பிரபலமான Cut the Rope விளையாட்டு இப்பொழுது குரோமில் இலவசமாக

ஏதாவது புது புது விஷயங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பதால் தான் அனைவரின் ஆதரவோடு வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது குரோம் உலவி. இப்பொழுது Cut The Rope என்ற பிரபலமான விளையாட்டை அறிமுக படுத்தி உள்ளது. ஆன்ட்ராய்ட் அல்லது ஐபோன் உபயோகிப்பவர்களுக்கு Cut The Rope விளையாட்டை பற்றி தெரிந்து இருக்கலாம். போன்களில் இந்த விளையாட்டை காசு கொடுத்து வாங்கி தான் விளையாட வேண்டும். ஆனால் க்ரோமில் அந்த சிரமம் இல்லை முற்றிலும் இலவசமாகவே விளையாடி மகிழலாம்.

விளையாட்டின் நோக்கம் சுலபம் அங்கு கயிறில் ஒரு பந்து தொங்கி கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களும் இருக்கும். உங்கள் மவுஸின் மூலம் கயிறை அறுத்து அந்த நட்சத்திரங்களை பெற வேண்டும். உங்கள் பந்து விழுங்கப்படும் முன் எத்தனை நட்சத்திரங்கள் பெருகிறீர்களோ அதுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு படியும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் விளையாட விளையாட ஆர்வம அதிகரிக்குமே தவிர குறையாது.
Cut The Rope கேமை விளையாட குரோம் வெப் ஸ்டோரில் உள்ள இந்த Cut the Rope மென்பொருளை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்த உடனே விளையாட தொடங்கி விடலாம். 


க்ரோமில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு அடுத்து இந்த விளையாட்டு பெரும்பாலானவர்களால் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »

சோனியின் அசத்தல் ஸ்மார்ட் வாட்ச் ரூபாய் 6,299 இம்மாத வருகை

எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி நிறுவனம் இந்தியாவில் புது வகையான வாட்ச்சை அறிமுக படுத்துகிறது. இதற்க்கு ஸ்மார்ட் வாட்ச் என பெயரிட்டுள்ளது.  ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் மூலம் இயங்கும்   இந்த வாட்ச்சில் பல பயனுள்ள வசதிகள் உள்ளது. அட வாட்ச்ல என்னெங்க விசேஷம் இருக்கு எல்லா வாட்சும் டைம் தானே காட்ட போகுதுன்னு நினைக்கிறீர்களா, அதான் இல்லை இந்த வாட்சின் மூலம் பாட்டு கேட்கலாம், பேசலாம், SMS அனுப்பல, ஈமெயில் அனுப்பலாம், சமூக தளங்களை உபயோகிக்கலாம் மற்றும் இலவச ஆன்ட்ராய்டு மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.


உதாரணமாக நீங்கள் பைக்கோ, காரோ ஓட்டி கொண்டிருக்கிறீர்கள். பின்பக்க சீட்டில் உள்ள பைக்குள் வைத்துள்ள மொபைலுக்கு ஏதேனும் SMS அல்லது Call அல்லது ஏதேனும் சமூக தள அப்டேட் வருகிறது என வைத்து கொள்வோம் அந்த செய்திகளை நீங்கள் அந்த போனை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. நீங்கள் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த தகவல்களை காட்டும்.  கீழே உள்ள இந்த வீடியோவை பாருங்கள்.


இந்த வாட்சின் விலை ரூபாய் 6,299 என நிர்ணயித்துள்ளது சோனி நிறுவனம். 123x123 pixels அளவுடைய இந்த வாட்ச் தொடுதிரை வசதியுடையது. புதிய தகவல்கள் வரும் பொழுது சிறியதாக வைப்ரேட் ஆகும் அதன் மூலம் புதிய தகவல் வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதில் 65,536 நிறங்களை காண முடியும். 

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளி வர இருக்கிறது இந்த ஸ்மார்ட் வாட்ச்.
Read more »

யூடியுப் தளத்தை புதிய தோற்றத்திற்கு மாற்ற

 

மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளம் தற்பொழுது புதிய தோற்றத்தை வெளியிட உள்ளது. இந்த புதிய தோற்றத்தை படிப்படியாக அனைவருக்கும் வழங்க இருக்கிறது. இந்த புதிய யூடியுப் தோற்றத்தை ஒரு சில அதிஷ்ட சாலிகள் மட்டுமே இப்பொழுது பெற்றுள்ளனர்.


உங்களுக்கு இந்த புதிய தோற்றம் இன்னும் கிடைக்கவில்லையா?  யூடியுப் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியதில்லை உங்கள் பிரவுசரில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் போதும் இப்பொழுதே அந்த புதிய தோற்றத்தை நீங்களும் பெறலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


இதற்க்கு முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். உங்கள் பிரவுசரை பொருது கீழே உள்ள ஷார்ட்கட் கீயை அழுத்துங்கள். உங்களுக்கு Web Console பக்கம் ஓபன் ஆகும்.



                                 Google Chrome - CTRL + SHIFT + J                                  Internet Explorer -F12                                  Mozilla Firefox - CTRL + SHIFT + K                                  Opera - CTRL + SHIFT + I


அடுத்து கீழே உள்ள வரியை காப்பி செய்து Console பகுதியில் பேஸ்ட் செய்து உங்கள் கீபோர்டில் Enter கீயை அழுத்துங்கள். உதவிக்கு கீழே உள்ள ஸ்க்ரீன்ஷாட்களை பார்த்து கொள்ளுங்கள்.


document.cookie="VISITOR_INFO1_LIVE=nH7tBenIlCs";


Chrome Screen Shot


Firefox Screen shot


என்டர் பட்டனை அழுத்தியவுடன் யூடியுப் தளத்தை மூடிவிட்டு மறுபடியும் திறக்கவும். இப்பொழுது உங்கள் யூடியுப் தோற்றம் மாறியிருப்பதை காணலாம். 


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று கீழே  பார்ப்போம்.

  • முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொண்டு இந்த தளத்திற்கு செல்லுங்கள். 
  • Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.

  • போட்டோ அப்லோட் ஆகியவுடன் அதற்க்கான கோடிங் தயாராகி விடும் அதை முழுவதுமாக காப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர்  அழுத்தினால் அந்த போட்டோ உங்கள் நண்பருக்கு சென்றடையும் .
  •  
  • Thanks By-: http://www.vandhemadharam.com/
Read more »

நீங்கள் வைத்திருக்கும் PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!!

 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQRuAIrbi4zaDA-hO-MDVbWTvSg7Hrx3uwJ6pRfNJYS7tch4UGe6w


நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம் அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால் அந்த கடைக்காரர் அந்த RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும் அல்லவா.

இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது PENDRIVE வேண்டிய அளவில் கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம் 

PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7): 

1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு Advance System Settings க்கு செல்லவும்.


2.Advance என்னும் Tab ஐ கிளிக் செய்து PerformanceSettings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும் இரண்டாவது (Advance) Tab ஐ கிளிக் செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக் செய்யவும்.
என்னும் பகுதி யில்
3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட் பண்ணவும் "Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.



4.உங்களுடைய
PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MB ஐயும் maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.     

இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு இதில் சிறிய மாறுபாடு உள்ளது.

Read more: http://www.suncnns.com/2012/05/pendrive-ram.html#ixzz1wobIEcYO

Under Creative Commons License: Attribution
Read more »
 
-