skip to main |
skip to left sidebar
skip to right sidebar
வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.
கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.
காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Read more »

செல் போன் பயன்படுத்துபவர்கள் தன்னுடைய வீட்டின் தொலைபேசி என்னை " Home " என்றோ அல்லது Wife,DADDY , MUMMY என்று சேவ் செய்யுங்கள். உங்களது தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்களுக்கு விபத்து ஏற்ப்பட்டலோ உங்கள் வீட்டுக்கு தொடர்புகொள்ள எளிதாக இருக்கும். பலர் தங்களுடைய தொலைபேசியில் மனைவியை செல்லம், புச்சிகுட்டி,பன்னிகுட்டி என்று சேவ் செய்து உள்ளனர். உங்களது மனைவி புச்சிகுட்டியா இல்லை பண்ணிகுட்டியா என்று அடுத்தவனுக்கு எப்படி தெரியும்.
*************************************************************************************************************
தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என்று கடைக்கு போனவர்களில் பலர் மனநிம்மதியை இழந்து தான் வீடு திரும்புகின்றனர் காரணம் நமக்கு பிடித்ததை வாங்க முடியாததே. துணிக்கடைக்குள் செல்லும் முன்பே என்ன விதமான(மாடல்) துணி அல்லது நிறம் போன்றவற்றை முடிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள் கடைக்காரன் உங்களை பார்த்தவுடன் யூகித்து விடுவான் உங்களை எப்படி ஏமாற்றுவது என்று. நீங்கள் கோடு போட்ட சட்டை என்று கேட்டல் போதும் அவன் எல்லாம் துணியையும் அள்ளி உங்கள் முன் கொட்டிவிடுவான் , இது தான் அவனுடைய பிஸ்னஸ் ட்ரிக்ஸ் உங்களுக்கு அந்தக்கடையில் இருக்கும் ஆடை பிடிக்கவில்லை என்றால் கூட தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வாங்க வைத்துவிடுவான். உங்களுக்கு பிடிக்காத துணியை அவன் உங்களுக்கு காண்பித்தாலோ அல்லது விரித்து வைத்தாலோ கறாராக சொல்லிவிடுங்கள் இந்த மாதிரி டிசைன் காட்டவேண்டாம் என்று. அதே போல் நீங்கள் விரும்பிய நிறமோ அல்லது டிசைனோ அந்த கடையில் இல்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டால் கடைக்காரனிடம் பேச்சு கொடுக்காமல் உடனே வேறு கடைக்கு செல்ல முயலுங்கள்.
*************************************************************************************************************
பொருட்களை வாங்கலாம் என்று பஜார் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் உடன் நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள். மனைவியை அழைத்து செல்பவராக இருந்தால் பேரம் பேசும் இடங்களுக்கு அழைத்து செல்லாதிர்கள், ஒருவேளை உங்களை கடைக்காரன் ஏமாற்றிவிட்டால் மனைவியிடம் உங்கள் ஹீரோயிசம் குறைய வாய்ப்பு உள்ளது . அதேபோல் பொருட்களுக்கு பேரம் பேசி தகராறு ஏற்ப்பட்டு பொருள் வாங்கும் நிலைமை ஏற்ப்பட்டால் பொருளை வாங்கியப்பின் பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் கடைக்காரன் பணத்தை வாங்கியப்பின் 10 ரூபாய் போட்டு கொடுங்க கட்டுபடி ஆகாது என்று மிரட்டுவது போல் கேட்ப்பான்.
