உஸாமாவின் மரணமும் பின்னைய போராட்டமும்

உஸாமாவின் மரணம்(?) தொடர்பாக 
கைபர் தளம் விடுக்கும் செய்தி
உஸாமா மரணித்து விட்டார் என அமெரிக்க நாய்கள் மட்டுமே உளையிடுகின்றன.
உஸாமா பின் லேடனின் மரணம் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து முஸ்லிம்களின் மனதில் இனம் புரியாத கவலையும் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம்களிற்கு எதிரான உணர்வு கொண்டவர்கள் மனதில் அதீதமான வெற்றி மனப்பான்மையையும் விரவியிருப்பதை மிக நன்றாகவே அவதானிக்க முடிகிறது. இதற்கு அமெரிக்க இஸ்ரேலிய வீதிகளும் பாகிஸ்தானிய ஈராக்கிய வீதிகளும் நல்ல உதாரணங்கள். ஒரு புரம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவாறு பியர் போத்தல்களை உலுக்கி கொக்கரிக்கும் மக்கள். மறுபுரம் வெள்ளைகொடிகள் கட்டப்பட்டு சோகமயமாக காட்சி தரும் மக்கள்.


இந்த இரண்டு மனோபாவமுமே மிகத் தவறானவை. புனித ஜிஹாத் தனி மனித ஹீரோ இஸத்தில் தங்கியுள்ள ஒரு விடயமல்ல. ஜிஹாதை மேற்கொண்டதால் ஹீரோஆனவர்கள் உண்டே அன்றி ஹீரோக்களால் ஜிஹாத் நிலை நிறுத்தப்படவில்லை. ஒரு தனி மனிதனின் மரணம் ஜிஹாதில் எந்த ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தாது. இதுவே ஒரு அஜமியால் மேற்கொள்ள பட்டிருந்தால் இந்த பேரும் புகழும் அதீத கீர்த்தியும் அங்கீகாரமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.


உஸாமா யார்? அவருடைய அரசியல் இராணுவ போக்கு என்ன? அவரிற்கான பின்னணி என்ன? அவர் எதை சாதித்தார்? யாரால் கொல்லப்பட்டார்? எப்படி கொல்லப்பட்டார்? உண்மையில் கொல்லப்பட்டாரா? போன்ற கேள்விகளிற்கு விடைகளை தேடுவதில் எந்த பலனுமில்லை.


அவர் உண்மையான முஜாஹிதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் சஹாதத் எனும் உன்னதமான ஸ்தானத்தை அடைவார். அவ்வளவுதான். உஸாமா போராடியது உண்மையானால். அல்லாஹ் கூறிய அடிப்படையில் போராடியது உண்மையானால் உஸாமா மரணித்தது உண்மையானால். அமெரிக்கா அவரிற்கு நன்மையே செய்துள்ளது. உஸாமாவின் சொர்க்கத்திற்கான வாசலை அமெரிக்கா திறந்து விட்டுள்ளது. அவ்வளவே. ஒரு முஜாஹிதின் மரணத்திற்காக பிரார்த்தனை புரிவதில் எந்த தப்பும் கிடையாது.


அல் ஜிஹாத் மனிதர்களை இயக்கியதே வரலாறு. மனிதர்கள் ஜிஹாதை ஒரு போதும் இயக்க முடியாது. உஸாமாவின் மரணத்தில் அமெரிக்காவும் மேற்குலகும் மட்டுமா சந்தோசப்படுகிறது. இந்த மரணம் ஹிஸ்புத் தஹ்ரீரிற்கும் சந்தோசம் தரும் ஒரு செய்தியே.


இவரின் மரணம் ஒரு வகையில் உலகலாவிய ஜிஹாதிற்கான வாயலை திறந்து விட்டிருக்கிறது என்பதே உண்மை. அவரின் உள்ளத்தை அல்லாஹ்தான் அறிவான். கூலி வழங்குவதில் அல்லாஹ் மிக நீதமானவன்.


முஸ்லிம்களிற்கு எதிரான உலகளாவிய அநியாயங்களிற்கு அடிப்படை சக்திகளான அமெரிக்க மற்றும் ஸியோனிஸத்திற்கு இது ஒரு மகத்தான வெற்றியல்ல என்பது தெளிவாகத் தெரியும். இப்போது இவர்கள் செய்வது ஒரு உளவியல் யுத்தம். 


இஸ்ரேலிய இராணுவ தளபதி சொன்ன வார்த்தைகளே உண்மையானவை. "உஸாமா பின் லேடனின் மரணம் என்னுள் பெரிதாக ஒரு நிம்மதியை என் இதயத்தில் கொண்டு வரவில்லை. நான் முதலாவது பூரித்தது யெஹியா அய்யாஸின் மரணச் செய்தி கேட்டு. இரண்டாவது பூரித்தது அஹ்மட் யாஸினின் மரணச் செய்தி கேட்டு. அரபாத்தின் மரணமோ அல்லது உஸாமாவின் மரணமோ என் வீட்டு பூனை, குட்டி இறந்ததை விட பெரிய விடயமல்ல".
Read more »

இன்று உயிர்த்த ஞாயிறு. HAPPY EASTER!..


உயிர்த்தார்… உயிர்த்தார்… கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்…!” என்ற கீதம் முழங்க மன்னவர் இயேசு உயிர்த்தெழுந்தார்.பரமன் இயேசு, தாம் வாக்களித்தபடியே மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நன்னாளை இன்று கிறிஸ்தவ உலகமே விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு மானிடர் அனைவருக்கும் மீட்பளிக்கின்றது. இதுதானே இறை இயேசுவின்; லட்சியம், நோக்கம் எல்லாம?
இயேசுவின் மரித்த திருவுடலை சிலுவையினின்றும் இறக்கி அன்னை மரியாளின் மடியில் கிடத்தினர். பின்னர் அருகிலிருந்த கல்லறை ஒன்றில் அவரை அடக்கம் செய்தனர். அந்தக் கல்லறைமீது பெரிய பாறைக்கல் ஒன்றையும் வைத்துவிட்டு உறவினர்களும் சீடரும் சென்றுவிட்டனர்.
அதேவேளை கல்லறையை இரு போர் வீரர்கள் காவல் காக்கவும் தவறவில்லை.மறுநாட் காலை பரிமளத் தைலங்களுடன் மரியாள் தன் சீடர்களுடனும் உறவினர்களுடனும்; கல்லறையில் கிறிஸ்துவின் உடலைத் தேடினார். ஆனால்… அங்கே கிறிஸ்துவில் உடல் இருக்கவில்லை.
கல்லறையை மூடி வைத்திருந்த பாறைக் கல் அகற்றப்பட்டு கல்லறை வெறுமையாக இருந்தது. அவர்கள் அதிசயப்பட்டுத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர்.
அப்போது கல்லறையின் தலைமாட்டில் மின்னலைப் போன்று ஆடையணிந்த வான தூதர்கள் இருவர் இருக்க கண்டு ஆச்சரியமடைந்த வேளை,”உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்? கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் அன்று கூறியதை நினைவுப்படுத்திப் பாருங்கள்” என்று கூறினர். சிறு பொழுதில் வானதூதர் மறைந்தனர்.
ஆம். கிறிஸ்து, நம் மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்த விசுவாசத்துடன், நாமும் எமது மன்றாட்டுக்களை உயிர்த்த இயேசுவின் பாதக்கமலங்களில் சமர்ப்பிப்போம்.”இறைவா, எமது நாட்டில் நிரந்தர சமாதானமும் நீடித்த ஒற்றுமையும் நிலவ அருள்தாரும்.”
இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம். இறைமகன் காட்டிய வழியில் அவருக்கு பிரமாணிக்கமாய் நாமும் வாழ இந்நாளில் திடசங்கற்பம் கொள்வோம்.
Read more »

நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.....- சத்திய சாயி பாபா





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாடும் உலகமும் நன்மை பெறட்டும் .

பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துõய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம்.
சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம்.
சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை.
ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே.
இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது.
ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால்,
நல்ல விளைவுகள் ஏற்படும்.
அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும்.
இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

நான் உங்களை வேறொன்றும் கேட்கவில்லை.
பிரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும்.
வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு கவலை என்பதே கிடையாது.
துயரமும் இல்லை.
எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன்.
எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வரும்போது கொண்டுவரவில்லை.
போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை.
பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன்,
தளராத நம்பிக்கையுடன்,
வேறுபாட்டு உணர்வை நீக்கி,
எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை புனிதமாகும்.
நாடும் உலகமும் நன்மை பெறும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய்.
ஒளி உன்னிடம் இருக்கிறது.
நீயே ஒளியாகிறாய்.
உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க இயலும்.
வெளியுலக வாழ்வின் மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக்கை மறக்கவைக்கும்.
ராமதாசர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றி கூறினார்.
ஏனென்றால், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவு கூர்ந்து,
வெளி உலகத்தை முழுமையாக விலக்கி வைத்து,
ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத்தமைக்காக நன்றி பாராட்டினார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும்.
அறியாமைத்திரை கிழிபடட்டும்.
தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும்.
நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்.

முன்னதாக புறப்படு.
மெதுவாக ஓட்டு.
பாதுகாப்பாய் போய்ச்சேர்.
உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள்.
அது "நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்.

தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது.
அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே.
கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான்.
இதில் சந்தேகம் வேண்டாம்.
நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


ஆத்மாவிற்கு உரமிடுங்கள் .

பாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்படைந்து வருகிறது.
அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.

உன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.

பல மரங்களைப் பார்த்திருக்கலாம்.
சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன.
அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது.
அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை.
இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான்.
இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது.
அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு.
அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.

ஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.
தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு.
அது நல்ல மனித இயல்பு அல்ல.
அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல.
அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.

பயமே நோய்க்கு காரணம்
* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான்.
மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை விளைவிக்கிறது.
உணவை சமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்கம், கடவுள் நமக்கு அளித்த கடமைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும்.
இதன் விளைவு கடவுளை நோக்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருத்தமான விஷயம்.
ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது.
உண்மையான கல்வி, மனிதனுக்கு இன்பத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும்.
கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறியோ, அவதூறாக பேசியோ, துன்புறுத்தினாலும், அதனையே அவனுக்கு திருப்பாதே.
சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள். ஒருவனை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப்பதில்லை.
28 -09 -2006
---------------

நேர்மையான வாழ்க்கையின் முதல் அடிப்படைத் தேவை,
மௌனத்தைக் கடைப்பிடிப்பது தான்.
ஆன்மீக சாதகரின் பேச்சே மௌனம் தான்.
மௌனத்தின் ஆழத்தில் தான் கடவுளின் குரலை நீ கேட்க முடியும்.

இரண்டாவது அடிப்படைத் தேவை சுத்தம்.
வெளிப்புற சுத்தம் அல்ல.உட்புற சுத்தம்.
இந்த உட்புற சுத்ததிற்கென்று தனிப்பட்ட சோப்பும், தண்ணீரும் கிடையாது.
உட்புற சுத்ததிற்கு...விடாப்பிடியான நம்பிக்கை என்ற சோப்பும்,
இடை விடாத சாதனை என்கின்ற தண்ணீரும் இருக்கின்றன.
மூன்றாவது அடிப்படைத் தேவை...
தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு.

