கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக சர்வதேச குற்ற விசாரணைக்கு ஶ்ரீலங்கா முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய பாதக நிலை தோன்றியுள்ளதால் தமிழர்களை வ்ருத்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது உளவியல் யுத்தத்தினை அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய போதிலும், இதற்கான பழியினை தமிழர்களின் மீதே போடுவதற்கு தேவையான வழி முறைகளைத் தேடிய படைதரப்புக்கு விடை கிடைத்துள்ளது.

2011.09,17 ஆம் திகதி சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த சைக்கிள் திருத்தும் கடையை நடாத்தி வரும் இராமையா காண்டீபன் எனும் 26 வயதுடைய இளைஞன் கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆம் இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளிந்திருந்ததாகவும், கைது செய்யச் சென்ற போது, அந்நபர் இராணுவ முகாமை நோக்கி ஓடியதாகவும், ஆகவே இவர் தான் மர்ம மனிதன் எனவும் பொலிஸாரை ஆதாரம் காட்டி பலாலி படைத் தலைமையக ஊடகப் பிரிவினர் சாவகச்சேரியில் நடாத்திய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் எனும் பெயரில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகளும் ஆங்காங்கே தங்களது வக்கிர நோக்கங்களை நிவர்த்தி செய்ய முற்பட்ட சம்பவங்களும் நடைபெற்ற போதிலும், அரசாங்கத்தின் துணை கொண்டு ஏவப்பட்ட மர்ம மனிதனை கண்டு பிடிக்க யாருமற்ற சூழ்நிலை இருப்பதனால், இதனை தமிழர்களே செய்வதாக உலகுக்குக் காட்ட அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியின் புது வடிவமே இதுவாகும்.

இராணுவ தரப்பினரால் இச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை அனைத்தும் அந்தந்த பகுதியில் வாழும் தமிழர்களாலே ஏற்படுத்தப்படுகின்றது, எனக் காரணங்காட்டி காலப் போக்கில் இன்னும் பல தமிழ் இளைஞர்கள் இராணுவ தரப்பினரால் கிறிஸ்பூதம் அல்லது மர்மமனிதனென அடையாளப்படுத்தப்படலாம், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் இளைஞர்கள் ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-