Home Contact Me Ask Your Doubts About Me பேஸ்புக்கில் உங்களின் Search History அழிப்பது எப்படி

பேஸ்புக் இணையதளத்தில் நண்பர்களை கண்டறிய Search வசதியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறோம். கூகுளை போலவே பேஸ்புக்கும் நம்முடைய தேடல்களை சேமிக்கின்றது. அந்த தேடல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவது எப்படி என்று இங்கு காண்போம்.

பேஸ்புக் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி:

  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மீது கிளிக் செய்து உங்களின் டைம்லைன் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
  • பிறகு அங்கு உள்ள Activity Log என்ற பட்டன் மீது கிளிக் செய்யவும்.
  • Activity Log பக்கம் திறந்தவுடன் நீங்கள் இதுவரை செய்துள்ள அனைத்து பரிமாற்றங்களும் தெரியும். 
  • அந்த பக்கத்தில் வலது பக்க மேல் மூலையில் உள்ள Dropdown மெனுவில் All என்பதிற்கு பதிலாக Search என்பதை தேர்வு செய்யவும்.
  • Search என்பதை தேர்வு செய்தவுடன் நீங்கள் உங்களின் Search History வரும்.
  • அதில் தேவையில்லாததை நீக்க அதற்க்கு நேராக உள்ள சிறிய வட்ட ஐகானை கிளிக் செய்து Delete கொடுக்கவும். 
  • இதே முறையில் உங்களுக்கு தேவையில்லாத தேடல் விவரங்களை அழித்து கொள்ளுங்கள்.
Note: உங்களுக்கு Activity Log பகுதியில் Search வசதி காணப்படவில்லை எனில்  நீங்கள் சில நாட்கள் காத்திருக்கவும். இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் படிப்படியாக அனைவருக்கும் வழங்கி வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-