பலரும் மறந்த தந்தை




 இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? 
 தொடர்ந்து படியுங்கள்.....


அக்டோபர் 2011

இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர்.


காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின.







ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை..

அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால்  அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை  முடிந்து விட்டதாக நினைத்து விட்டன.

அவர் ...............
கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி


அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?

அதற்கு முன்பு  C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!! 

இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி (Programming Language)  C.

1969 - 1973 காலத்தில் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட மொழி தான் C. அன்று இருந்த பொறி மொழிகளுக்கு (Assembly Language) மாற்றாக அமைப்பு மொழியாக (System Language) C மொழி எழுதப்பட்டிருந்தது. அதுவே, அது மிகவும் பிரபலமாக காரணமாக அமைந்தது.


அமைப்பு மென்பொருளுக்காக எழுதப்பட்டாலும், இன்று பயன்பாடு மென்பொருட்கள் எழுதவும் C மிகையாக பயன்படுத்தப்படுகிறது.

C மொழியைப் பின்பற்றி C++, C# என்று பல மொழிகள் வந்துவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி  C தான். அந்த மொழியின் மொழிமாற்றி நிரல்களில்  இல்லாத கட்டமைப்புகள் மிக சிலவே!!!

இத்துணை  சிறப்பு மிக்க C மொழியை உருவாக்கிய பிதாமகர் தான்  தென்னிசு இரிட்சி (Dennis Ritchie).



1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் நியுயார்க் நகரில் பிறந்த தென்னிசு அவர்கள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றவர்.  1969 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தில் (AT&T Bell Laboratories) பணிக்குச் சேர்ந்தார்.

அன்று பெல் ஆய்வகங்களும், MIT ( Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகமும் சேர்ந்து ஒரு பல்நோக்கு இயங்கு தளத்தை உருவாக்க முயன்று தோற்றன.

கைவிடப்பட்ட அந்த திட்டத்தைக் கையில் எடுத்தனர் தென்னிசு இரிட்ச்சியும், அவர் நண்பர் கென் தாம்ஸனும். அந்த திட்டம் நிச்சயம் பிற்காலத்தில் மிகப்பெரும் திட்டமாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.  
அதுவே 1973 ஆம் ஆண்டு UNIX என்கிற இயங்குதளமாக வெளிவந்தது.

தென்னிசு   UNIX இயங்குதளத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.

UNIX உருவாக்கப்பட்ட புதிதில், அது பொறிமொழிகளின் அடிப்படையிலேயே  எழுதப்பட்டு இருந்தது. ஆனால்,கணிணி மொழி அனைவராலும் எழுதப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தென்னிசு நினைத்தார். அதன் விளைவாக உருவானது தான் C  மொழி. 


1973 ஆம் ஆண்டில் UNIX இயங்குதளம் C மொழியில் மீண்டும் எழுதப்பட்டது.

C மொழியின் குறைகளைக் கண்டறிந்து சில மாற்றங்கள் செய்து அதனை  ஒரு மாபெரும் கணித மொழியாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.

மனிதன் கணிணியுடன் எளிமையாய் பேச C மொழியை உருவாக்கிய தென்னிசு அவர்கள்  2011 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள், தனது 70 ஆவது அகவையில், விண்ணுலகுடன் பேச சென்றார்.




ஆனால், அவர் மறைவையே பலர் அறியவில்லை.  அறிந்தவர்களில் சிலரும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை... சிலர் தன் பங்கிற்காக சிறு இரங்கல் மடல் வாசித்து திருப்தி அடைந்து விட்டனர்.வெகு சிலரே அவருக்கு உண்மையாக அஞ்சலி செலுத்தினர்.



தென்னிசு இட்ட அடித்தளத்தில் தான் இன்று கணிணி உலகமே காலூன்றி நிற்கிறது.. 
நாம் இன்று கணிணி முன் அமர்ந்து உரையாடமுக்கிய காரணக்கர்த்தாக்களில்
 ஒருவர் அவர் .

அடித்தளம் இட்டவரைப்  பலரும் மறந்தது மிகவும் வருத்தம் தருகிறது.

காலம் தாழ்த்தி என்றாலும் பரவாயில்லை... 
இப்போதாவது அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்!!





முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்



Read more »

4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்: முழு வீடியோ



   
4000 இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைகாணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது. கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200 பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது. கப்பல் மோதிய சத்தம் அவ்வூரை கிலிகொள்ளச் செய்துள்ளது.
இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர். கப்பலிலிருந்த பயணிகளும் 1000 ஊழியர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் சுமார் 200 பேர் இன்னும் கப்பலில் இருப்பதாக இன்று காலை அதிகாரியொருவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short story,Stories,Birthday Horoscope,Monthly Horoscope, Weekly horoscope, yoga, Kavithai Aaragam, Zoom, Tourism
பயணிகள் இரவு உணவு உட்கொள்ள அமர்ந்திருந்தபோது கப்பல் விபத்துக்குள்ளாகியதாக பயணியொருவர் தெரிவித்துள்ளார். கப்பல் சரியத் தொடங்கியதையடுத்து உயிர்தப்புவதற்காக கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் 5 உணவு விடுதிகள், 13 மதுபான நிலையங்கள், 4 நீச்சல் தடாகங்கள், என்பனவற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹலிவுட் நடிகைகள் நடிகர்கள் என இக் கப்பலில் பலர் இருந்ததாவும் மேலும் அறியப்படுகிறது.
Read more »

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)


உலகம் அழியுமா இல்லையா..? அழியும் ஆனால் அழியாது என்ற கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது காலமும் நேரமும். புதிதாக உலக அழிவு பற்றி புதிய வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறார் ஒரு சித்தர். காணொளிகளை பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும் .ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள் . சுனாமி .நிலநடுக்கம் .
மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது . பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் பலித்து வருகின்றன. அமெரிக்கா விண்வெளிக்கு விட்ட விண் கலத்தை வீழ்த்திய சித்தர் .பத்துநிமிடத்தில் கோடையில் மழையினை வரவழைத்த பிரம்மரிசியின் திகில் சாகசம் .. நம்ப முடியவில்லை ..நம்பிதான் ஆகவேண்டும் .. நெடுநாள் வாழ ஆசை படுபவர்கள் கட்டாயம் இந்த காணொளி காட்சி பாருங்கள்.
–
—-
——


வீடியோ உதவி:- TUBETAMIL
Read more »

வேற்று கிரகவாசிகளின் கால் தடங்கள் சந்திரனில் கண்டுபிடிப்பு!


சந்திரனில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சந்திரனில் வேற்று கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் சமீபத்தில் இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது சந்திரனின் மேற்பரப்பில் வேற்று கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது தெரிய வந்தது. அவை சந்திரனுக்கு நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலத்தில் உள்ள ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
-
-
-

Read more »

தனுஷ், சிம்பு வரிசையில் அடுத்து விஜய் ரசிகர்களுக்காகவும் ஒரு பாடல்!


தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்காக ‘THALAPATHY ANTHEM’ என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார். கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்க…
-
-

தனுஷ்,  சிம்பு வரிசையில் அடுத்து விஜய் ரசிகர்களுக்காகவும் ஒரு பாடல்!

Read more »

மற்றவர்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும் : அதிர்ச்சி தகவல்!


ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.
நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
மற்றவர்கள்  பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும் : அதிர்ச்சி தகவல்!
பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக  பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து  அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.
6 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்         (Lower Case)         : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன்      (Upper Case)          : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols)   : 18 நாட்கள்
7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்              (Lower Case)         :   4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன்           (Upper Case)          : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)    : 18 நாட்கள்
8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன்  (Num & Symbols)  : 463 வருடங்கள்
9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)   : 44,530 வருடங்கள்
Read more »

உலகின் மிகப் பெரிய குர்ஆன் புத்தகம்! (படங்கள் இணைப்பு)


உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 218 பக்கங்கள் கொண்ட இந்நூல் 30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன. மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
-
-
-
-
-
-
-


Read more »

பேஸ்புக் டைம்லைன் வசதி பிடிக்கவில்லையா? இதோ ஓர் புதிய வழி!


எங்கே நோக்கினும் விந்தையடா! என்ற வாக்கியத்தை உண்மையாக்க வந்திருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உலகம் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்துவிட்டது ஃபேஸ்புக். பொழுதுபோக்கு என்று சொல்லி பயன்படுத்த ஆரம்பித்த சிலர் இப்பொழுது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். சில நொடிகளுக்கு முன்பு நடந்த விஷயங்களை கூட இந்த ஃபேஸ்புக் வசதியின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் ஃபேஸ்புக்கில் தட்டினால் போதும் என்றாகிவிட்டது. இதனால் பெரிய இடத்து விஷயங்கள் கூட மக்கள் காதுக்கு நொடிபொழுதில் எட்டிவிடுகிறது.
எதுவும் முன்பு போல் இல்லை. படித்து முடித்த உடன் தேவை ஒரு வேலை. அதன் பிறகு அவரவர் வேலை சுமை அதிகரித்துவிடுகிறது. ஆனால் இன்றைய தினத்தில் எவ்வளவு வேலையாக இருப்பினும் அதற்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படி அப்டேட் செய்து கொள்ள ஃபேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இன்றைய சூழலுக்கு தேவை தான். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஃபேஸ்புக் இன்னும் சில மதி நுட்ப வேலைப்பாடுகளை கொடுத்து இருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கில் இப்பொழுது டைம்லைன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டைம்லைன் மூலம் ஃபேஸ்புக்கில் எந்த செய்தியையும் ஆண்டு வாரியாக பார்க்கலாம். உதாரணத்திற்கு 2011-ஆம் ஆண்டில் எந்தெந்த நண்பர்களுடன் என்னென்ன தகவல்களை பரிமாறினோம் என்று சுலபமாக பார்க்கலாம். இந்த டைம்லைன் வசதி ஒரு “நினைவு பேழை” என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த வசதி பிடிக்காத சில ஃபேஸ்புக் நண்பர்களும் கூட இருக்கிறார்கள். உலகம் புதுசு புதுசா மாறி வரும் போது பழைய நெனப்பு எதுக்கு? என்று கேட்கும் சில நண்பர்களும் இருக்கின்றனர். இப்படி டைம்லைன் வசதியை விரும்பாதவர்களுக்கும் ஒரு புதிய வசதி இருக்கிறது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 மற்றும் 7 வெர்ஷன் இந்த டைம்லைன் வசதிக்கு சப்போர்ட் செய்வதில்லை. இதனால் டைம்லைன் பயன்பாட்டில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை டவுண்லோடு செய்து பயன்படுத்தினால் ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷன் செயல்படாது. 800 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதில் 40 மில்லியன் முதல் 64 மில்லியன் நண்பர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை பயன்படுத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டைம்லைன் வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு ஓர் புதிய வழி இது.
Read more »

கொலவெறி பாடல் சூட்டிங் ஆரம்பம் – ஆடியே ஹிட், வீடியோ?


சென்னையில் நடைபெற்று வரும் கொலவெறி டி பாடல் காட்சிகளுக்கான சூட்டிங்கில் நடிகர் தனுஷூம், நடிகை ஸ்ருதியும் ஆட்டம் போட்டு வருகிறார்கள். கொலவெறி பாடல் Audio செம ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்தப் பாடலுக்கான காட்சிகள், படம் குறித்த எதிர்பார்ப்புங்கள் அதிகரித்துள்ளன.
கொலவெறி பாடலுக்கான காட்சிகளை படமாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், இந்த பாடல் காட்சிகள் படமாகி வருகின்றன. இதில் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் நாயகி ஸ்ருதிஹாசன் ஆடுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த சூட்டிங், தொடர்ந்து நடந்து வருகிறது.
கொலவெறிடி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் பாடலுக்கான காட்சிகளை மிகவும் கவனமாக, ரசிகர்களை மேலும் மேலும் ஈர்க்கும் வகையில் படமாக்கி வருவதாக கூறியிருக்கிறார் டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ். எனினும், பாடல் ஹிட் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் வீணாகிவிடுமோ என்ற அச்சமும் ஒரு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
Read more »

கனவில் வந்த கடவுள்: மனைவியை சிலுவையில் அறைந்த கணவர்!


ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35).
அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.
சிலுவையில் அறைய வேண்டும் இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறினார் என்று தெரிவித்தார்.
இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.
தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.
ரத்தம் கொட்டியது
இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது.சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.
கணவன், சகோதரர்கள் கைது
தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Read more »

2012 புதுவருட ஆரம்பம்...!



இந்த வருடம் அனைவருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர  நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...!

பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.
Read more »

சண்டீவி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய டாம் குரூஸ்!!!


மிஷன் இம்பாசிபிள்-4 கோஸ்ட் புரோடோகால் படத்தின் முக்கிய கிளைமாக்ஸ் காட்சிகள் சன் டிவி அலுவலகத்தில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன.மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் சென்னை சன் டிவி அலுவலகத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ரஷ்ய அணு ஆயுத விஞ்ஞானி உலகில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தி, ரஷ்ய அணு ஏவுகணைகளை செலுத்த உதவும் codeகளை திருடுகிறார்.
இந்த codeகளைக் கொண்டு, ரஷ்ய அணு ஆயுத ஏவுகணையை அமெரிக்கா மீது செலுத்த மும்பை வருகிறார்.
இந்தியாவில் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் பிரிஜ் நாத்தின் (அனில் கபூர்) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழைய ரஷ்ய செயற்கைக் கோளின் உதவியோடு இந்த ஏவுகணையை செலுத்த வருகிறார் அந்த ரஷ்ய விஞ்ஞானி.
இதற்காக மும்பையில் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் satellitte uplinking மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தபடியே ரஷ்ய அணு ஏவுகணையை செலுத்துகிறார். ஏவப்பட்ட அணு ஏவுகணையை செயலிழக்கச் செய்ய ‘ஹீரோ’ டாம் க்ரூயிஸ் தனது டீமுடன் அங்கு வந்து மோதலில் ஈடுபடுவது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்தக் காட்சிகளில் வரும் தொலைக்காட்சி அலுவலகம் சன் டிவி அலுவலகம் தான். அதன் satellitte uplinking அறைக்குள் வில்லன் நுழையும்போது அங்குள்ள தொலைக்காட்சி ஸ்கீரின்களில் சன் டிவி, சன் நியூஸ், கே.டிவி, சுட்டி டிவி என தமிழ் சேனல்கள் ஓடுகின்றன.
ஹாலிவுட்டின் இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான ஆக்ஷன் படத்தில் நம் ஊர் சேனல்களைப் பார்த்தவுடன், விசில் பறக்கிறது.
மும்பையில் நடப்பதாகக் காட்டப்படும் இந்தக் காட்சிகளின் சில பகுதிகள் பெங்களூரில் எடுக்கப்பட்டுள்ளன. ஒயிட்பீல்டில் உள்ள ஐடிபிஎல் கட்டிடத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கன்னடமும், சன் டிவி அலுவலகத்தில எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் தமிழ் எழுத்துக்களும் வருகின்றன.
படத்தின் டைரக்டருக்கு இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பேசப்படுவது வெவ்வேறு மொழி என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்லப்படும் காட்சிகளில் 3 மாநிலங்களும் தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி எல்லாமே நான்கு மொழிகளும் எட்டிப் பார்க்கின்றன.
இது ஒரு பெரிய குறையா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். காரணம், படத்தின் ஆக்ஷன் அப்படி.. துபாயின் உலகிலேயே மிக உயரமான ப்ருஜ் கலிபா கட்டடத்தின் வெளியே டூப் போடாமல் டாம் க்ரூயில் வெளியே தொங்கும் காட்சி ஒன்றுக்காகவே, இந்தப் படத்தின் எல்லா குறைகளையும் மறந்துவிடலாம்.
Read more »

சில பிரபலங்களின் சிறுபிள்ளைத்தனமான புகைப்படங்கள்!!!


அட இவரா இப்படி இருந்தார் என நாமெல்லாம் வியக்கும் வண்ணம் பல பிரபலங்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், அவர்களது அத்தகைய புகப்படங்கள் சிரட்டையின் கையில் சிக்கியிருக்கின்றது,
அந்தப்புகைப்படங்களில் இருக்கும் பிரபலங்களுக்கும் இப்போது அவர்கள் இருக்கும் நிலைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாததுதான் ஆச்சரியதிலும் ஆச்சரியம்,
இதோ உங்கள் பார்வைக்காக அந்தச் சிறுபிள்ளைத்தனமான புகைப்படங்கள்,பாருங்கள் பார்த்து பின் உங்கள் நன்பர்களுக்கும் சொல்லுங்கள் இவர்கள் எப்படிச் சிறுபிள்ளைத்தனமாக இருந்ந்திருக்கின்றார்கள் என்று….சொல்லுவீர்கள்தானே









Read more »

(Nokia X3-02) புதிய செல்பேசி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது Nokia நிறுவனம்.


Nokia நிறுவனம் Nokia X3-02 எனும் புதிய கையடக்க தொலைபேசி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. தொடுகை உணரக்கூடிய திரை அமைந்துள்ளதுடன் (touch screen) விசைப்பலகையும் சோ்ந்து கவர்ச்சியாக வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம் கடின பாவனைக்கு விசைப்பலகையையும் அவசியமான நேரங்களில் உணர்திரையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பலரின் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Nokia நிறுவனம் இதனை Nokia X3 touch and type என விளம்பரப்படுத்தியு்ளது. இது விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. Nokia ஏற்கனவே x3 என்ற பெயரில் ஒரு செல்பேசியை அறிமுகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். புதிய Nokia X3 இல் 5 MP camera, 3G, Wi-Fi, Bluetooth v2.1, FM radio என நவீன செல்பேசியில் இருக்கும் அம்சங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. அத்துடன் பல வண்ண உறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read more »

இணையத்தில் இலவச இடவசதி வழங்கும் சிறந்த தளங்கள்.


இணையத் தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக தற்பொழுது சாதாரணமாக குறைந்த செலவில் அதிவேக இணைய இணைப்பினை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. (ADSL, WiMAX, 3G & 4G) கணினி பயன்பாட்டில் அதிக நேரத்தை இணையத்துடனேயே செலவிடும் நிலை உள்ளது.

Google போன்ற பிரபலமான நிறுவனங்கள் முழுமையாக இணையம் சார்ந்த இயங்கு தளங்களையும் சேவைகளையும் வெளியிடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் கோப்புக்களை கணினியின் வன்தட்டில் சேமிப்பதுபோல பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய வழங்கிகளில் சேமித்து வைப்பதன் மூலம் கோப்புக்களை இலகுவாகக் கையாளலாம்.
இணையத்தில் உங்கள் கோப்புகளை பாதுகாத்து வைப்பதற்கு இலவச இடவசதி வழங்கும் சில பிரபலமான தளங்களின் விபரங்கள் இங்கு உள்ளது. பாதுகாக்க வேண்டிய கோப்புக்களை இந்த சேவைகளில் பதிவேற்றி வைப்பதன் மூலம் தகவல் இழப்பை தவிர்த்து கொள்ளலாம், உங்கள் கோப்புகள் இணையத்தில் பாதுகாக்கப் படுவதால் எங்கு சென்றாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது இணையத்திலேயே திருத்தம் செய்து சேமிக்கலாம். இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம்..

1) Windows Live SkyDrive

மிகவும் நம்பிக்கையானது, பாதுகாப்பானது, 25GB இலவச இடவசதி, MS Office கோப்புகளை இணையத்திலேயே உருவாக்கி திருத்திக்கொள்ளும் வசதி. live mesh மென்பொருள் மூலம் 5GB sync இடவசதி. Live, Hotmail கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.

2) Dropbox

நம்பிக்கையானது, பாதுகாப்பானது, பிரபலமானது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தக் காரணம் இதன் synchronize செய்யும் வேகம். பிரபலமான அனைத்து இயங்குதளங்களிலும் இவர்களின் synchronize மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம். கைத்தொலைபோசிகளிலும் கூட. 2 GB இலவச இடவசதி. நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்கள் இலவச இடவசதியை 10 GB வரை அதிகரித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கட்டணம் செலுத்தி அதிக இடவசதியினை பெற்றுக்கொள்ளலாம்.  இலவச சேவையைப் பயன்படுத்துபவா்கள் குறிப்பிட்ட ஒரே ஒரு Folder இனை மட்டுமே synchronize செய்ய முடியும்.

3) mediafire

பிரபலமானது, நம்பிக்கையானது, பாதுகாப்பானது. வரையறை அற்ற (Unlimited) இடவசதி. கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்று சிறந்த சேவை. synchronize வசதி இல்லை. அதிக விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

4) ADrive

50 GB இலவச இடவசதி.

5) http://www.wikiupload.com/

6) http://www.filesavr.com/

7) http://www.fileden.com/

8) http://www.badongo.com/

9) http://www.wuala.com/

10) http://www.box.net/

உங்கள் மின்னஞ்சலைப் பதிவுசெய்து கொள்வதன் மூலம் பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
Read more »

Google Plus உடன் இணையுங்கள் – Google+ vs Facebook ( படங்கள் )


Google நிறுவனத்தின் Google+ சமூக வலைப்பின்னல் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு இணையத்தில் பஞ்சம் இல்லை. தொழில்நுட்ப செய்தி நிறுவனங்கள் Google+ தொடர்பான பல புதிய தகவல்களை முந்திக் கொண்டு வெளியிடுகின்றன.

இதுவரை Google+ உடன் இணையவில்லையா?

வலைமனை தளத்தில் இருந்து தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதன் மூலம் Google+ உடன் இணைவதற்கான அழைப்பை (Google+ invitation) பெற்றுக் கொள்ளலாம்.

முன்பே இணைந்தவர்கள் Google+ இல் என்னை இணைத்துக்கொள்ளலாம்:
https://plus.google.com/114372141124526436565

Read more »

அவாஸ்ட் - கணினி பாதுகாப்பு - இலவச ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் - 5


கணினி பாதுகாப்பு தொடர்பாக விடயங்களில் பிரபலமான சில ஆண்டிவைரஸ்
மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை பார்த்து வந்தோம். இனி இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.

அவாஸ்ட்

பணம் கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி நிறுவியதும் மின்னஞ்சல் பெயர் தந்து ரெயிஸ்டர் செய்தால் ஒரு வருடத்திற்குரிய இலவச லைசென்ஸ் தருகிறார்கள்.

http://forum.avast.com/index.php

என்ற இணைப்பில் உங்கள் கணினியில் ஏற்படும் வைரஸ் பிரச்சனைகளைப் பற்றிய சந்தேகங்களை ஆங்கிலத்தில் கேட்டு அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

அவாஸ்ட் பற்றி தமிழ் நண்பன் என்ற வலைப்பதிவில் இருந்து சில தகவல்கள்…

இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.

மற்றும் புதிய வசதியாக autosandbox வசதியைக்கூறலாம் இதன் மூலம் வைரஸ் பாதித்த(supsious) பைல்களை நம் கணினிக்கு எந்த இடையூறுமின்றி இயக்கலாம்.

ஒரு மென்பொருள் அல்லது பைலினால் என் கணினிக்கு பாதுகாப்பு கெடலாம் என நீங்கள் அறிந்திருந்தால் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.

இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை
தருகிறது.

டவுண்லோட் செய்வதற்கு - http://www.avast.com/free-antivirus-download

ஏனைய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விட தாங்களே சிறந்தவர்கள் என்கிறார்கள்.

ஒப்பிட்டு பார்க்க இணைப்பு - http://www.avast.com/best-antivirus



அவாஸ்ட் பற்றி ஏனைய இணைய எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்புபவர்கள் இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.

நீங்கள் ஏற்கனவே அவாஸ்ட் பாவிப்பவராக இருந்தால் இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.அல்லது உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை இப்பக்கத்தில் இறுதிக்குச் சென்று தெரியப்படுத்துங்கள். அவை மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
Read more »

ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?

ஏழாம் அறிவு’ படத்தின் கதைதான் என்ன என்பதை அந்தப்படத்தின் டிரைலரை
அடிப்படையாக வைத்து கண்டுபிடித்து யார் எழுதுகிறார்கள் என்பதுதான் ஃபேஸ் புக்கில் இப்போதைய ஹாட்டான விளையாட்டு!  டிரைலரை வைத்து ஆன்லைன் ரசிகர்கள் எழுதிய கதைகளில் இந்தக் கதைக்கு மதிப்பெண்களை வாரி வழங்கியிருகிறார்கள். அந்தக் கதை இதுதான்!
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர், அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்கு களறியை கற்றுக் கொடுக்கிறார். புத்தமத்தின் புதிய பிரிவை தொற்றுவிக்கிறார். அவரது பரம்பரையில் வந்த சர்க்கஸ் கலைஞரான  சூர்யாவை தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் ஜானி, நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி ஸ்ருதி ஹாசன்.

வில்லன் தனது சதியை நிறைவேற்றி இந்தியாவில் இருந்து அவன் வெளியேரும் முன், அவனை அழித்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். என்பது தான்.
Read more »

கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக சர்வதேச குற்ற விசாரணைக்கு ஶ்ரீலங்கா முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய பாதக நிலை தோன்றியுள்ளதால் தமிழர்களை வ்ருத்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது உளவியல் யுத்தத்தினை அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய போதிலும், இதற்கான பழியினை தமிழர்களின் மீதே போடுவதற்கு தேவையான வழி முறைகளைத் தேடிய படைதரப்புக்கு விடை கிடைத்துள்ளது.

2011.09,17 ஆம் திகதி சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த சைக்கிள் திருத்தும் கடையை நடாத்தி வரும் இராமையா காண்டீபன் எனும் 26 வயதுடைய இளைஞன் கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆம் இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளிந்திருந்ததாகவும், கைது செய்யச் சென்ற போது, அந்நபர் இராணுவ முகாமை நோக்கி ஓடியதாகவும், ஆகவே இவர் தான் மர்ம மனிதன் எனவும் பொலிஸாரை ஆதாரம் காட்டி பலாலி படைத் தலைமையக ஊடகப் பிரிவினர் சாவகச்சேரியில் நடாத்திய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் எனும் பெயரில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகளும் ஆங்காங்கே தங்களது வக்கிர நோக்கங்களை நிவர்த்தி செய்ய முற்பட்ட சம்பவங்களும் நடைபெற்ற போதிலும், அரசாங்கத்தின் துணை கொண்டு ஏவப்பட்ட மர்ம மனிதனை கண்டு பிடிக்க யாருமற்ற சூழ்நிலை இருப்பதனால், இதனை தமிழர்களே செய்வதாக உலகுக்குக் காட்ட அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியின் புது வடிவமே இதுவாகும்.

இராணுவ தரப்பினரால் இச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை அனைத்தும் அந்தந்த பகுதியில் வாழும் தமிழர்களாலே ஏற்படுத்தப்படுகின்றது, எனக் காரணங்காட்டி காலப் போக்கில் இன்னும் பல தமிழ் இளைஞர்கள் இராணுவ தரப்பினரால் கிறிஸ்பூதம் அல்லது மர்மமனிதனென அடையாளப்படுத்தப்படலாம், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் இளைஞர்கள் ஆகும்.
Read more »

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...




