மடிக்கணினியையும் செல்லிடத்து பேசியையும் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைத்து உருவப்படங்கள் ,ஒலிஒலி படங்கள் போன்ற பயன்பாடுகளின் கோப்புகளை மடிக்கணினியிலிருந்து செல்லிடத்து பேசிக்கு எளிதாக இடமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் ஏதனுமொரு மடிக்கணினி இதனை ஆதரி்க்கவில்லையெனில் யூஎஸ்பி ப்ளூடூத் டாங்கில் வாயிலாக இதனை செயல்படுத்திடமுடியும் முதலில் மடிக்கணினியில் இதற்கான மைக்ரோசாப்ட் விண்டோ இயக்க மென்பொருள் நிறுவபட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க.அவ்வாறே செல்லிடத்து பேசியிலும் இந்த ப்ளூடூத் பயன்பாடு நிறுவ பட்டுள்ளதாவென சரிபாரத்துmy Phone’s visibility => Shown to all on the cell phone=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி அதனை செயலுக்கு கொணடுவருக
பிறகு மடிக்கணினியில் control panel -ல் bluetooth devices என்றகுறும்படத்தை அல்லது Device manager என்பதில் bluetooth devices என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றிடும் bluetooth devices என்ற உரையாடல் பெட்டியில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Add bluetooth device Wizard என்ற வழிகாட்டி பெட்டியின்Welcome to Add blue tooth Device Wizard என்ற தலைப்பின்கீழ் My devices is set up and ready to be found என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசய்துகொணடு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன் பின்னர் விரியும் திரையில் தேவையான சாதனத்தின் பெயரை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு விரியும் திரையில் Do you needs a passkey to add your devices?என்ற கேள்வியின்கீழுள்ள Let me choose my own key ,Choose a passkey for me ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொண்டுNext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பிறகு விரியும் திரையில் passkey என்பதில் நம்முடைய செல்லிடத்து பேசியின் எண்ணை குறிப்பிட்டு Installing Bluetooth deveices என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி.யபின்தோன்றிடும் பெட்டியில் yes என்பதைதெரிவுசெய்து சொடுக்கியபின் மீண்டும் Add bluetooth devices என்ற வழிகாட்டி பெட்டியின் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் இறுதியாக Completing the Add blue tooth Device Wizard என்ற திரையில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலை முடிவுக்கு கொண்டுவருக
அதன்பின்னர் bluetooth devices என்ற உரையாடல் பெட்டியில் பார்த்தோமானால் செல்லிடத்து பேசியின் குறும் படம் இருப்பதை காணலாம் அதனை தெரிவுசெய்துகொண்டு properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் properties என்ற உரையாடல் பெட்டியில் services என்ற தாவியின் திரையில் தேவையான சேவைகளின் தேர்வுசெய்பெட்டிகளை தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதன்பின்னர் மிகஎளிதாக உருவபடங்கள் ,ஒலிஒலி படங்கள் போன்ற பயன்பாடுகளின் கோப்புகளை மடிக்கணினியிலிருந்து செல்லிடத்து பேசிக்கு எளிதாக இடமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக