Angels & Demons


இந்தப் படத்தில் வரும் காட்சிகளும்,கதாபாத்திரங்களும் கற்பனையே. . எதையும்,யாரையும் குறிப்பிடுபவையல்ல. . .’ என்றுAngels & Demons படத்தின் துவக்கத்திலும்இறுதியிலும் தியேட்டரில் ஸ்லைடு போடுகின்றனர்.
இப்படி எத்தனையோ படங்களில் சொல்லியிருந்தாலும், Angles & Demons-ஐ நாம் அப்படி நம்பிவிடமுடியாதுஇது யாரையோ குறிக்கிறதுஅல்லது யாரையோ குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதற்கு ஒரு காரணம்வலுவான பின்னணியும் உண்டு.2006இல் ஸோனி பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்ட ‘The Davinci Code’, $750மில்லியன் வசூல் செய்து உலக சாதனையை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக கிறிஸ்துவர்கள்குறிப்பாக கத்தோலிக்க பிரிவினரின் எதிர்ப்பையும் சந்தித்ததுபெரும் தடைகளுக்குப் பிறகு வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றதுஒரு Action, thrill, suspense படம் எப்படி இருக்கவேண்டும் என்று இயக்குநர் Ron Howard அதில் நிரூபித்துள்ளார்.
அதற்குக் கொஞ்சமும் குறைவின்றிஅதே வேகத்துடன்விவாதத்திற்குரிய விஷயங்களுடன் வந்திருக்கும் Ron Haward-இன் புதிய படம்தான் Angels & Demons.Angels என்றால் தேவதைகள் என்பது தெரியும்Demons என்பது என்னவென்று எனக்குத் தெரியாததால்டிக்ஷனரியைப் புரட்டினேன்இதன் உச்சரிப்பு,டெமன் அல்லடீமன்அர்த்தம்Supernatural being of eveil qwalities தீய ஆவி. . .
ஆகநல்ல சக்திக்கும்தீய சக்திக்கும் இடையே நடக்கும் இடையறாத யுத்தம்தான் கதையார் நல்ல சக்தி என்பதை எவர் தீர்மானிப்பது என்பதில்தான்விஞ்ஞானிகளுக்கும்ஆன்மிக பீடங்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.‘The Davinci Code’, ‘Angels & Demons’இரண்டும் பல லட்சம் பிரதிகள் பரபரப்பாக விற்பனையான நாவல்கள்.இவற்றை எழுதியவர் Dan Brownஇந்த நாவலின் நாயகன்,வழக்கமான மசாலா படங்களில் வரும் போலீஸ்காரனோ அல்லது ரகசிய ஏஜெண்டோ கிடையாது.ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் Robert Langdon தான் ஹீரோஇந்தப் பாத்திரத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ Tom Hanks நடித்துள்ளார்.
The Davinci Code -இலும் இவர் இதே பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கையில் ஆயுதம் கிடையாதுசண்டை போடமாட்டார்இவர் ஒருSymboligist. அதாவது குறிகுறியீடுகளைப் படிப்பவர்அதன் மூலம் பரபரப்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைத் தருபவர்.கடந்த படத்தில் கதாநாயகி அழகாக இல்லை என்கிற குறை என்னைப்போன்ற கலா ரசிகர்களுக்கு இருந்ததை உணர்ந்த இயக்குநர்,இந்தப் புதிய படத்தில் அந்தக் குறையை நீக்கிவிட்டார்.இஸ்ரேலிய நடிகை Ayelet Zureer என்கிற பேரழகிதான் நாயகிஇவர் நின்றால் நிலாநடந்தால் நந்தவனம்இவரது ஓரவிழிப் பார்வைக்காகஎவ்வளவு தூர வழியையும் கடக்கலாம்ஆறடி ஆரஞ்சுஉடம்பெல்லாம் ரோஜா பஞ்சு.சினிமாக்களில் Sequelவருவதுண்டுஅதாவது தொடர்ச்சிஇரண்டாவது பாகம்.உலகம் சுற்றும் வாலிபனுடைய sequelகிழக்காப்பிரிக்காவில் ராஜு,ஊமை விழிகளின் sequelமூங்கில்கோட்டைஇரண்டும் அறிவிக்கப்பட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை.இந்த இரண்டு படங்களையும் எடுக்கும் முயற்சியில் விஜயகாந்த் இறங்கினால்,இவை அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது என் நம்பிக்கை. . .ஒரு படத்திற்கு முந்தியது,இந்தக் கதைக்குமுன் என்ன என்பது Prequel.அப்படித்தான் The Davinci Code-இன் prequel-ஆக Angels & Demons வெளிவந்து,பெரிய வசூல் சாதனையையும்பெரும் வரவேற்பையும் பெற்றுவரும் அதே சமயம்சர்ச்சுகளாலும்கத்தோலிக்கர்களாலும்உலக கிறிஸ்துவர்களின் தலைவர் போப் இருக்கும் வாடிகன் நகரத்திலிருந்தும் எதிர்ப்பும் பெரிய அளவில் கிளம்பி இருக்கிறது.இந்த அளவிற்கு எதிர்ப்பைச் சந்திக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?போப் இறந்துபோன சூழலில் கதை துவங்குகிறதுஅதனால் அவரால் தத்தெடுக்கப்பட்ட பாதிரியார் Ewan the gregon மிகுந்த துயரத்தில் இருக்கிறார்.அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நான்கு கார்டினல்கள்-அல்லது இவர்களில் ஒருவர்தான் அடுத்த போப்பாக வரவேண்டியவர்அந்த நால்வரும் கடத்தப்படுகின்றனர்.அது மட்டுமின்றிகார்டினல்களைக் கடத்தியவன் இவர்களை அன்றிரவே எட்டுஒன்பதுபத்துபதினொன்று மணிக்கு ஒவ்வொருவராய்க் கொல்வதாக எச்சரிக்கையும் விடுகிறான்.அவன் விட்டுச்சென்ற காகிதத்தில் Illuminati என்கிற symbol உள்ளதுஇது17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்நாஸ்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புஇதில் ஆரம்பத்தில் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகளும் உறுப்பினராக இருந்ததுண்டாம்விஞ்ஞானத்தை எப்பொழுதுமே மதம் மறுத்து வந்துள்ளதுவிஞ்ஞானம் வளர வளர,மக்களின் மூட நம்பிக்கைகள் குறையும்போதுமதத்தின் வியாபாரம் படுத்துவிடும்விஞ்ஞானத்தையும்விஞ்ஞானிகளையும் மிகவும் இழிவுபடுத்தி கிறிஸ்துவத்தின் தலைநகரான வாடிகன் நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல சதிகளைச் செய்து விஞ்ஞானிகளைக் கொன்றுள்ளதாக இந்தக் கதை கூறுகிறது.அந்த விஞ்ஞானிகளுடைய வழித்தோன்றல்கள்,நாஸ்திகர்களால் இன்றும் நடத்தப்படும் ஒரு ரகசிய சபைதான் Illuminati. . .பழிவாங்கத் தக்க தருணத்திற்காகக் காத்திருந்த அவர்கள்புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் நான்குகார்டினல்களைக் கடத்திவிடுகின்றனர்.Symboligist-ஆன Tom Hanks, புனித நகருக்கு வந்து குறியீடுகளைப் படித்துஒவ்வொரு இடமாக வேகமாகச் சென்றும்சொன்ன நேரத்தில் முதல் மூன்று கார்டினல்கள் கொல்லப்படுகின்றனர்.நிலம் காற்று நெருப்பு என்று மூன்று விதத்தில் மூவர் கொல்லப்பட,இறுதியில் தண்ணீரில் கொல்லப்பட இருந்த Cardinal-ஐ மட்டுமே Tom Hanks-ஆல் காப்பாற்ற முடிகிறது.இந்தக் கதையின் ஊடே பரபரப்பான இன்னொரு முடிச்சும் போடப்படுகிறதுகதாநாயகி Ayelet Zureet ஒரு விஞ்ஞானிஜெனிவாவின் ஸெர்ன்லேப்பில் பணிபுரிபவர்அங்கிருந்து ஒரு ஆபத்தான ரசாயனம் திருடு போகிறதுஇதைப்பற்றி நாயகி போலீசில் சொல்லவரும்போதுதான்,நாயகன் Tom Hanks-உடன் நட்பு ஏற்படுகிறது.அந்த ரசாயனமும் தீய சக்திகளின் கைகளில்தான் இருக்கிறதுநான்கு கார்டினல்கள் கொல்லப்பட்டபிறகுசரியாக இரவு 12 மணிக்கு புனித தேவாலயம் உட்பட வாடிகன் நகரையே அழிப்பதுதான் அவர்களின் நோக்கம்.இந்தப் பேரழிவிலிருந்து அந்த நகரையும்புதிய போப்பின் தேர்வுக்காகவும்,பழைய போப்பின் மறைவுக்காகவும் வந்துள்ள லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதும் பெரிய சவாலாக உள்ளது.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டாராஆபத்தான ரசாயனத்திலிருந்துஅதன் அழிவிலிருந்து புனித நகரம் மீண்டதா என்பதை பரபரப்பான கிளைமேக்ஸில் மெய்சிலிர்க்கும் விதத்தில் இயக்குநர் Ron Hawardதனக்கேயுரிய ஸ்டைலில் அசத்தும் விதத்தில் சொல்கிறார்ஏறக்குறைய 2மணிநேரம் 19 நிமிடங்கள் ஓடும் இப்படம்கொஞ்சம் கூட சலிப்பைத் தரவில்லைஅதற்கு நாவல் எழுதிய Dan Brawnன் விறுவிறுப்பான கதை மட்டுமே காரணமல்ல, David Koepp மற்றும் Akiva golsman ஆகியோருடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையும் முக்கிய உதவியாக உள்ளது.இந்தப் படம் ஓடும் நேரம்,ஏறக்குறைய ஒரு தமிழ்ப்படம் ஓடும் நேரம்தான்ஆனால்,இவ்வளவு வேகமாக நம் ஆளுங்க ஏன் திரைக்கதையை எழுதுவதில்லைநம் ஆளுங்களுக்கு வேகம் என்றால் சேஸிங் ஸீன்தான். . .இந்தப் படம் வேகம்விறுவிறுப்பு இவைகளில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லவேண்டும்இதேமாதிரிதான் The davinci Code-உம் இருந்தது.இதுபோன்ற படங்கள் இங்கே எப்ப எடுப்பார்கள்?ஒருவேளை கமல்ஹாசன் Angels & Demons நாவலைப் படித்துத்தான்தசாவதாரம்’ படத்தின் கதை எழுதியிருக்க வேண்டும்அதன் சாயல் அதில் நன்றாகத் தெரிகிறதுஆனால்உலக நாயகனாலே ஒரு சிறந்த திரைக்கதையை எழுத முடியாதது உலக வேதனை.பிளேக்டிபிகேன்ஸர்எய்ட்ஸ் என்று ஆளைக் கொல்லும் நோய்கள் ஒரு பக்கம்சூறாவளிபூகம்பம்புயல் மழைசுனாமி என்று இயற்கைப் பேரழிவுகள் ஒரு பக்கம்இவைகளால் இதுவரை உலகில் கொல்லப்பட்டவர்களைவிடமதங்களின் பெயரால்சொர்க்கத்தின் நம்பிக்கையால்கடவுள்களை குஷிப்படுத்த மனிதர்கள் மிக அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் உலகில் இன்றும் ஏழ்மை ஒழியவில்லைஏன் இன்னும் போர் ஓயவில்லை?இன்றும் ஏதோ ஒரு மூலையில் பசிக்காக பால்சுரக்காத முலைகளில் முட்டி மோதும் பிஞ்சின் ஓலம் நம் காதல் விழுந்து கொண்டிருக்கிறது.கடவுள் Angels & Demons- அனுப்புவது இருக்கட்டும்முதலில் ரொட்டி அனுப்பட்டும் என்றுதான் அந்த ஓலம் சொல்கிறது.இந்த ஓரவஞ்சனை சமுதாயத்தில் நிலவும்வரைபணக்காரர்களுக்குப் பாதுகாப்பாக மதபீடங்கள் விளங்கும்வரை illuminatiகளுக்கு அழிவில்லை என்றுதான் நினைக்கிறேன்.அழகை ஆராதிக்காதஅன்பைத் தாலாட்டாதஇசையைச் சீராட்டாத. .மழலையை ரசிக்காத. . . மதம். . அது இருந்தாலென்னஇல்லாவிட்டால் என்ன. . .Angels & Demons குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும்அதன் ஆதிக்கத்தையும் குறித்து கேள்வி எழுப்புவதாக நான் நினைக்கவில்லைDan Brawn நாவல்,மற்றும் எழுத்து ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஒரு போர்ப்பிரகடனமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-