நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.....- சத்திய சாயி பாபா





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாடும் உலகமும் நன்மை பெறட்டும் .

பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துõய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம்.
சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம்.
சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை.
ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே.
இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது.
ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால்,
நல்ல விளைவுகள் ஏற்படும்.
அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும்.
இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

நான் உங்களை வேறொன்றும் கேட்கவில்லை.
பிரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும்.
வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு கவலை என்பதே கிடையாது.
துயரமும் இல்லை.
எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன்.
எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வரும்போது கொண்டுவரவில்லை.
போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை.
பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன்,
தளராத நம்பிக்கையுடன்,
வேறுபாட்டு உணர்வை நீக்கி,
எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை புனிதமாகும்.
நாடும் உலகமும் நன்மை பெறும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய்.
ஒளி உன்னிடம் இருக்கிறது.
நீயே ஒளியாகிறாய்.
உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க இயலும்.
வெளியுலக வாழ்வின் மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக்கை மறக்கவைக்கும்.
ராமதாசர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றி கூறினார்.
ஏனென்றால், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவு கூர்ந்து,
வெளி உலகத்தை முழுமையாக விலக்கி வைத்து,
ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத்தமைக்காக நன்றி பாராட்டினார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும்.
அறியாமைத்திரை கிழிபடட்டும்.
தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும்.
நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்.

முன்னதாக புறப்படு.
மெதுவாக ஓட்டு.
பாதுகாப்பாய் போய்ச்சேர்.
உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள்.
அது "நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்.

தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது.
அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே.
கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான்.
இதில் சந்தேகம் வேண்டாம்.
நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


ஆத்மாவிற்கு உரமிடுங்கள் .

பாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்படைந்து வருகிறது.
அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.

உன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.

பல மரங்களைப் பார்த்திருக்கலாம்.
சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன.
அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது.
அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை.
இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான்.
இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது.
அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு.
அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.

ஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.
தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு.
அது நல்ல மனித இயல்பு அல்ல.
அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல.
அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.

பயமே நோய்க்கு காரணம்
* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான்.
மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை விளைவிக்கிறது.
உணவை சமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்கம், கடவுள் நமக்கு அளித்த கடமைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும்.
இதன் விளைவு கடவுளை நோக்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருத்தமான விஷயம்.
ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது.
உண்மையான கல்வி, மனிதனுக்கு இன்பத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும்.
கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறியோ, அவதூறாக பேசியோ, துன்புறுத்தினாலும், அதனையே அவனுக்கு திருப்பாதே.
சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள். ஒருவனை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப்பதில்லை.
28 -09 -2006
---------------

நேர்மையான வாழ்க்கையின் முதல் அடிப்படைத் தேவை,
மௌனத்தைக் கடைப்பிடிப்பது தான்.
ஆன்மீக சாதகரின் பேச்சே மௌனம் தான்.
மௌனத்தின் ஆழத்தில் தான் கடவுளின் குரலை நீ கேட்க முடியும்.

இரண்டாவது அடிப்படைத் தேவை சுத்தம்.
வெளிப்புற சுத்தம் அல்ல.உட்புற சுத்தம்.
இந்த உட்புற சுத்ததிற்கென்று தனிப்பட்ட சோப்பும், தண்ணீரும் கிடையாது.
உட்புற சுத்ததிற்கு...விடாப்பிடியான நம்பிக்கை என்ற சோப்பும்,
இடை விடாத சாதனை என்கின்ற தண்ணீரும் இருக்கின்றன.
மூன்றாவது அடிப்படைத் தேவை...
தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு.

கடமையே கடவுள்.வேலையே வழிபாடு.
ஒரு குறிப்பிட்ட வேலை நேரத்தின் போது போடப்படுகின்ற யூனிபார்ம் போல வழிபாடு இருக்கக் கூடாது.[வேண்டும் போது போது போடுவதும் ...வேண்டாத போது கழட்டுவதும். ]

உங்கள் மனமானது இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் பற்றி விடாமல் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
1.மௌனம்.
2.உட்புற சுத்தம்.
3.கடமையில் கண்ணாக இருத்தல்.

வெளி உலகத்தில் வாழ்க்கை தீராத துன்பம் நிரம்பியது.
ஆனால்...உள் உலகத்தில் வாழ்க்கை என்பது...எளிமையானது.சுலபமானது.
வாழ்க்கை என்பது ஒரு புனித யாத்திரை.
மனிதன் முள் நிறைந்த கரடு முரடான பாதையில் சிரமப்பட்டுக் கொண்டு போகிறான்.
பகவத் நாமம் அவன் நாவிலே இருந்தால் தாகம் எடுக்காது.
இதயத்திலே இறை உருவம் இருந்தால்...களைப்புத் தெரியாது.
சாதுக்களின் சேர்க்கை அவனை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பயணம் செய்ய வைக்கும்.
பகவான் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கின்றான் என்ற நிச்சயம் உனக்கு வலுவூட்டும். உன் இதயத்திற்கு தைரியமூட்டும்.


ஆன்மீக வைத்தியதிலும் பல மருந்துகள் உள்ளன.
அத்தனை மருந்துகளிலும் சர்வரோக நிவாரணி....பிரேமை ஒன்று தான்.
A முதல் Z வரை உள்ள அனைத்து விட்டமின்களும் பிரேமையில் அடக்கம்.

நான் என்றும் எப்போதும்....எப்போதும்....
உங்களுடனேயே இருக்கின்றேன்.
உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி....
உங்கள் கற்பனையே.
உங்கள் இதய விளக்கில்
அன்புச் சுடரை ஏற்றி வைக்க
நான் வந்திருக்கின்றேன்.
அதன் ஒளியிலே நீங்கள் ஒவ்வொருவரையும்
சாயியாகவே காண்பீர்கள்.
21 - 09-2006
சாய் ராம்.
----------------------------
SWAMI PHOTOS LINKS [NEW]

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-