எல் டி எஸ் பி – லினக்ஸ் டெர்மினல் சர்வர் பிராஜக்ட்(LTSP)


எல்  டி எஸ் பி லினக்ஸ் டெர்மினல் சர்வர் பிராஜக்ட்(LTSP)
உங்கள் மனதில் எப்பொழுதாவது கீழ் கண்ட கேள்விகள் எழுந்துள்ளதா?
1.பழைய கணினிகளை என்ன செய்வது?
2.ஹார்ட் டிஸ்க் இல்லாமல் கணினி இயங்குமா?
3.மென்பொருள்களை அனைத்து கணினியிலும் நிறுவாமல் ஒன்றில் நிறுவி பிற கணினிகள் இதை பெற்றுக் கொள்ள கூடாதா?
ஆம் என்றால் எல்  டி எஸ் பி உங்கள் கேள்விகளுக்கு விடையாகும்.
தின்-கிளயன்ட் (Thin Client) என்பதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கலாம்இதை லினக்ஸில் நிறுவ எல் டிஎஸ் பி உதவும்ஒரு திறன் மிகுந்த கணினியின் (server) திறனை பல எளிய கணினிகளிலும் பெறச் செய்வதே எல் டிஎஸ்பி யின் நோக்கமாகும்.
முதலில் சில அடிப்படை விஷயங்கள்.
சிறுத்த கணினி-(Thin Client)
இவ்வகை கணினிகளில் மென் பொருள் ஆபரேடிங் சிஸ்டம்,பயன்பாட்டு புரோக்கிராம்கள் ஆகிய அனைத்தும் ஒரு மூலக் கணினியில் இருந்து தருவிக்கபட்டு இயக்கப்படும்இந்த சிறுத்த கணினியில் ஹார்ட் டிஸ்க்,சிடி போன்றவை அவசியம் இல்லை.
எல் டிஎஸ்பி மூலக் கணினி-(LTSP SERVER)
மூலக் கணினி அனைத்து சிறுத்த கணினிகளுக்கும் மென்பொருள்களை கொடுத்து தன்னோடு இனைத்துக் கொள்ளும்.சிறுத்த கணினியில் வேலை செய்பவர்கள் உண்மையில் இந்த மூலக் கணினியில் தான் வேலை செய்வர்.
எல் டிஎஸ் பி எப்படி இயங்குகிறது?
ஒரு கணினி இயங்குவதற்க்கு தேவையான மென்பொருள்கள்
1) கெர்னல்(kernel) எனப்படும் வித்து.
2) பிற ஆபரேடிங் சிஸ்டம் தொகுப்புகள்.
3) பயண்பாட்டு தொகுப்புகள்.
சிறுத்த கணினியின் சவாலே இவை அணைத்தையும் மூலக் கணினியில் இருந்து வலை மூலம் தருவித்து இயக்குவதுதான்.
சவால் 1: .பி (I.P) எண்
வலையில்(LAN) எந்த ஒரு பரிமாற்றம் நடப்பதற்கு ஐபி எனப்படும் முகவரி எண் தேவை.  சிறுத்த கணினி எதையும் சேமிக்க முடியாததால் ஐபியை வலை முலம் பெறவேண்டும்.
இதற்கு DHCP எனும் மென்பொருள் உதவும்இதை மூலக் கணினியில் நிறுவ வேண்டும்இது கேட்பவருக்கெல்லாம் ஐ.பி கொடுக்க வல்லது.
சிறுத்த கணினியில் etherboot  எனும் ஒருவகை வசதி இருக்க வேண்டும்.
Etherboot என்றால் என்னஇது ஒருவகையான மென்பொருள்.மிகசிறியதுவலைமுலம் IP எண்னும்கெர்னல் இருக்கும் இடம் மற்றும் gateway எனப்படும் வழிக்காட்டியின் எண் ஆகியவற்றை மூலக் கணினி இருந்து பெறவல்லதுஇதை  முன்று வகையில் அமைக்கலாம்.
  • Ethernet cardல் ஒரு சில்லாக இருக்கலாம்.
  • பிளாப்பி/சிடிராமில் இருக்கலாம்.
  • அன்மைகால மதர்போர்டுகளில் இது இணைக்க பட்டுள்ளது.
