இலவச வைரஸ் பரிசோதனை

  1. இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.
  2. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர்.
  3. இந்த சூழ்நிலையில், ஓர் இணைய தளம், இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை இலவசமாக நமக்குத் தருகிறது. இதன் வலைத்தள முகவரி : http://safeweb.norton.com/
  4. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று, நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே காப்பி செய்து, அதற்கான இடத்தில் பேஸ்ட்செய்தால், சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
  5. இப்போதெல்லாம், நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று கண்டறிவதும் எளிதான காரியம் அல்ல.

இலவச வைரஸ் சோதனை செய்து தரும் மற்ற இணைய தளங்கள் :

http://www.virustotal.com/


இந்ததளத்தில் யு.ஆர்.எல் மட்டுமல்லாது, சந்தேகத்திற்குரிய பைல்களையும் சோதனை செய்ய முடியும். மிகபெரிய நன்மை என்னவெனில், வைரஸ் சோதனை 44 பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது எனவே சோதனை தவறாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

http://virusscan.jotti.org/en



இந்ததளத்தில் சந்தேகத்திற்குரிய பைல்களை மட்டும்  சோதனை செய்ய முடியும்.இதிலும் சோதனை பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-