*************************************************************************************************************
வீட்டு உபகரண பொருட்களை வாங்குபவர்கள் வாங்கும் பொருளை பற்றிய தகவல்களை முன்பே விசாரித்துவிட்டு கடைக்குசெல்லுங்கள். கடைக்காரன் நல்லப்பொருளை காட்டுவான் என்று நம்பி செல்லாதிர்கள். கடைக்காரர்களுக்கு எதில் லாபம் அதிகமோ அந்தப்பொருளை தான் உங்கள் கண்முன் காட்டுவார்கள். எக்காரணத்தை கொண்டும் வாரண்டி கார்ட் இல்லாமல் பொருட்களை வாங்காதிர்கள் பொருளை வீட்டுக்கு கொண்டுவரும் முன் வாரண்டிகார்ட் , பில் போன்றவை சரியாக உள்ளதா என்று சரிப்பார்க்கவும். அதேபோல் வாரண்டி கார்டில் கடைக்காரரின் கடை முத்திரை, விற்பனையாளரின் கையப்பம் உள்ளதா என்று சரிப்பாருங்கள் consumer கோர்ட்டுக்கு செல்ல அதுதான் முக்கியம்.
*************************************************************************************************************
செல் போன், டிவி, மிக்சி போன்ற அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும் முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்படாமல் உள்ளதா என்று சரிப்பர்த்தப்பின் வாங்கவும். அதே போல் பொருளை வாங்கியப்பின் அட்டைப்பெட்டியை மீண்டும் ஒட்டும் டேப்பால் நன்றாக ஒட்டி விட்டு கடைக்காரரின் வண்டியில் எடுத்துவர சொல்லுங்கள். நாம் வாங்கும் முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்பட்டு இருந்தால் எக்காரணத்தை கொண்டும் வாங்காதீர்கள்.
*************************************************************************************************************
PROMOTER - நீங்கள் இவரை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.ப்ரொமோட்டர் என்றால் தனக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் பொருளை மட்டும் வாடிக்கையாளரிடம் காண்பிப்பது அல்லது பேசுவது. நான் இவரை பற்றி விரிவாக பதிவு போடுகிறேன் இப்போதைக்கு சுருக்கமாக சொல்லுகிறேன் புரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கடையிலும் ஒரு கம்பனி அல்லது நிறுவனத்தின் ப்ரொமோட்டர்கள் இருப்பார்கள் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பொருளை மட்டும் தான் உங்களுக்கு காண்பிப்பார். உதாரணத்துக்கு நீங்கள் LG பொருள் வாங்க கடைக்கு செல்லும்போது அந்த கடையில் இருக்கும் நபர் SAMSUNG ப்ரொமோட்டர்ராக இருந்தால் உங்களுக்கு SAMSUNG பொருட்களை மட்டுமே காண்பிப்பார். உங்களை திசை திருப்ப முயலுவார். SAMSUNG பொருளில் இருக்கும் நன்மைகளை மட்டுமே சொல்லுவார் LG வேண்டாம் என்று பரிந்துரைப்பார். இதனால் உங்களுக்கு பிடித்த பொருள் வாங்க முடியாமல் போகலாம். எக்காரணத்தை கொண்டும் நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த நிறுவனத்தை மாற்றி வேறு ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்காதீர்கள்.
************************************************************************************************************
கவனிக்க வேண்டிய பிசுருகள்:
☼ உடன் அழைத்து சென்ற குழைந்தைகளின் எண்ணிக்கை.
☼ATM கார்ட் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் இருந்து செல்லும்முன் ATM கார்ட் வாங்கி விட்டோமா என்று.
☼மனைவியின் பின்புறம்( எவனாது இடித்துவிடாமல் இருக்க).
☼வாங்கிய பொருட்களின் எண்ணிக்கையும் பில்லில் உள்ள எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்று.
☼ ரயில் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கி இருந்தால் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் நாம் பைகளுக்கு டோக்கன் வாங்கி இருந்தால் டோக்கன் உள்ளதா என்று.
☼கடையில் இருந்து வெளியே வரும்போது பொருட்களை கையில் எடுத்து விட்டோமா என்று.
☼புறப்படும் நேரம், கிளம்பும் நேரம்.
தீபாவளி வாழ்த்துக்கள்
Read more »

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.
இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.
அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!
தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?
அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?
இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?
Read more »
-