Pages

புன்னகைக்க, புன்னகையை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்


உங்கள் கம்ப்யூட்டர்முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா?
தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் http://www.theworldsmiling.com/இணைய தளம் அதை தான் செய்ய சொல்கிறது.
உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளி க் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம். இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட் டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்துவிட்டு அழகாக புன்னகை த் தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்கா வில் மேலும் ஒருபுன்னகை மலராக சேர்ந்துவிடும்.
இந்த தளத்தின் நோக்கமும் இது தான்.அதாவது உலகை மகிழ்ச்சி யாக வைத்திருப்பது. உயர்வான ஆனால் இயலாத லட்சியம் என்பதால் மகிழ்ச்சி யின் அடையாளமான புன்ன கையை சேகரித்து வைக் கும் பணியை மட்டும் இந்த தளம் செய்து வருகிறது.
எல்லோரும் புன்னகைத்தபடி காட்சி தரும் இருப்பிடமாக விளங்கும் இந்த தளத்தின் முகப்பு பக் கத்தில் புன்னகை பூக்களாக சிரிக்கின் றன.இது வரை மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு மேல் இந்த தளத்தில் தங்கள் புன்னகை முகங்க ளை சமர்பித் துள்ளனர்.வெப்கேம் வைத்திருப்பவர்கள் தங்கள் புன்னகையையும் இங்கே சமர் பிக்கலாம்.
காதலனை பார்த்து முகம் மலரும் காதலியின் மென்மையான புன்னகையி ல் துவங்கி பி எஸ் வீரப்பாவின் அட்ட காசமான சிரிப்பு வரை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுனாலும் சிரிக்க லாம். முகத்தில் ஆனந்ததை வெளீப்படு த்த வேண்டும்.அது தானே இந்த தளத்தின் நோக்கம்!.
தினம் தினம் இந்த தளத்திற்கு விஜயம் செய்து உலகம் முழுவதும் பதிவாகும் சிரித்த முகங்களை பார்த்து மகிழலாம்.மலர்ந்த முகம் தானாக ஊக்கத்தை தரக்கூடியது தானே.
ஆக புன்னகை பரவட்டும்.
நிற்ல சிரித்த முகத்துடன் இருப்ப தன் மகத்துவம் உங்களுக்கு தெரிந் திருக்கலாம்.இல்லை என்றால் விக்கிஹவ் தளத்தில் பாருங்கள், சிரிப்பது எப்படி என விளக்கும் கட்டுரை இருக்கிறது.
சிரிப்பதன் பயனனை அனுபவி யுங்கள் என்று சொல்லும் இந்த கட்டுரை உண்மையாக சிரிப்பது எப்படி,சங்கடமில்லாமல் சிரிப்ப து எப்படி? கண்களால் சிரிப்பது எப்படி என்றெல்லாம் வழி காட் டுகிறது.
சிரிக்க பயிற்சி எடுத்து கொள்ளவும் வழிகாட்டுகிறது.ஆம் சிரித்துபழகவும் பயிற்சி தேவை.ஒரு சில உம்மா ண மூஞ்சிகளுக்கு இன் னும் அதிகமாகவே தேவை.
சிரிப்பதன் பலன் பற்றி மற்றொரு அருமை யான கட்டுரை ஸ்பிரிங் இணையதளத்தில் இருக்கிறது.புன்னகை என்பது மகிழ்ச்சி யின் அடையாளம் மட்டும் அல்ல என்னும் இந்த கட்டுரை சிரிப்பதால் ஏற் படும் பத்து பலன்களை பட்டியலிட்டு விளக்குகிறது. அதில் ஒன்று சிரிப்பது மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வைக்கிறது என்பதாக உள்ளது.
பாலுணர்வின் புன்னகை உள்ளுனர்வின் புன்னகை என்றெல்லாம் சுட்பமாக உளவி யல் நோக்கில் தகவல் தருகிறது இந்த கட்டுரை. சிரித்தால் பாதி உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் என்ற ஊக்க த்தோடு கட்டுரை முடிகிறது.
இன்னும் புன்னகை கலையை கற்க விரும் பினால் திங் சிம்பில் நவ் இணையதளம் சிரிக்கும் கலை கட்ட்டுரை மூலம் புன்ன கை கலையை நுட்பமாக கற்றுத் துரு கிறது.முழுவதுமாக சிரிப்பது எப்படி, அறி முகம் இல்லாதவர் போல சிரிப்பது எப்படி, வேலைக்கு நடுவே சிரிப்பது எப்படி என் றெல்லாம் பயிற்சி தருகிறது இந்த தளம்.
வாழ்க்கை புன்னகைமயமாக இருப்பதற் கான குறிப்புகளையும் வழங்குகிறது.
புன்னகைக்க,புன்னகையை பார்த்து ரசி க்க:



”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.



இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடதிருப்பது தற்செய்லா என்று தெரியவில்லை.
மெகாஅப்லோடு விவகாரம் பற்றி தனி பதிவு எழுத திட்டமிட்டுள்ளேன்.இப்போது மெகாஅப்லோடு போலவே கோப்புகளை பகிர உதவும் புதியதொரு இணையதளமான பைல்பிரண்ட் பற்றி பார்ப்போம்.
கோப்புகளை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்க முயன்று கொண்டிருந்தது எல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் கோப்புகளை அனுப்ப எங்ககிட்ட வாங்க நாங்க பார்த்துகிறோம் என்று சொல்லும் இணைய சேவைகள் நிறைய இருக்கின்றன.
பைல்பிரண்ட் இந்த பிரிவில் புதிய வரவு.ஆனால் கவனத்தை ஈர்க்ககூடிய வகையில் கூடுதலான அம்சத்தோடு அறிமுகமாகியுள்ளது.
இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம்.இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம்,டவுன்லோடு செய்யலாம்.
பொதுவாக கோப்பு பகிர்வு தளங்களில் குறிப்பிட்ட கோப்பை பகிர்ந்து கொண்டுவிட்டு அதற்கான இணைய முகவரியை அனுப்பி வைத்தால் அந்த முகவரியை கொண்டு உரிய கோப்பை அவர்கள் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
பைல் பிரண்ட் தளத்தில் நேரடியாகவே நண்பர்கள் வட்டத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.பைல் பிரண்டில் கோப்புகளை பதிவேற்றுவது மிகவும் சுலமம்.கிளிக் செய்து தளத்திற்குள் ஏற்றிவிடலாம்.அதன் பிறகு பயனாளிகள் தங்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகளில் அதனை இணைத்துவிடலாம்.
இதன் மூலம் அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் அந்த கோப்பை பெற முடியும்.அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் பெற முடியும்.
கோப்புகளை பகிர்டந்து கொள்ளாமல் சேமித்து மட்டும் வைக்கலாம்.அதாவது ஒரு பேக் அப்பாக பயன்ப்டுத்தலாம்.பின்னர் தேவைப்படும் போது அவற்றை தேடி எடுத்து பயன்படுத்தலாம்.
கோப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் தளத்தின் மற்ற உறுப்பினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல மற்ற உறுப்பினர்கள் பொது பிரிவில் பகிர்ந்து கொள்ளும் கோப்புகளை நாமும் பார்வையிடலாம்.கோப்புகள மூலமே நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.
மிக எளிமையான வடிவமைப்பு இந்த தளத்தின் சிறப்பம்சம்.இந்த மாத இறுதிக்குள் உறுப்பினராக சேர்ந்தால் ஓராண்டு கட்டணம் கிடையாதாம.
இணையதள முகவரி;http://www.filefriend.com/index.html

