பறக்கும் தட்டு மர்மங்கள்



பறக்கும் தட்டு
பறக்கும் தட்டுக்கள் – இந்தப் பெயரைக் கேட்டாலே ஒருவித அச்சமும் பிரமிப்பும் பலருக்கு ஏற்படும். பறக்கும் தட்டுக்களை தாங்கள் அவ்வப்போது பார்த்ததாக உலகெங்கும் உள்ள பலர் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், அவ்வாறு ஒருவேளை இருந்தாலும் ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாகப் – கிட்டத்தட்ட ஒளியின் அளவிற்கு வேகமாகப் –பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில்,பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. ஆனால் அரசு மேற்கொண்டு அது குறித்து ஆய்வுகள் ஏதும் செய்யாததால் அது பற்றிய செய்திகள் பரவவில்லை. ஆனால் அதற்கு முன்னாலேயே 1947லேயே பறக்கும் தட்டை உலகெங்கும் பலர் பரவலாகக் கண்டுள்ளனர்.
அதுபோல 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலை.
       சிலமணி நேரங்களில் அவர்களைக் கீழே தள்ளி விட்டு பறக்கும் தட்டு சென்று விட்டது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவர்கள் பின்னர் மயக்கம் தெளிந்து மக்களிடம் உண்மையைச் சொன்னனர். முதலில் யாரும் அவர்களது கூற்றை நம்பவில்லை. ஆனால் மருத்துவர்கள் குழு வந்து அவர்களை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்திச் சோதனை செய்தபோது, அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதும், அமானுஷ்யமான சில அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது உண்மைதான் என்பதும் தெரிய வந்தது.

அமெரிக்கா, கனடா, ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். எந்த அரசும் இன்றுவரை பறக்கும் தட்டுக்களையோ அல்லது அன்னியர்கள் பிரவேசத்தையோ வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டன் மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. அதில் 1997ல் பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் கவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான ஒரு பறக்கும் தட்டு வந்திறங்கிய சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் தட்டு குறித்த தகவல்களை மேலும் மேலும் மக்களிடம் மறைப்பது பயனற்றது என்பதால் தமது சேமிப்புக்களை வெளியிட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

வேற்று கிரகவாசிகளின் கால் தடங்கள் சந்திரனில் கண்டுபிடிப்பு!


சந்திரனில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சந்திரனில் வேற்று கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் சமீபத்தில் இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது சந்திரனின் மேற்பரப்பில் வேற்று கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது தெரிய வந்தது. அவை சந்திரனுக்கு நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலத்தில் உள்ள ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
-
-
-

Read more »

ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!' 2010ன் புதிய கண்டுபிடிப்புகள்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

கோல்டன் ஹவர்

முதல் 2 மணி நேரம் "கோல்டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

ஆறு வகை மாரடைப்பு


மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;


இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.


முதல் வகை மாரடைப்பு

முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வகை

இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை

நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை

மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை

ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை

மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.

என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

"பளீச்' அறிகுறிகள்
* மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
* வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
* திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
* உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.

தவிர்க்கலாம் நிச்சயம்

என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.
அதை தவிர்க்க முடியும்... அதற்கு...
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
* உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.

டென்ஷன் "நோ'

டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.
Read more »
 
-