சிறுத்த கணினி துவங்கியவுடன் இந்த etherboot உயிர்பெற்று IP எண் தேவைப்படுகின்றது என்றும்தன்னுடைய MAC Address இன்னது என்றும்  வலையில்  பிரகடனப்படுத்தும்இது வலையில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் போய் சேரும்முன்னர் கூறிய DHCPஇதற்கு பதில்  கூறும்இதில் IP எண்,கெர்னல் உள்ள இடம், gatewayஎனப்படும் வழிகாட்டி ஆகியவை இருக்கும்இந்த பதிலை etherboot படித்துக்கொள்ளும்ஆக சிறுத்த கணினி IP எண் கிடைத்துவிட்டது.ஒரு சவாலை சமாளித்து விட்டோம்.
சவால்-2 கெர்னலை தருவிப்பது.
கெர்னல் என்பது ஒரு கோப்புஇதனை RAMல் ஏற்றி அதனை இயக்க வேண்டும். Etherbootல் tftp (trivial file transfer protocol) எனும் எளிமையான கோப்பு பரிமாற்ற வசதி உண்டுஇதற்கு மூலக் கணினியில் tftp server எனும் மென்பொருள் இயங்கி கொண்டிருக்க வேண்டும். Etherboot tftp மூலம் கெர்னலை தருவித்து,அதை இயக்கி விடும்கெர்னல் இயங்கினால் கணினி உயிர் பெற்றது போல்.இதன்மூலம் இரண்டாவது சவாலை சமாளித்துவிட்டோம்.
சவால்-3 ஆப்ரேடிங் சிஸ்டம் 
கெர்னல் மட்டும் ,சிறுத்த கணினி இயங்குவதற்கு போதாது.  ஆப்ரேடிங் சிஸ்டம்மின் மற்ற கோப்புகள் ஆனைகள்,libraries -  ஆகியவைகள் தேவைப்படும்.  இவைகள் கெர்னலைப்போல சிறியது அல்லகுறைந்தது 300MB ஆவது தேவைப்படும்.  அதனால் tftp முலம் தருவிக்கமுடியாது. RAMமும் போதாது.  இதற்காக NFS என்பதை பயன்படுத்த வேண்டும். NFS-Network File System-என்பது மூலக்கணினியில் உள்ள ஒரு கோப்புதொகுப்பை வலைமுலம் பிற கணினிகள்  உபயோகப்படுத்துதல் ஆகும்(sharing). இந்த NFS மூலக் கணினியில் நிறுவவேண்டும்.   இதன் மூலம் சிறுத்த கணினி தனக்கு வேண்டிய /bin, /etc, /lib, /usr/lib போன்ற தொகுப்புகளை பெறும்.அண்மை காலங்களில் NBD-Network Block Device-உபயோகப்படுத்தப்படுகிறது.
எல்டிஎஸ்பி திட்டத்தின் மிக முக்கிய பணி இந்த ஆப்ரேடிங் சிஸ்டம் உருவாக்குவதுதான்இந்த ஆப்ரேடிங் சிஸ்டம்ல் மிக அடிப்படையான சில செயல்பாடுகள் மட்டும் கொண்டிருக்கும்எல்டிஎஸ்பி-4 வரை இந்த ஆப்ரேடிங் சிஸ்டம் முழுமையும் source codeல் இருந்து இவர்கள் தயாரித்து கொண்டிருந்தார்கள்எல்டிஎஸ்பி-5 முதல் டெபியன் உபுண்டு போன்ற முக்கிய லினக்ஸ் தொகுப்புகளில் இருந்து எளிதாக உருவாக்கபடுகிறது.
சவால்-4 மூலக் கணினிlogin பெறுவது.
ஆபரேடிங் சிஸ்டம் கிடைத்தவுடன்சிறுத்த கணினிமூலக் கணினிlogin prompt கிடைக்கச் செய்யவேண்டும்அப்போதுதான் உபயோகிக்க முடியும்இதற்கு X11 எனப்படும் யூனிக்ஸ் /லினக்ஸில் உள்ள மென்பொருள் உதவுகிறதுஅல்லது வெறும் text mode-எழத்துரு மட்டுமே போதும் என்றால் telnet-ஐ உபயோகிக்கலாம்.