பறக்கும் தட்டு மர்மங்கள்



பறக்கும் தட்டு
பறக்கும் தட்டுக்கள்  இந்தப் பெயரைக் கேட்டாலே ஒருவித அச்சமும் பிரமிப்பும் பலருக்கு ஏற்படும். பறக்கும் தட்டுக்களை தாங்கள் அவ்வப்போது பார்த்ததாக உலகெங்கும் உள்ள பலர் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், அவ்வாறு ஒருவேளை இருந்தாலும் ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாகப்  கிட்டத்தட்ட ஒளியின் அளவிற்கு வேகமாகப் பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில்,பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. ஆனால் அரசு மேற்கொண்டு அது குறித்து ஆய்வுகள் ஏதும் செய்யாததால் அது பற்றிய செய்திகள் பரவவில்லை. ஆனால் அதற்கு முன்னாலேயே 1947லேயே பறக்கும் தட்டை உலகெங்கும் பலர் பரவலாகக் கண்டுள்ளனர்.
அதுபோல 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலை.
       சிலமணி நேரங்களில் அவர்களைக் கீழே தள்ளி விட்டு பறக்கும் தட்டு சென்று விட்டது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவர்கள் பின்னர் மயக்கம் தெளிந்து மக்களிடம் உண்மையைச் சொன்னனர். முதலில் யாரும் அவர்களது கூற்றை நம்பவில்லை. ஆனால் மருத்துவர்கள் குழு வந்து அவர்களை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்திச் சோதனை செய்தபோது, அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதும், அமானுஷ்யமான சில அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது உண்மைதான் என்பதும் தெரிய வந்தது.

அமெரிக்காகனடாரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். எந்த அரசும் இன்றுவரை பறக்கும் தட்டுக்களையோ அல்லது அன்னியர்கள் பிரவேசத்தையோ வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டன் மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. அதில் 1997ல் பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் கவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான ஒரு பறக்கும் தட்டு வந்திறங்கிய சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் தட்டு குறித்த தகவல்களை மேலும் மேலும் மக்களிடம் மறைப்பது பயனற்றது என்பதால் தமது சேமிப்புக்களை வெளியிட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நேர்மையான ,தூய்மையான,நட்பான தேடியந்திரம்.


நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமா?அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா?
ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின் நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள்.
முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின் இதயத்தில் அதாவது ஹார்ட் டிரைவில் ஓளிய வைத்து இணைய உலகில் நீங்கள் தேடலில் ஈடுபடும் போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன.கண்காணிபதோடு நிற்பதில்லை.உங்கள் இணைய பழக்க வழக்கங்கள் கவனிக்கப்பட்டு அடையாளம் காணப்படுகின்றன.
இந்த விவரங்கள் இகாமர்சை நம்பியிருக்கும் நிறுவங்களுகு விற்கப்படுகின்றன.இந்த பழக்கத்திலும் கூகுல் தான் முதலிடத்தில் உள்ளது.சொல்லப்போனால் கூகுல் தான் குக்கீசை முதலில் பயன்ப‌டுத்த துவங்கிய தேடியந்திரம்.இந்த குக்கீகள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு அடையாள் எண்ணை ஒட்ட வைத்து அதன் பிறகு ஒவ்வொரு தேட நடவடிக்கையையும் பதிவு செய்து கொண்டே இருக்கிறது.உங்களுக்கு கூட நீங்கள் எந்த தளத்திற்கெல்லாம் சென்றீர்கள் ,அவற்றில் எந்த வகையான தகவல்களை தேடினீர்கள் என்பது நினைவில் இருக்காது,ஆனால் கூகுலுக்கு உங்கள் மொத்த தேடல் வரலாறும் அத்துப்படி.
உங்கள் இண்டெர்நெட்டின் ஐபி முகவ‌ரி,நேரம்,தேடல் பதங்கள் ,பிரவுசர் தகவல்கள் எல்லாவற்றையும் கூகுல் சேகரித்து கொள்கிற‌து.சும்மாயில்லை 57 வகையான தகவல்களின் அடிப்படையில் கூகுல் விவரங்களை சேகரித்து கொள்கிற‌து.
கூகுலில் தேடி அதன் மூலம் ஒரு இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பயன்படுத்திய குறிச்சொல் அந்த தளத்திற்கு அனுப்படுகிறது.கூடவே உங்களை பற்றிய இணைய விவரங்களும் விற்கப்படுகிறது.
உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற தயாரிப்பு அல்லது சேவைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அது மட்டுமா இன்சுரன்ஸ் நிறுவன‌ங்களும் கிரிடிட் கார்ட்டு நிறுவங்களும் இவற்றை அலசி ஆராய்ந்து உங்களை பற்றி தீர்மானித்து கொள்கின்ற‌ன.
பாருங்கள் நம்கு தெரியாமலே நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன.
இந்த நிஜங்களை தான் ‘ஸ்டீல்த்’தனது இணையதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
ஸ்டீல்த்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை வேறு யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்டால்,ஸ்டீல்த்திற்கு இதில் தனிப்பட்ட நலன் இருக்கிறது,அதனால் தான் தேடல் உலகின் பின்னே உள்ள விபரீதமான விஷயங்களை அது வெளிப்படுத்துகிறது.
அதாவது ஸ்டீல்த்தும் ஒரு தேடியந்திரம் தான்.உடனே அதனால் தான் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மீது சேறு வாரி பூசுவதாக அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.ஸ்டீல்த சுட்டிக்காட்டுபவை எல்லாமே இணைய உலக‌ நிதர்சன‌ங்கள்.உண்மையில் இணையயவாசிகளின் அந்தரங்க விவர‌ங்கள் சேமித்து வைக்கப்படுவது எதிர் காலத்தில் மிக‌ப்பெரிய பிரச்ச்னையாக உருவாகலாம்.
ஸ்டீல்த் இந்த விஷய்ஙகளை பட்டியல் போட்டு காட்டுவது கூகுலோடு ஒப்பிடும் போது அது எத்தனை நம்பகமான,தூய்மையான,நேர்மையான தேடியந்திரமாக இருக்கிறது என்பதை உணர்த்துவதறகாக தான்!.
ஆம் ஸ்டீல்த்தில் தேடும் போது உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை,தேடல்கள் சேமித்து வைக்கப்ப்டுவதில்லை,ஐபி முகவ‌ரி போன்ற‌வை அறியப்படுவதில்லை .எல்லாவற்றுக்கும் மேல் இது குக்கீ ஒற்றர்களை உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஏவிவிடுவதில்லை.
எனவே ஸ்டீல்த்தை பயன்ப்டுத்தும் போது நீங்கள் தேட மட்டுமே செய்யலாம்.உங்கள் நடவடிகைகள் கண்காணிக்கப்படுவதில்லை.நீங்கள் பின்தொடர‌ப்படுவதில்லை.
ஆக‌வே ஸ்டீல்த்தை பயன்படுத்துங்கள் என்கிறது ஸ்டீல்த்.
ஸ்டீல்த் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேர்ப்பதால் அதனிடம் விற்க ஒன்றுமில்லை.இதனால் விளம்பர வருவாயும் சாத்தியமில்லை.ஸ்டீல்த்தோ அது பற்றி கவலையில்லை.இணையவாசிகளுக்கு தூய்மையான தேடல் அனுபவத்தை தருவதற்காக விளம்பர வருவாயை தியாகம் செய்திருப்பதாக கூறுகிறது.
இதனை ஏற்று பலரும் ஸ்டீல்த் பக்கம் வந்துவிட்டால் வருவாய்க்கான வழி கிடைத்து விடும் என்பது அதன் நம்பிகை.
கூகுலை புறக்கணித்துவிட்டு ஸ்டீல்த்திற்கு தாவலாம் என்பது உங்கள் விருப்பம்.ஆனால் கூகுல் மற்றும் குக்கீஸ் பற்றிய விவரங்க்ள் அறியவாவது இத‌னை பயன்படுத்தி பாருங்கள்.
ஸ்டீல்த் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் அதன் தேடல் தொழில்நுட்பம் பற்றியது.ஸ்டீல்த் முழுக்க முழுக்க சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பயன்டுத்தவில்லை.கொஞ்சம் கூகுல்,கொஞ்சம் பிங்,அவற்றுடன் தனது தொழில்நுட்பம் கலந்து தேடல் முடிவுகளை தருகிறது.
தேடியந்திர முகவ‌ரி;http://usestealth.com/#

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.




இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஆல் இஸ் வெல் .. நண்பன்


நீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது.

விஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில் ஒவ்வொரு செயலுக்கும் இடக்கு மடக்கு பண்னுவதாகப் கல்லுரி முதல்வர் சத்யராஜ் நினைத்து பல இடைஞ்சல்களைத் தருகிறார். இவர் இரண்டு கைகளில் இரண்டு வேளைகளை ஒரே நேரத்தில் செய்பவர் மற்றும் தினம் 7 நிமிடம் மட்டும் சேவிங் செய்ய டைம் ஒதுக்குபவர்.
நினைத்த மாதிரியே ஜீவாவின் வறுமை குடும்பம், ஸ்ரீகாந்தின் நடுத்தரக்குடும்பம் மகனை ஒரு என்ஜினியராக்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது… ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முதலில் வருவதற்கு மாணவரிடையே நடைபெறும் போட்டி, சத்யன் மனப்பாடம் செய்து அனைத்துக்கும் முதலாக வருவது என நன்றாக செய்திருக்கிறார், பிறறைவிட அதிக மார்க்க எடுக்க வேண்டும் என்பதற்காக பரிட்சை அன்று முதல் நாள் இரவு அனைத்து ரூம் வழியாக ஒரு மாதிரிப் புத்தகங்களை தள்ளிவிட்டு கவனத்தை சிதைப்பது கவனத்தை கவர்கிறது. புராஜெக்ட் நீட்டிப்பு கிடைக்காததால் மண்டையைப் போடும் சக மாணவன். சத்யன் மூலமாக பிரின்ஸிபால் மற்றும் கல்வி அமைச்சரை கலாய்த்ததால் சத்யன் போடும் சபதம் போன்றவைகளும், பிரின்ஸிபாலின் இரண்டாவது பெண்னையே விஜய் டாவடிப்பது எனத் ஒன்றுஒன்று விட்டு காட்சிகள் தொடர்கிறது. பாரிவள்ளல் ஒரு மழைபுயல் நாளில் பிரின்ஸிபாலின் பெண்னுக்கு பிரசவம் பார்த்தல், வினாத்தாளை நண்பனுக்காக திருடி மாட்டிக் கொள்வது, சேவற்கொடி செந்தில் (ஜீவா) அப்பாவை பிழைக்க வைக்கிறது போன்றவை காட்சிகளில் ரசிக்கதக்கவை.
கல்லுரியை விட்டு பிரிந்தவுடன் விஜயின் தொடர்புஇல்லாமல் 10 ஆண்டுகள் இருப்பதும், சபதப்படி செப்டம்பர் 5 அன்று சத்யன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து நண்பர்கள் இருவரையும் கல்லுரியின் வாட்டர் டேங்க்க்கு வரவழைப்பது.. சுவாரசியம். மூவரும் சேர்ந்து விஜயைத் தேடுவதும், இடையில் பிரின்ஸியின் இரண்டாவது மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, பெண்ணையும் அள்ளிக்கொண்டு தனுஷ்கோடிக்கு பறப்பதும், இடையில் பாரிவள்ளல் என்பவர் விஜய் அல்ல என குட்டி பிளாஷ்பேக் வேறு… அப்பாடா… காரின் வேகத்திலேயே நமக்கும் விஜய் என்ன ஆனார் என அறிந்து கொள்ள ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.
கடைசியில் விஜய் ஆசைப்பட்டது மாதிரியே சும்மா மனப்பாடம் செய்து படிப்பதைத் விடுத்து அனைத்தையும் செய்முறை மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி ஒரு பள்ளியின் ஆசிரியர் கம் உலகம் போற்றும் குறிப்பாக சத்யன் தேடும் நெ.1 சயின்டிஸ்ட் ஆகவும், சத்யராஜின் இரண்டாவது மகளை கைப்பிடிப்பதும் நண்பர்கள் அனைவரும் இணைவதும் 100 சதவீதம்… தமிழுக்கு புதிய வரவுதான். இடையில் மில்லிமீட்டர் என்ற கல்லுரி எடுபிடி.. சீனியர் மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்துவது… பிரின்ஸிபாலிடம் (சத்யராஜ்) முடிந்தவரை சாப்ட்டாக எதிர்வாதம் செய்வது, ஆல் இஸ் வெல் என்று எப்பொழுதும் சொன்னால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று அனைவரையும் சொல்லவைப்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன்… ஆல் இஸ் வெல்.
Nanban .. All is Well




தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு

பலரும் மறந்த தந்தை




 இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? 
 தொடர்ந்து படியுங்கள்.....


அக்டோபர் 2011

இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர்.


காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின.







ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை..

அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால்  அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை  முடிந்து விட்டதாக நினைத்து விட்டன.

அவர் ...............
கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி


அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?

அதற்கு முன்பு  C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!! 

இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி (Programming Language)  C.

1969 - 1973 காலத்தில் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட மொழி தான் C. அன்று இருந்த பொறி மொழிகளுக்கு (Assembly Language) மாற்றாக அமைப்பு மொழியாக (System Language) C மொழி எழுதப்பட்டிருந்தது. அதுவே, அது மிகவும் பிரபலமாக காரணமாக அமைந்தது.


அமைப்பு மென்பொருளுக்காக எழுதப்பட்டாலும், இன்று பயன்பாடு மென்பொருட்கள் எழுதவும் C மிகையாக பயன்படுத்தப்படுகிறது.

C மொழியைப் பின்பற்றி C++, C# என்று பல மொழிகள் வந்துவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி  C தான். அந்த மொழியின் மொழிமாற்றி நிரல்களில்  இல்லாத கட்டமைப்புகள் மிக சிலவே!!!

இத்துணை  சிறப்பு மிக்க C மொழியை உருவாக்கிய பிதாமகர் தான்  தென்னிசு இரிட்சி (Dennis Ritchie).



1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் நியுயார்க் நகரில் பிறந்த தென்னிசு அவர்கள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றவர்.  1969 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தில் (AT&T Bell Laboratories) பணிக்குச் சேர்ந்தார்.

அன்று பெல் ஆய்வகங்களும், MIT ( Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகமும் சேர்ந்து ஒரு பல்நோக்கு இயங்கு தளத்தை உருவாக்க முயன்று தோற்றன.

கைவிடப்பட்ட அந்த திட்டத்தைக் கையில் எடுத்தனர் தென்னிசு இரிட்ச்சியும், அவர் நண்பர் கென் தாம்ஸனும். அந்த திட்டம் நிச்சயம் பிற்காலத்தில் மிகப்பெரும் திட்டமாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.  
அதுவே 1973 ஆம் ஆண்டு UNIX என்கிற இயங்குதளமாக வெளிவந்தது.

தென்னிசு   UNIX இயங்குதளத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.

UNIX உருவாக்கப்பட்ட புதிதில், அது பொறிமொழிகளின் அடிப்படையிலேயே  எழுதப்பட்டு இருந்தது. ஆனால்,கணிணி மொழி அனைவராலும் எழுதப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தென்னிசு நினைத்தார். அதன் விளைவாக உருவானது தான் C  மொழி. 


1973 ஆம் ஆண்டில் UNIX இயங்குதளம் C மொழியில் மீண்டும் எழுதப்பட்டது.

C மொழியின் குறைகளைக் கண்டறிந்து சில மாற்றங்கள் செய்து அதனை  ஒரு மாபெரும் கணித மொழியாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.

மனிதன் கணிணியுடன் எளிமையாய் பேச C மொழியை உருவாக்கிய தென்னிசு அவர்கள்  2011 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள், தனது 70 ஆவது அகவையில், விண்ணுலகுடன் பேச சென்றார்.




ஆனால், அவர் மறைவையே பலர் அறியவில்லை.  அறிந்தவர்களில் சிலரும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை... சிலர் தன் பங்கிற்காக சிறு இரங்கல் மடல் வாசித்து திருப்தி அடைந்து விட்டனர்.வெகு சிலரே அவருக்கு உண்மையாக அஞ்சலி செலுத்தினர்.



தென்னிசு இட்ட அடித்தளத்தில் தான் இன்று கணிணி உலகமே காலூன்றி நிற்கிறது.. 
நாம் இன்று கணிணி முன் அமர்ந்து உரையாடமுக்கிய காரணக்கர்த்தாக்களில்
 ஒருவர் அவர் .

அடித்தளம் இட்டவரைப்  பலரும் மறந்தது மிகவும் வருத்தம் தருகிறது.

காலம் தாழ்த்தி என்றாலும் பரவாயில்லை... 
இப்போதாவது அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்!!





முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்