தொகுதி 1


A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )


பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 நானும்  சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Read more »

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

 
மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வகை.ஒன்று தூண்டுதலின் பேரிலோ,நேரிடையாகவோ குற்றம் செய்தவன்,மற்றையது அவனது காலக் கொடுமையில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டவன்.இவர்கள் இருவரையும் வேறு பிரிப்பது என்பது அசாத்தியமானது.ஏனெனில் தீர்ப்பு வழங்கப்படுவது முன் வைக்கப்படும் சாட்சியங்களிலும்,வக்கீலின் வாதத்திலுமே.இதைத்தான் அண்ணா அழகாகச் சொன்னார்,”சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு”என்று.ஆனால் இங்கு பெரும்பாலும் பணத்திற்காக வாதாடுபவர்களே வக்கீல்கள்.சாட்சியங்கள் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் கைவினைப் பொருள்.மொத்தத்தில் நீதி என்பது போலியாய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தராசுதான்.

இன்று தமிழ் நெஞ்சங்களில் புயலாய் வீசிக்கொண்டிருக்கும் சம்பவம்,முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குவிவகாரம்.21 ஆண்டுகளாக கேள்விக்குறியுடன் இருக்கும் மர்மத்துக்கு இவர்களின் தூக்கின் மூலம் விடைகாண முயல்கின்றார்கள். 21 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி, தங்கள் இளமையைத் தொலைத்து, மனதளவில் இறந்தவர்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் இவர்கள் அடைந்துவிடப்போகும் வெற்றிதான் என்ன??
உண்மையில் குற்றம் செய்தவன் என்றால்,தன் பாவத்தின் சம்பளமாக மரணத்தை எண்ணி மகிழ்வாய் இந்தப் பூமியில் இருந்து விடைபெறுவான்,ஏனெனில் மனிதனின் தண்டனையைப் பார்க்கிலும் அவனின் மனச் சாட்சியின் தண்டனை மகாகொடியது.ஆனால் அநியாயதிற்கு பழி சுமத்தப் பட்டவனோ தன் நியாயத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அல்லவா விடைபெறப்போகிறான்.
ஒருவன் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ,ஆனால் அவனுக்கு வழங்கப் படும் மரணதண்டனையானது,அவனுக்கு வழங்கப் பட்ட தண்டனையல்ல.ஏனெனில் அவன்தான் அதை அனுபவிப்பதற்கு இவ்வுலகில் இல்லையே.மொத்தத்தில் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போவது அவனை நேசித்த உறவுகளே.

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.
Read more »

