விஸ்னேப் வீடியோ மூலம் செய்திகளை அனுப்புவதற்கான சேவை.இமெயிலுக்கான இனிமையான மாற்று என்று வைத்து கொள்ளுங்களேன்.இதனை பயன்படுத்தி வீடியோ வடிவில் நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தியை பதிவு செய்து இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.
ஆனால் அரட்டை அடிப்பது போலவோ சொற்பொழிவு ஆற்றுவது போலவோ எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.ரத்தினசுருக்கமாக முடித்து கொள்ள வேண்டும்.அதிகபட்சமாக 60 விநாடிகள் தான் பேசலாம்.
இப்படி வீடியோ செய்தி அனுப்ப எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை.வெப்கேமிரா வசதி இருந்தால் போதுமானது.
வீடியோ வடிவில் தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதோடு இமெயிலை காட்டிலும் தனிப்பட்ட அடையாளத்தோடு இருக்கும்.நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு நாம் நேரில் பேசுவது போலவே செய்தி அனுப்புவது கொஞ்சம் பர்சனல் டச் கொண்டது தானே.
டைப் செய்வதை காட்டிலும் சுருக்கமாக பேசி விஷயத்தை சொல்லி விடுவது சுவாரஸ்யம் தானே.
இந்த சேவையில் விஷேசம் என்னவென்றால் இமெயில் போலவே இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.
ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மெயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.
இனி 12 செகன்ட்ஸ் தளத்திற்கு வருவோம்.அறிமுகமான போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏறபடுத்திய சேவை இது.டிவிட்டரில் 140 எழுத்துகளில் தகவல்களை பகிர்ந்து கொள்வது போல எல்லாவ்ற்றையும் 12 நொடி வீடியோவாக பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு உருவான தளம் இது.
வீடியோ வடிவிலான குறும்பதிவு சேவையாக பரபர்ப்பை ஏற்படுத்திய இந்த தளம் மூடப்பட்டு விட்டது.
புழக்கத்தில் இருந்த காலத்தில் இந்த தளம் சுவாரஸ்யமான வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.ஈரானை சேர்ந்த மனிதர் ஒருவர் இதனை தினந்தோறும் பயன்படுத்தி ஈரானில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உலகிற்கு சாம்பிள் காட்டியிருக்கிறார்.
இதே போலவே சீஸ்மிக் டிவி என்னும் தளமும் கொஞ்ச காலம் புழக்கத்தில் இருந்தது.இதுவும் வீடியோ வழி பகிர்வு சேவையை அளித்த தளம் தான்.
https://www.vsnap.com/
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,
ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!!
ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக