இணையத் தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக தற்பொழுது சாதாரணமாக குறைந்த செலவில் அதிவேக இணைய இணைப்பினை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. (ADSL, WiMAX, 3G & 4G) கணினி பயன்பாட்டில் அதிக நேரத்தை இணையத்துடனேயே செலவிடும் நிலை உள்ளது.
Google போன்ற பிரபலமான நிறுவனங்கள் முழுமையாக இணையம் சார்ந்த இயங்கு தளங்களையும் சேவைகளையும் வெளியிடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் கோப்புக்களை கணினியின் வன்தட்டில் சேமிப்பதுபோல பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய வழங்கிகளில் சேமித்து வைப்பதன் மூலம் கோப்புக்களை இலகுவாகக் கையாளலாம்.
இணையத்தில் உங்கள் கோப்புகளை பாதுகாத்து வைப்பதற்கு இலவச இடவசதி வழங்கும் சில பிரபலமான தளங்களின் விபரங்கள் இங்கு உள்ளது. பாதுகாக்க வேண்டிய கோப்புக்களை இந்த சேவைகளில் பதிவேற்றி வைப்பதன் மூலம் தகவல் இழப்பை தவிர்த்து கொள்ளலாம், உங்கள் கோப்புகள் இணையத்தில் பாதுகாக்கப் படுவதால் எங்கு சென்றாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது இணையத்திலேயே திருத்தம் செய்து சேமிக்கலாம். இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம்..
1) Windows Live SkyDrive
மிகவும் நம்பிக்கையானது, பாதுகாப்பானது, 25GB இலவச இடவசதி, MS Office கோப்புகளை இணையத்திலேயே உருவாக்கி திருத்திக்கொள்ளும் வசதி. live mesh மென்பொருள் மூலம் 5GB sync இடவசதி. Live, Hotmail கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.
2) Dropbox
நம்பிக்கையானது, பாதுகாப்பானது, பிரபலமானது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தக் காரணம் இதன் synchronize செய்யும் வேகம். பிரபலமான அனைத்து இயங்குதளங்களிலும் இவர்களின் synchronize மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம். கைத்தொலைபோசிகளிலும் கூட. 2 GB இலவச இடவசதி. நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்கள் இலவச இடவசதியை 10 GB வரை அதிகரித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கட்டணம் செலுத்தி அதிக இடவசதியினை பெற்றுக்கொள்ளலாம். இலவச சேவையைப் பயன்படுத்துபவா்கள் குறிப்பிட்ட ஒரே ஒரு Folder இனை மட்டுமே synchronize செய்ய முடியும்.
3) mediafire
பிரபலமானது, நம்பிக்கையானது, பாதுகாப்பானது. வரையறை அற்ற (Unlimited) இடவசதி. கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்று சிறந்த சேவை. synchronize வசதி இல்லை. அதிக விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
4) ADrive
50 GB இலவச இடவசதி.
உங்கள் மின்னஞ்சலைப் பதிவுசெய்து கொள்வதன் மூலம் பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளுங்கள்.