ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்

 


ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது.
அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் துவங்கும் போதுதான் இதன் மகத்துவமே தெரியும். டைப் செய்பவர்கள் முழுவதும் டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் டைப் செய்யத் துவங்கும் போதே அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டப்பட்டு விடுகிறது. சரியான சொல் என்னும் பட்சத்தில் அதனை கிளிக் செய்தாலே போதும். கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடலுக்கான சொல்லை டைப் செய்ய முற்படும் போதே இந்த சொல் தானா என்று பரிந்துரைக்கப்படுகிறது அல்லவா? அதே போல இந்த டைபிங் சேவையும் முன்கூட்டியே வார்த்தைகளை பரிந்துரைக்கிறது. வார்த்தைகள் மட்டுமல்ல, பல நேரங்களில் முழு சொற்றொடரையுமே பரிந்துரைக் கிறது. உதாரணத்திற்கு கடிதம் எழுதுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். மதிப்பிற்குரிய ஐயா என்று துவங்கியதுமே கடிதத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு முழு சொற்றொடரும் திரையில் தோன்றும். இதன் காரணமாக நாம் நினைத்ததைவிட வேகமாக டைப் செய்து விடலாம். அதை விட முக்கியமாக இலக்கண பிழையின்றி டைப் செய்யலாம். 
வாசகங்களாகவே பரிந்துரைக்கப்படுவதால் சரியான வரியை தேர்வு செய்து கொண்டாலே போதும். திஸ் வருமா தட் போட வேண்டுமா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
அதே போல வார்த்தைகளை பிழையின்றியும் தேர்வு செய்து கொள்ளலாம். டைப் செய்து முடித்த பின் பிழைத் திருத்தியை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடிக்கும் போதே சரியானதாக தானே தேர்வாகிறது. எழுத்து பிழையும் இல்லை, இலக்கணப் பிழையும் இல்லை என்ற நம்பிக்கையோடு சொல்ல வந்த விஷயத்தில் தெம்பாக கவனம் செலுத்தலாம். அதே போல ஏதாவது சொல்லில் சந்தேகம் இருந்தாலும் அதனை சரி பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமா டைப் செய்பவரின் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப முதலிலேயே பல்வேறு அம்சங்களை நிர்ணயித்து கொள்ள முடியும். எழுத்து நடையையும் கூட தேர்வு செய்வது சாத்தியம். அலுவல் நிமித்தமான நடையா, சட்ட ரீதியான மொழியா, இளமை துள்ளலான வார்த்தைகளா என்றெல்லாம் கூட தீர்மானிக்க முடிவது உண்மையிலேயே சூப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுதும் போது எந்த விதத்திலும் குறிக்கீடாக அமையாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவு என்று சொல்லப்படும் அர்டிபிஷியல் இன்டலிஜனஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையானது எழுதப்படும் விஷயத்தின் அர்த்தத்தை உணர்ந்து வார்த்தைகள் மற்றும் வாசகங்களை பரிந்துரைப்பதால் இதனை பயன்படுத்தும் போது புதிய சொற்களை கற்றுக் கொண்டு ஒருவரின் சொற் வங்கியை வளமாக்கி கொள்வதும் சாத்தியமே. ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் இல்லாமல் அடிப்படை விஷயம் மற்றும் அறிந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து மூலமாக தொடர்பு கொள்ள இந்த சேவை மிகவும் உதவும்.
இந்த சேவையை அவுட்லுக் இமெயில் மற்றும் நோட்பேட், வேர்டுபேடிலும் இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் மொழிபெயர்ப்பு வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு. டைப் செய்யப்பட்ட வரிகளை தாய்மொழியில் மாற்றிக் கொண்டு பொருளும் நடையும் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம். இப்போதைக்கு 13 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளது. டைப் செய்வது இதை விட சுலபமாக இருக்க முடியாது என்று ஏ ஐ டைப் சொல்லிக் கொள்வது உண்மைதான் என்பது இதனை பயன்படுத்தி பார்த்தால் புரியும்.

http://www.aitype.com/ 


 பொழுது புலர்வதற்கு முன் எப்போதுமே கும்மிருட்டாக இருக்கும். அதுதான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் பேப்பரைச் சுடுவதற்கு சரியான நேரம்.
Read more »

இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.


இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட்தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது.
புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கிறது இந்த தளம்.
வடிவமைப்பிலே உள்ளடக்கத்திலோ அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறது இந்த தளம்.டெய்லிலிட் போல பெரிய பட்டியலோ விரும்பிய புத்தகத்தை தேர்வு செய்யும் வசதியோ கிடையாது.அதே போல உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை.இமெயில் முகவரியை சமர்பித்தால படிக்க தயாராகிவிடலாம்.ஆனால் இதில் குழுவாக மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்தும் படிக்கலாம்.
நோவா லெட்வின் என்னும் அமெரிக்க வாலிபர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
இமெயிலில் புத்தகம் காத்திருப்பது நல்ல விஷயம் என்கிறார் லெட்வின்.பிடித்த கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளை மெயில் மூலம் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் இந்த சேவையையும் முயன்று பார்க்கலாம்.
இணையதள முகவரி;
லெட்வின் கம்ப்யூட்டர் கில்லாடியாக இருக்க வேண்டும்.காரணம் வென்சர் பீட் அவரை ஹேக்கர் என அறிமுகப்படுத்துகிறது.மனித வலைப்பதிவு எல்லாம் வைத்திருக்கிறார்.யூடியூப்,பேஸ்புக்,டிவிட்டர் என எல்லாவற்றிலும் இருக்கிறார்.ஆனால் அப்படி இருந்தும் அவரது இணையதளம் எளிமையில் அச‌த்துகிறது.
நோவாலிட்வின் டாட் காம் என்னும் அந்த தள‌த்திற்கு சென்றால் வளவளவென்றே அல்லது பளபளப்பாகவோ எந்த விவரமும் கிடையாது.
ஒரு விசிட்டிங் போல நடுவே இருக்கும் கட்டத்தில் நான் தான் நோவா ,நான் இதையெல்லாம் செய்கிறேன் என குறிப்பிட்டு அதன் கீழே அவரது பேஸ்புக்,டிவிட்டர்,ஜிமெயில்,யூடியூப்.வலைப்பதிவு என எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறார்.
அவரை நாடி வருபவர்களை இந்த எளிமை நிச்சயம் கவர்ந்துவிடும்.
தனிப்பட்ட இணையதளம் அமைத்து கொள்ள விரும்புகிறவர்கள் இதனை ஒரு பார்வை பார்ப்பது ந‌லம்.
இணையதள முகவரி;http://dailypag.es/


சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்.


இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Engineering books download
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 

ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது
- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்
Read more »
 
-