Attach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செய்வது எப்படி?


நண்பர்களுக்கு ஏதேனும் File-களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழியை பார்ப்போம்.


இவற்றை இணைக்க முயலும் போது  “FILE is an executable file" அட்டாச் செய்ய இயலாது என எச்சரிக்கை செய்தி வரும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக (security reasons) ஜிமெயில் இது மாதிரி செய்துள்ளது.

இதனை எளிதாக அனுப்ப அனுப்புனர்,பெறுநர் (email sender and reciever) இரண்டு பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது

எளிதான முறை இந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. வீடியோ பார்க்க முடியாதவர்கள் கீழே கூறி உள்ள வழிமுறைகளை பின் பற்றவும். 




அனுப்புநருக்கான வழிமுறை:

1.அட்டாச் செய்ய போகும்  பைலை எதாவது சாப்ட்வேர் மூலம் கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும். உங்களிடம் WinRAR இருந்தால் File - மீது Right Click செய்து Add To Archive என்று கொடுத்தால் போதும். RAR File ஆகி விடும்.

இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்

பெறுநருக்கான வழிமுறை:

1.பைலை Uncompress செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் WinRAR பயன்படுத்தலாம். அல்லது Windows XP, 7 போன்றவற்றில் மென்பொருள் ஏதும் இல்லாமலேயே இதை Extract செய்து விடலாம்.
Read more »

ஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவி



புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதிலேயே நம்பர் ஒன் செய்தி சேனல் என்ற அந்தஸ்தை பெற்ற ஒன்று.  ஆன்லைன் மூலம் செய்தி தந்த முதல் தமிழ் சேனலும் இதுவே. இப்போது இதனை ஆன்டிராய்ட் போனிலும் பயன்படுத்த இயலும். 

நேரடியாக Google Play தளத்தில் இல்லை. எனவே இந்த இணைப்பு மீது கிளிக் செய்துடவுன்லோட் செய்யவும். 


அத்தோடு உங்கள் மொபைலில் 3G வசதி இருக்க வேண்டும்.  

இணைய இணைப்பு அல்லது Wi-Fi தனை Enable செய்து நீங்கள் டிவி பார்க்க தொடங்கலாம்.

அவ்வளவே இனி நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 
Read more »

Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள்



பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

Read more »

Yahoo, Hotmail, Rediff க்கு Official ஆன்டிராய்ட் Apps


மின்னஞ்சல் படிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் அனைத்து தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டோம். அவசர நேரத்தில் உடனடியாக கணினியில் மின்னஞ்சல் படிக்க இயலாது. இதுவே நீங்கள் ஆன்டிராய்ட் போன் வைத்து இருந்தால், வேலை எளிதாகும். 

முக்கியமான ஈமெயில் சர்வீஸ்களுக்கு ஆன்டிராய்டில் Official Application இருக்கிறது. இதனால் நம்பிக்கையாக பயன்படுத்தலாம். அவற்றை பற்றி பார்ப்போம் 

1. Gmail


கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள இந்த App, நிறைய வசதிகளை கொண்டுள்ளது. ஆன்டிராய்ட் போன் வாங்கினாலே இது இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. 





2. Yahoo! Mail


யாஹூ நிறுவனத்தின் வெளியீடு. நன்றாக உள்ளது. 





3. Hotmail 


ஜிமெயில், யாஹூவுக்கு பிறகு அதிகமானவர்கள் ஹாட்மெயிலை தான் பயன்படுத்துகிறார்கள்.






4. Rediff Mail 


முன்பு மிக பிரபலமாக இருந்த இதற்கு, இன்னமும் பயனர்கள் உள்ளனர்.







5. Mail.com


அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துவது இது.






