எளிதான பாவணை ,உள்ளுணர்வுடைய இடைமுகம்,விரைவாக இயங்க கூடியது, பாதுகாப்பானது , ஆயிரக்கணக்கான பயன்பாட்டு மென் பொருட்களை கொண்டது , புதுமையான அனுபவத்தை வழங்குகூடியது ஆகிய அனைத்து அருங்குணங்களையும் ஒருங்கே கொண்ட உபுண்டு-11.10 இயக்க முறைமையின் சிறப்பியல்புகளை பற்றி இப்போது காண்போம்
மேலும் இந்த பட்டியில் நாம் மேலும் சேர்க்க விரும்பியவற்றை சேர்த்து கொள்ளமுடியும் தேவையில்லாததை நீக்கிடவும் அல்லது தற்காலிகமாக மறைத்து வைக்கமுடியும்
3துவக்கத்திரையின் மேலே இடதுபுற மூலையிலிருக்கும் இதனுடைய குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சல்,படங்கள் போன்றபயன்பாடுகளை உடனடியாக துவக்கி கையாளுவதற்கான குறுக்குவழிகள் ஏராளமாக இதிலிருந்து கிடைக்கின்றன
4.நாம் இதனுடைய ஒரேதிரையில ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை தனித்தனி சாளரமாக தோன்றச்செய்து அவற்றுள் பணிபுரியலாம் மேலும் அந்நிலையில் Alt + Tab , Alt + Grave ஆகிய விசைகளை சேர்த்து அழுத்து வதன் வாயிலாக அல்லது workspaces எனும் கருவியின் மூலமாக அவைகளுக்கிடையே அவ்வப்போது மாறிக்கொண்டு தடங்களின்றி பணிபுரியலாம்
5.இதில் உள்ள செந்தரமான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஃபயர்வால் ,வைரஸ் பாதுகாப்பு கவசங்கள் போன்ற கூடுதலான பாதுகாப்பும் கிடைக்கின்றன அதனால் தனிப்பட்ட வங்கிகணக்கை பராமரித்தல் மிகமுக்கியமான தரவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய பணிகளைபயமின்றி செய்யலாம்
6.மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய பயன்பாடுகளின் எந்தவகையான கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கான ஒத்திசைவு தன்மை இதில் உள்ளதால் எதைபற்றியும் கவலையில்லாமல் எந்த கோப்பையும் கையாளமுடியும்
7.இது எந்த கணினியிலும் விரைவாக செயல்படக்கூடியது புதியகணினியெனில் மிகவும் விரைவாக செயல்படக்கூடியதாகும்
8இது வட்டாரம் மொழி பால்வேற்றுமை போன்று எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இலவசமாக கிடைக்ககூடியதாகவும் செயல்படுத்த கூடியதாகவும் உள்ளது
9.இதனை ஆரம்பித்து ஏறத்தாழ ஏழாண்டுகள் , பதினைந்து பதிப்புகளுடன் எந்தவித கவலையிமில்லாமல் வெற்றிநடை போடக்கூடியதாக இந்த உபுண்டு 11.10 விளங்குகின்றது
இதனை இதனுடைய http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக