விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.


விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:
  • விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .
  • இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 
  • ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
Read more »

கூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில் இணைந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கிறது. அந்த புதிய வசதிகள் என்ன என்பதையும் Gmail Field trial சேவையை எப்படி உங்கள் கூகுள் கணக்கில் ஆக்டிவேட் செய்வது என்றும் கீழே காணலாம்.

புதிய வசதிகள்:

ஜிமெயில் சர்ச் பாரில் ஏதேனும் தேடும் பொழுது முடிவுகள் ஜிமெயில் தளத்தில் மட்டுமின்றி Google Drive, Google Plus மற்றும் Google Calender போன்ற மற்ற தளங்களில் இருந்தும் காட்டும். உதாரணமாக நான் ஜிமெயில் சர்ச்சில் thi என்று கொடுத்தால் வந்திருக்கும் முடிவை பாருங்கள்.



இதே போன்று கூகுள் தேடியந்திரத்தில் ஏதேனும் தேடும் பொழுது அதற்கு சம்பந்தமான முடிவுகளை உங்கள் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் கணக்கில் இருந்தால் அதனையும் காட்டுகிறது. இந்த வசதி www.google.com ஆங்கிலத்தில் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே. 


இதனால் ஜிமெயில், டிரைவ் என ஒவ்வொரு இடமாக தேடி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை அனைத்து தளத்திலும் ஒரே இடத்தில் இருந்து தேடி கொள்ளலாம்.

Search field trial ஆக்டிவேட் செய்ய:
இந்த புதிய வசதிகளை பெற உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து பிறகு இந்த லிங்கில் Gmail Field Trail சென்று அங்கு உள்ள Join the field trail என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


அந்த பட்டனை அழுத்தியவுடன உங்களின் கோரிக்கை அவர்களுக்கு சென்று விடும். பிறகு ஓரிரு நாள் காத்திருக்கவும் (எனக்கு பதில் வர இரண்டு நாள் ஆனது).  புதிய வசதிகள பெற உங்கள் கணக்கு தயாரானவுடன் மெயில் அனுப்புவார்கள்.  அப்பொழுதிலிருந்து இந்த வசதிகளை உபயோகித்து கொள்ளலாம். 

Read more »

பேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்

உலகின் முதன்மையான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வாசகர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள். தற்பொழுது அளித்துள்ள சில புதிய வசதிகளை பற்றி காணலாம்.

Smileys On Comments:
இது பேஸ்புக் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதி. இதுவரை பேஸ்புக் சேட்டில் மட்டும் பயன்படுத்தி வந்த Smiley வசதி தற்பொழுது பேஸ்புக் கமென்ட்டிலும் உபயோகிக்கலாம்.


Seen count on Facebook Group:
பேஸ்புக்கில் உள்ள Group வசதி பற்றி அனைவருக்கும் தெரியும். நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உண்டாக்கி பகிருந்து கொள்வது. பேஸ்புக் குழுவில் நீங்கள் பகிரும் பதிவுகளை எத்தனை பேர் பார்த்தார்கள் என அறியும் வசதியை அறிமுக படுத்தியுள்ளது பேஸ்புக் தளம். இந்த வசதி இதற்கு முன் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் பதிவுகளில் மட்டும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
New Navigation Bar :
பேஸ்புக் தளம் தனது navigation bar ஐ மாற்றி அமைக்க இருக்கிறது. பேஸ்புக்கில் நமக்கு வரும் notifications காட்டும் ஐகான்களை இடது பக்கத்தில் இருந்து மாற்றி வலது பக்கத்தில் கொண்டு வர இருக்கிறது. 
இந்த மாற்றம் இன்னும் யாருக்கும் வரவில்லை இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. 
இந்த புதிய வசதிகள் பற்றிய உங்கள் அபிமானத்தை கீழே கருத்துரையில் தெரிவிக்கவும்.
Read more »

கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய

உலகில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களுள் இந்திய ரயில்வே துறையும் ஒன்று. சமீப காலமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் மேப் உதவியுடன் இந்திய ரயில்கள் தற்போது பயணித்து கொண்டிருக்கும் வசதியை அளித்துள்ளது.



இதற்க்காக Rail Radar என்ற புதிய தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த தளத்தில் சுமார் 6500 பயணிகள் ரயில்களின் விவரத்தை கண்டறிய முடியும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் இந்த தளம் தானாகவே தகவல்களை புதிப்பித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மொபைல் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம். இந்தியா முழுவதும் அமைத்துள்ள சுமார் 6000 க்கும் அதிகமான ரயில் தகவல் மையங்களில் இருந்து தகவல்களை தானியங்கியாகவே சேகரித்து தகவல்களை தருகிறது.


இந்த தளத்திற்கு Rail Radar சென்று உங்களுக்கு தேவையான ரயிலின் விவரத்தை கண்டறிய Zoom செய்து அந்த ரயில் ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த ரயில் கடைசியாக கடந்த ரயில் நிலையத்தையும் மற்றும் அடுத்து வர இருக்கும் ரயில் நிலையத்தையும் தெரிவிக்கும்.  அல்லது அதில் சைட்பாரில் உள்ள Search என்பதை அழுத்தி குறிப்பிட்ட ரயிலின் பெயரையோ அல்லது ரயில் எண்ணையோ கொடுத்தால் அந்த ரயிலின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். 
இதில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த தளத்தின் மூலம் லோக்கல் ரயில்களின் விவரங்களை கூட அறிய முடிகிறது. 
காலதாமதமான ரயில்களை சிவப்பு நிறத்திலும் சரியான நேரத்தில் செல்லும் ரெயில்களை நீல நிறத்திலும் இந்த தளம் பிரித்து காட்டுகிறது. பயனுள்ள இந்த சேவையை அனைவரும் விரும்புவர் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:

  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.



SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.

சில பயனுள்ள வசதிகள்:
  • உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.
  • போனில் உள்ள தொடர்பு எண்களை(Contacts) கணினியில் சேமிக்கலாம்.
  • லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
  • கணினி மூலம் மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது.
  • கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
  • உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.

மென்பொருளை டவுன்லோட் செய்ய - SnapPea

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

Home Contact Me Ask Your Doubts About Me பேஸ்புக்கில் உங்களின் Search History அழிப்பது எப்படி

பேஸ்புக் இணையதளத்தில் நண்பர்களை கண்டறிய Search வசதியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறோம். கூகுளை போலவே பேஸ்புக்கும் நம்முடைய தேடல்களை சேமிக்கின்றது. அந்த தேடல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவது எப்படி என்று இங்கு காண்போம்.

பேஸ்புக் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி:

  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மீது கிளிக் செய்து உங்களின் டைம்லைன் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
  • பிறகு அங்கு உள்ள Activity Log என்ற பட்டன் மீது கிளிக் செய்யவும்.
  • Activity Log பக்கம் திறந்தவுடன் நீங்கள் இதுவரை செய்துள்ள அனைத்து பரிமாற்றங்களும் தெரியும். 
  • அந்த பக்கத்தில் வலது பக்க மேல் மூலையில் உள்ள Dropdown மெனுவில் All என்பதிற்கு பதிலாக Search என்பதை தேர்வு செய்யவும்.
  • Search என்பதை தேர்வு செய்தவுடன் நீங்கள் உங்களின் Search History வரும்.
  • அதில் தேவையில்லாததை நீக்க அதற்க்கு நேராக உள்ள சிறிய வட்ட ஐகானை கிளிக் செய்து Delete கொடுக்கவும். 
  • இதே முறையில் உங்களுக்கு தேவையில்லாத தேடல் விவரங்களை அழித்து கொள்ளுங்கள்.
Note: உங்களுக்கு Activity Log பகுதியில் Search வசதி காணப்படவில்லை எனில்  நீங்கள் சில நாட்கள் காத்திருக்கவும். இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் படிப்படியாக அனைவருக்கும் வழங்கி வருகிறது.
Read more »

தமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்கான அனிமேஷன் பாடங்கள், கதைகள், பாடல்கள்

இன்று இணையத்தில் உலவி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது இந்த இணையதளம். Tamilvu.org என்ற இணையதளம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் முக்கிய பயன் என்னவென்றால் இணையத்திலேயே தமிழ் மொழியை கற்கலாம். மற்றும் அதற்க்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். தமிழில் Diplomo, Degree போன்றவைகளை இணையத்திலேயே கற்க முடியும். தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதில் உள்ள இன்னொரு வசதி மழலைக் கல்வி சிறு குழந்தைகளுக்கு பாடங்கள், பாடல்கள், சிறுகதைகள், எழுத்து பயிற்சி போன்ற அனைத்தையும் எளிதாக புரியும் படி அனிமேஷன் வடிவில் அமைத்து இருக்கிறார்கள்.



இந்த லிங்கை மழலைக் கல்வி கிளிக் செய்தால் மேலே உள்ள படி பக்கம் வரும் அதில் ஏழு தலைப்புகளில் பாடங்கள் இருக்கும். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அதற்க்கான பாடங்கள் குழந்தைகளுக்கு புரியும் படி அனிமேஷன் வடிவில் வரும்.
உதாரணமாக பாடல்கள் பகுதியை தேர்வு செய்தால் கீழே இருப்பதை போல வரும் அதில் உங்களுக்கு தேவையான பாடல்களை தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு கற்பிக்கலாம். குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த பாடங்களை எளிதாக விருப்பமுடன் கற்று கொள்ளும்.
இது போன்று உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பகுதியாக போட்டு பாடங்களை சொல்லி தரலாம். உங்கள் குழந்தையும் ஆர்வமாக கற்று கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கும். 
Read more »

உலகின் கடினமான மொழிகளை இணையத்தில் சுலபமாக கற்க

ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்வதில் மொழி மிகவும் அவசியமாகிறது. இந்த மொழிகள் மனிதர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. இது போன்று உலகில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கிறதாம். இதில் சில மொழிகளே உலகில் பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது.




இப்படி உலகின் பிரபலமான மொழிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் கோச்சிங் சென்டர் போக நேரமும் அதிகமான பண விரயமும் பிரச்சினையாக இருப்பதால் பெருமாலானவர்கள் இதை தவிர்த்து விடுகிறார்கள். இதே சூழ்நிலையில் உள்ளவர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் உலகின் கடினமான மொழிகளான English, Dutch, French, German, Indonesian, Polish, Italian, Portuguese, Spanish, Swedish, Turkish போன்ற மொழிகளை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கணினியிலேயே கற்று கொள்ளலாம். முதலில் இலவமாக முயற்சி செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் குறைந்த விலையில் முழுமையாக கற்று கொள்ளலாம்.


Babbel.com என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை வழங்குகிறது. ஒவ்வொரு வார்த்தையாக உங்களுக்கு தெரிவிக்கிறது அது மட்டுமின்றி அதை எப்படி உச்சரிக்க வேண்டுமென்ற உச்சரிப்பு ஒலியும் வருகிறது.

இந்த தளத்திற்கு உங்களுக்கென ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளவும். பிறகு நீங்கள் கற்று கொள்ள விரும்பும் மொழியின் மீது கிளிக் செய்து அந்த மொழியை ஒவ்வொரு படியாக பயிலலாம்.

மேலே உள்ள விலை பட்டியலில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய மொழியை முழுமையாக கற்று கொள்ளுங்கள்.

தளத்திற்கு செல்ல - www.babbel.com
Read more »
 
-