முகநூல்(Facebook) - ல் இருந்து வரும் Notification மின்னஞ்சல்களை (E-mail), மின்னஞ்சல் முகவரிக்கு வராமல் தடுத்து நிறுத்துவது எப்படி?


பெரும்பாலும் இணையத்தினைப் பயன்படுத்தும் அனைவரும் முகநூலை பயன்படுத்துகிறோம். முந்தைய நாட்களில் இணைய மையத்திற்கு ஏதாவது தகவலினை தேடுவதற்காகவோ அல்லது வேறு அலுவலாகவோ சென்றோமானால், நமக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்ப்போம். ஆனால் இன்று நிலைமையேவேறு, முகநூலைத்தான் பார்க்கிறோம்.

முகநூலுக்கு அடிமையான நண்பர்கள் நிறைய பேர். ஆனால் இந்த முகநூலைப் பயன்படுத்திதான் லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் புரட்சியாளர்கள் தகவல் பரிமாற்றத்தையும், பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.

முகநூலில் நம்முடன் இணைந்து இருக்கும் நண்பர்கள் ஏதாவது புகைப்படங்களை இட்டாலோ, பின்னூட்டங்கள் ஏதாவது தெரிவிதாலோ, கருத்துக்களை மற்றும் இதர செய்திகளை விரும்பினாலோ, புதிய நண்பர்களின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டாலோ உடனே அது நமது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும், இது தேவையில்லை முகநூலுக்குண்டான விஷயங்களை ஏன் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது சில தோழர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் (குறிப்பாக எனக்கு ஏற்பட்டது).

இதை எப்படி தடுப்பது என்பதைப் பார்ப்போம்.

சுருக்கிய வடிவம் : Home -> Account Settings -> Notifications -> All Notifications -> Click Sub Headings -> Click Edit -> Undick All The Dicks -> Click Save Changes. Thats All

Home - ற்கு அருகில் இருக்கும் சிறிய முக்கோண வடிவ குறியினை சொடுக்கி (Click) அதில் Account Settings என்பதை தேர்வு செய்து சொடுக்கவும். 
Account Settings -னை சொடுக்கியவுடன், இடது புறத்தில் Notifications என்பதை சொடுக்கவும். (பார்க்க படம் -3). சொடுக்கியவுடன் Notifications க்குண்டான தேர்வுகள் நமக்கு கிடைக்கும், அதில்
All Notifications எனும் தலைப்பின் சிறு, சிறு உட்பிரிவுகளுடன் தெரிவுகள் இருக்கும், அந்த உட்தலைப்பிற்கு நேர் எதிராக உள்ள Edit எனும் இணைப்பை சொடுக்கி ,

அதன் பின் கிடைக்கும் அமைப்புக்களில் உள்ள அனைத்து டிக்(Dick) குகளையும் அன்டிக் (Undick) செய்து Save Changes பொத்தானை மறக்காமல் சொடுக்கி. மாற்றங்களைச் சேமிக்கவும்.

ஒவ்வோரு உட்பிரிவையும் Edit கொடுத்து Undick செய்யவும்.

முடிந்தது வோலை , ஒழிந்தது தேவையில்லாத மின்னஞ்சல் தொல்லை.

குறிப்பு: நீங்கள் ஏதாவது குழுக்களில் (Groups) இணைந்திருந்தால் , Groups னை சொடுக்கி Notifications னை Off செய்யவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-