சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய கூகுள் பார் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது புதிய Google (Navigation) Bar ஒன்றை சோதனை செய்து வருகிறது. அதனை நாம் எப்படி பெறுவது? என்பதை இங்கு பார்க்கலாம்.
புதிய Google Bar தோற்றம்:
பழைய கூகிள் பாரையும், புதிய கூகிள் பாரையும் கலந்து செய்த கலவையாக இந்த புதிய பாரை கொடுத்திருக்கிறது கூகிள். இன்னும் எத்தனை முறை மாற்ற போகிறதோ? தெரியவில்லை.
ஃபயர்பாக்ஸ் உலவியில் பெற:
1. ஃபயர்பாக்ஸ் உலவியை திறந்து Cntrl+Shift+K என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அந்த விண்டோவின் கீழே பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.
document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();
2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
க்ரோம் உலவியில் பெற:
1. க்ரோம் உலவியை திறந்து Ctrl+Shift+J என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அந்த விண்டோவில் Console என்பதை தேர்வு செய்து, அங்கு பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.
document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();
2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பெற:
1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியை திறந்து, கூகிள் தளத்திற்கு சென்றுF12 பட்டனை அழுத்தினால் பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அதில் Script என்பதை தேர்வு செய்து, Console என்பதை தேர்வு செய்து, அதன் கீழே பின்வரும் நிரலியை இடவும்.
document.cookie="PREF=ID=381502750b6e9119:U=aaee74aefea7315a:FF=0:LD=en:CR=2:TM=1328391998:LM=1328392000:S=yPtlCgLbEnezu5b4; path=/; domain=.google.com";window.location.reload();
பிறகு அதற்கு கீழே உள்ள Run Script என்ற பட்டனை அழுத்தவும். பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
மீண்டும் பழைய முறைக்கு மாற மேலுள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ பயன்படுத்துங்கள்.
document.cookie="PREF=; path=/; domain=.google.com";window.location.reload();
கவனிக்க: நீங்கள் google.com என்பதற்கு பதிலாக google.co.in போன்ற முகவரியை பயன்படுத்தினால் மேலுள்ள code-ல் domain=.google.comஎன்பதற்கு பதிலாக domain=.google.co.in போன்று உங்களுக்கு வரும் முகவரியை கொடுங்கள்.
உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.
-யேசுநாதர்.
Let He Who Is Without Sin Cast The First Stone - Jesus
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக