அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க


நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம்.
குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும்,
படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.


 FIGLET இதனை உபுண்டுவில் நிறுவ  


$ sudo apt-get install figlet


என கொடுத்து நிறுவி கொள்ளவும்.


உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில்


$ figlet 'hello'


 என கொடுத்து பாருங்கள்.


_          _ _       
| |__   ___| | | ___  
| '_ \ / _ \ | |/ _ \ 
| | | |  __/ | | (_) |
|_| |_|\___|_|_|\___/ 




எப்புடி.??


 அடுத்து சில படங்களை ascii யாக மாற்றுவது என பார்போம்.


 இதற்கு பல டூல்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு aview, jp2a


jp2a நிறுவ


$ sudo apt-get install jp2a


எதாவது ஒரு இமேஜை மாற்ற( இமேஜ் jpg பார்மட்டில் இருக்க வேண்டும்)  


$ jp2a sample.jpg


இப்போது asciiஇல் தெரியும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-