போட்டியாளரை கலங்கடிக்கும் SunTV யின் ஒரு கோடி நிகழ்ச்சி!


(இந்த இடுகையானது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை)
தற்பொழுது இந்தியாவின் பல்வேறுபட்ட தொலைக்காட்சிகளும் பல்வேறுபட்ட வடிவில் பணத்தினை வாரிவழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான “SUNTV” (Sun network) உம் புது விதமான ஓா் நிகழ்ச்சியாக ”கையில் ஒரு கோடி Are you ready” எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது மற்றைய தொலைக்காட்சிகளிலும் விட முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டது ஓா் சிறப்பம்சமாகும். ஆனால் அதற்கு மாறாகப் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது.

இவ்நிகழ்ச்சியானது போட்டியாளரை அழைத்து அவா்கள் கையில் முதலிலேயே ஒரு கோடியினை கொடுத்து விட்டு அதன் பின்னா் கேள்வி கேட்கத் தொடங்குகிறது. அடுத்தபடியாக கேள்விக்குரிய 4 விடைகளையும் கொடுத்து விட்டு கேள்வியைக் கேட்கிறது. கேள்வி கேட்க முதல் விடை கொடுத்தால் சாதாரண மனிதனொருவன் என்ன செய்வான். தனது மூளையைக் கிளறி அவ்விடைகளுக்கு சம்பந்தமான சம்பவங்களை பட்டியல்படுத்தி வைப்பான்.இப்படி கிளறும் வேளையில் ஒரு விடைக்குச் சம்பந்தமான சம்பவம் தெரியவில்லையொன்றால் உடனே குழம்பி விடுவான். அதையும் தாண்டி கேள்வியை தெரிந்து கொண்டால் அதற்குச் சரியான விடையைக் கண்டு பிடித்து அவ்விடை இருக்கும் பெட்டியினுள் பணத்தினை அடுக்கி வைக்க வேண்டும். அந்த பணத்தை அடுக்க 60 செக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.  மற்றும் எவ்வளவு பணத்தினை அடுக்குகிறோமோ அவ்வளவு பணத்தினைத் தான் அடுத்த கேள்விக்கு கொண்டு செல்ல முடியும். அதுவும் பணம் அடுக்கிய பெட்டியினுள் இருக்கும் விடையானது சரியானதாக இருந்தால் மட்டுமேயாகும். பிழையாக இருந்தால் கோவிந்தா தான்.

இப்படி இப் போட்டிக்குச் செல்லும் போட்டியாளா்கள் தங்கள் மனதில் பல்வேறு எண்ணங்களுடன் செல்வார்கள். அதாவது அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யலாம். என்ன வாங்கலாம். என்ற எண்ணங்களுடன் தான். ஆனால் தற்செயலாக இவ்விளையாட்டில் விடையினைச் சரியாக அளிக்காவிட்டால் வந்தவா் வெறுங்கையுடன் தான் செல்ல வேண்டும். செல்லும் போது போட்டியாளன் சும்மா செல்ல மாட்டான். தான் நினைத்து வைத்திருந்த கனவுகளை அங்கேயே அடித்துச் சிதறடித்து விட்டுச் செல்வான். அது மட்டுமா இவ்வளவு கஸ்டப்பட்டு வந்தோமே. தோற்று விட்டோமே.கண்ணுக்கு முன்னால் ஒரு கோடி இருந்தும் ஒரு சதம் கூட இல்லாமல் செல்கிறோமே. என்னும் மன அழுத்தத்துடன் செல்வார்கள்..

இப்போட்டிக்கு வந்து செல்பவா்களில் எல்லோருமே வெல்ல மாட்டார்கள். குறைந்த பட்சமானவர்களே பணத்தினை வென்று செல்வர். தோற்றுச் செல்பவர்கள் யாவரும் மன அழுத்தத்துடன் தான் செல்வார்கள். இவ்விளையாட்டுக்கு வருபவர்களை  வெறுங்கையோடு அனுப்பாமல் குறைந்தளவு பணத்தையாவது கொடுத்தனுப்பினால் அவர்கள் மனம் திருப்தியாகும். வந்ததில் இந்த அளவாவது கிடைத்ததே எனச் சந்தோசப்படுவார்கள். போட்டியாளர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் இவ்விளையாட்டில் சற்று மாறுதல்களை ஏற்படுத்தினால் நன்றாகவிருக்கும்.




மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
-
இயன்லா வன்சான்ற்.

உங்களுக்கும் இவ் இடுகை பிடித்திருந்தால் கீழ்க் காணப்படும் சமூக தளங்களில் பகிர்ந்து விடுங்கள். மற்றும் இவ் இடுகை தொடர்பான விமர்சனங்களையும் பதிந்து விடவும்.


இங்கையும் போய் பாருங்களேன் :





1 கருத்துகள்:

Muralil சொன்னது…

yea Sure.Sun Network has to arrange this for minimum 1 lakh for participants, which will be reduce the stress of failed participants.
Thanks,
B.Muralidharan.

கருத்துரையிடுக

 
-