பிரபஞ்ச நியதிகள் – காதல்


உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே. சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம், துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல் வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால் பிரிக்கப்படுகிறது. வெள்ளையனின் காதல் காரணத்தால் வருகிறது காரணமின்றிப் பிரிகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி தோற்கும் இடமும் காதல்தான், நீ ஆழமாக ஆராதிக்கும் பெண் உன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் போகலாம், நீ கண்ணெடுத்தும் பாராத பெண், உன்னை கண்கண்ட தெய்வமாக மதிக்கலாம். ஐயா நியூட்டன் அவர்களே இப்போதுமா சொல்கிறீர்கள் “உலகில் எல்லா தாக்கங்களுக்கும் சமனானதும் எதிரானதும்………??
இந்தப் பதிவு சுயநலக் காதல்களையும், ‘நிச்சயிக்கப்பட்ட’ காதல்களையும் (அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து ‘மேற்கொள்ளப்படும்’ காதல்கள்) தவிர்த்துவிடுகிறது. எல்லாக் காதல்களும் ஜெயிக்காமல் போவதற்கு ஒரே காரணம் காதல் வரையறுக்கப்படாதது மட்டுமல்ல காதல் சூழ்நிலைக் கைதியும் கூட. கைமாறும் தாம்பூலத் தட்டுக்கள் எத்தனை இதயங்களின் கல்லறைக்கான அத்திவாரங்கள்? பெற்றோர்களின் தற்கொலை நாடகங்களில் எத்தனை காதல்கள் பாத்திரம் இழந்து போயின? எதோ உந்துதல் என்னை பதியத் தூண்டிவிட்டது அனால் சொல்லெனாத் துயரங்கள் எதை சொல்வது எதை விடுவது என்று சிந்திக்க வைக்கிறது.
இப்படி வரவேண்டும் காதல் அப்படித்தான் வரவேண்டும் காதல் என்று அறிவு ஜீவிகள் சொல்வார்கள் காதலுக்கு கண்ணே இல்லை இதில் மூளை எங்கனம்? சட்டென்று வருவாள், உடல் எடை குறைவது போல ஒரு சொர்ப்பணம், இதயம் லேசாகி உடலை விட்டு நீங்குவது போல ஒரு பிரமை, இவளின்றி எவ்வண்ணம் அமையப் போகிறது என் உலகு என்ற பயம், மூளையின் அதிகாரம் இன்றி இயங்கும் உடல் உறுப்புகள், அளவுக்கு அதிகமான சிரிப்பு, தேவையற்ற கோபம், தனிமையில் இனிமை, இளையரஜாவில் நாட்டம், அதிகரித்த கவித்துவம், ஆரவாரமான தத்துவங்கள், உனக்குள் உதிக்கும் புதுமைப் பித்தன், வழமைகளில் உள்ள பழமைகள் மேல் வெறுப்பு இவை காதல் வரும் போது தோன்றும் சில அறிகுறிகள். இது இல்லாமல் காதல் வந்த பலரும் இருக்கலாம் இவற்றுடன் சேர்த்து இன்னும் பல அறிகுறிகளுடனும் காதல் வரலாம்; நான் முன்னரே சொன்னது போல; காதல் வரையறை அற்றது.
காதலுக்கு இதயம் சின்னமென்பது சரிதான். விஞ்ஞானமே சொல்கிறது ஒருவர் 80 வயது வாழ்ந்தால் அவரின் இதயம் 40 வருடங்கள் ஓய்வெடுத்திருக்கிறது. இருப்பது போலும் இல்லாது போலும் இருப்பதில் காதலுக்கு நிகர் எவருமில்லை. இதயம் சரிதானே? எதோ ஒரு தருணத்தில் யாரோ யாராலோ காதலிக்கப்பட்டிருக்கிறார்கள், ஏற்கப்படாத இதயம் என்று இங்கு எதுவுமே இல்லை, ஆனால் ஏற்கப்பட்டும் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்திருக்கலாம்.
எனது பார்வையில் காதல் பின்வருவனவற்றை வெறுக்கிறது (இது ஆண்பால் சார்ந்ததெனினும்) நேசித்த நெஞ்சம் நேசிக்க மறுத்தபோதும் நேசித்தவளின் வீழ்ச்சி, அவள் கணவனின் மரணம், அவள் உறவுகளின் பிரிவு, நம்மால் அவள் மேல் ஏற்படும் தேவையற்ற அழுத்தம், அவள் சந்திக்கும் விபத்துக்கள், அவளின் கண்ணீர், அவளின் ஏமாற்றங்கள், அவளின், அவளின், அவளின்………….
நீங்கள் காதலித்திருந்தால் உங்கள் அவர்கள் உங்களை ஏற்க மறுத்திருந்தாலும் (இதுவும் ஆண்பால் சார்ந்ததெனினும்) நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் கீழுள்ள எதோ ஒன்றையேனும் நீங்கள் நேசித்திருப்பீர்களே? அவளின் குழந்தை, அவளுக்கு வாய்த்த ஆடம்பர வாழ்க்கை, அன்பான கணவன், அவளின் வெற்றிகள், அவளின், அவளின், அவளின் …………………….
இதை எழுதுவதற்கு எனக்கிருக்கும் அனுபவம், வயது என்பன பற்றி நிறைய கேள்விகள் எழலாம். என்னுள் பருவ மற்றம் ஏற்படத் தொடங்கிய 2001 தொடக்கம் இன்று இரவு 11.07 வரை நிறைய பார்த்துவிட்டேன், சொந்த அனுபவங்கள் இருக்கின்றன; அளவில் குறைவு, நண்பர்களின் உறவுகளின் ஆயிரம் ஆயிரம் கதைகள், நாம் தமிழராய் இருப்பதால் அளவுக்கதிகமாக வேரறுக்கப்பட்ட கதைகள் சில வேரூன்றிய கதைகள்; வேரூன்றியும் நீரற்று மடிந்த கதைகள், விருட்சமாகியும் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதைகள், யாதார்த்தம் தந்த பிரிவுகள், சொல்லிய காதல்கள், சொல்ல மறந்த காதல்கள் இன்னும் பல இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட காதல்கள் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. சோகம் என்னவெனில் இணைந்த கரங்கள் ஏதும் இமயம் போல் எழுந்த கதைகள் கேட்டிருக்கிறேன்; பார்க்கவில்லை.
காதலின் எதிரிகளை சீர்திருத்தும் நோக்குடனும் இது பதியப்படவில்லை, காதலுக்கு வரைபடம் வரையவும் நான் தயாராக இல்லை. வாழ்கையின் பாதையில் காதலித்துப் பாருங்கள்; தோற்றால்? நிச்சமாய் எனக்குத் தெரியும் அது உங்களின் பிழை மட்டுமல்ல என்று! ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய சிவபுராண வரிகள் சில காதலுக்கும் பொருந்தும் போலும்,
“கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று”
Read more »
 
-