Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)
Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000 சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த Office
ISO கோப்புகளை உருவாக்குவதற்கு…!
விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும்.
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இணையதள முகவரி : BDlot DVD ISO
16 மெகாபிக்செல் கேமராவுடன் வரும் புதிய நோக்கியா போன்
முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா தமது அடுத்த படைப்பை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நோக்கியா-801 என்ற பெயரில் வரும் இந்த புதிய மொபைல் ஸ்டைலாகவும், தகுந்த விலையிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய மொபைல் சிறந்த டிஸ்ப்ளேயும் தொடு வசதியும் நவீன் தொழில் நுட்பமும் ஒருங்கே கொண்டுள்ளன.
இந்த மொபைல் உலக அளவில் எண்ணற்ற வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இது சகல வசதிகளுடன் வரவிருக்கிறது. குறிப்பாக இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ப்ராஸஸர் தரமான செயல் திரனுக்கும், மல்டிமீடியாக்களை இயக்குவதிலும் முக்கிய பங்கை வகிக்கும்.
நோக்கியா-801ன் அமோலட் தொடுதிரை 3.8 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் படங்களை ஸ்க்ரோல் செய்யலாம் மற்றும் சுழல வைக்கலாம். மேலும் இந்த அகல திரையில் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும்.
நோக்கியா-801ன் கேமராவை எடுத்துக் கொண்டால் அது ஸினான் ப்ளாஷ் கொண்ட 16 மெகா பிக்ஸல் கார்ல் சிஸ் கேமாரவாகும். இது மற்ற மொபைல்களில் இல்லாத ஒன்றாகும். மேலும் இந்த கேமராவில் படங்களையும் காட்சிகளையும் மிக துல்லியமாக எடுக்கலாம்.
இதன் மெமரியைப் பார்த்தால் இது 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு 16 ஜிபி இன்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. அதனால் அதிகமான அளவில் இந்த மொபைலில் நாம் தகவல்களே படங்களை மற்றும் காட்சிகளை சேமித்து வைக்க முடியும்.
எப்பொழுதுமே நோக்கியா மொபைல்களில் பேட்டரி திறன் தனிச் சிறப்பு பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த போன் 1,550 எம்ஏஎச் நான் ரிமூவபில் லித்தியான்-அயான் பேட்டரியைக் கொண்டுள்ளது. வழக்கமாக நோக்கியா மொபைல்களில் பேட்டரியைத் தனியாக எடுத்து விடலாம். ஆனால் இந்த மொபைலில் அவ்வாறு எடுக்க முடியாது. அதன் மூலம் இதன் மின் திறன் மூலம் நீண்ட நேரம் பேச முடியும். அதே நேரத்தில் இது மொபைலுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
மற்ற சிறப்பம்சங்களைப் பார்த்தால் தகவல் பரிமாற்றத்திற்கான இதன் ப்ளூடூத் மற்றும் வைபை வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. மேலும் இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. மேலும் இந்த மொபைல் மிக ஸ்டைலாக, சிறந்த வண்ணம் கொண்டு ராயல் லுக்கோடு வரவிருக்கிறது. இதன் விலை ரூ.22,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த மொபைல் இந்திய மொபைல் சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்
அழகு ஆறு
"உனக்கு
அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன
துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி
எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில்
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக
நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம்
பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை
காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று
முடிவுசெய்துவிட்டேன்.
எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:
1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.
அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }
2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.
ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )
3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே
நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.
4.இசையே என் காதலி
இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.
5.தமிழ்
நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.
6.எங்கள் குடும்பம்
பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....
இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம்.
ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். சரி அது எல்லாம் நமது சின்ன மூளைக்கு விளங்காத விடயம். இப்ப நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயமே வேற.
வீட்டுக்குள்ளிருந்து பணம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று புருவத்தை உயர்த்தி நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ அதற்கான மிகச்சிறந்த , நம்பிக்கையான , ஒரு செலவும் இல்லாத வழி இது. (இதை என்னுடைய தங்கைகளும் கையாளுகிறார்கள்) நீங்களே முதலாளி , நீங்களே தொழிலாளி.
அதாவது நீங்கள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் அறவிடலாம்.பலசரக்கு கடைக்கு அம்மாவுடன் போனால் ஒரு குறிப்பிட்ட காசு, வீட்டை சுத்தம் செய்தால் ஒரு தொகைப்பணம் என்று (அதிகம் கூடாது 0.50சதம் தொடங்கி 5 யூரோ வரை, தங்களுடைய நாட்டு பணத்திற்கு ஏற்ப நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.) ஒரு விலைப்பட்டியல் தயார் செய்து தங்களுடைய வீட்டிலிருக்கும் பணமுதலைகளிடம் கொடுக்கலாம்.(யாரிடம் அதிகம் பணம் புளங்கிறதோ அவர்களே இதற்கு சரியான தெரிவு)
இந்த திட்டத்துக்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வேறு வழி மேற்கொள்ளலாம்.
அது பிளாக்மெயில் (பயமுறுத்துதல்) :-)). அவர்கள் உங்கள் மேல் பொலிஸ் கேஸ் போடாமல் இருக்கும் படியான எத்தனையோ பிளாக்மெயில்கள் இருக்கு. உ+ம் : இவ்வளவு காசு தந்தால் தான் நான் போய் குளிப்பேன் , ..................... , பல பல
இத்தகவல்கள் வீட்டிலிந்து பணம் சம்பாதிக்க உதவும் என நம்புகிறேன்.
{ஹா ஹா இல்லை என் பதிவை அதிகம்பேர் பார்வையிட வைக்க முடியும் என்று என் நன்பனுடன் ஒரு சின்ன பெட். அடுத்த முறை ஏதாவது பிரியோசனமா எழுதுகிறேன்.ஹா ஹா}
ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..
நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..
கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி
மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.
-சுதேசன்-
சொற்பதங்கள்
ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,
ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.
கிபிர் - ஒரு வகை போர் விமானம்
கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.
தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)