டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்திருக்கிறது.
அப்போது தான் டிவிட்டர் மூலம் அறிமுகம் இல்லாதவர்கள் எல்லாம் நேசக்கரம் நீட்டி திருமணம் சிறப்பாக நடக்க வைத்தனர்.
லேனும்,டேனியலும் தங்கள் திருமணத்திற்காக 18 மாத காலமாக திட்டமிட்டு அதற்கேற்ப சேமித்து கொண்டிருந்தனர்.கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்பாக திருமண ஏற்பாடுகளை கவனித்து கொள்ளும் நிறுவனத்திடம் இந்த பொருப்பை ஒப்படைத்தனர்.இதற்காக தங்கள் சேமிப்பில் இருந்து 4500 பவுண்டுகளை கட்டணமாக செலுத்தியிருந்தனர்.
திருமண் வைபவம்,அதற்கான அரங்கு கட்டணம்,150 விருந்தினர்களுக்கான விருந்து செலவு உள்ளிட்டவை அதில் அடங்கும்.
திருமணத்திற்கான மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தான் அந்த எதிர்பாராத செய்தி அதிர வைத்தது.அந்த திருமண ஏற்பாட்டு நிறுவனம் திவாலாகிப்போனாதாக தெரிய வந்தது.
கிட்டத்தட்ட திருமணத்திற்கான மொத்த தொகையையும் அந்த நிறுவனத்திடம் செலுத்தியிருந்தனர்.அந்த நிறுவனமே திவாலாகிப்போன நிலையில் கொடுத்த பனத்தை திரும்ப பெறுவதும் சாத்தியமில்லை என புரிந்ததால் இடிந்து போய்விட்டனர்.
இனி திருமணத்தை எப்படி நடத்துவது என திகைத்து நின்ற நிலையில் மணப்பெண் லாரனின் தந்தையின் உதவியால் வேறு ஒரு திருமண அரங்கை குறைந்த விலையில் ஏற்பட்டு செய்து கொண்டனர்.திருமண அரங்கு கிடைத்துவிட்டாலும் மற்ற செலவுகள் இருந்தன.
மோதிரம்,கேக்,விருந்து போன்றவற்றுக்கான செலவை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அந்த ஜோடி தவித்தது.
லாரன் டிவிட்டர் பயனாளி என்பதால் டிவிட்டர் மேல் நம்பிக்கை வைத்து அதன் மூலம் உதவி கேட்க தீர்மானித்தார்.ஜனவர் 5 ம் தேதி அவர் டிவிட்டட் மூலம் தனது டிவிட்டர் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
“திருமணத்திற்கு ஆறு வார காலமே உள்ள நிலையில் திருமண ஏற்பாட்டு நிறுவனம் திவாலாகி விட்டது ,தயவு செய்து உதவி செய்யுங்கள்’ என்று குறும்பதிவு மூலம் உதவி கேட்டவர் இந்த செய்தியை மற்றவர்களுக்கு மறுகுறும்பதிவிடவும் கேட்டுக்கொண்டார்.
அதற்கேற்பவே அவரது டிவிட்டர் தோழர்களும் இந்த கோரிகையை தங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டனர்.அவரது திருமண தோழியும் வேறு சில நண்பர்களும் தங்கள் டிவிட்டர் கணக்கு மூலம் இந்த வேண்டுகோளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த வேண்டுகோளை பார்த்த பிரபலங்களான டேனி மினோ மற்றும் லெவினா ஆகியோர் இதனை பகிர்ந்து கொண்டனர்.இருவருமே டிவிட்டர் வெளீயில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள்.பாடகியான மினோவுக்கு 8 லட்சம் பின் தொடர்பாளர்களும் நிகழ்ச்சி தொகுப்பாளராக லெவினாவுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களும் இருந்தனர்.
அதன் பிறகு தான் அந்த அற்புதம் நிகழ ஆரம்பித்தது.இந்த வேண்டுகோளை படித்தவர்களின் பலர் திருமணத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய முன் வந்தனர்.
ஒரு நகை நிறுவனம் திருமணத்திற்கான தங்க வளையங்களை தர முன் வந்தது.சாக்லெட் நிறுவனம் ஒன்று திருமண கேக்கை தருவதாக தெரிவித்தது.மேலும் பலரிடம் இருந்து உதவிகள் குவிந்தன.முன்பின் தெரியாத பலர் பணத்தையும் பொருளையும் அனுப்பி வைத்தனர்.
பத்தாய்ரம் பவுண்டு மதிப்பிலான உதவிகள் குவிந்துவிட்டன.மேற்கொன்டு கையில் இருந்த பணத்தை போட்டு திட்டமிட்ட தினத்தில் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது,டிவிட்டரிலும் வாழ்த்துக்கள் முழங்க!.
எப்படி நடக்கும் என தெரியாமல் இருந்த திருமணம் இப்படி முன்பின் தெரியாதவர்களின் உதவியோடு நடந்தது லாரன்,டேனியல் தம்பதியை நெகிழ வைத்திருக்கிறது.டிவிட்டர் நண்பர்களின் உதவியோடு திருமணம் நடந்தது தங்கள் திருமணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியிருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.கிட்டத்தட்ட கணவில் நடந்த திருமணம் போல இது அமைந்துவிட்டதாகவும் மகிழ்கின்றனர்.
டிவிட்டரின் ஆற்றலை இதன் மூலம் உனர்ந்திருப்பதாக கூறும் இந்த தம்பதி மறக்காமல் தங்கள் டிவிட்டர் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளதோடு விரைவில் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதில் ஹைலை என்னவென்றால் அந்த ஜோடி தங்கள் தேனிலவு திட்டத்தை தள்ளிவைத்து விட்டு அதற்கான தொகையை திருமண அரங்கின் செல்விற்காக தந்தையிடம் இருந்து வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தி கொண்டிருப்பது தான்.
தேவை என்றால் தேனிலவுக்காக இன்னொரு கோரிக்கையை டிவிட்டர் மூலம் தெரிவித்தால் போயிற்று என்று லாரன் புன்சிரிப்போடு சொல்கிறார்.
—–https://twitter.com/#!/laurenlane1984-——
மனித வாழ்வில் முன்னேற்றம் என்பது படைப்பில் இறைவனது செல்வாக்கு இருப்பதற்கு அடையாளமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக