Graphics காட்சிகளுடன் தனுஷின் ஆடுகளம்..!
தனுஷின் ரசிகர் வட்டம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஆடுகளம். பொல்லாதவன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் தனுசுடன் கூட்டுச்சேர்கின்றார். தனுஷ் என்பதை விட தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்பதும் படத்திற்கு புது நாயகி தபசி என்பதும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றது.
முன்னைய காலங்களைப் போலல்லாமல் தற்போது வெளிவருகின்ற பெரும்பாலான படங்களில் சிறிய காட்சிக்கேனும் graphics இனைப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகின்றது. அண்மையில் வெளியாகிய தில்லாலங்கடி திரைப்படத்தில் கூட நாம் இவற்றினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக