வால் முளைத்த விக்கிபீடியா

 


விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும்.
இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை.
உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது.
விக்கியை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை ஒருபுறம் இருக்க விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்டு அதனை மேம்படுத்தும் அழகான முயற்சியாக புதிதாக ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
எம்பீடியா என்பது அந்த தளத்தின் பெயர்.அதன் நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான பெயரும் கூட!காரணம் விக்கிபீடியா கட்டுரைகளின் மீது அனுபவம் சார்ந்த கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இணையத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணையவாசிகள் தங்களது அனுபவம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்ட இணைய சமூகத்தை உருவாக்கிவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எந்த தலைப்பு தொடர்பாகவும் யார் வேண்டுமானாலும் தங்களது தகவல்களை இடம் பெற வைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே அற்புதமானது.விக்கிபீடியாவின் பலமே அதன் திறந்த தன்மை தான்.அதில் உள்ள கட்டுரைகளில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த தகவலை சேர்க்கலாம்.இந்த பங்களிப்பால் தான் விக்கி கட்டுரைகள் விரிவானதாக செறிவானதாக இருக்கின்றன.
ஆனால் விக்கிபீடியாவில் தகவல்களை சமர்பிப்பபதற்கும் வரம்புகள் இருக்கின்றன.அதற்கு மாறாக விக்கி கட்டுரைகளை கை வைக்காமல் அந்த கட்டுரை தலைப்பு தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவது சிறந்த விஷயம் தானே.
உதாரணத்திற்கு விண்டோஸ் பற்றிய கட்டுரையில் இணையவாசிகள் தங்களது விண்டோஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.விண்டோஸ் தொடர்பான முதல் விளம்பரத்தை நாளிதழில் பார்த்த அனுபவத்தை அல்லது விண்டோசை முதன் முதலில் பயன்படுத்திய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
இதே போல பிரபலங்கள் தொடர்பான கட்டுரைகளில் ரசிகர்கள் அவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல அவர்களோடு பழகியவர்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயம் தொடர்பான தகவல்களையும் இணைக்கலாம்.இந்த அனுபவ பகிர்வுகள் விக்கி கட்டுரைகள் தரும் தக‌வல்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தையும் புரிதலையும் ஏற்படுத்தலாம்.
எந்த தலைப்பாக இருந்தாலும் சரி அந்த தலைப்பின் விக்கி கட்டுரையின் கீழ் இணையவாசிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.அதை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தலைப்பபு தொடர்பான கேள்வி பதில் பகுதியையும் இணையவாசிகள் உருவாக்கி உரையாடலில் ஈடுபடலாம்.அதே போல அந்த தலைப்பிற்கான இணைய வாக்கெடுப்பையும் நடத்தலாம்.
இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்வு செய்து படித்துப்பார்க்கலாம்.மனதில் உள்ள தலைப்பை தேடிப்பார்க்கும் சவசதியும் இருக்கிறது.அந்த தலைப்பு தொட‌ர்பான அனுபவ பகிர்வுகளை தவறவிடாமல் இருக்க நினைத்தால் டிவிட்டரில் பின் தொடர்வது போன அந்த தலைப்பை பின் தொடர்வும் செய்யலாம்.அது மட்டும் அல்ல இந்த தகவல்களை டிவிட்டர்,பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது,எத்தனை பேர் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.மேலும் சமீபத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களையும் கருத்துக்களின் பட்டியலையும் தனியே பார்க்கலாம்.
விக்கிபீடியாவை மேலும் சுவாரஸ்யமானதாக அதன் கட்டுரைகளை மேலும் உயிரோட்டமாக மாற்றக்கூடிய சேவை இந்த அனுபவம் சார்ந்த களஞ்சியம்.
இணையதள முகவரி;http://www.empedia.com/




நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

டக்ளஸ் ஹட்

Read more »