கடமையே கடவுள்.வேலையே வழிபாடு.
ஒரு குறிப்பிட்ட வேலை நேரத்தின் போது போடப்படுகின்ற யூனிபார்ம் போல வழிபாடு இருக்கக் கூடாது.[வேண்டும் போது போது போடுவதும் ...வேண்டாத போது கழட்டுவதும். ]

உங்கள் மனமானது இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் பற்றி விடாமல் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
1.மௌனம்.
2.உட்புற சுத்தம்.
3.கடமையில் கண்ணாக இருத்தல்.

வெளி உலகத்தில் வாழ்க்கை தீராத துன்பம் நிரம்பியது.
ஆனால்...உள் உலகத்தில் வாழ்க்கை என்பது...எளிமையானது.சுலபமானது.
வாழ்க்கை என்பது ஒரு புனித யாத்திரை.
மனிதன் முள் நிறைந்த கரடு முரடான பாதையில் சிரமப்பட்டுக் கொண்டு போகிறான்.
பகவத் நாமம் அவன் நாவிலே இருந்தால் தாகம் எடுக்காது.
இதயத்திலே இறை உருவம் இருந்தால்...களைப்புத் தெரியாது.
சாதுக்களின் சேர்க்கை அவனை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பயணம் செய்ய வைக்கும்.
பகவான் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கின்றான் என்ற நிச்சயம் உனக்கு வலுவூட்டும். உன் இதயத்திற்கு தைரியமூட்டும்.


ஆன்மீக வைத்தியதிலும் பல மருந்துகள் உள்ளன.
அத்தனை மருந்துகளிலும் சர்வரோக நிவாரணி....பிரேமை ஒன்று தான்.
A முதல் Z வரை உள்ள அனைத்து விட்டமின்களும் பிரேமையில் அடக்கம்.

நான் என்றும் எப்போதும்....எப்போதும்....
உங்களுடனேயே இருக்கின்றேன்.
உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி....
உங்கள் கற்பனையே.
உங்கள் இதய விளக்கில்
அன்புச் சுடரை ஏற்றி வைக்க
நான் வந்திருக்கின்றேன்.
அதன் ஒளியிலே நீங்கள் ஒவ்வொருவரையும்
சாயியாகவே காண்பீர்கள்.
21 - 09-2006
சாய் ராம்.
----------------------------
SWAMI PHOTOS LINKS [NEW]
Read more »

பகவான் சத்ய சாயி பாபா பற்றிய அருமையான பதிவுகள்


அதிசய சித்தர் அவதாரம்
எனது வாழ்க்கையே எனது செய்தி

தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர்

உன் உள்ளமும் பிரசாந்தி தான்.

போதனைகள்


29.4.2009 கொடைக்கானல் அருளுரை

பாபா உணர்த்தும் பாடம்!

ஒப்பற்ற ஒரு உயர்ந்த புனித சக்தி.

அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்!

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!


சாயி விரத கதை

ஸ்ரீ சத்ய சாயியின் கிறிஸ்துமஸ் தரிசனம்

ஸ்ரீ சத்ய சாயியின் கோடைப் பயணம்

நிலவில் கண்ட சாயிபாபாவின் விஸ்வ விராட் ஸ்வரூப தரிசனம்

சுவாமியின் தரிசனம் காணுவோம்!

Happy Birthday Bhagavan Sri Sathya Sai Baba!

மிகப் பழைய படங்களில் சில (1944 - 46)


சத்ய சாயி பாபாவின் வீடியோ காட்சிகள்


http://www.youtube.com/watch?v=oDnfTd40M0Q&feature=related

http://www.youtube.com/watch?v=hLuRVF30Iy4&feature=related

http://www.youtube.com/watch?v=-pUzkA22NOs&feature=related

http://www.youtube.com/watch?v=CVPYDGcMeJw&feature=related


http://www.youtube.com/watch?v=ZI47DRaW0xo&feature=related


http://www.youtube.com/watch?v=_HNWcZ5G72c&feature=related


http://www.youtube.com/watch?v=1fs1OBY82b0

http://www.youtube.com/watch?v=pPPFZ76ns2w

http://www.youtube.com/watch?v=w8HtbFugrW8

http://www.youtube.com/watch?v=ollVJoRzBtc

http://www.youtube.com/watch?v=02Iwcr53_ro

http://www.youtube.com/watch?v=IKglsz517J4&feature=fvst


http://www.youtube.com/watch?v=GWF3TmK33L8

http://www.youtube.com/watch?v=HbEI2xq9OEw

http://www.youtube.com/watch?v=_fKwJBwTL0M


http://www.youtube.com/watch?v=pc6mwb0Rd-U

http://www.youtube.com/watch?v=_fTreEXbUj0

http://www.youtube.com/watch?v=2HT1IFZcD70


http://www.youtube.com/watch?v=dVzxrPKA8MM

http://www.youtube.com/watch?v=8r23T3UzECM

http://www.youtube.com/watch?v=OF__jZlBqLo

http://www.youtube.com/watch?v=QDW_E_besgI


http://www.youtube.com/watch?v=C43WwWbbDBg

http://www.youtube.com/watch?v=oIl0ItYBFy8

http://www.youtube.com/watch?v=KerOOT97wmM

http://www.youtube.com/watch?v=-Ypfae2yyrk

http://www.youtube.com/watch?v=HuZBjYu6Quo


http://www.youtube.com/watch?v=oA-xAOduMTs

http://www.youtube.com/watch?v=tyeaJpD8Jwg

http://www.youtube.com/watch?v=mz6kxP-B4oc&feature=related
Read more »

Angels & Demons


இந்தப் படத்தில் வரும் காட்சிகளும்,கதாபாத்திரங்களும் கற்பனையே. . எதையும்,யாரையும் குறிப்பிடுபவையல்ல. . .’ என்றுAngels & Demons படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் தியேட்டரில் ஸ்லைடு போடுகின்றனர்.
இப்படி எத்தனையோ படங்களில் சொல்லியிருந்தாலும், Angles & Demons-ஐ நாம் அப்படி நம்பிவிடமுடியாது. இது யாரையோ குறிக்கிறது, அல்லது யாரையோ குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதற்கு ஒரு காரணம், வலுவான பின்னணியும் உண்டு.2006இல் ஸோனி பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்ட ‘The Davinci Code’, $750மில்லியன் வசூல் செய்து உலக சாதனையை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக கிறிஸ்துவர்கள், குறிப்பாக கத்தோலிக்க பிரிவினரின் எதிர்ப்பையும் சந்தித்தது. பெரும் தடைகளுக்குப் பிறகு வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு Action, thrill, suspense படம் எப்படி இருக்கவேண்டும் என்று இயக்குநர் Ron Howard அதில் நிரூபித்துள்ளார்.
அதற்குக் கொஞ்சமும் குறைவின்றி, அதே வேகத்துடன், விவாதத்திற்குரிய விஷயங்களுடன் வந்திருக்கும் Ron Haward-இன் புதிய படம்தான் Angels & Demons.Angels என்றால் தேவதைகள் என்பது தெரியும். Demons என்பது என்னவென்று எனக்குத் தெரியாததால், டிக்ஷனரியைப் புரட்டினேன். இதன் உச்சரிப்பு,டெமன் அல்ல. டீமன். அர்த்தம்: Supernatural being of eveil qwalities தீய ஆவி. . .
ஆக, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் இடையறாத யுத்தம்தான் கதை. யார் நல்ல சக்தி என்பதை எவர் தீர்மானிப்பது என்பதில்தான், விஞ்ஞானிகளுக்கும், ஆன்மிக பீடங்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.‘The Davinci Code’, ‘Angels & Demons’இரண்டும் பல லட்சம் பிரதிகள் பரபரப்பாக விற்பனையான நாவல்கள்.இவற்றை எழுதியவர் Dan Brown. இந்த நாவலின் நாயகன்,வழக்கமான மசாலா படங்களில் வரும் போலீஸ்காரனோ அல்லது ரகசிய ஏஜெண்டோ கிடையாது.ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் Robert Langdon தான் ஹீரோ. இந்தப் பாத்திரத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ Tom Hanks நடித்துள்ளார்.
The Davinci Code -இலும் இவர் இதே பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கையில் ஆயுதம் கிடையாது. சண்டை போடமாட்டார். இவர் ஒருSymboligist. அதாவது குறி, குறியீடுகளைப் படிப்பவர். அதன் மூலம் பரபரப்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைத் தருபவர்.கடந்த படத்தில் கதாநாயகி அழகாக இல்லை என்கிற குறை என்னைப்போன்ற கலா ரசிகர்களுக்கு இருந்ததை உணர்ந்த இயக்குநர்,இந்தப் புதிய படத்தில் அந்தக் குறையை நீக்கிவிட்டார்.இஸ்ரேலிய நடிகை Ayelet Zureer என்கிற பேரழகிதான் நாயகி. இவர் நின்றால் நிலா. நடந்தால் நந்தவனம். இவரது ஓரவிழிப் பார்வைக்காக, எவ்வளவு தூர வழியையும் கடக்கலாம். ஆறடி ஆரஞ்சு, உடம்பெல்லாம் ரோஜா பஞ்சு.சினிமாக்களில் Sequelவருவதுண்டு. அதாவது தொடர்ச்சி, இரண்டாவது பாகம்.உலகம் சுற்றும் வாலிபனுடைய sequelகிழக்காப்பிரிக்காவில் ராஜு,ஊமை விழிகளின் sequelமூங்கில்கோட்டை. இரண்டும் அறிவிக்கப்பட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை.இந்த இரண்டு படங்களையும் எடுக்கும் முயற்சியில் விஜயகாந்த் இறங்கினால்,இவை அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது என் நம்பிக்கை. . .ஒரு படத்திற்கு முந்தியது,இந்தக் கதைக்குமுன் என்ன என்பது Prequel.அப்படித்தான் The Davinci Code-இன் prequel-ஆக Angels & Demons வெளிவந்து,பெரிய வசூல் சாதனையையும், பெரும் வரவேற்பையும் பெற்றுவரும் அதே சமயம், சர்ச்சுகளாலும், கத்தோலிக்கர்களாலும், உலக கிறிஸ்துவர்களின் தலைவர் போப் இருக்கும் வாடிகன் நகரத்திலிருந்தும் எதிர்ப்பும் பெரிய அளவில் கிளம்பி இருக்கிறது.இந்த அளவிற்கு எதிர்ப்பைச் சந்திக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?போப் இறந்துபோன சூழலில் கதை துவங்குகிறது. அதனால் அவரால் தத்தெடுக்கப்பட்ட பாதிரியார் Ewan the gregon மிகுந்த துயரத்தில் இருக்கிறார்.அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நான்கு கார்டினல்கள்-அல்லது இவர்களில் ஒருவர்தான் அடுத்த போப்பாக வரவேண்டியவர். அந்த நால்வரும் கடத்தப்படுகின்றனர்.அது மட்டுமின்றி, கார்டினல்களைக் கடத்தியவன் இவர்களை அன்றிரவே எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று மணிக்கு ஒவ்வொருவராய்க் கொல்வதாக எச்சரிக்கையும் விடுகிறான்.அவன் விட்டுச்சென்ற காகிதத்தில் Illuminati என்கிற symbol உள்ளது. இது17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நாஸ்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதில் ஆரம்பத்தில் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகளும் உறுப்பினராக இருந்ததுண்டாம். விஞ்ஞானத்தை எப்பொழுதுமே மதம் மறுத்து வந்துள்ளது. விஞ்ஞானம் வளர வளர,மக்களின் மூட நம்பிக்கைகள் குறையும்போது, மதத்தின் வியாபாரம் படுத்துவிடும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் மிகவும் இழிவுபடுத்தி கிறிஸ்துவத்தின் தலைநகரான வாடிகன் நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல சதிகளைச் செய்து விஞ்ஞானிகளைக் கொன்றுள்ளதாக இந்தக் கதை கூறுகிறது.அந்த விஞ்ஞானிகளுடைய வழித்தோன்றல்கள்,நாஸ்திகர்களால் இன்றும் நடத்தப்படும் ஒரு ரகசிய சபைதான் Illuminati. . .பழிவாங்கத் தக்க தருணத்திற்காகக் காத்திருந்த அவர்கள், புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் நான்குகார்டினல்களைக் கடத்திவிடுகின்றனர்.Symboligist-ஆன Tom Hanks, புனித நகருக்கு வந்து குறியீடுகளைப் படித்து, ஒவ்வொரு இடமாக வேகமாகச் சென்றும், சொன்ன நேரத்தில் முதல் மூன்று கார்டினல்கள் கொல்லப்படுகின்றனர்.நிலம் காற்று நெருப்பு என்று மூன்று விதத்தில் மூவர் கொல்லப்பட,இறுதியில் தண்ணீரில் கொல்லப்பட இருந்த Cardinal-ஐ மட்டுமே Tom Hanks-ஆல் காப்பாற்ற முடிகிறது.இந்தக் கதையின் ஊடே பரபரப்பான இன்னொரு முடிச்சும் போடப்படுகிறது. கதாநாயகி Ayelet Zureet ஒரு விஞ்ஞானி. ஜெனிவாவின் ஸெர்ன்லேப்பில் பணிபுரிபவர். அங்கிருந்து ஒரு ஆபத்தான ரசாயனம் திருடு போகிறது. இதைப்பற்றி நாயகி போலீசில் சொல்லவரும்போதுதான்,நாயகன் Tom Hanks-உடன் நட்பு ஏற்படுகிறது.அந்த ரசாயனமும் தீய சக்திகளின் கைகளில்தான் இருக்கிறது. நான்கு கார்டினல்கள் கொல்லப்பட்டபிறகு, சரியாக இரவு 12 மணிக்கு புனித தேவாலயம் உட்பட வாடிகன் நகரையே அழிப்பதுதான் அவர்களின் நோக்கம்.இந்தப் பேரழிவிலிருந்து அந்த நகரையும், புதிய போப்பின் தேர்வுக்காகவும்,பழைய போப்பின் மறைவுக்காகவும் வந்துள்ள லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதும் பெரிய சவாலாக உள்ளது.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டாரா, ஆபத்தான ரசாயனத்திலிருந்து, அதன் அழிவிலிருந்து புனித நகரம் மீண்டதா என்பதை பரபரப்பான கிளைமேக்ஸில் மெய்சிலிர்க்கும் விதத்தில் இயக்குநர் Ron Hawardதனக்கேயுரிய ஸ்டைலில் அசத்தும் விதத்தில் சொல்கிறார். ஏறக்குறைய 2மணிநேரம் 19 நிமிடங்கள் ஓடும் இப்படம், கொஞ்சம் கூட சலிப்பைத் தரவில்லை. அதற்கு நாவல் எழுதிய Dan Brawnன் விறுவிறுப்பான கதை மட்டுமே காரணமல்ல, David Koepp மற்றும் Akiva golsman ஆகியோருடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையும் முக்கிய உதவியாக உள்ளது.இந்தப் படம் ஓடும் நேரம்,ஏறக்குறைய ஒரு தமிழ்ப்படம் ஓடும் நேரம்தான். ஆனால்,இவ்வளவு வேகமாக நம் ஆளுங்க ஏன் திரைக்கதையை எழுதுவதில்லை. நம் ஆளுங்களுக்கு வேகம் என்றால் சேஸிங் ஸீன்தான். . .இந்தப் படம் வேகம், விறுவிறுப்பு இவைகளில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதேமாதிரிதான் The davinci Code-உம் இருந்தது.இதுபோன்ற படங்கள் இங்கே எப்ப எடுப்பார்கள்?ஒருவேளை கமல்ஹாசன் Angels & Demons நாவலைப் படித்துத்தான்‘தசாவதாரம்’ படத்தின் கதை எழுதியிருக்க வேண்டும். அதன் சாயல் அதில் நன்றாகத் தெரிகிறது. ஆனால், உலக நாயகனாலே ஒரு சிறந்த திரைக்கதையை எழுத முடியாதது உலக வேதனை.பிளேக், டிபி, கேன்ஸர், எய்ட்ஸ் என்று ஆளைக் கொல்லும் நோய்கள் ஒரு பக்கம். சூறாவளி, பூகம்பம், புயல் மழை, சுனாமி என்று இயற்கைப் பேரழிவுகள் ஒரு பக்கம். இவைகளால் இதுவரை உலகில் கொல்லப்பட்டவர்களைவிட, மதங்களின் பெயரால், சொர்க்கத்தின் நம்பிக்கையால், கடவுள்களை குஷிப்படுத்த மனிதர்கள் மிக அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் உலகில் இன்றும் ஏழ்மை ஒழியவில்லை? ஏன் இன்னும் போர் ஓயவில்லை?இன்றும் ஏதோ ஒரு மூலையில் பசிக்காக பால்சுரக்காத முலைகளில் முட்டி மோதும் பிஞ்சின் ஓலம் நம் காதல் விழுந்து கொண்டிருக்கிறது.கடவுள் Angels & Demons-ஐ அனுப்புவது இருக்கட்டும். முதலில் ரொட்டி அனுப்பட்டும் என்றுதான் அந்த ஓலம் சொல்கிறது.இந்த ஓரவஞ்சனை சமுதாயத்தில் நிலவும்வரை, பணக்காரர்களுக்குப் பாதுகாப்பாக மதபீடங்கள் விளங்கும்வரை illuminatiகளுக்கு அழிவில்லை என்றுதான் நினைக்கிறேன்.அழகை ஆராதிக்காத, அன்பைத் தாலாட்டாத, இசையைச் சீராட்டாத. .மழலையை ரசிக்காத. . . மதம். . அது இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன. . .Angels & Demons குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும், அதன் ஆதிக்கத்தையும் குறித்து கேள்வி எழுப்புவதாக நான் நினைக்கவில்லை. Dan Brawn நாவல்,மற்றும் எழுத்து ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஒரு போர்ப்பிரகடனமாகும்.
Read more »

பெரிய வெள்ளி....



உலக வாழ் கிருஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் பெரிய வெளியினது உண்மையான தாற்பரியத்தை புரிந்து கொண்டு செயற்பட்டால் நாட்டில் உண்மையான ஒன்றுமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அது போல் தற்போது உலக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்தும் விடுபட பெரிய வெள்ளி தின கோட்பாட்டை விளங்கி செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாழ் கிருஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளியை அனுஷ்டிகின்றனர்.
Read more »

யுத்தம் செய் - சினிமா விமர்சனம்

மிஷ்கினின் மற்றுமொரு சிறந்த படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் இயக்கம் என்றால் என்னவென்பதை உதவி, துணை, இணை இயக்குநர்களுக்காக மிஷ்கின் எடுத்திருக்கும் 4-வது திரைப்பாடம்.


உலகத்தின் புராதனத் தொழிலான பாலியல் துறையின் நவீனமயமாக்கலில் Bizarre என்றழைக்கப்படும் காம சேடிஸத்தையும், அதனை ரசித்து அனுபவிக்கும் மேட்டுக்குடி மக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுயிருக்கிறது இந்தப் படம். நிச்சயமாக தமிழ்ச் சூழலுக்கு இதன் கதை புதிதுதான்.

தினவெடுத்த பணம் கொழுத்த முதலாளிகள் தங்களது ஆற்றாமையை போக்கிக் கொள்ள அப்பாவி இளம்பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலில் சிக்கிக் கொண்டு ஒரு அபலைப் பெண் உயிரைவிடுகிறாள். அவளது உயிருக்காக அதுவரை சமையலறையில் மட்டுமே கத்தியைப் பிடித்திருந்த அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும், தம்பியும் போஸ்ட்மார்ட்டம் ஸ்பெஷலிஸ்ட்டுகளை போல பதிலுக்குப் பதில் கொடுப்பதுதான் கதை.

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் மிஷ்கினின் சாம்ராஜ்யம்தான். அதே Wide Angle Shots. Long Shots.. கிடைத்த இடங்களில் மட்டுமே பின்னணி இசை.. அந்த இசையிலும் ஓட வைப்பவை.. மனதை லயிக்க வைப்பவை.. அழுக வைப்பவை என்று வெரைட்டியாக வயலினும், பியானோவும் கலந்து கட்டி அடித்து கதைக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

சேரன் இதுவரையில் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. அவர் தனது படங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் இல்லை என்று கூறினாலும் இதுதான் உண்மை. அவர் தானே நடித்து தன்னை இயக்கிய திரைப்படங்களில் காட்டியது தமிழ்ச் சினிமாவின் ரசிகனை சமாதானப்படுத்த அவர் செய்து கொண்ட சமரசமான ஒரு நடுத்தர வர்க்க அடையாளம்தான் தெரிந்திருந்தது. ஆனால் இதில் வெறும் சேரன் மட்டுமே..



ஹீரோ இருக்கிறார். ஹீரோயின் இல்லை. காமெடியன் இல்லை.. ஆனால் வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இதில் யார் நிஜ வில்லன்..? யார் நிஜமில்லாத வில்லன் என்பதை படத்தின் முக்கால் பாகம் வரையிலும் சஸ்பென்ஸாகவே கொண்டு போயிருப்பதுதான் படத்தின் பலமே..

ஊரின் பல இடங்களில் வைக்கப்படும் அட்டைப் பெட்டியில் கிடக்கும் கைகளைப் பார்த்து விசாரணையைத் துவக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான சேரனுக்கு ஏற்கெனவே இருக்கும் ஒரு பிரச்சனையைத் தெளிவாக்கிவிட்டுத்தான் காட்சியையே துவக்கியிருக்கிறார் இயக்குநர். இதனால் இயக்குநருக்குக் கிடைத்த பலம் சேரனின் இறுக்கமான முகம். உடல்வாகு போலீஸ்போல் இல்லாவிட்டாலும் நடை, உடை, பாவனை மூலம் சேரனை போலீஸ்காரனாகக் காட்டிவிட்டார் மிஷ்கின்.



காட்சியமைப்புகளை இப்படித்தான் மிஷ்கின் வைத்திருப்பார் என்ற ஊகத்தில் அவரது பெரும் ரசிகர்களான என்னைப் போன்றவர்கள் பலர் இருந்தாலும், எதுவுமில்லாமல் திரையரங்கிற்கு வந்தவர்களும் பிரமித்துத்தான் போனார்கள்.

போஸ்ட்மார்ட்டம் அறையை இவ்வளவு துல்லியமாக அலசியது இந்தத் தமிழ்ப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயப்பிரகாஷின் அந்த வேடம், இறுதியில் பேசப்படப் போகிறது என்பதை முதலில் யூகிக்கவே முடியவில்லை.



சேரன், தனது சக அதிகாரிகளின் ரிக்கார்ட் பைலை குப்பைத் தொட்டியில் போடுவதில் ஆரம்பித்து பல காட்சிகளுக்கு அரங்கத்தில் கை தட்டல்கள் தூள் பறத்தியது ஆச்சரியம். சேரன் பாலத்தின் மீது சண்டையிடும் காட்சியின் மூலம் அஞ்சாதேயில் பார்த்திருந்தாலும், இதுவும் ஈர்க்கப்படும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது. சேரனின் நடிப்புல வாழ்க்கையின் அடையாளத்திற்கு  ஒரு சிறிய கிளிப்பிங்க்ஸ் இந்தச் சண்டைக் காட்சியில் இருந்து நிச்சயம் உருவப்படும். கண்ணைச் சிமிட்டாமல், இறுக்கமான முகத்துடன் ரவுடியின் நெஞ்சில் சேரன் தனது சிறிய கத்தியால் குத்திக் கொண்டே செல்லும் காட்சியில் தியேட்டரிலும் கை தட்டல்கள் பறந்தன.. அஹிம்சை எதிர்த்து ஹிம்சை வந்தால் அதனை அதன் வழியிலேயே எதிர்கொள் என்பதுதான்  இன்றைய தலைமுறையின் அறிவுரை போலும்.

தனக்குச் சரியாக பதில் சொல்லாத ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் “ஹெட்குவார்ட்டர்ஸ் போயி பேசிக்கலாமா..?” என்று அமைதியாகச் சீறுகிற காட்சியிலும், சேரனைத் திட்டும் அந்தப் பெண்ணிடம் கான்ஸ்டபிள் ஈ.ராமதாஸ் “பிரார்த்தல் கேஸ்ல உள்ள தூக்கிப் போட்டிருவேன்.. வாயை மூடு..” என்று மிரட்டும் காட்சியிலும் அடுத்தடுத்து கை தட்டல்கள்.. மிச்சம், மீதியை இறுதிக் காட்சியே அள்ளிக் கொண்டுவிட்டது.

சித்திரம் பேசுதடியிலும், அஞ்சாதேயிலும் நரேன் காட்டியிருந்த அதே உடல் மொழியினை இங்கேயும் சேரன் காட்டுகிறார். தலையைக் குனிந்திருப்பது, சண்டைக்குத் தயாராக நிற்பது.. கை முஷ்டிகளை எப்பவுமே விறைத்த நிலையில் வைத்திருப்பது என்று மிஷ்கின் அடியாள் போலவே ஆகியிருக்கிறார் சேரன். உடல் மொழியும் மிஷ்கினுக்கு ஒரு ஆயுதம்தான். இதில் சேரனின் தனது தங்கையிடமிருந்து வந்த போனை அட்டெண்ட் செய்யும் காட்சியும் ஒன்று. ஆனால் இத்தனை தூரம் கஷ்டப்பட்டவர் அந்த ஒரு நொடியில் தங்கைக்காக பிடிபட்டவனை பண்ட மாற்றம் செய்ய நினைக்கும் அந்த ஒரு செகண்ட்டில் திரைக்கதையாசிரியர் தோற்றுவிட்டாலும் சேரன் ஜெயித்துவிட்டார்.


இன்னுமொரு உதாரணம், ஒய்.ஜி.யின் மகள் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியுடன் அவளது அம்மா கண்கள் நிலை குத்தி நிற்க நிலைகுலைந்து போய் விழுவது. இறுதிக் காட்சியில்  தனது கணவனைத் தாக்குபவனின் தலையில் லஷ்மி கத்தியை இறக்குவது என்று பிரமிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். இன்னும் ஆழமாக எழுதினால் இனி பார்க்கவிருப்போருக்கு எதிர்பார்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

திருவல்லிக்கேணி தெருவில் சேரனும், அவரது குழுவினரும் ஓடுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை தூக்க வந்த குவாலிஸ் காரை சேரனின் கார் துரத்துகின்ற காட்சியிலும் பின்னணி இசையைச் சொல்லி மாளவில்லை. இசையமைப்பாளர் பெயர் கே என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.. அவருக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தில் எங்கே தேவையோ அங்கே மட்டும் இசையை வைத்து நிரப்பியிருக்கிறார். அதிலும் அத்தனையும் சோகம் ததும்பும் இசைக் குறியீடுகள்.. பல இடங்களில் மெளனம்தான்.. மெளனம்தான் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்கிறது படத்தில்..?

சேரன் சண்டையிடுவதற்காக இடம் தேடி நடக்கின்ற காட்சியில் தொடர்ச்சியாக இசையும், இசை இல்லாமலுமாக நம்மையும் தடக், தடக் நிலைமைக்கு கொண்டு போயிருக்கிறார். இயக்குதல் என்பது பயங்காட்டுதலும்கூடத்தான். ரொம்பவே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான். அதே சமயம் மனசாட்சிப்படி ஏ சர்டிபிகேட்டை நீக்க சமரசம் செய்து கொள்ளாமல் அதனைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும் மிஷ்கினுக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.



சிறிய குழந்தைகள் நிச்சயமாக இதனைப் பார்க்கக் கூடாது. மிகவும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும். பல காட்சிகள் பெரியவர்களையே பயமுறுத்துகின்றன. ஒய்.ஜி.எம்.மின் மகன் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் காட்சி, மனைவி நிற்கின்ற காட்சி, கார் அசுர வேகத்தில் வந்து மோதுவது, இறுதிக் காட்சியில் கடத்தப்பட்டவர்களைக் காட்டுவது.. என்று தொழில் நுட்பத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பயம் காட்டுதல் தொடர்ந்திருக்கிறது.

இரவு நேரக் காட்சிகளின் படிமத்தை நிழல் பிடித்தாற்போன்று காட்டியிருப்பதும், கேமிரா எங்கு திரும்பினாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சூழல்களும், இருப்பிடத்தை இப்படியும் காட்ட முடியுமா என்று யோசிக்க வைக்கும் கோணங்களுமாக புதிய ஒளிப்பதிவாளர் சத்யாவின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு இன்னொரு பலம். இவர் ஆனந்தவிகடனில் புகைப்படக்காரராக பணியாற்றியவர். விகடன் தயாரிப்பு. இவருக்கும் எனது பாராட்டுக்கள்.

மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு. அந்தப் பாடல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படத்திற்கு எவ்வித தொய்வும் ஏற்பட்டிருக்காது. இடைச்செருகலாகத்தான் இப்போதும் தெரிகிறது. பட விழாக்களுக்கு அனுப்பும்போது இதனை நீக்கிவிட்டு அனுப்பினால் நல்லது.



ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் பாடல் காட்சி மிஷ்கினின் வழக்கமான வித்தியாசமான நடன அசைவுகளாலும், பாடல் வரிகளாலும் கவனப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முழுமைக்கும் ஈசன் படத்தின் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடலுடன்,  இப்பாடலும் மியூஸிக் சேனல்களில் போட்டியிடும் என்றே கருதுகிறேன்.


சாரு நிவேதிதா என்கிற மனிதரை என்னைத் தவிர வேறு யாருக்கும் அன்றைக்கு தியேட்டரில் தெரியாததால் அவர் தோன்றுகின்ற அரை நொடி காட்சியில் யாரும் பரவசமடைந்து கை தட்டவில்லை. ஒருவேளை அவர்களது காதல் இப்போதும் நீடித்திருந்தால் சாரு கொஞ்சம் வினாடிகள் அதிகமாகத் தெரிந்திருப்பாரோ என்னவோ.. ஆனால் இதுபோல் குரூப் டான்ஸரைப் போல் வருவதற்குப் பதிலாக ஒரு வில்லன் கேரக்டரையே சாருவுக்குக் கொடுத்திருக்கலாம். பின்னியிருப்பார். இப்போதைய சிச்சுவேஷனுக்கும் ஏற்றாற்போல் இருந்திருக்கும். கூடவே, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் எழுத்தாளரை வசனம் பேசி, நடிக்க வைத்த பெருமையும் மிஷ்கினுக்குக் கிடைத்திருக்கும். வடை போச்சு மிஷ்கினுக்கு.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.



படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம். சமீபத்தில் சேலத்தில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பமே கொலை செய்யப்பட்ட வழக்கு இப்படித்தான் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களது விசாரணையின் கீழ்தான் சேலத்து தி.மு.க. புள்ளி பாரப்பட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.(லோக்கல் போலீஸ் இவரை விசாரிக்கக்கூட இல்லை.)  இந்தக் குழப்பத்தைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர். சரி.. பரவாயில்லை..

வெளியில் சத்தம்போடக்கூட தெரியாத ஒரு அப்பாவியின் குடும்பம் ஒரு கண கோபத்தில் எடுக்கின்ற முடிவு எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. சமூக விரோதிகளின் செயல்களைவிடவும், அடக்கி வைக்கப்பட்டவர்கள் திமிறி எழும்போது ஏற்படும் உணர்வுகள்தான் அதிக விளைவை ஏற்படுத்தும். இதைத்தான் இப்படமும் உணர்த்துகிறது. இப்படியும் ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்றும் சில கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. நினைத்துப் பார்க்கத்தான் பயமாக இருக்கிறது.

இந்தியன் படம் வந்தபோது ஊருக்கு ஒரு இந்தியன் இது மாதிரியிருந்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் எழுந்ததே.. அது போன்ற பயம் கலந்த உணர்வை இது தெரியப்படுத்தியிருக்கிறது.


பணக்கார வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் மூன்றும் சேர்ந்து அப்பாவிகளை பலிகடா ஆக்கினால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்துதான் ஜெயிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மிஷ்கின். இறுதிக் காட்சியில் ஒய்.ஜி.எம்.மும், அவர் மனைவியும் செய்வது இதைத்தான். யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள் என்பது விஷயமில்லை. ஒரு சாமான்யன் இவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான் என்பதுதான் வருங்காலத்திற்கு தரப்பட்டிருக்கும் செய்தி. அதைத்தான் இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின்.

எப்படி பார்த்தாலும் தமிழ்ச் சினிமா கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் இது. சந்தேகமில்லை. குழந்தைகள் இல்லாமல் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.. பாருங்கள்.. 
Read more »
 
-