சிறுத்த கணினி X11+ssh உபயோகித்து மூலக் கணினிஇனைத்துக்கொள்ளும்இதன் மூலம் மூலக் கணினிஉள்ள உபயோகிப்பாளர்-பெயர்(username) மற்றும் பாஸ்வேர்ட்(password)கொடுத்து உபயோக்க தொடங்கலாம்இனி ஒருவர் பயன்படுத்தும் அணைத்து  மென்பொருளுமே மூலக் கணினியில் உள்ள புரோகிராம்கள் தான்கோப்புகளும் மூலக் கணினியில் உள்ளதுதான்.
இந்த அட்டவனை நடப்பவற்றை எளிதில் விளக்குகிறது.
எல்டிஎஸ்பி நடப்பது என்ன?
நிலை/இயக்கம்கணினி
சிறுத்தகணினி ஆன் செய்தல்சிறுத்த கணினி
Ether bootதொடக்கம்சிறுத்த கணினி
IP எண் வேண்டிEther boot  LANல்dhcp பிரகடனம்-(தன் MAC எண் உடன்)சிறுத்த கணினி
மூலக்கணினிdhcp பதில் கூறல்.இதில் IP எண் வழிகாட்டி எண் கெர்னல் பெயர் மூலக்கணினியின் எண் ஆகியன இருக்கும்மூலக்கணினி
Ether bootபதிலை படித்தல்சிறுத்த கணினி
கெர்னல் வேண்டிtftp செய்தி அனுப்புதல்சிறுத்த கணினி
கெர்னல் கொடுத்தல்மூலக்கணினி
Ether bootகெர்னல் இயக்குதல் .சிறுத்த கணினி
கெர்னலின் கட்டுபாட்டில் கணினிசிறுத்த கணினி
கெர்னல் dhcpஅனுப்புதல்சிறுத்த கணினி
dhcp பதில் கூறல்.இதில்  ஆபரேடிங் சிஸ்டம் உள்ள இடம்  பற்றிய குறிப்பு இருக்கும்மூலக்கணினி
கெர்னல் ஆபரேடிங் சிஸ்டமை nfsமூலம் தருவித்தல்சிறுத்த கணினி
கெர்னல் sshமூலம் loginதிரையை கொணர்தல்சிறுத்த கணினி
பயனாளர் பயண்படுத்துதல்சிறுத்த கணினி +மூலக்கணினி
எல்.டி.எஸ்.பியின் நன்மைகள்.
  • சிறுத்த கணினியில்  மிகக் குறைந்த CPU திறன் போதும்.
  • சிறுத்த கணினியில் RAM 64MB [சிலசமயங்களில் 16MB கூடபோதும்.
  • HD,CD-rom-தேவையில்லை.
  • விலை குறைவு.
  • பழைய கணினியையும் உபயோகிக்கலாம்.
  • வேகம் மூலக் கணினிபொறுத்ததுபொதுவாக சிறுத்த கணினி பொறுத்தது அல்ல.
  • அனைத்து மென்பொருளும் ஒரே கணினியில்இதனால் பராமரிப்பது எளிது.
  • அனைத்து கோப்புகள் ஒரே கணினியில்.இதணால் backup செய்வது எளிது.
  • LANல் எந்த கணினியிலும் வேலை செய்யலாம்.
  • சிறுத்த கணினியில் பிரின்ட் செய்யலாம்.
  • மொத்த செலவும்,பிற பயன்பாட்டு செலவுகள்மின்சாரம் உட்பட்ட செலவும் குறைவு.
  • நீண்ட காலம் உழைக்கும்இதனால் சுற்று சூழல் காக்கபடுகிறது.
எல்டிஎஸ்பி என்பது பல இடங்களில்  மிக வசதியானதுஅவைகளில்  சில
  1. விற்பனை  கூடங்கள்(SALES COUNTERS).
  2. மருத்துவமனைகள்
  3. பள்ளி ஆய்வு கூடங்கள்
அண்மைகால வளர்ச்சிகள்
எல்.டி.எஸ்.பி அபாரமக வளர்ந்து வருகிறதுஅவைகளில் சில
  1. Local device support -USB pen drive. பென் டிரைவ்  சிறுத்த கணினியில் பயன்படுத்தலாம்.
  2. ஒலி ஒளிசிறுத்த கணினியில் பயன்படுத்தலாம்.
மேலும் அறிய www.ltsp.org என்ற தளத்தை பார்கவும்.


வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
Read more »

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட


ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை ஜிமெயிலில் அறிமுக படுத்துவதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.  நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என்றும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் என்றும் விரும்பும்  நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது பயனித்து கொண்டிருப்போம் நம்முடைய மடிக்கணினியிலும் இணைய இணைப்பு இருக்காது ஆயினும் உடனடியாக  மின்னஞ்சலை கையாளவேண்டும் என எண்ணிடுவோம்  அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்காக இணைய இணைப்பில்லாத போதும் மின்னஞ்சலை கையாளுவதற்கான கூகுள் ஒரு அருமையான வசதியை வைத்துள்ளது.
இதற்காக நம்முடைய கணினியில்  கூகுள் குரோம் உலாவியை  பயன்படுத்திடுக.  அடுத்துhttps://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk என்ற தளத்திற்கு சென்று  Offline Google Mail என்ற நீட்சியை அந்த  உலாவியில் நிறுவுகை செய்திடுக.
1.
உடன் உலாவியில் ஒரு புதிய தாவி(tab) உருவாகும் அல்லது  முயற்சிசெய்து புதிய தாவி (New tab) ஒன்றை உருவாக்கிடுக.
பின்னர் தற்பொழுது நாம் இணைத்த Offline Google Mail என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக.
உடன்தோன்றிடும் திரையில் Allow Offline Mail என்ற வாய்ப்பை தேர்வு செய்திடுக.
2.
 இதே திரையின் கீழ் பகுதியில் நம்முடைய மின்னஞ்சலின் பெயரை சுட்டிகாட்டிடும் அதனை தேர்வு செய்து கொண்டு Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியானது திரையில் தோன்றி நமக்கு இதுவரையிலும்   வந்த அனைத்து மின்னஞ்சல்களையும் பட்டியலாக  காட்டும்.
3
இதில் வழக்கமாக மின்னஞ்சல்களை கையாளுவதுபோன்று அனைத்து பணிகளையும் செயல்படுத்தலாம் மேலும் இதிலுள்ள Menu என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் பின்வரும் படத்திலுள்ளவாறு இணைய இணைப்பில்லாதபோது கூட  மேலும் ஏராளமான பணிகளை ஆற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.
4
இவ்வாறு எண்ணற்ற வசதிகளையும்  இணைய இணைப்பு இல்லாமேலேயே நம்முடைய ஜிமெயில் கணக்கை நம்முடைய கணினியை பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும்.



நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

Read more »

மறந்து வைத்த பொருளை தேட ஒரு இணையதளம்.



காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு.இது சிலருக்கு தினசரி அனுபவமாகவும் இருக்கலாம்.இன்னும் சில நேரங்களிலோ முக்கியமான பொருளை வைத்த இடம் தெரியாமல் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருப்போம்.
இப்படி இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுவது தத்துவ நோக்கில் இல்லாவிட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்படுவது தான்.
இது போன்ற நேரங்களில் தேடும் பொருளை எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்வதற்காக மூளையை கசக்கி கொள்ளவும் நேரலாம்.அவசரத்தில் இருக்கும் போது இந்த மறதி பெரும் சோதனையாக அமையலாம்.
எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் எப்போதாவது எற்பட்டிருக்கலாம் என்பதால் இதனை அதிகம் விவரிக்க தேவையில்லை.விஷயம் என்னவென்றால் இந்த தேடலுக்கு தீர்வாக அமையக்கூடிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
தி ஃபவுண்ட் திஸ் என்னும் அந்த தளம் மறந்து வைத்த பொருளை தேடும் போது கைகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.உடனே பொருட்களை தேடும் போது இந்த தளம் துப்பறியும் புலிகளை அனுப்பி வைத்து உதவும் என்றெல்லாம் நினைத்துவிட‌ வேண்டாம்.
இந்த தளம் செய்வதெல்லாம் மிகவும் எளிமையானது.நீங்கள் மறந்து வைக்ககூடிய பொருட்களை பட்டியலிட்டு கொள்வதற்கான இடமாக மட்டுமே இந்த தளம் விளங்குகிறது.அதாவது உங்கள் வசம் உள்ள முக்கிய பொருட்கள் மற்றும் மறந்துவிடக்கூடிய பொருட்களை இதில் பட்டியலிட்டு அவற்றுடன் எங்கோ வைக்கிறோம் என்ற குறிப்பை எழுதி வைக்கலாம்.பின்னர் எப்பொதாவது அந்த பொருளை தேட நேரும் போது எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்ள திண்டாட வேண்டியதில்லை.
நேராக இந்த‌ தளத்திற்கு வந்து பார்த்தால் அந்த பொருளுக்கான குறிப்பில் வைத்த இடம் எது என்பதை தெரிந்து கொண்டுவிடலாம்.அவ்வளவு தான்.
ஆனால் ஒன்று ஒரே இடத்தில் பொருட்களை வைக்கும் பழக்கம் இருந்தால் தான் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.இல்லை பொருட்களின் இடத்தை மாற்றும் போது அதனையும் குறிப்பிட வேண்டும்.
இருப்பினும் அடிக்கடி பயன்படுத்த தேவையில்லாத முக்கியமான பொருட்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டுவர இந்த தள‌ம் உதவியாக இருக்கும்.
எல்லா பொருட்களையும் இண்டெநெட்டுடன் இணைத்து வைக்கும் காலம் இது.அந்த வகையில் மறந்து வைத்த பொருட்களை தேடும் வகையிலான இந்த தளம் தேவையானது தான்.
இணையதள முகவரி;http://www.thefoundthis.com


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


Read more »

அளவெடுக்க இந்த இணையதளம்.


இண்ட்நெர்நெட்டின் எளிமையான இணையதளங்களை பட்டியல் போட்டால் ஐரூலர் தளத்திற்கு டாப் டென்னில் இடம் தரலாம்.அந்த அளவுக்கு ஐரூலர் மிக மிக எளிமையான இணையதளம்.ஆனால் பயனுள்ள இணையதளம்.
இந்த தளத்தில் தகவல்களோ சேவைகளோ கிடையாது.இதில் இருப்பது ஒரே ஒரே ஸ்கேல் மடும் தான்.
இணையத்தில் எப்போதாவது ஏதாவது ஒரு பொருளை அளவிட வேண்டிய தேவை ஏற்பட்டால் அந்த நேரத்தில் ஸ்கேலை தேடிக்கொண்டிருக்க முடியுமா?அப்படியே தேடினாலுக் உடனே கிடைத்து விடுமா?இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்கான இணைய ஸ்கேலாக இந்த தளம் விளங்குகிறது.
இந்த இணையதளத்தில் நுழைந்ததுமே பள்ளிகூடத்தில் பரிட்சயமான ஸ்கேல் தோன்றுகிறது.
இந்த ஸ்கேலை பயனாளிகள் தங்கள் மானிட்டர் அளவுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.தேவைப்பட்டால் இந்த ஸ்கேலை அச்சிட்டு கொள்ளும் வசதியும் உள்ளது.
பிரம்மிக்க வைக்கும் சேவை என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனால் பயனுள்ள சேவை.புக்மார்கிங் செய்து கொள்ளுங்கள் கைகொடுக்கும்.
இந்த இணையதளதை போலவே வென்டியன் இணையதளம் பலவிதமான அளவுகளை அச்சிட்டு கொள்ளும் வசதியை தருகிறது.ஒரு அடி ஸ்கேல்மெட்ரிக் ஸ்கேல்,சதுர அடி என பல அளவிலான ஸ்கேலை இதன் மூலம் அச்சிட்டு பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி;http://www.iruler.net/


எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


Read more »

ரைட்டர் 2 இபப் (W2ePUB)

ஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின்  சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது
ஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது  ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும்  இதனைhttp://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.
பிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன்றிடும்   Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை  தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க
உடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்
முதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்
இரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது
மூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம்  ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்
எச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும்  ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்












எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.