விண்டோ 8 மெட்ரோ பயன்பாடு

விண்டோ8 என்ற இயக்க முறைமையில் மேற்கண்ட விண்டோ 8 மெட்ரோ என்ற பயன்பாட்டினை செயல்படுத்துவதற்காக Visual Studio 11 Express என்பது அடிப்படைத் தேவையாகும்  இது Windows 8 Dev Preview x64 என்ற பதிப்பில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுதான் இருக்கின்றது இதனை மைக்ரோசாப்ட நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க
முதலில் இந்த பயன்பாட்டினை விண்டோ8 இயக்கமுறைமையில் செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் JavaScript, VB, C# ,C++ ஆகிய மொழிகளில் ஒன்றையும் blank “Application”, rich “Grid”, master-child “Split” ஆகிய வார்ப்புருக்களில் நமக்கு தேவையான ஒன்றையும் தெரிவுசெய்து கொள்க இவை புதிய திட்டத்தை(New Project) உருவாக்க பயன்படுகின்றன.இதன்பின்னர் மேலேகூறிய மொழிகளை பின்புலமாக கொண்ட விண்டோ 8 மெட்ரோ பயன்பாட்டிற்கேயுரிய Metro-XAML என்ற மொழியில் நம்முடைய குறிமுறையை எழுத ஆரம்பிக்கவும் இதிலுள்ள Grid ,Split ஆகிய வார்ப்புருக்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள் நமக்குத்தேவையானவாறு தெரிவுசெய்து அமைத்துகொள்க.இதற்காக பின்வருவனவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க






Application Icons என்பது , 150×150 என்ற சிறிய அளவுகுறும்படம் முதல்  Live Tile என்ற பெயருடைய 310×150 என்ற பெரியஅளவுகுறும்படம் வரை கொண்டதாகும் இதன்மூலம் பயனாளர் ஒருவர் இந்த பயன்பாட்டினை இயக்காமலேயே தாம் கூறவிரும்பும் செய்திகளை ட்விட்டர் ஃபேஸ்புக் ஆகிய சமூகதளங்களில் உள்ள தம்முடைய நண்பர்கள் நேரடியாக பெறுமாறு செய்யமுடியும் மேலும் ஒரு பயனாளர் இந்த குறும்பட வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு உடனடியாக மாறிகொள்ளும் வசதியுள்ளது
Splash Screen முதன்முதலில் தோன்றிடும் போது திரையின் உருவபடங்கள் விட்டுவிட்டு மின்னுவதற்கு இந்த வார்ப்புரு வசதி பயன்படுகின்றது
 Data: இந்த வார்ப்புரு உள்ளூர் மற்றும் தூரத்திலிருக்கும் தரவுகளை கையாளத்தக்க வகையில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள்  வாடிக்கையாளர் விரும்பியவாறு தெரிவுசெய்து கொண்டு கட்டமைக்கமுடியும்
Application Bar என்ற புதிய வகை கட்டளைபட்டை,  தகவல்களை வெட்டி ஒட்டும் தொல்லைக்கு பதிலாக தகவல்களை தேவைப்படும் மற்றவர்களுக்கு சுலபமாக வழங்குதல் பெறுதல் ஆகிய செயலை செய்வதற்கு உதவுகின்ற Contracts  ஆகிய வசதிகள் இதில் உள்ளன  அதுமட்டு மல்லாது இந்த பயன்பாட்டிலிருந்தே தேவைப்படும் உலாவிக்கு செல்லாமல் தேடிடும் வசதியும் இந்த பயன்பாட்டில் உள்ளத.எந்த இயக்கமுறைமையிலும் எந்த சூழலிலும் இந்த பயன்பாடு இயங்குவதற்கேற்ப தகவமைக்கபட்டுள்ளதாவென அவ்வப்போது பரிசோதித்திடும் வசதியும் இதில்உள்ளது மேலும் தற்போதைய டேப்லெட் பிஸியிலும் இது  இயங்கிடுமாறு அமைக்கபட்டுள்ளது எனபதே இதன் சிறப்பம்சமாகும்


முன்னேற்றமே புவி வாழ்வின் நோக்கம். உனது முன்னேற்றம் நின்றுவிட்டால் நீ இறந்துவிடுவாய். முன்னேறாத ஒவ்வொரு கணமும் நீ புதைகுழியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறாய்.
Read more »
 
-