5 ஆண்டுகள் சூரிய உளியில் பறக்கும் விமானம்


ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க இராணுவம் வேண்டுகோள் விடுத்த்ளளது. சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம். இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

இதன் மூலம் விமானத்தின் மின்சார மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும். முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014 ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
Read more »

தீபாவளிக்கு திரைக்கு வந்த 4 படங்கள்

 
தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள உத்தம்புத்திரன், பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவான மைனா, அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள வல்லக்கோட்டை, புஷ்கர்- காயத்ரி இயக்கியுள்ள வ-குவாட்டர் கட்டிங் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.

மேலும், ‘ஸ்டிரீட் டான்ஸ்' என்ற 3 டி ஆங்கிலப் படத்தின் தமிழாக்கமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மைனா படத்தை உதயநிதி ஸ்டாலின் திரையிடுகிறார். புதுமுக நாயகன் விதார்த், சிந்து சமவெளி நாயகி அமலாபால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் 170 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வ-குவாட்டர் கட்டிங் படத்தை வினியோகித்துள்ளது தயாநிதி அழகிரி. புஷ்கர்- காயத்ரி தம்பதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் 'மிர்ச்சி' சிவா, லேகா வாஷிங்டன் நடித்துள்ளனர். இந்தப் படம் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் இயக்கத்தில், அர்ஜுன், ஹரிப்பிரியா நடிப்பில் உருவான 'வல்லக்கோட்டை' 180 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் 20க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் படபிடிப்பு முடிந்தும், திரையரங்குகள் கிடைக்காததால் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
Read more »

தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Read more »

மின்தடை ஹைக்கூ

பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை

வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை

அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை

தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை

தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை

வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை

ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்

விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை

வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை

வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை
Read more »

அழகோ அழகு

Beautiful Earth

Ice Crystals

Bird of Lights

Earth's Belly Button

Flowery Pathway


Sea Shells

Misty Forest

Lenticular Cloud

T he Marks of Wind

Rays of Dawn

Wave of Clouds

Yellow Stream

Dreamscape

Paradise

Blue Planet
Read more »

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuition 
நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!
Read more »

SHUTTER ISLAND (2010) - திரை விமர்சனம்


இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காகவும், இது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதனாலும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேற்றுதான் நேரம் கிடைத்தது.

1954 ஆம் ஆண்டில் படம் தொடங்குகிறது...


இரண்டு மார்ஷல்கள்  ஷட்டர் ஐலேண்டில் இருக்கும் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒரு நோயாளியைக் கண்டுபிடிப்பதற்காக கப்பலில் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் டிகாப்ரியோ.


மிகவும் அபாயகரமான நோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது. அந்த தீவிலேயே அந்த மருத்துவமனை மட்டும்தான் இருக்கிறது. அங்கு இந்த மார்ஷல்களை அவர்கள் நடத்தும் விதம் அங்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை.. டீகாப்ரியோவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.


காணாமல் போனதாகச் சொல்லப்படும் நோயாளி ரேச்சல் சொலாண்டோ ஒரு பெண். அவள் அவளது மூன்று குழந்தைகளைக் கொன்ற ஒரு சைக்கோ என்கிறார்கள்.


அந்த விசாரனையின் போதே டிகாப்ரியோவுக்கும் தலை சுற்றுகிறது.. அதற்காக அவனுக்கு அங்கு மருந்து தரப்படுகிறது.


ரேச்சலுக்கு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் ஆண்ட்ரூ லாடிஸ் என்ற பெயரை உச்சரித்து அவரைத் தெரியுமா என்று கேட்கிறார் டீகாப்ரியோ. அந்த பெயரைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்து எழுந்து பதட்டத்துடன் ஓடாத குறையாக சென்று விடுகின்றனர். நமக்கும் யார் அந்த ஆண்ட்ரூ லாடிஸ் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.


இதனிடையே டீகாப்ரியோவிற்கு அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் மற்றும் தீவிபத்தில் இறந்த அவனது மனைவி போன்ற சம்பவங்கள் நினைவுகளாகவும், கனவாகவும் வந்து அவஸ்தைப் படுத்துகின்றன.


இறந்த அவரது மனைவி கனவிலும் நினைவிலும் வந்து அடிக்கடி இதைச் செய் இதைச் செய்யாதே என்கிற ரீதியில் எதையாவது சொல்கிறார். அதனாலும் டீகாப்ரியோ குழம்புகிறார்.


தன் மனைவி இறந்ததற்கு காரணம் ஆண்ட்ரூ லாடிஸ்தான். அவர் தற்போது இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறார். மேலும் இந்த மருத்துவமனையில் நிறைய சித்திரவதைகள் நடக்கின்றன அதனைக் கண்டுபிடித்து உலகிற்குச் சொல்வதற்காகவே தான் இங்கு வந்திருப்பதாக தன் உடன் வந்த மார்ஷலிடம் டீகாப்ரியோ தெரிவிக்கிறார்.


ரேச்சலின் அறையில் ஒரு துண்டுச் சீட்டு அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில் யார் அந்த 67 ஆம் நபர்? என்ற கேள்வி இருக்கிறது.


யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.. அது என்னவாக இருக்கும் என நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.


அந்த மருத்துவமனையில் மொத்தம் இருப்பதே 66 நோயாளிகள்தான் என்ற உண்மை டீகாப்ரியோவிற்கு தெரியவருகிறது. அப்படியானால் 67 வதாக ஒரு நோயாளி நிச்சயம் இங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டீகாப்ரியோ. அந்த 67 வது நோயாளி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் எகிறிவிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த 67 வது நோயாளி யார் எனத் தெரியவரும் போது.. உண்மையில் நாமும் சிறிது குழம்பி பின் தெளிந்து அதிர்ந்து போகிறோம்.


இந்த விசாரணையின் போதே திடீரென காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டார் என்று அவரை டீகாப்ரியோவிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். அவர் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டில் இருக்கிறோம். உடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது சேவகர்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்.


டீகாப்ரியோவிடம் அவரது நினைவுகளை அவர் தெரியப்படுத்துகிறார்... பின் திடீரென டீகாப்ரியோவை அவரது கணவராக நினைத்து கட்டி அணைக்கிறார். கட்டி அணைக்கும் போதே திடீரென நினைவு வந்தவராய்.. இறந்த என் கணவர் எரிந்துவிட்டார்.. யாரடா நீ என்று கூச்சல் போடுகிறார். அதிர்ந்து விடுகிறார் டீகாப்ரியோ.. மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து தரப்படுகிறது.



அந்த தீவில் ஒரு கலங்கரை விலக்கம் இருக்கிறது. அங்கு என்ன இருக்கிறது.. அங்கு ஏதோ மர்மம் இருப்பதாக டீகாப்ரியோ நினைக்கிறார்.
எப்படியாவது அங்கே சென்று பார்த்துவிட வேண்டும் என அதற்கு திட்டமிடுகிறார்.

அங்கே அவரும் உடன் வந்த மார்ஷலும் செல்கின்றனர். செல்லும் வழியில் டீகாப்ரியோவிற்கும் உடன் வந்த மார்ஷலுக்கும் தகராறு வந்துவிடுகிறது. தான் மட்டும் தனியாக அந்த கலங்கரை விலக்கத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு டீகாப்ரியோ முன்னே நடக்கிறார். பின் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அந்த மார்ஷலைக் காணோம். அந்த மார்ஷலின் பெயர் சக்.. அங்கே சென்று பார்க்கிறார். இந்த சம்பவம் நடப்பது உயரமான ஒரு பாறைக்கு அருகில், கீழே கடல்..


