்பையில் நடந்த விவேக் ஓபராய் திருமண வரவேற்பு நிகழ்சியில் கலந்து கொண்டார் ஜெனிலியா. இந்த திருமண விழாவில் அழைப்பிதழ் அனுப்பப் பட்டும் தவிர்த்து விட்டார்களாம் பச்சன் குடும்பத்தார். ஆனால் தமிழ்
ஹீரோ சூரியா, தெலுங்கு ஹீரோ சித்தார்த் என்று தென்னிந்திய நட்சத்திரங்கள் தென்பட்டனர். முக்கியமாக டோலிவுட்டில் இருந்து கலந்து கொண்ட பிரபலங்களில் ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவர் வந்த அதே நேரத்தில் ஜெனிலியாவும் வர இருவரையும் அருகருகே அமர வைத்து விட்டார்களாம். ஜெனிலியா பக்கம் திரும்பிய ராம் கோபால் வர்மா “ எனது அடுத்த இரண்டு மொழிப்படத்தில் நடிக்க நீ தயாரா? “ என்று கேட்க “ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கால் ஷீட் தரத் தயார் என்றாராம் ஜெனிலியா. இரண்டே நிமிடங்களில் ராம் கோபால் வர்மா படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக முடிவானதைக்கண்டு திகைத்து போனவர் சித்தார்த்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-