கூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி

கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக இணைய தளமான கூகுள் பிளசில் தொடர்ந்து புதிய வசதிகளை புகுத்தி வருகின்றனர். இப்பொழுது கூகுள் நம்முடைய URL மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர்.

அதாவது நீங்கள் கூகுள் பிளசில் ஒரு கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கென ஒரு 21 இலக்க ஐடிஎண் கொடுத்து கூகுள் பிளஸ் URL அமைக்கப்படும். இதை ஞாபக வைத்து கொள்வது அரிது. ஆனால் பேஸ்புக் தலத்தில் இந்த எண்ணுக்கு பதிலாக நமக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளும் வசதி உள்ளது. 

இனி கூகுள் பிளசிலும் URL மாற்றி கொள்ளும் வசதி புகுத்தி உள்ளனர். உதாரணமாக 



இது போன்று மாற்றி கொள்ளலாம். ஞாபகம் வைத்து கொள்வதும் எளிது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எளிதாக இருக்கும். இந்த வசதி இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

இந்த வசதி உங்களுக்கு தயாராகிய உடன் கூகுள் பிளசை திறந்தவுடன் மேல் பகுதியில் அதற்கான அறிவிப்பை காணலாம். அதில் உள்ள Change URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளலாம். அல்லது உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் About பகுதிக்கு சென்று Google+ URL பகுதியில் Claim என்பதை அழுத்தி URL மாற்றி கொள்ளலாம்.



அல்லது இந்த லிங்கில்  Google+ Verificationசென்று அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் கூகுள் பிளசின் இந்த வசதியை பெறலாம். 

இந்த வசதி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்கவும். 


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

கூகுளின் புதிய நுழைவு பக்கம்(Multiple Login Page) ஆக்டிவேட் செய்ய

கூகுளில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார். ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளையும் உபயோகிக்க கூகுள் வழங்கி உள்ள வசதி Multiple-sign in வசதி. இதை மேலும் சுலப படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுக படுத்த இருக்கிறது.  இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும் அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஐடி பாஸ்வேர்ட் தர வேண்டிய அவசியமில்லை.

 
ஆக்டிவேட் செய்ய:
  • இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
  • லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
  • இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்து கொள்ளுங்கள். 
இனி ஒவ்வோரு முறையும் ஈமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. பொது கணினிகளில் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டாம்.

Thanks

Read more »

உங்களின் ஹாட்மெயில் கணக்கை Outlook.com தளத்திற்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது மெயில் சேவையான ஹாட்மெயில் சேவைக்கு பதில் அவுட்லுக்.காம் என்ற புதிய ஈமெயில் சேவையை அறிமுக படுத்தி உள்ளது. வெளியிட்ட 8 நாட்களுக்குள் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் பெற்றுள்ளது அவுட்லுக் தளம்.


புதுசா அப்படி என்னதாம்பா இருக்கு அவுட்லுக்லன்னு கேக்குறீங்களா ஒண்ணுமே இல்லைங்கிறது தான் புதுசா இருக்கு. சைட்ல விளம்பரம், மேல விளம்பரம் கீழே விளம்பரம்னு ஜிமெயிலை போல ஒரே விளம்பரமா இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளது. முகப்பு பக்கத்தில் மெயிலை தவிர வேறு எதுவும் இல்லை. நான் சொல்வதை விட நீங்களே பயன்படுத்தி பார்த்தல் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

புதியதாக அவுட்லுக் தளத்தில் கணக்கு உருவாகக் வேண்டுமெனில் இங்கு சென்று உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது ஏற்க்கனவே ஹாட்மெயிலில் உள்ள கணக்கை (techshortly@hotmail.com) அவுட்லுக் முகவரிக்கு (techshortly@outlook.com) மாற்றுவது எப்படி என பார்ப்போம்.
  • முதலில் உங்களின் ஹாட்மெயில் ஈமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • Options பகுதியில் கிளிக் செய்து Upgrade to outlook.com என்பதை கொடுக்கவும். 

  • அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் Upgrade to outlook என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது உங்களுடைய ஈமெயில் தோற்றம் புதிய அவுட்லுக் தோற்றத்திற்கு மாறிவிடும். ஆனால் உங்களுடைய ஹாட்மெயில் முகவரி மாறி இருக்காது(techshortly@hotmail.com) என்று தான் இருக்கும். 
  • ஈமெயில் முகவரியை மாற்ற Options ஐகானை கிளிக் செய்து more mail settings என்பதை கிளிக் செய்யவும். 
  • இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Rename your  email address என்பதை கிளிக் செய்யவும். 

  • பிறகு ஈமெயில் முகவரியை மாற்றுவதற்கான விண்டோ ஓபன் ஆகும் அதில் outlook.com என்பதை தேர்வு செய்து பிறகு உங்களின் ஈமெயில் பயனர் பெயரை கொடுத்து Save செய்து விட்டால் போதும் உங்களின் கணக்கு முதிய முகவரிக்கு மாறிவிடும். 

இப்பொழுது உங்கள் கணக்கு புதிய ஐடிக்கு மாறிவிடும்.
Read more »
 
-