Read more »

உபுண்டு-11.10 -இன் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை


எளிதான பாவணை ,உள்ளுணர்வுடைய இடைமுகம்,விரைவாக இயங்க கூடியது, பாதுகாப்பானது , ஆயிரக்கணக்கான பயன்பாட்டு மென் பொருட்களை கொண்டது , புதுமையான அனுபவத்தை வழங்குகூடியது ஆகிய அனைத்து அருங்குணங்களையும் ஒருங்கே கொண்ட உபுண்டு-11.10 இயக்க முறைமையின் சிறப்பியல்புகளை பற்றி இப்போது காண்போம்
   1.இந்த உபுண்டு-11.10 இயக்கமுறைமையுடன் ஆயிரத்திற்கும் அதிகமான பயன் பாட்டு மென்பொருட்கள் மென்பொருள் மையம்(software centre) என்பதன்கீழ்  அவைகளின் தரத்திற்கேற்ப வரிசைபடுத்தி வைத்திருப்பதால்  அவைகளிலிருந்து நம்முடைய தேவைக்கேற்றதை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளலாம்
2.இதன் முகப்புத்திரையின் இடதுபுற பலகத்தில் நம்முடைய விருப்ப கருவிகள், பயன்பாடுகள் ஆகியவற்றின் குறும்படங்கள் தயார்நிலையில் பட்டியலாக இருப்பதால் அவைகளிலிருந்து நாம்விரும்பியதை உடனடியாக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்
மேலும் இந்த பட்டியில் நாம் மேலும் சேர்க்க விரும்பியவற்றை சேர்த்து கொள்ளமுடியும் தேவையில்லாததை நீக்கிடவும் அல்லது தற்காலிகமாக மறைத்து வைக்கமுடியும்
3துவக்கத்திரையின்  மேலே இடதுபுற மூலையிலிருக்கும் இதனுடைய குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சல்,படங்கள் போன்றபயன்பாடுகளை உடனடியாக துவக்கி   கையாளுவதற்கான குறுக்குவழிகள் ஏராளமாக இதிலிருந்து கிடைக்கின்றன
4.நாம் இதனுடைய ஒரேதிரையில ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை தனித்தனி சாளரமாக தோன்றச்செய்து அவற்றுள் பணிபுரியலாம் மேலும்  அந்நிலையில் Alt + Tab , Alt + Grave ஆகிய விசைகளை சேர்த்து அழுத்து வதன் வாயிலாக அல்லது workspaces எனும் கருவியின் மூலமாக அவைகளுக்கிடையே அவ்வப்போது மாறிக்கொண்டு தடங்களின்றி பணிபுரியலாம்
5.இதில் உள்ள செந்தரமான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஃபயர்வால் ,வைரஸ் பாதுகாப்பு கவசங்கள்  போன்ற கூடுதலான பாதுகாப்பும் கிடைக்கின்றன அதனால் தனிப்பட்ட வங்கிகணக்கை பராமரித்தல் மிகமுக்கியமான தரவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய பணிகளைபயமின்றி செய்யலாம்
6.மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய பயன்பாடுகளின் எந்தவகையான கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கான ஒத்திசைவு தன்மை இதில் உள்ளதால் எதைபற்றியும் கவலையில்லாமல் எந்த கோப்பையும் கையாளமுடியும்
7.இது எந்த கணினியிலும் விரைவாக செயல்படக்கூடியது புதியகணினியெனில் மிகவும் விரைவாக செயல்படக்கூடியதாகும்
8இது வட்டாரம் மொழி பால்வேற்றுமை போன்று எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இலவசமாக கிடைக்ககூடியதாகவும் செயல்படுத்த கூடியதாகவும் உள்ளது

 




9.இதனை ஆரம்பித்து ஏறத்தாழ ஏழாண்டுகள் , பதினைந்து பதிப்புகளுடன் எந்தவித கவலையிமில்லாமல் வெற்றிநடை போடக்கூடியதாக இந்த உபுண்டு 11.10 விளங்குகின்றது
இதனை இதனுடைய http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க


   வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
Read more »
 
-