ஆன்மீகம்
என் நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைதார். இன்று ஏகாதசி விரதம் என்று என் தரப்பு நியாத்தை சொன்ன பொழுது – "அட என்னப்ப USக்கு வந்தும் அதுவும் Computer-ல இருந்தும், பழைய பஞ்சாங்கம சாமி விரதம்னு – இதெல்லாம் 70 வயசுல வரவேண்டியது" என நகையாடினார்.
என்னை தமிழ் எழுத செய்ததில் முக்கிய பங்கு என் தமிழ் குரு திரு.பாலகுமாரனு உண்டு. அவர் எழுதியதை போல், ஆன்மீகம் 70வதில் வருவது சரியா, 30தில் வருவது தவறா என்றால் – சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க ஆன்மீகம் தானாகா வரும் . துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்
நான் ஆசாரம், அனுஷ்டாங்கத்துடன் வளரவில்லை. இன்னும் சொல்ல போனல் "கருணாநிதியின்" தமிழ் கேட்டு – அவர் ஊட்டிய hindi எதிர்ப்பு, பகுதறிவு பாசறை, உண்மை என நம்பி அதை மனதில் ஏற்றி வளர்ந்தவன். ஒரு பரீட்சை சுமாராக எழுதிவிட்டால் அது தான் ராசியான சட்டை என்று நம்பி தொடர்ந்து வரும் 5 பரீட்சைகும் அதே சட்டையை போடும் மூட நம்பிகையும், ஏதோ பெற்றோர் சொல்வதற்காக கடவுளை வெறும் சம்ப்ரதாயத்துக்காக பண்டிகை நாளில் மட்டும் கும்பிட்டவன்.
19 வயதில் எனது பயனம் தொடங்கியதிலிருந்து – அது கற்று தந்த அனுபவம், வேதனை, மகிழ்ச்சி, சோதனை, அவமானம் – பகுதறிவு பாசறை பொய்யென உணர்தியது, hindi எதிர்ப்பு முட்டள்தனம் என உணர்தியது.
வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட பணமும், புழகும் கிடைக்கும் பொழுது – ஒருவன் இரண்டு வழியை நாடுகிறான்.
1 – மது, மாது, etc.,
2 – ஆன்மீகம்.
என் choice # 2. இதற்கு காரணம் என் பெற்றோர் வளர்த்த விதம் – என் தாயும்,தந்தையும் 1 ரூபைக்கு பட்ட கஷ்டமும், இப்படி தான் வாழவேண்டும் என கட்டம் போட்டு வகுத்த வழிமுறையும் தான் என்று நான் சொன்னாலும் – "இந்த குணம் உடையவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முடிவு செய்பவன் நான்" என கிருஷ்ணபரமாத்மாவின் சத்ய வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது.
பின்வரும் விஷயத்தை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது.
ஆன்மீகம் என்று பொதுவாக நான் சொன்னாலும் – என் ஒவ்வொரு அசைவிலும் தங்கியிருந்து, என்னை வழி நடத்தி செல்வது என் குரு – அந்த காமட்சியின் அவதாரம் – மகான் ஸ்ரீ மகாபெரியவர் தான்.
இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது – என் வாழ்னாலில் அவரை நான் தரிசனம்செய்ததுயில்லை – தரிசிக்கவேண்டும் என்றும் எண்ணம் எழுந்ததுயில்லை, இருப்பினும் மனது வேதனை படும்பொழுது, அவமானம் படும்பொழுது – எனக்கு முதல் தோன்றுவது என் குரு தான்.
மாய,மந்திரம் என்று கூட சொல்லலாம் – hindi கூட தெரியாத எனக்கு, சகச்ரனாமம், ருத்ரம், சமக்கம், யஜுர் வேதம், என்று என்னை மாற்றியது அந்த மகான். தெய்வத்தின் குரல் அனைத்தியும் 1 வாரத்தில் படிக்க வைத்து – கடவுள் யாரென்று விளக்கி அத்வைத கொள்கை 6ம் பாகுதியை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து என்னுல் ஞான ஜோதி ஏற்றியது – என்னால் நம்ம முடியத சரித்திரம்.
குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன்.
சத்யம் சொல்கிறேன் – அந்த ஞான புருஷர் மட்டும் என்னை வழி நடத்தவில்லையென்றால் – நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்கே தெரியாது. மொதத்தில் இந்த மூங்கிலை புல்லாங்குழல் ஆக்கியது அவர் – என் திறமையோ, உழைப்போ ஒன்றும் இல்லை.
அப்படிபட்ட மகானை எனக்கு அறிமுகபடுதியது யார்? பல முறை நினைத்து பார்ததில்- என் நினைவுக்கு வரவில்லை. நான் முன் சென்மத்தில் ஆசாரியாலினின் பக்தனாக இருந்திருக்கவேண்டும், அல்லது என் சிறு வயதில் ப்ரகல்லாதன் போல் யாரவது மகாபெரியவரை பற்றி சொல்லியிருக்க வேண்டும்.
மகாபெரியவரை தரிசிக்காதது நான் செய்த பாவம் -இதை எப்படி நான் போக்க கூடும் ?
குருவே நீ வாழும்யிடம் வந்து நான் சேரவேன்டும்!.
என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது.
ஒரு குட்டி கதை :
ஒரு ஊரில் ஒரு சின்ன பையன் ஒரு பறையை எடுத்து அடித்துக் கொண்டே இருந்தான். யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை. பறையை அடித்து அடித்து எல்லோருடைய செவிகளையும் செவிடாக்கிக் கொண்டிருந்தான். ஊராருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவ்வழியே வந்த ஒரு பெரியவரிடம் சொன்னார்கள். அவர் அந்தப் பையனிடம் "இப்படி நீ அடித்துக் கொண்டேயிருந்தால் உன் காது செவிடாகி விடும்" என்று அவனை எச்சரிக்கை செய்தார். சிறுவன் கேட்கவில்லை. அவனால் அவர் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பறையை அடித்தால் எப்படிக் காது செவிடாகும் ? மீண்டும் விடாமல் அடிக்க ஆரம்பித்தான். அப்போது மற்றொரு பெரியவர் வந்தார். அவர் சொன்னார். "தம்பி , பறையை எப்போதும் அடிக்கக் கூடாது ; அதை அடிப்பதற்கென்று ஒரு நேரம் இருக்கிறது. அப்போதுதான் அடிக்க வேண்டும்." மூன்றாவதாக வந்த பெரியவர் , அந்த ஊரில் உள்ளவர்கள் தங்கள் காதுகளைக் காபந்து செய்து கொள்வதற்காக எல்லோருக்கும் பஞ்சு கொடுத்து காதில் வைத்து அடைத்துக் கொள்ளச் சொன்னார். நான்காவதாக வந்தவர், அந்தச் சிறுவனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். ஐந்தாவதாக வந்தவர் , அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் கோபத்தை அடக்குவது எப்படி என்பதை தெளிவான , எளிமையான செயல்முறைகளின் மூலம் விளக்கினார். ஆறாவதாக வந்தவர் , அந்தச் சிறுவனுக்கு சில தியான முறைகளைக் கற்பித்து எதார்த்தம் என்பது மாயை என்று உபதேசித்து விட்டுச் சென்றார். இந்த வழிமுறைகள் எல்லாமே சில மணி நேரங்களுக்குத்தான் வேலை செய்தது. அதற்கப்புறம் பையன் பறையைக் கையில் எடுத்துக் கொண்டான்.
கடைசியாக அந்த வழியே ஒரு ஞானி வந்தார். நிலைமையைத் தெரிந்து கொண்டார். அந்தப் பையனின் கையில் ஒரு சிறிய கத்தியைக் கொடுத்து "தம்பி , இந்தப் பறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று நினைக்கிறாய் ?" என்று கேட்டார்.
அவ்வாறாக என் வாழ்வில் குறுக்கிட்ட குருதான் மகபெரியவர். அவரின் சொற்பொழிவும், வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை முறையும் தான் – எனது ஆன்மீகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக