இன்று உயிர்த்த ஞாயிறு. HAPPY EASTER!..


உயிர்த்தார்… உயிர்த்தார்… கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்…!” என்ற கீதம் முழங்க மன்னவர் இயேசு உயிர்த்தெழுந்தார்.பரமன் இயேசு, தாம் வாக்களித்தபடியே மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நன்னாளை இன்று கிறிஸ்தவ உலகமே விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு மானிடர் அனைவருக்கும் மீட்பளிக்கின்றது. இதுதானே இறை இயேசுவின்; லட்சியம், நோக்கம் எல்லாம?
இயேசுவின் மரித்த திருவுடலை சிலுவையினின்றும் இறக்கி அன்னை மரியாளின் மடியில் கிடத்தினர். பின்னர் அருகிலிருந்த கல்லறை ஒன்றில் அவரை அடக்கம் செய்தனர். அந்தக் கல்லறைமீது பெரிய பாறைக்கல் ஒன்றையும் வைத்துவிட்டு உறவினர்களும் சீடரும் சென்றுவிட்டனர்.
அதேவேளை கல்லறையை இரு போர் வீரர்கள் காவல் காக்கவும் தவறவில்லை.மறுநாட் காலை பரிமளத் தைலங்களுடன் மரியாள் தன் சீடர்களுடனும் உறவினர்களுடனும்; கல்லறையில் கிறிஸ்துவின் உடலைத் தேடினார். ஆனால்… அங்கே கிறிஸ்துவில் உடல் இருக்கவில்லை.
கல்லறையை மூடி வைத்திருந்த பாறைக் கல் அகற்றப்பட்டு கல்லறை வெறுமையாக இருந்தது. அவர்கள் அதிசயப்பட்டுத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர்.
அப்போது கல்லறையின் தலைமாட்டில் மின்னலைப் போன்று ஆடையணிந்த வான தூதர்கள் இருவர் இருக்க கண்டு ஆச்சரியமடைந்த வேளை,”உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்? கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் அன்று கூறியதை நினைவுப்படுத்திப் பாருங்கள்” என்று கூறினர். சிறு பொழுதில் வானதூதர் மறைந்தனர்.
ஆம். கிறிஸ்து, நம் மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்த விசுவாசத்துடன், நாமும் எமது மன்றாட்டுக்களை உயிர்த்த இயேசுவின் பாதக்கமலங்களில் சமர்ப்பிப்போம்.”இறைவா, எமது நாட்டில் நிரந்தர சமாதானமும் நீடித்த ஒற்றுமையும் நிலவ அருள்தாரும்.”
இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம். இறைமகன் காட்டிய வழியில் அவருக்கு பிரமாணிக்கமாய் நாமும் வாழ இந்நாளில் திடசங்கற்பம் கொள்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-