Read more »

விண்டோஸ் 8ல் மெட்ரோ அப்பிளிக்சே​னின் சோர்ட் கட்டை உருவாக்குவ​தற்கு


விண்டோஸ் 7லிருந்து பயனர் இடைமுகத்தில் முற்றிலும் வேறுபட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கின்றது.
இவ் இயங்குதளமானது பயனரின் செயற்பாட்டை இலகுவாக்குவதுடன் மிகவும் கவரக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் குறித்த ஒரு அப்பிளிக்கேசனின் சோர்ட் கட்டை டெக்ஸ்டொப்பில் உருவாக்குவதற்கு சற்று வித்தியாசமான செய்முறை ஒன்றும் காணப்படுகின்றது.
பின்வரும் படிமுறைகள் மூலம் குறித்த சோர்ட் கட் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.
1. டெக்ஸ்டொப்பில் right கிளிக் செய்து Shortcut என்பதை தெரிவு செய்து தோன்றும் விண்டோவில் பின்வரும் கோடிங்கை paste செய்யவும்.
%windir%explorer.exe shell:::{4234d49b-0245-4df3-b780-3893943456e1}
2. தொடர்ந்து Next பட்டனை அழுத்தி Metro Apps என பெயரைக் குறிப்பிடவும்.
3. தற்போது சோட் கட்டாக பயன்படுத்தக்கூடிய மெட்ரோ அப்பிளிக்கேசன்களின் ஐகன்கள் தோன்றும், அதில் உங்களுக்குத் தேவையானதை தெரிவு செய்ய double click செய்யவும்.
தற்போது குறித்த அப்பிளிக்கேசனுக்குரிய சோர்ட் கட் டெக்ஸ்டொப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.
Read more »

பதிவர்களுக்காக ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி

 
 பேஸ்புக்கிற்கு அடுத்த படியாக  ட்விட்டர் மிகப்பெரிய சமூக இணையதளம் ஆகும். சமூக தளங்கள் நம் பதிவுகள் பலரை சென்றைய உதவுகிறது. தற்பொழுது சமூக தளங்களுக்கு இடையேயான போட்டியில் அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன.  அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம் பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதியின் படி இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின் உதவியுடன் பிளாக்கில் இனி  அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி உள்ளது.
வழிமுறை:
  • முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • மேலே Search bar க்கு அருகில் உள்ள சிறிய அம்புகுறியை அழுத்தி Settings என்பதை கிளிக் செய்யவும். 
  • Settings பகுதி திறந்த உடன் இடது புறத்தில் உள்ள மெனுவில் Widgets - Create New என்பதை தேர்வு செய்யவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் விட்ஜெட் அமைக்க தேவையான வசதிகள் இருக்கும் அவைகளை பயன்படுத்து உங்களுக்கு பிடித்தமான மற்றும் உங்கள் பிளாக்கின் டேம்ப்லேட்டிற்கு பொருத்தமாக விட்ஜெட்டை தயார் செய்து கொள்ளவும். 
  • இதில் Domains பகுதியில் விட்ஜெட்டை இணைக்க போகும் தளத்தின் முகவரியை கொடுக்கவும். 
  • பிறகு கீழே உள்ள Create Widgets என்ற பட்டனை அழுத்தினால் ஒரு HTML கோடிங் கிடைக்கும் அதை முழுவதும் காப்பி கொள்ளவும். 
  • பிளாக்கரில் Dashboard - Layout - Add a Gadget - HTML/JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save பட்டனை அழுத்தி விட்டால் உங்கள் பிளாக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து த்வீட்களையும் காண முடியும்.
இந்த விட்ஜெட்டில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இந்த விட்ஜெட்டோடு follow பட்டனும் சேர்ந்து வருவதால் நாம் தனியே Twitter Follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
Read more »

கைப்பேசிகளி​ன் வரிசையில் புதிதாக களமிறங்கும் LG Optimus G

நாளுக்கு நாள் கைப்பேசி பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நவீன வசதிகளுடன் கூடிய கைப்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG இன் புதிய வரவாக Optimus G திகழ்கின்றது.
1280 x 768 Pixels உடைய 4.7 அங்குல Gorilla Glass-னால் ஆன முழுமையான தொடுதிரைவசதியுடன் அறிமுகமாகும் இந்த கைப்பேசிகள் கூகுளின் Android 4.0.4 Icecream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
மேலும் பிரதான நினைவகமான RAM 2GB ஆகக் காணப்படுவதுடன், 1.5 GHz வேகத்தில் செயற்படும் Quad-core Krait Processor-ஐ கொண்டுள்ளன. இவை தவிர பின்வரும் சிறப்பம்சங்களும் காணப்படுகின்றன.
General: 2G/3G/LTE.
Form factor: Touchscreen bar phone.
Dimensions: 131.9 x 68.9 x 8.45mm, 145 g.
Capacitive touchscreen: Gorilla Glass.
Chipset: Qualcomm Snapdragon S4 Pro.
GPU: Adreno 320.
Memory: 32GB storage.
Still camera: 8/13 megapixel auto-focus camera with Time catch shot, smart shutter and cheese shutter; 1.3MP front facing camera.
Video camera: Full HD (1080p) video recording at 30fps, LED flash.
Connectivity: Wi-Fi a/b/g/n, Wi-Fi hotspot, Bluetooth 4.0, standard microUSB port with MHL support (TV Out, USB host), A-GPS receiver, 3.5mm audio jack, NFC.
Battery: 2100 mAh.
Misc: Optimus U, built-in accelerometer, multi-touch input, proximity sensor, gyroscope sensor, QSlide Function.
Read more »

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயற்பாடுக​ளை சேமித்து வைப்பதற்கு

அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படுவதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுமான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஏனைய முன்னணி உலாவிகளுக்கு நிகரான சேவையை வழங்கி வருகின்றது.
இப்படிப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உலாவியின் உதவியோடு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு இணைய நடவடிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கான வசதியை IE Session Saver எனும் மென்பொருள் தருகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இறுதியாக ஓப்பின் செய்த இணையப்பக்கங்களை தனித்தனியாகவும், டேப்களாகவும் ஒரே கிளிக்கில் சேமிக்க முடியும்.
மேலும் சேமிக்கப்படும்போது குறித்த இணையப்பக்கங்களின் url அல்லது இணையப்பக்கத்தின் தலைப்புக்களின் அடிப்படையில் சேமிக்க முடியும்.
பின்னர் கணனியை மீண்டும் இயக்கும்போது அவற்றை restore செய்தால் அனைத்து இணையப் பக்கங்களும் உடனடியாகத் திறக்கும்.
Read more »

Kerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு


கணனிகளின் செயற்பாட்டு வேகமானது அவற்றின் வன்பொருட்கள் உட்பட முறைமை மென்பொருளான இயங்குதளத்திலும் தங்கியிருக்கின்றது.
அதாவது ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உருவாக்கப்படும் அநாவசியமான கோப்புக்களால் இப்பிரச்சினை தோற்றம் பெறுகின்றது.
எனினும் தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வாக Kerish Doctor எனும் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளின் செயற்பாட்டை அதிகதிப்பதற்கு உதவியாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் கணனிகளில் காணப்படும் பாவனைக்கு உதவாத தற்காலிக கோப்புக்கள், Registry காணப்படும் உடனடிக் கோளாறுகள், முறையாக uninstall செய்யப்படாத கோப்புக்கள் போன்றன சரிசெய்யப்படுகின்றன.
Read more »

Dropbox கணக்கை ஹாக்கர்களிடமிருந்து பாதுகாக்க 2-Step verification வசதியை ஆக்டிவேட் செய்ய

கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை வழங்கும் Dropbox இணையதளம் தற்பொழுது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க 2 Step verification என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதியை உங்கள் கணக்கில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாப்போம்.



2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும்  Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.

Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
  • முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும். 


  • பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
  • அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். 
  • SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம். 
  • முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும். 


அவ்வளவு தான் உங்களுடைய கணக்கில் 2-step verification வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது.  இனி ஹாக்கர்கள் பயமில்லாமல் உங்கள் கணக்கை உபயோகபடுத்தி கொள்ளலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.

(Thanks)

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »
 
-