அங்கு சென்று பார்த்தால் சக் கீழே விழுந்து இறந்து கிடக்கிறார். பதறியடித்துக் கொண்டே இவரும் சிரமப்பட்டு பாறைகளைப் பிடித்து கீழே இறங்கிப் பார்த்தால் அவர் அங்கு இல்லை.


என்னடா இதுன்னு டீகாப்ரியோ அதிர்ச்சியோட பாத்துட்டு இருக்கும் போதே.. அங்க ஒரு பொந்தில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகள் வந்து அவர் நின்னுட்டிருந்த பாறையைச் சூழ்ந்துக்கும்..


வேக வேகமா அவரு மறுபடியும் பாறைல மேல ஏறுனா.. அங்க சின்னதா ஒரு குகை இருக்கும்.. அதுக்குள்ள வெளிச்சமா இருக்கேன்னு உள்ள போய் பார்த்தா... அங்க ரேச்சல் இருப்பாங்க..


என்னடா ரேச்சல்தான் கிடைச்சிட்டாங்களே... மருத்துவமனைக்குள்ள வந்த ரேச்சல் மறுபடியும் இங்க எப்படி வந்தான்னு குழம்பாதீங்க.. மேல படிங்க...


நான்தான் உண்மையான ரேச்சல்னு டீகாப்ரியோகிட்ட சொல்வாங்க அவங்க.. அவங்க மூனு குழந்தைகளைக் கொலை பண்ணினதைப் பத்தி டீகாப்ரியோ கேப்பார். அதுக்கு அவங்க எனக்கு குழந்தைகளே கிடையாது நான் கல்யாணமே பண்ணிக்கலை.. உண்மையில் நான் நோயாளியே கிடையாது... இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துட்டு இருந்த டாக்டர் நானுன்னு சொல்வாங்க...


அப்புறம் அவங்க டீகாப்ரியோகிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க. டீகாப்ரியோவுக்கு அதிர்ச்சியா இருக்கும். நமக்கும்தான்.. அவங்க என்ன கேப்பாங்கங்கறதை நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க...


அதுமட்டும் இல்லாம அந்த மருத்துவமனையில் மக்களை ஆராய்சிப் பொருளாப் பயன்படுத்தறது பத்தியும் அவங்க மூளையில நடக்கிற அறுவை சிகிச்சை பத்தியும் சொல்வாங்க. இது அங்க இருக்கற எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்னு சொல்வாங்க. அந்த கலங்கரை விலக்கத்துலதான் மூளை அறுவை சிகிச்சை நடக்குதுன்னும் சொல்வாங்க. டீகாப்ரியோவுக்கு அங்க போகனும்ங்கற எண்ணம் இன்னும் அதிகமாகிடும்.


ஒரு வழியா டீகாப்ரியோ அந்த கலங்கரை விலக்கத்துக்கு போய்டுவார். அங்க போய் பார்த்தா... அங்கே...


இதுக்கப்புறம் நடக்கறது எதையும் நான் சொல்லமாட்டேன்.. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.. இதுவரை நான் சொன்ன கதை கதையே இல்லை (அடப்பாவி...அப்ப ஏண்டா இப்படி சுத்துனங்கிறீங்களா..) இனிமேதான் இருக்கு மேட்டரே..


அவரும் அதிர்ச்சியாகி, குழம்பி நாமும் அதிர்ச்சியாகி குழம்பி... நம்ம மூளை அப்படியே டீகாப்ரியா மூளையாவே மாறி யோசிச்சிட்டிருக்கும்.. அந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது...


இந்தப் படம் பார்த்து முடிச்சவுடனே மறுபடியும் பார்க்கத் தோணுச்சு... இரண்டாம் முறை பார்க்கும் போது அது வேற அர்த்தத்தைக் கொடுக்கும்..


மைல்டான திரில்லர் படமான் இதுல இடைல இடைல கொஞ்சம் போரடிக்கற மாதிரி காட்சிகள் இருக்கும்.. ஆனா முதல் முறை பார்க்கும் போதுதான் அந்த சீனெல்லாம் போரடிக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது அந்த காட்சியை வெச்சது சரிதான்னு தோணும்..


டீகாப்ரியோவோட நடிப்பு கிளாஸ். வழக்கம் போல இதையும் அவர் நடிப்புக்காக ஆஸ்காருக்கு நாமினேட் பன்னுவாங்க.. பாவம் அவருக்குதான் அந்த ராசி இல்லையே...


கட்டாயம் இரண்டாம் முறை பார்க்க வேண்டிய படம் இது..
Read more »

ஷங்கரின் அடுத்த சூப்பர் பிளான்


இயக்குனர் ஷங்கரை பிரமாண்ட படம் தருபவர் என்பதையும் தாண்டி... பிரமாண்டமான பரபரப்பையும் ஏற்படுத்தும் இயக்குனர் என்று சொல்லலாம். எந்திரனுக்கு பிறகு இந்தியாவின் நம்பர்.1 இயக்குனர்களில் ஒருவர் என்ற புகழினை அடைந்துவிட்ட ஷங்கர், எந்திரனின் பிரமிப்பு கண்டு பாலிவுட் திரையுலகமே வியந்து போயிருக்கும் இந்தத் தருணத்தை பயன்படுத்தி தனது ‘பாய்ஸ்’ படத்தை டப் செய்து இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். 
“பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற திரி இடியட்ஸை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்கிறார்” என்ற தகவல் உண்மையா? பொய்யா? என்பதே தெரியாத அளவிற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைவட்டாரத்திலும் பல மாதமாக உலா வந்துகொண்டிருக்கிறது. 

திரி இடியட்ஸில் நடிக்கவிருப்பவர்கள் என்ற கணிப்பு மட்டுமே விஜய், சிம்பு, சித்தார்த், மாதவன், மகேஷ்பாபு, ஜீவா என வளர்ந்து கொண்டேவந்தது. இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம். இந்த நிலையில் ஒரு பாடல் தயாராகிவருகிறது என மேலும் ஒரு வதந்தியும் தீயாய் பரவிவருகிறது. இப்படி ‘ஷங்கர் - திரி இடியட்ஸ்’ கதை இழுபறியாகவே இருக்கும் நிலையில் இன்னொரு சட்டச் சிக்களுக்கும் ஆளகியுள்ளார் ஷங்கர்.

பத்துவருட கனவு என எந்திரனை ஷங்கர் கூறிவந்தார். ஆனால் ‘எந்திரன் ஷங்கரின் லட்சியக் கனவு அல்ல... அது அவரின் களவாடிய கனவு’ என ஒன்றுக்கு இரண்டு எழுத்தாளர்களின் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  

‘எனது கதையை அப்படியே கொண்டு படமாக்கியுள்ளார்’ என கவிஞரும், எழுத்தாளருமான ஆருர் தமிழ்நாடன் வழக்கு தொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆர்னிகா நாசர், ‘எனது கதையில் வரும் சம்பவங்கள் பல, எந்திரனில் அப்படியே காட்சியாக்கப்பட்டுள்ளன’என குற்றம் சாட்டியுள்ளார். இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது எழுத்தாளர்கள் இருவரும் தொடுத்துள்ள இந்த வழக்குகள்தான் இன்றைய சினிமா வட்டாரத்தின் ஹைலைட் பரபரப்பு.



இப்படியான நிலையில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ இந்தியில் டப் செய்து வெளியிடப்படவிருப்பதாகவும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. “பாய்ஸ்” தமிழில் வெளியானபோது,  இந்தியில் ‘ரீமேக்’கோ, ‘ட்ப்’போ செய்து வெளியிடப்படவில்லை. தற்பொழுது 'எந்திரன்' வெற்றியைத் பயன்படுத்தி, 'பாய்ஸ்' படத்தை இந்தியில் 'டப்' செய்து வெளியிட இருக்கிறாராம் ஷங்கர்.

இன்று பாலிவுட்டில் ஷங்கருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை போலவே ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகன் சித்தார்த்தும், கதாநாயகி ஜெனிலியாவும் பாலிவுட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.இவைபோக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இந்தியில் நல்லமதிப்பு இருக்கிறது.  இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக கூட்டிக்கழித்து பாய்ஸ் தமிழில் பெறாத வெற்றியை, வசூலை இந்தியில் பெறும் என கணக்கு போட்டுள்ளாராம் ஷங்கர்.   

‘பாய்ஸ்’ படத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸுக்கு இந்தப் படம் நஷ்டத்தையும் கஷ்டத்தையும்தான் கொடுத்தது.  இந்தியில் இப்படத்தை வெளியிட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் நம்பிக்கையுடன் ஸ்ரீ சூர்யா மூவிஸும் உள்ளதாம்.(பாவம்... சூர்யா மூவிஸ் ‘பாய்ஸ்’சுக்கு பிறகு பாய் விரித்தே படுத்திருச்சு எனலாம்)
இந்திப் பதிப்பின் பாடல்கள் மற்றும் வசனங்களை அப்பாஸ் டையர்வாலா எழுதவுள்ளாராம். 
பாய்ஸ் இந்தியில் வெளியாகும் இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என சித்தார்த் கூறியிருப்பதையும் சொல்லியே ஆகவேண்டும்..

இதுகுறித்து சித்தார்த், “பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன்.

யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேன் ஒத்தன்டனா (தெலுங்கு சம்திங் சம்திங் - உனக்கும் எனக்கும்) படத்தைத்தான் கூற விரும்புறேன்” என தடாலடியாக சொல்லியிருக்கிறாராம் சித்தார்த்.

எது எப்படியோ... ஷங்கரின் சமயோஜித திட்டத்தில் ‘பாய்ஸ்’ பாலிவுட்டுக்கு ஹாய் சொல்ல ரெடியாகிடுச்சுங்கோ...
Read more »

ஆன்மீகம்


என் நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைதார்.  இன்று ஏகாதசி விரதம் என்று என் தரப்பு நியாத்தை சொன்ன பொழுது – "அட என்னப்ப USக்கு வந்தும் அதுவும் Computer-ல இருந்தும், பழைய பஞ்சாங்கம சாமி விரதம்னு – இதெல்லாம்  70 வயசுல வரவேண்டியது" என நகையாடினார்.
என்னை தமிழ் எழுத செய்ததில் முக்கிய பங்கு என் தமிழ் குரு திரு.பாலகுமாரனு உண்டு. அவர் எழுதியதை போல், ஆன்மீகம் 70வதில் வருவது சரியா, 30தில் வருவது தவறா என்றால் – சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க ஆன்மீகம் தானாகா வரும் . துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்
நான் ஆசாரம், அனுஷ்டாங்கத்துடன் வளரவில்லை. இன்னும் சொல்ல போனல் "கருணாநிதியின்" தமிழ் கேட்டு – அவர் ஊட்டிய hindi எதிர்ப்பு, பகுதறிவு பாசறை,  உண்மை என நம்பி அதை மனதில் ஏற்றி வளர்ந்தவன். ஒரு பரீட்சை சுமாராக எழுதிவிட்டால் அது தான் ராசியான சட்டை என்று நம்பி தொடர்ந்து வரும் 5 பரீட்சைகும் அதே சட்டையை போடும் மூட நம்பிகையும், ஏதோ பெற்றோர் சொல்வதற்காக கடவுளை வெறும் சம்ப்ரதாயத்துக்காக பண்டிகை நாளில் மட்டும் கும்பிட்டவன்.
19 வயதில் எனது பயனம் தொடங்கியதிலிருந்து – அது கற்று தந்த அனுபவம், வேதனை, மகிழ்ச்சி, சோதனை, அவமானம் – பகுதறிவு பாசறை பொய்யென உணர்தியது, hindi எதிர்ப்பு முட்டள்தனம் என உணர்தியது.
வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட பணமும், புழகும் கிடைக்கும் பொழுது – ஒருவன் இரண்டு வழியை நாடுகிறான்.
1 – மது, மாது, etc.,
2 – ஆன்மீகம்.
என் choice # 2. இதற்கு காரணம் என் பெற்றோர் வளர்த்த விதம் – என் தாயும்,தந்தையும் 1 ரூபைக்கு பட்ட கஷ்டமும், இப்படி தான் வாழவேண்டும் என கட்டம் போட்டு வகுத்த வழிமுறையும் தான் என்று நான் சொன்னாலும் – "இந்த குணம் உடையவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முடிவு செய்பவன் நான்" என கிருஷ்ணபரமாத்மாவின் சத்ய வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது.
பின்வரும் விஷயத்தை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது.
ஆன்மீகம் என்று பொதுவாக நான் சொன்னாலும் – என் ஒவ்வொரு அசைவிலும் தங்கியிருந்து, என்னை வழி நடத்தி செல்வது என் குரு – அந்த காமட்சியின் அவதாரம் – மகான் ஸ்ரீ  மகாபெரியவர் தான். 
இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது – என் வாழ்னாலில் அவரை நான் தரிசனம்செய்ததுயில்லை – தரிசிக்கவேண்டும் என்றும் எண்ணம் எழுந்ததுயில்லை, இருப்பினும் மனது வேதனை படும்பொழுது, அவமானம் படும்பொழுது – எனக்கு முதல் தோன்றுவது என் குரு தான். 
மாய,மந்திரம் என்று கூட சொல்லலாம் – hindi கூட தெரியாத எனக்கு, சகச்ரனாமம், ருத்ரம், சமக்கம், யஜுர் வேதம், என்று என்னை மாற்றியது அந்த மகான். தெய்வத்தின் குரல் அனைத்தியும் 1 வாரத்தில் படிக்க வைத்து – கடவுள் யாரென்று விளக்கி அத்வைத கொள்கை 6ம் பாகுதியை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து என்னுல் ஞான ஜோதி ஏற்றியது – என்னால் நம்ம முடியத சரித்திரம்.
குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன்.
சத்யம் சொல்கிறேன் – அந்த ஞான புருஷர் மட்டும் என்னை வழி நடத்தவில்லையென்றால் – நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்கே தெரியாது. மொதத்தில் இந்த மூங்கிலை புல்லாங்குழல் ஆக்கியது அவர் – என் திறமையோ, உழைப்போ ஒன்றும் இல்லை.  
அப்படிபட்ட மகானை எனக்கு அறிமுகபடுதியது யார்? பல முறை நினைத்து பார்ததில்- என் நினைவுக்கு வரவில்லை. நான் முன் சென்மத்தில் ஆசாரியாலினின் பக்தனாக இருந்திருக்கவேண்டும், அல்லது என் சிறு வயதில் ப்ரகல்லாதன் போல் யாரவது மகாபெரியவரை பற்றி சொல்லியிருக்க வேண்டும்.
மகாபெரியவரை தரிசிக்காதது நான் செய்த பாவம் -இதை எப்படி நான் போக்க கூடும் ?
குருவே நீ வாழும்யிடம் வந்து நான் சேரவேன்டும்!.

என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது.
ஒரு குட்டி கதை :
ஒரு ஊரில் ஒரு சின்ன பையன் ஒரு பறையை எடுத்து அடித்துக் கொண்டே இருந்தான். யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை. பறையை அடித்து அடித்து எல்லோருடைய செவிகளையும் செவிடாக்கிக் கொண்டிருந்தான். ஊராருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவ்வழியே வந்த ஒரு பெரியவரிடம் சொன்னார்கள். அவர் அந்தப் பையனிடம் "இப்படி நீ அடித்துக் கொண்டேயிருந்தால் உன் காது செவிடாகி விடும்" என்று அவனை எச்சரிக்கை செய்தார். சிறுவன் கேட்கவில்லை. அவனால் அவர் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பறையை அடித்தால் எப்படிக் காது செவிடாகும் ? மீண்டும் விடாமல் அடிக்க ஆரம்பித்தான். அப்போது மற்றொரு பெரியவர் வந்தார். அவர் சொன்னார். "தம்பி , பறையை எப்போதும் அடிக்கக் கூடாது ; அதை அடிப்பதற்கென்று ஒரு நேரம் இருக்கிறது. அப்போதுதான் அடிக்க வேண்டும்." மூன்றாவதாக வந்த பெரியவர் , அந்த ஊரில் உள்ளவர்கள் தங்கள் காதுகளைக் காபந்து செய்து கொள்வதற்காக எல்லோருக்கும் பஞ்சு கொடுத்து காதில் வைத்து அடைத்துக் கொள்ளச் சொன்னார். நான்காவதாக வந்தவர், அந்தச் சிறுவனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். ஐந்தாவதாக வந்தவர் , அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் கோபத்தை அடக்குவது எப்படி என்பதை தெளிவான , எளிமையான செயல்முறைகளின் மூலம் விளக்கினார். ஆறாவதாக வந்தவர் , அந்தச் சிறுவனுக்கு சில தியான முறைகளைக் கற்பித்து எதார்த்தம் என்பது மாயை என்று உபதேசித்து விட்டுச் சென்றார். இந்த வழிமுறைகள் எல்லாமே சில மணி நேரங்களுக்குத்தான் வேலை செய்தது. அதற்கப்புறம் பையன் பறையைக் கையில் எடுத்துக் கொண்டான்.
கடைசியாக அந்த வழியே ஒரு ஞானி வந்தார். நிலைமையைத் தெரிந்து கொண்டார். அந்தப் பையனின் கையில் ஒரு சிறிய கத்தியைக் கொடுத்து "தம்பி , இந்தப் பறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று நினைக்கிறாய் ?" என்று கேட்டார்.
அவ்வாறாக என் வாழ்வில் குறுக்கிட்ட குருதான் மகபெரியவர். அவரின் சொற்பொழிவும், வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை முறையும் தான் – எனது ஆன்மீகம்
Read more »

பிச்சைப்பாத்திரமும், அதனுடன் உறங்கும் வீடில்லா மக்களும்

 
ஒரு சில மனிதர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஓரளவு தெளிவான முகத்துடனும், சிடுசிடுக்கும் கண்களுடனும் சாலை ஓரங்களிலோ, இல்லை பொதுப் பூங்காக்களிலோ தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களின் தோற்றத்தால், பிச்சைக்காரர்களாக நம்மால் நம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்படும் இவர்கள், கோயில்களருகே இருக்கும் பிச்சைக்காரர்களில் ஒருவராக நிச்சயம் இருக்க மாட்டார்கள். நெரிசலான சாலையில் நடந்து கொண்டிருக்கும் இவர்கள் திடீரென யாருமில்லாத வெற்றிடத்தை பார்த்து திட்டுவார்கள், கத்துவார்கள். இவர்களைப் பார்ப்பவர்கள் ஒரு ஈனப்பார்வையை இவர்களின் மீது வீசிவிட்டு இடைவெளிவிட்டு கடந்து போய்விடுவார்கள். உடலில் காயமில்லாமல் இவர்களைப் பார்ப்பது கொஞ்சம் அரிது. இவர்களின் அத்துமீறிய செயல்களால் மக்களோ இல்லை காவல்துறை நண்பர்களோ (??‼) நிச்சயமாக யாராவது அடித்திருப்பார்கள்,

யார் இவர்கள்??, ஏன் இப்படி மாறினார்கள்?

மனநலம் பாதிக்கப்பட்ட வீடில்லா நாடோடிகள். இவர்களை அதிகமாக பஸ்நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கூட பார்க்கலாம்.



இவர்களுக்கு என்ன தேவை.. யாரிடமும் காசு கேட்டு பிச்சையெடுக்க மாட்டார்கள், பிச்சை கேட்டு தொந்தரவு செய்யவும் மாட்டார்கள். நீங்களாக ஏதாவது தந்தால் நிச்சயம் வாங்கிக்கொள்வார்கள்.

இவர்களுக்கு உணவு இரண்டாம்பட்சம்தான், பணம் தேவையேயில்லை. இவர்களுக்கு வேண்டியது “தன்னை யாராவது கவனிக்க வேண்டும்” “மற்றவர் கண்களுக்கு தான் மாறுபட்டு தெரிய கூடாது” என்பதுதான்.

இதிலிருந்து சற்று வேறுபட்டு இன்னொரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். அம்மனிதர்கள் பிச்சையெடுக்க மாட்டார்கள், எங்காவது நகர்ப்புற தியேட்டர்களின் வாசலிலோ, தொழிற்சாலைகளின் அருகிலேயோ, நடமாட்டம் அதிகமில்லாத புதுக்கட்டடிடங்களின் பக்கத்திலோ உறங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்கள். பகலில் தியேட்டர்களில் வண்டிகளுக்கு பாஸ் போடுபவராக, தொழிற்சாலையின் துப்புரவாளராக இருக்கலாம். இவர்களைப் போன்ற சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். ஏதேனும் ஒரு போதை வஸ்துக்கு இவர்கள் நிச்சயம் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ஆடைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் துவைபடக்கூடியவையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து சிலர் முன்னர் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அச்சடித்த தாள்களில் எழுத்துருக்களை அழிக்கப் பயன்படுத்தும் வெள்ளைநிற டில்லர் ரசாயனத்தையும், பி.வி.சி குழாய்களில் நீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சொலுசன்களையும் பயன்படுத்தி போதையேற்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பாலும் இவ்வாறு வேலைசெய்பவர்கள்தான். (சில மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் நகரில் ஒரு மைதானத்தின் நடுவே ஆதரவற்ற சிறுவன் ஒருவன் மரணத்தை தழுவியிருக்கிறான். காரணம் அளவுக்கு மீறி சொல்லுஷன் நுகர்ந்ததுதான்.)

வீடில்லாத நிலையும், ஆதரவற்ற ஏளன நிலையும், மக்களின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் மனதை பாதித்து இவர்களும் தனியே பேசி, தெருநாய்களை மிரட்ட ஆரம்பிக்கின்றனர். பின்னர் ஓர்நாள் இவர்களும் முன்கண்ட வகையில் சேர்ந்து விடுகின்றனர்.

அடுத்து நடைபாதைகளில் உறங்கும் பிச்சைக்காரர்கள். இவர்களில் பெக்கர் மாபியா கும்பல்களை தவிர்த்தும் நிறைய வீடில்லாதோர் இருக்கிறார்கள். தனித்து விடப்பட்ட பெரியோர்கள் முதலில் காவி உடையணிந்து கோயில் கோயிலாக சுற்றி கோயில் பிரசாதங்களை வாங்கி உயிர்வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் கோயில் முன் அமர்ந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

வழக்கமாக சாலை சிக்னல்களில் பிச்சையெடுக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரவில் காணாமற்போய் விடுகின்றனர். சாலைமேடைகளிலும், நடைபாதைகளிலும் உறங்குவோர் அவர்களில் கொஞ்சம் பேர்தான்.

இதில் இன்னுமொரு பகீர் தகவல் Raise of Crime rate…

பிச்சைக்காரர்களில் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். ரோட்டோர தகவல் சின்னங்கள், பயன்படாமல் இருக்கும் மின்கம்பிகள், வீடுகளிலினருகே இருக்கும் தண்ணீர் குழாய்கள், இன்னும் ஆங்காங்கே கிடைக்கும் பல பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை திருடி பழைய பொருட்கள் எடைபோடும் சில வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர்.

இதில் கூட ஒரு சில விஷயம் புலப்பட்டது. அவ்வியாபாரிகள் இவர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு முழு மதிப்பிற்கான பணத்தை தருவதில்லை. பாதியளவு கொடுத்தே இவர்களை சரிகட்டிவிடுகின்றனர். மேலும் இவர்கள் திருடுவதை வெளிப்படையாகவே ஊக்குவிக்கின்றனர்.

இவ்வகைப் பிச்சைக்காரர்கள் சக பிச்சைக்காரர்களிடம் வழிப்பறி மட்டுமல்ல, பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், போன்ற பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர், ஆனால் புகார் செய்யப்படுவதுமில்லை, தண்டிக்கப்படுவதுமில்லை முக்கியமாக கண்டுகொள்ளப்படுவதுமில்லை. அங்கு உடலால் வலியவன் வெல்கிறான்.

இவர்களில் புதிதாக ஒரு வகையினரை சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது. தாம் பெற்ற மக்கள்களால் கைவிடப்பட்ட பெரியோர் இருவர் தம்பதிகளாகவே புல்லாங்குழல் ஊதிப் பிச்சையெடுத்தது மட்டும் இன்னும் மனதைக் கசக்கிக் கொண்டிருக்கிறது.

நம் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? முழுவதுமாய் சுரண்டப்பட்டு பின் எச்சமாய் தூக்கியெறிந்த மிச்சங்களாக ஒரு சாரர் பிச்சைக்காரர்களுடன் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி வீடில்லாத இந்திய நாடோடி மக்களின் மொத்த எண்ணிக்கை 7.8 கோடி என்பது நெஞ்சை சுடும் உண்மை… இந்த விஷயத்தை பொருத்த மட்டில், நம் இந்திய அரசின் சாதனைகள் இந்த வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளில் தெரிய வரும்…

பெருமை கொள்ளும் இந்தியத் தலைநகரில் டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (Delhi Development Authority - DDA) கூறுவது புதுடெல்லியின் மொத்த மக்கள் தொதையில் ஒரு சதவீதம் மக்கள் உறைவிடமில்லாதோர்.

இதன் அர்த்தம் மாண்புமிகு இந்தியத் தலைநகரில் ஒன்னரை லட்சத்துக்கும் குறைவில்லாத மக்கள் கடுங்குளிரிலும், கோடைப்புழுக்கத்திலும் தெருவில் உறங்குகின்றனர் என்பதுதான். அப்புறம் முக்கியமாக இந்த புள்ளிவிவரத்தில் பிளாஸ்டிக் தட்டிகளினடியிலும், ஃபிளக்ஸ் பேனர்களை கட்டி வைத்து அதனடியிலும் உறங்குபவர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் நாம் கணக்கெடுப்பது வசதியான வீடில்லாதோர்களைத்தான்.

ஒவ்வொரு முறை இவர்களைப் பார்க்கும் போதும், இவர்களைப் பற்றி நினைக்கும் போதும் தோன்றுவது இந்த இரு கேள்விகள்தான்.

Who is responsible for this? Who should take the responsibility for them?

இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு வாழ்ந்திருந்தாலும், ஒரே தலைமுறையில் தங்களை மாற்றிக் கொண்டார்கள். இறுதிவரை அவர்கள் போராடியது நிரந்தர முகவரி ஒன்றிற்காகத்தான். அதன்பின் அவர்களை உயர்த்தியது உழைப்பு மட்டும்தான், தற்போது கல்வியும் அவர்களை உயர்த்தி வருவது சந்தோஷப்பட வைக்கும் ஒன்று.

தெருவில் உறங்கும், உழைக்கும் மக்களுக்கு அல்லது உழைக்க ஆசைப்படும் மக்களுக்கு அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இல்லை முகவரி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் சிறிதளவாவது மாறும் என்பது என் அரைகுறைக் கருத்து.

இந்த விசயத்தில் நம் அரசாங்க சாதனைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த விஷயத்தைப் பொருத்த மட்டில் களத்தில் இறங்கும் NGOக்களை கண்டறிந்து நம்மால் முடிந்த ஆதரவைத் தெரிவிப்போம்.

சிந்திப்போம்…
Read more »

விக்கிபீடியா எனும் ஓர் உலகம் - தமிழர்களுக்காக!

வணக்கம் நண்பர்களே! அமெரிக்கர்கள் பார்த்து வெகு நாட்களாகிவிட்ட நண்பர்களை சந்தித்தால், "Long time no see!" என்று சொல்லி வியப்பார்கள். எனக்கு இப்பொழுது அவ்வாறுதான் சொல்லத் தோன்றுகிறது. பதிவுலகில் காலடி எடுத்து வைத்து, மன்னிக்கவும், கைவிரல்களசைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன. மாதங்கள் வருடங்களாய்த் தெரிகிறது எனக்கு! இதை உயர்வு நவிர்ச்சி அணியில் சேர்க்க வேண்டாம். எனக்கு மனதளவில் குருவாக இருக்கும் என் அன்பு எழுத்தாளர் சுஜாதா அவர்கள், "எழுத்து எனக்கு மிக மிகத் திருப்தி அளித்த ஒரு காரியம். " என்று மகிழ்ந்திருக்கிறார். எனக்கும் அப்படித்தான். 


எனக்கு என்னவோ தெரியவில்லை, எழுதவேண்டும் என்ற எண்ணம் என் மூலையில் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் தாயிடமிருந்து வந்த மரபும், சுஜாதா போன்றவர்களின் எழுத்துக்களும், "ஏன் வெகு நாட்களாக நீ எழுதவில்லை?" என்று வினவி அன்புத் தொல்லை கொடுக்கும் மற்ற வலைப்பதிவர்களின் மின்-மடல்களும் என்னை எழுதத் தூண்டுகின்றன. இதோ... நான் இன்று சொல்லவிருக்கும் மிக மிக முதன்மையான கட்டுரை கீழே.


கூகிளின் 'Blogger' குழுவினர் இந்தியர்களிடம் இருக்கும் எழுதும் திறமையை அவர்கள் அத்தளத்தை  இந்தியர்களுக்காக வடிவமைப்பதற்கு முன் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தியர்கள் அதிகளவில் வருகை தரும் வலைத்தளங்களில் பிளாகரும் ஒன்று. இதில், தமிழர்களின் பங்கு  குறிப்பிடத்தக்கது! ஆனால், தமிழ் விக்கிபீடியா என்னும் ஓர் உன்னதமான வலைத்தளத்தை மிகச்  சிலரே அறிந்திருக்கிறார்கள்.  விக்கிபீடியா என்றால் என்ன? திமிழுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதைப் பற்றி ஏன் இந்தக் கட்டுரை? விடைகள் காண மேலும் படிக்கவும்.

விக்கிபீடியா  சராசரி மக்களாலேயே எழுதப்படும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.  அதாவது, யார் வேண்டுமானாலும் அத்தளத்தில் தங்களுக்கு தெரிந்த ஒன்றை உலகிற்கு சொல்லிக்கொடுக்கலாம்! இட்டிலி, தோசை, எவர் சில்வர் தட்டு, தண்ணீர், விக்கல், இருமல், நாற்காலி, வீடு, அரண்மனை, இந்தியா, தமிழ் மொழி, தமிழ் திரையுலகம், எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், அண்டம், செயற்கைக்கோள், கொசுக்கள், கனவு, உளவியல் என எந்தத் துறையில் வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம். தாங்கள் எழுத நினைத்திருந்த ஒன்று முன்னரே எழுதப்பட்டிருந்தால் அந்தக் கட்டுரையை நீங்கள் மேலும் விரிவாக்கலாம்!

விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது நம் வலைப்பதிவில் எழுதுவது போல் அல்ல. வலைப்பதிவில் நாம் நம் எண்ணப்படி எழுதுகிறோம். நாம் சொல்வதுதான் வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற சுதந்திரம் நமக்கு இருக்கிறது. ஆனால், உலக மக்கள் அனைவரும் வந்து செல்லும் அந்தத் தளத்தில் 'உண்மை நிலையை' எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இட்டிலி வெள்ளையாகக் காட்சியளிக்கும் என்று நீங்கள் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு சீனாக் காரர் எப்படி நம்புவார்? மக்களாலேயே எழுதப்படும் கட்டுரையல்லவா? அவர் நம்பும்படி நீங்கள் தகுந்த புகைப்படத்துடன் தெரிவிக்க வேண்டும் அத்துடன் மற்ற வலைத்தளத்தில் இட்டிலியைப் பற்றி எவரேனும் எழுதியிருந்தால் அதை நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். சுட்டிகள் (references)  அதிகப்படியாக இருக்கும் கட்டுரை 'நல்ல கட்டுரை' என விக்கிபீடியாவால் தீர்மானிக்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, எந்த ஒரு கட்டுரையும் தான்தோன்றியாக இருக்கக்கூடாது. அதாவது, அந்த கட்டிரை எந்த ஒரு ஆதாரத்தையும் அடித்தளமாக வைக்கப்பட்டு எழுதாமல் ஒரு செய்தி நாளிதழ் போன்று இருந்தால் விக்கிபீடியாவால் நிராகரிக்கப்பட்டுவிடும். இதற்கு முக்கியக் காரணம், விக்கிபீடியா எந்த வகையிலும் தானே செய்தி வழங்குவதாக ஆகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.

இதெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய் எனக்கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். காரணம் இருக்கிறது. விக்கிபீடியா ஏறத்தாழ உலகின் அத்தனை மொழிகளிலும் வலம் வருகிறது. வழக்கொழிந்துவிட்ட இலத்தின், சமக்கிருதம் போன்ற மொழிகளும் அடக்கம்! உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து விக்கிபீடியாவிற்கு வருகை தரும் ஒருவர் அவர் பேசும் தாய்மொழியில் ஒரு கட்டுரை எழுதுகிறார். இவ்வாறு இன்ன இன்ன மொழிகளுக்கு இவ்வளவு இவ்வளவு கட்டுரைகள் என வளர்ந்து நிற்கிறது விக்கிபீடியா.

தற்போதைய நிலவரப்படி, ஆங்கிலம், செர்மானியம், பிரஞ்சு, இத்தாலியம், போலிச் (Polish), நெதர்லாந்து, போர்த்துகீசியம், ருசியம் (Russian), சபானிச் (Spanish) மற்றும் சீன மொழிகள் முதன்மை வகிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள், அவர்கள் பேசும் தாய்மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதன்மை வகித்தால் அவர்களுக்கு பெருமை எனக் கருதப்படுகிறது. நம் தமிழ் மொழி 81-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் 5-ஆமிடம், திராவிட மொழிகள் அளவில்  2-ஆமிடம்.


சுலபம் கருதி இந்திய அளவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். விகித அளவில் பார்த்தால், நம்மைவிட மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மணிப்புரி இனத்தவர்கள், இந்திய உருது மொழியினர், குஜராத்தியினர், மலையாளிகள், கன்னடத்தினர் அனைவரும் நம்மைவிட அதிக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இது தமிழுக்கு வந்த இழுக்கல்லவா? 8 கோடி தமிழர்கள் நாம். நம் தமிழ் இலக்கியங்கள், இயல், இசை, நாடகம், கவிதை, வரலாறு, மாமன்னர்கள், நம் கலாசாரம் போன்றவற்றை முறையாக எழுதினாலே கட்டுரைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவிடும்! ஆனால், உண்மையில் மிக சொற்ப அளவிலான தரம் குறைந்த கட்டுரைகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது தமிழ் விக்கிபீடியா!

 விக்கிபீடியாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?
மிக மிக முக்கியமானக் காரணம் இருக்கிறது. விக்கிபீடியா உலகளவில் பிரபலமாகிவிட்ட ஒரு கலைக்களஞ்சியம். பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சில் பேச குறிப்பு எடுத்தல், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அந்நாட்டின் தகவலைச் சேகரித்தல் போன்ற எந்த செயலுக்கும் மக்கள் விக்கிபீடியாவை நாடுகிறார்கள். அப்படி இருக்கையில், நம் தமிழ் மொழியைப் பற்றி தகவல் தேடுபவர்களுக்கு நாம் கை கொடுக்கவேண்டுமல்லவா? அதற்காகத்தான்.

தமிழ் மொழியை தமிழர்களைத் தவிர வேறு யார் அறிந்திருக்கப் போகிறார்கள்? எழுதப்படும் அத்தனைக் கட்டுரைகளும் தமிழர்களே எழுதி, தமிழர்களே படித்துக்கொள்வது வேடிக்கையாக இருக்குமல்லவா?
தமிழை தமிழர்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் எங்கு கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள்? கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலுடன் ஜப்பான் நாட்டிற்கு செல்வார். அப்பொழுது ஒரு கடையில் ஜப்பான்காரியை நோக்கி (தமிழ் தெரியாதென எண்ணி) கடிந்துகொள்வார். அதற்கு அந்த ஜப்பானியப் பெண் , "தமிழ்ழ யாரையும் திட்டாதீங்க. இப்போ தமிழ் உலகம் பூராவும் பரவி இருக்கு." என்று பதிலளிப்பார்.  அது நகைச்சுவைக்காக எடுத்தக் காட்சியோ என்னவோ, ஆனால் அதுதான் உண்மை. ஜெர்மானியர்களும், ருசிய நாட்டினரும் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மொழிப்பாடத்தை கல்லூரியில் படிக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?  

கட்டுரை எழுதுவதால் எனக்கென்ன இலாபம்?
கட்டுரை எழுதுவதால் உங்களுடன் சேர்ந்து மற்ற தமிழர்களுக்கும் இலாபம் தான். நம் இனத்தை மற்றவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள் அல்லவா?

தமிழ் விக்கிபீடியாவில் நீ கட்டுரைகள் எழுதி வருகிறாயா?
ஆம்! விக்கிபீடியாவில் இணைந்து சிறு காலங்களே ஆகியிருப்பதால், சொல்லிக்கொள்ளும்படி கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. இன்னும் 6 மாதங்களில் 100 கட்டுரைகளாவது எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 

விக்கிபீடியாவில் தற்பொழுது எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?
இந்த கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில், தமிழ் விக்கிபீடியா 25, 529 கட்டுரைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக இருக்கும் ஆங்கில விக்கிபீடியாவின் மொத்தக் கட்டுரைகள் எவ்வளவு தெரியுமா? 34,51,259 கட்டுரைகள்!
Read more »

கொக்கா மக்கா(தீபாவளி ஸ்பெஷல் )


செல் போன் பயன்படுத்துபவர்கள் தன்னுடைய வீட்டின் தொலைபேசி என்னை     " Home " என்றோ அல்லது Wife,DADDY , MUMMY என்று சேவ் செய்யுங்கள். உங்களது தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்களுக்கு விபத்து ஏற்ப்பட்டலோ உங்கள் வீட்டுக்கு தொடர்புகொள்ள  எளிதாக இருக்கும்.  பலர் தங்களுடைய தொலைபேசியில் மனைவியை செல்லம், புச்சிகுட்டி,பன்னிகுட்டி என்று சேவ்  செய்து உள்ளனர். உங்களது  மனைவி புச்சிகுட்டியா  இல்லை  பண்ணிகுட்டியா  என்று   அடுத்தவனுக்கு எப்படி தெரியும்.
*************************************************************************************************************
 தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என்று கடைக்கு போனவர்களில் பலர் மனநிம்மதியை இழந்து தான் வீடு திரும்புகின்றனர் காரணம் நமக்கு பிடித்ததை வாங்க முடியாததே. துணிக்கடைக்குள் செல்லும் முன்பே என்ன விதமான(மாடல்) துணி  அல்லது நிறம் போன்றவற்றை முடிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள் கடைக்காரன் உங்களை பார்த்தவுடன் யூகித்து விடுவான் உங்களை எப்படி ஏமாற்றுவது என்று.  நீங்கள் கோடு போட்ட சட்டை என்று கேட்டல் போதும் அவன் எல்லாம் துணியையும் அள்ளி உங்கள் முன் கொட்டிவிடுவான்  , இது தான் அவனுடைய பிஸ்னஸ் ட்ரிக்ஸ்  உங்களுக்கு அந்தக்கடையில் இருக்கும் ஆடை பிடிக்கவில்லை என்றால் கூட தர்மசங்கடத்தில் ஆழ்த்தி  வாங்க வைத்துவிடுவான். உங்களுக்கு பிடிக்காத துணியை அவன் உங்களுக்கு  காண்பித்தாலோ அல்லது விரித்து வைத்தாலோ கறாராக சொல்லிவிடுங்கள் இந்த மாதிரி டிசைன் காட்டவேண்டாம் என்று. அதே போல் நீங்கள் விரும்பிய நிறமோ அல்லது டிசைனோ அந்த கடையில் இல்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டால் கடைக்காரனிடம் பேச்சு கொடுக்காமல் உடனே வேறு கடைக்கு செல்ல முயலுங்கள்.
*************************************************************************************************************
பொருட்களை வாங்கலாம் என்று  பஜார் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் உடன் நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள். மனைவியை அழைத்து செல்பவராக இருந்தால் பேரம் பேசும் இடங்களுக்கு அழைத்து செல்லாதிர்கள், ஒருவேளை உங்களை கடைக்காரன்  ஏமாற்றிவிட்டால்  மனைவியிடம் உங்கள் ஹீரோயிசம் குறைய வாய்ப்பு உள்ளது .  அதேபோல்  பொருட்களுக்கு பேரம் பேசி தகராறு ஏற்ப்பட்டு பொருள் வாங்கும் நிலைமை ஏற்ப்பட்டால் பொருளை வாங்கியப்பின் பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் கடைக்காரன் பணத்தை வாங்கியப்பின் 10 ரூபாய் போட்டு கொடுங்க கட்டுபடி ஆகாது என்று மிரட்டுவது போல் கேட்ப்பான்.
*************************************************************************************************************
வீட்டு உபகரண பொருட்களை  வாங்குபவர்கள் வாங்கும் பொருளை பற்றிய தகவல்களை  முன்பே விசாரித்துவிட்டு கடைக்குசெல்லுங்கள். கடைக்காரன் நல்லப்பொருளை காட்டுவான் என்று நம்பி செல்லாதிர்கள். கடைக்காரர்களுக்கு  எதில் லாபம் அதிகமோ அந்தப்பொருளை தான் உங்கள் கண்முன் காட்டுவார்கள்.  எக்காரணத்தை கொண்டும் வாரண்டி கார்ட் இல்லாமல் பொருட்களை வாங்காதிர்கள் பொருளை வீட்டுக்கு கொண்டுவரும் முன் வாரண்டிகார்ட் , பில் போன்றவை சரியாக உள்ளதா என்று சரிப்பார்க்கவும். அதேபோல் வாரண்டி கார்டில் கடைக்காரரின் கடை முத்திரை, விற்பனையாளரின்   கையப்பம் உள்ளதா என்று சரிப்பாருங்கள் consumer  கோர்ட்டுக்கு செல்ல அதுதான் முக்கியம்.
*************************************************************************************************************
செல் போன், டிவி, மிக்சி போன்ற அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும்  முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்படாமல் உள்ளதா  என்று சரிப்பர்த்தப்பின் வாங்கவும். அதே போல் பொருளை வாங்கியப்பின் அட்டைப்பெட்டியை மீண்டும் ஒட்டும் டேப்பால் நன்றாக ஒட்டி விட்டு கடைக்காரரின் வண்டியில் எடுத்துவர சொல்லுங்கள். நாம் வாங்கும் முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்பட்டு இருந்தால் எக்காரணத்தை கொண்டும் வாங்காதீர்கள்.
*************************************************************************************************************
PROMOTER -  நீங்கள் இவரை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.ப்ரொமோட்டர் என்றால் தனக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் பொருளை மட்டும் வாடிக்கையாளரிடம் காண்பிப்பது அல்லது பேசுவது.  நான் இவரை பற்றி விரிவாக பதிவு போடுகிறேன் இப்போதைக்கு  சுருக்கமாக சொல்லுகிறேன் புரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கடையிலும் ஒரு கம்பனி அல்லது நிறுவனத்தின் ப்ரொமோட்டர்கள் இருப்பார்கள் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பொருளை மட்டும் தான் உங்களுக்கு காண்பிப்பார். உதாரணத்துக்கு நீங்கள் LG பொருள் வாங்க கடைக்கு   செல்லும்போது அந்த கடையில் இருக்கும் நபர் SAMSUNG ப்ரொமோட்டர்ராக  இருந்தால் உங்களுக்கு SAMSUNG பொருட்களை மட்டுமே காண்பிப்பார். உங்களை திசை திருப்ப முயலுவார். SAMSUNG பொருளில் இருக்கும் நன்மைகளை மட்டுமே சொல்லுவார் LG வேண்டாம் என்று பரிந்துரைப்பார்.  இதனால் உங்களுக்கு பிடித்த பொருள் வாங்க முடியாமல் போகலாம்.  எக்காரணத்தை கொண்டும் நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த நிறுவனத்தை மாற்றி வேறு ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்காதீர்கள்.
************************************************************************************************************


கவனிக்க வேண்டிய  பிசுருகள்:

☼ உடன் அழைத்து சென்ற குழைந்தைகளின் எண்ணிக்கை.
☼ATM  கார்ட் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் இருந்து செல்லும்முன் ATM கார்ட் வாங்கி விட்டோமா என்று.
☼மனைவியின் பின்புறம்( எவனாது இடித்துவிடாமல் இருக்க).
☼வாங்கிய பொருட்களின் எண்ணிக்கையும் பில்லில் உள்ள    எண்ணிக்கையும்     சரியாக உள்ளதா என்று.
☼ ரயில் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கி இருந்தால் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் நாம் பைகளுக்கு டோக்கன் வாங்கி இருந்தால் டோக்கன் உள்ளதா என்று. 
☼கடையில் இருந்து வெளியே வரும்போது பொருட்களை கையில் எடுத்து விட்டோமா என்று.
☼புறப்படும் நேரம், கிளம்பும் நேரம்.

தீபாவளி வாழ்த்துக்கள்
Read more »

துன்பம் தரும் தீபாவளி


தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?
Read more »

ஸ்பெயினின் சிறப்பு விருந்தாளியாகிறது ஆக்டோபஸ்?

உலக கிண்ண போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்த ஆக்டோபஸை தமது மேட்ரிட் மியூசியத்திற்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 6 போட்டிகளில் சரியாக கணித்த ஆக்டோபஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் தான் வெல்லும், என உறுதியாக கூறி, ஸ்பெயின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
 ஸ்பெயின் சாம்பியனானதால் ஆக்டோபஸ் ஆரூடம் உலகப்புகழ் பெறத்தொடங்கியது. இதுநாள் வரை, ஜேர்மனியின் ஒபேர்ஹௌசென்  மியூசியத்தில் இருந்து வந்த ஆக்டோபஸை, ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வந்தது.
முதலில் மறுத்தாலும், பாரிய நிதியுதவி செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படியும், ஆக்டோபஸுக்கு பதிலாக வேறொரு விலங்கை வழங்க முன்வந்தமையாலும், தாம் இந்த ஆக்டோபஸை ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்ய சம்மதித்திருப்பதாக ஒபேர்ஹௌசென் மியூசியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு விருந்தாளியாக இந்த ஆக்டோபஸை வரவேற்பதற்கு ஸ்பெயின் மக்கள் காத்திருக்கின்றனர். கௌரவ சிட்டிசன் கொடுக்கவும் ஸ்பெயின் தயாராக இருக்கிறது. இதேவேளை அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனி தோற்கும் என ஆக்டோபஸ் கணிப்பு கூறி அதன் படியே நடந்ததால், ஜேர்மனியில் விரைவில் நடைபெறவிருக்கும் சர்வதேச உணவுத்திருவிழா கொண்டாட்டத்திற்கு ஆக்டோபஸை பிரதம விருந்தினராக அழைத்து, சமைக்க வேண்டும் என ஜேர்மனியின் காற்பந்து கிளப் ஒன்று திட்டித்தீர்த்திருக்கிறது.
ஒரு ஆக்டோபஸின் ஆயுள் காலம் மூன்று அல்லது நான்கு வருடங்களிற்கு உட்பட்டது. ஆனால் இந்த போல் அக்டோபஸிற்கு இப்போதே இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் ஆரூடம் சொல்லும் வேலையில் இருந்து ஓய்வு கொடுக்க இருப்பதாக இதன் பராமரிப்பாளர்களும் அறிவித்திருக்கின்றனர். ஆக்டோபஸ் நினைத்தால் கூட இந்தப் பிரபலத் தன்மையில் இருந்து விடுபட முடியாது போல் தெரிகிறது.
 கிளிஜோசியத்தை, இது நாள் வரை வெள்ளைக்காரர்கள் வேடிக்கை நிகழ்வாகவே பார்த்தனர்.  பெரும்பாலும், இந்த மாதிரி விலங்குகளை கொண்டு முன்கூட்டியே கணிக்கப்படும் நிகழ்வுகளை அவர்கள் பொருட்டாகவே மதிப்பதில்லை! ஆனால் ஆக்டோபஸ் ஆரூடம் பழித்ததிலிருந்து அவர்களுக்கும் ஜோதிட நம்பிக்கை கூடியிருக்கிறதாம்!
இதேவேளை பிரேசிலின் சாப்ட்வேர் டெவெலபர் கண்டுபிடித்த புதிய 'U TouchLabs' ஆப்ளிகேஷனை, ஐ போனில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதில் இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தெரிவு செய்ய ஆக்டோபஸ் ஐகனாக பயன்படுகிறது. சினிமா அல்லது தியேட்டர்? பீசா அல்லது சுஷி? மரிசியா அல்லது ஆண்ட்ரியா? கேளுங்கள் ஆக்டோபஸிடம் என தொடர்கிறது இந்த ஆப்ளிகேஷன்!
Read more »

யூ-டியூப் வீடியோக்களுக்காக பத்து மென்பொருட்கள்

 
எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

இந்த வகையில் நாம் அனைவரும் தேடும் தளம் யு–ட்யூப் தளமாகும். இங்கு தேடும் பொருள் குறித்த மற்றும் சார்ந்த வீடியோ காட்சிகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடிப் பெறுவதோடு நாம் நின்றுவிடுவதில்லை. இவற்றை டவுண்லோட் செய்து மீண்டும் மீண்டும் பார்க்க எண்ணுகிறோம். கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நம் ஐ–பாட் மற்றும் மொபைல் போன்களில் கூட இவற்றைப் பதிந்து வைத்துக் காண விரும்புகிறோம். அவற்றிற்கு உதவும் சில புரோகிராம்கள் மற்றும் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1. வீடியோ பார்மட் மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

2. வேகமாக டவுண்லோட் நடைபெற

வீடியோ காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம் கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த

மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader) என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

4. யு–ட்யூப்பினை எடிட் செய்திட

ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன் தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும் மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ பைல்களையும் இணைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

5. யு–ட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க

ஆன் லைனில் FLV Player என்ற ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும் பின்னும் செல்லலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

6. பயர்பாக்ஸிற்கான யு–ட்யூப் பிளேயர்:

யு–பிளேயர் (YouPlayer) என்ற பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்

ஆர்பிட் டவுன்லோடர் (Orbit Downloader) என்ற பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு Get It என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:

மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

9. யு–ட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற

யு–ட்யூப் தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும் வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும் புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல் கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க் கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும் முடியும் . இதில் ஒரு ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம் என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

10. ஐ–பாட் மற்றும் ஐ–போனுக்கு மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். Free Dvd videosoftware என்ற சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை மேற்கொள்கிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள மென்பொருட்களை தரவிறக்கி , உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.
Read more »

உங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.

மக்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து யாரிடம் சண்டை போடுவார்கள் தெரியுமா ? தொலைக்காட்சியின் Remote control தான்.
__________
___________________Gesture Remote
ஒரு iphone னை கொண்டு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை
இயக்கினால் எப்படி ஒரு அனுபவம் இருக்குமோ அந்த அனுபவத்தை தரவல்லது இந்த புதிய கண்டுபிடிப்பு “Gesture Remote” ஆகும்.

இந்த நவீன கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிறுவனம் IDENT Technology AG ஆகும். இதில் keypads இல்லை,Buttons இல்லை ஒன்றுமட்டும்தான் உள்ளது தொடும்சிக்னல் மட்டும்தான்.
Read more »

(படங்கள் இணைப்பு) “Airtel” யாழ்.கிளை நேற்று திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)


“எயர்ரெல்’ நிறுவனம் (இன்று) அதாவது நேற்று தனது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக அதன் பிரதம நிறை வேற்று அதிகாரி திருமதி அமலி நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கான “எயர் ரெல்’ தொலைபேசி வலையமைப்பு சேவை நேற்றுக்காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எயர்ரெல் நிறு வன யாழ்.மாவட்ட அலுவலகத்தை இல.434, ஆஸ்பத்திரி வீதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:
எமது நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங் கையில் தனது சேவையை ஆரம் பித்தது. எனினும் எமது வலைய மைப்பு இன்றுடன் (நேற்று)தனது இலக்கை எட்டியுள்ளது.
இன்றுடன் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் “எயர்ரெல்’ தொலைபேசி வலையமைப்பு விஸ் தரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தி னராக யாழ்.மாவட்ட நீதிபதி அ. பிறேம் சங்கர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக “எயர்ரெல்’ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார, சந்தைப் படுத்தல் முகாமையாளர் விதுர்ரதன், ஹற்றன் நஷனல் வங்கியின் சிரேஷ்ட முகாமை யாளர் ரி.ஜெய ராஜசிங்கம், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையா ளர் எஸ்.பத்ம நாதன், கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஏ.ஆ. குலேந்திரன், மின்சாரசபைப் பொறியியலாளர் எஸ்.ஞானகணே சன் மற்றும் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்  “எயர்ரெல்’ இன் முதலாவது இணைப்பு அட்டையை யாழ்.மாவட்ட நீதிபதி அ.பிறேம் சங்கருக்கு “எயர்ரெல்’ நிறுவன பிர தம நிறைவேற்று அதிகாரி வழங்கி னார்.
Read more »
 
-