பேஸ்புக் மூலம் விற்பனை.



பேஸ்புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவால் ஒவ்வொருக்கும் ஒரு வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது.நட்பு சார்ந்த இந்த தொடர்புகளை நட்பு ரீதியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்[பது தெரிந்த விஷயம் தான்.
பேஸ்புக் வலைப்பின்னலை வணிக நோக்கிலும் பயன்படுத்தி கொள்ள முயலும் புதுமையான சுவாரஸ்யமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பவர் வாய்ஸ் இணையதளம் இத்தகைய வணிக வாய்ப்பை வழங்குகிறது.பவர் வாய்ஸ் தளத்தில் விற்பனைக்கான சேவைகளும் பொருட்களும் நிறைய பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் எதனை உங்களால் நண்பர்களிடம் விற்க முடியும் என்று நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து உங்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் நட்பு வட்டத்தில் பரிந்துரைக்கலாம்.
நண்பர்களுக்கு அந்த சேவை பிடித்திருந்து பயன்படுத்த முன் வந்தால் அதற்குறிய பரிசாக ஒரு தொகை வழங்கப்படும்.அவ்வளவு தான்,முடிந்தது விற்பனை.
பேஸ்புக்கில் செய்திகளயும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வது போல இந்த வணிக வாய்ப்பையும் பகிர்ந்து கொள்ளலாம்.
வர்த்தக நிறுவனங்களை பொருத்த வரை இந்த தளம் நல்லதொரு வணிக முயற்சி.பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய விளம்பரத்திற்காக பணத்தை வாரி இறைத்து விரிவான விற்பனை சங்கிலியை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.சிறிய நிறுவனங்களுக்கு இது சாத்தியம் இல்லாமல் போகலாம்.
இதைவிட பேஸ்புக் நண்பர்களின் நட்பு வட்டத்திற்குள் நண்பர்கள் மூலமே பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வது புத்திசாலித்தனமானது தான்.பேஸ்புக் பிரபஞ்சம் முழுவதும் உள்ள நண்பர்களின் வலைபின்னல்களுக்கு இடையே பொருட்கள் மார்க்கெட்டிங் செய்யப்படும் போது நினைத்துகூட பார்க்க முடியாத ரீச் கிடைக்கலாம்.
அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் பேன்ட் சட்டைகளை,புடவைகளை நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் நட்பு வட்டத்திலும் விற்பது போல தான் இதுவும்.ஆனால் பேஸ்புக் நண்பர்கள் இதனை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
இணையதள முகவரி;http://powervoice.com/signup/



பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-